அதோ பஸ்ல... போறானே கோடரி கோவிந்தன் கோபக்காரன் அவன் நல்லா ஹைக்கூ கவிதை எழுதுவான்,
ஆனா, வன்முறையாகத்தான் எழுதுவான்.
எப்படி ?
சுத்தியலை எடுத்து நெத்தியில் அடித்து பாத்தியை கட்டி பாத்தியா ? இந்த மாதிரி.
அடடே...
கவிதை பிரமாதம்.
இவனோட கவிதைக்கு பாக்கிஸ்தான் விருதுகூட கிடைச்சுருக்கு.
எந்த
கவிதைக்கு ?
துப்பாக்கியை எடுத்து பாக்கியராஜை சுட்ட துர்பாக்கியம் எமக்கேன் ?
இது
நமக்குத்தானே பெருமை.
மெதுவாப்பேசு அவன் காதுல விழுந்தால் ? உனக்கும் விழும் வெட்டு.
ஏன் ? இப்படிச்சொல்றீங்க ?
உன்னைப் போலத்தான் ஒருத்தன் பெருமையா பேசுனான் இவனுக்கு தெரிஞ்சு பேசினவன்
வீட்டுக்குப் போய் பெருமைப்பட பேசிய நாக்கே உமக்கு இதோ ஏகே. அப்படினு சொல்லிக்கிட்டே அவன் வாயிலேயே போட்டான் 47 குண்டு.
ஆத்தாடி
பயமாவுல இருக்கு.
இப்படித்தான் இவன்கிட்ட ஒருத்தன் கடன் வாங்கியிருக்கான், இவன் கவிதை எழுதி
தூது விட்டான்.
எப்படி ?
பாக்கி வாங்கிய பாக்கியநாதா பாக்கியை நீ தா தா அப்படினு...
அவன்
கொடுத்தானா ?
பதிலை அவனும் ஒரு கவிதை போல எழுதி விட்டுக்கான்.
எப்படி ?
இந்த ஏரியாவுக்கே நான் தாதா நீயெல்லாம் எனக்கு சாதான்னு.
அய்யய்யோ
அப்புறம் ?
இவனுக்கு கோபம் வந்து ஹாக்கி மட்டையாலே அடிச்சு பாக்கி கொடுக்க வக்கில்லாத
பக்கி உனக்கு எதுக்கு இந்த பாக்கிய லட்சுமி அப்படினு அவன் பொண்டாட்டியை
கூட்டிக்கிட்டு வந்துட்டான்.
என்னய்யா ? இது மானக்கேடா இருக்கு.
ஆமா, இந்த லட்சணத்துல தேவயானிக்கு கவிதை எழுதிக் கொடுத்துருக்கான்.
எப்படி ?
தேவகோட்டை தேவதையே, தேவயானி எனக்கு தேவையே நீ அப்படினு...
ம்,
அப்புறம் ?
தேவாங்கு நீ எனக்கு தேவையில்லை நீ அப்படினு அவ சொல்லிட்டா.
பிறகு
என்னாச்சு ?
எனக்கு தேவைப்படாத நீ தேவையில்லை உலகுக்குனு உலக்கையாலே அடிச்சுக் கொன்னுட்டான்.
அப்படீனா போலீஸ் இவனை கைது பண்ணலையா ?
இவனை கைது பண்ண வாரண்டோட வாரேன்டானு அலைஞ்சிருக்கார் இன்ஸ்பெக்டர்
இன்பமூர்த்தி.
சரி.
வாரண்டோட வாரேன்டானு சொன்னவரு வீட்டுக்குப் போயி வராண்டாவுல ரவுண்டு கட்டி
அடிச்சுருக்கான் இந்தக் கோவிந்தன்.
அப்புறம் ?
நான் போறேன்டா, போடி நாயக்கனூருனு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டாரு
இன்ஸ்பெக்டரு.
இதெல்லாம்
பத்திரிக்கைகாரனுக்கு தெரியலையா ?
நம்ம ‘’தினக்குடுக்கை’’ பத்திரிக்கையில் பத்தி,
பத்தியா எழுதுனான் பக்கிரிசாமி.
சரி.
கோபமாக கோடரியோடு போனவன் எழுதுன, கையி எனக்கே சொந்தம்னு கையை வெட்டி கையோட
கொண்டு வந்துட்டான்.
என்ன இது காலக்கொடுமையாவுல இருக்கு சரி, கையிலே ஒரு கையேடு வச்சு
இருக்கானே.. அதென்ன ?
அந்தக் கையேடுலதான் யாரு... கை எடுத்தேன்,
கால் எடுத்தேன், தலையெடுத்தேன் இப்படிக் குறிப்புகள் எல்லாம் இருக்கும்.
அந்தக் குறிப்பு இருந்தால் நாளைக்கு போலீஸ் புடிச்சுக்கிருமே..
அட நீ வேற அவன் அதை அவுங்கள்ட்ட கொடுத்துதான்
விக்கி பீடியாவுல அப்டேட் பண்ணச்சொல்றான், அப்புறம் அவன்ட்ட போயி இந்தக் கையேடு
எதுக்குனு ? கேட்டுடாதே உன் கையை
எடுத்துடுவான்.
இதையெல்லாம்
தடுக்க ஒரு வில்லங்கத்தார் வராமலா... போயிடுவாங்க ?
சரி அவன் திரும்பி வர்றான் அவன் காதுல விழுந்துடுச்சோ என்னமோ, கையிலே கோடரி
வச்சுருக்கான் நீ மேற்காலே போ, நான் கிழக்காலே போறேன் அவன் வந்தால், முதல்ல
உன்னைத்தான் போடுவான்.
(இருவரும் ஆளுக்கொரு திசையை நோக்கி நகர்ந்தார்கள்)
இதற்கு
மேல் என்னாச்சுனு அந்த பகவான்(ஜி) மேலே சத்தியம் எனக்கு தெரியாதுங்கோ
- கில்லர்ஜி