தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மே 05, 2017

ஏமா(ற்)றுவதும் ஒரு கலைதான்


   தேனி பேருந்து நிலையத்தில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஒதுக்குப்புறமாக நின்று சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கும் பொழுதுதான் கவனித்தேன் ஒருத்தி என்னையே விழுங்குவது போல பார்த்துக்கொண்டு நின்றாள் நானும் அவளைப் பார்த்தேன் மலைத்தேன் அத்தனை அழகு மனதில் தைரியத்துக்காக பகவான்ஜியை நினைத்துக்கொண்டு பார்வையால் அருகில் அழைத்தேன் வந்தாள் பெயரென்ன ? என்று வினவினேன் தேன்மொழி என்றாள் வியந்தேன் காரணம் பெயரிலும் தேன் உங்கள் பெயர் கேட்டது தேவதையே தேனப்பன் என்றதும் சட்டென எனக்கு கை கொடுத்தாள் இலவம் பஞ்சு போன்ற கையை தொட்டதும் ஒரு நொடிதான் உடல் சிலிர்த்தேன் உயரத்தில் பறந்தேன் உலகை மறந்தேன். ‘’ஐயா சாமி தர்மம் பண்ணுங்கய்யா’’ சட்டென நினைவோட்டங்கள் சிதற சுயநினைவுக்கு வந்தேன் எதிரே ஒரு பிச்சைக்காரர் ஹூம் இந்த நேரத்தில் வந்துதான் கேட்க வேண்டுமா ? இதுவும் நல்லதுதான் தேவதைக்கு முன் பெருமையாக 10 ரூபாய் போடுவோம் என நினைத்து பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டால் ? எனது பர்ஸ் எங்கே ? அந்த தேவதை எங்கே ? அய்யோ வந்தவள் எங்கே ? அடிப்பாவி இந்த அப்பாவிதான் இன்றைக்கு கிடைச்சேனா ? அவ்வ்வ்வ்வ்வ்.

   கோயமுத்தூர் ரயில்வே நிலையத்தில் இரவு 07.30 உள்ளே நுழைந்தேன் சாரே ஒரு மினிட் குரல் கேட்டு திரும்பினேன் தேவதை ஆம் தேவதையே என்ன ? சாரே நிங்களு பாலக்காடானோ போகுன்னது ? ம்ம் அது வந்து... ஆமா.. என்ன ? அல்ல ஞானும் பாலக்காடு போகுன்னு சகாய்க்கான் ஆளில்லா அதான் சோதிச்சது சரி வாங்க டிக்கெட் எடுத்துட்டீங்களா ? இல்லை நான் எடுக்கட்டுமா ? அல்ல ஞான் எடுக்காம் வேண்டாம் நானே எடுக்கிறேன் கௌண்டரில் 2 பாலக்காடு என்றேன் ச்சே எவ்வளவு அழகாக இருக்கிறாள் பாலக்காடு பக்கம்தானே போய் விட்டு வருவோம் கம்பார்ட்மெண்டில் வேறு யாரும் இல்லாமல் இருந்தால் நல்லது பிறகு அங்கிருந்து சென்னை போகலாம் அப்படியொன்றும் முக்கியமான காரியமில்லை டிக்கெட் எடுத்து அவளிடம் ஒன்றை கொடுத்து விட்டு வாங்க சீக்கிரம் இன்னும் 10 மினிட்தான் இருக்கு என்றேன் டிக்கெட்டை பெற்றுக்கொண்டவள் நிங்கள் போய் ஸீட் பிடிக்கு ஞான் டோய்லெட் போய் இப்போல் திருச்சு வரான் நான் மின்னல் வேகத்தில் ஆளில்லாத கம்பார்ட்மெண்டை தேடி ஏறினேன் டாய்லெட்தான் ரயிலில் இருக்கிறதே... ஒருவேளை இங்கு அசுத்தமாக இருக்கும் என்று நினைத்திருப்பாள். இன்னும் 5 மினிட்டே உள்ளது வாசலில் நின்று அவளுக்காக காத்திருக்க தூரத்தில் யாரோ ஒருவனுடன் பேசிக்கொண்டு அவனது கையில் எதையோ திணித்து விட்டு எதையோ வாங்க அவன் வேகமாக ஓடி வந்து நான் நின்ற கம்பார்ட்மெண்டில் என்னை இடித்துக் கொண்டு ஏறினான் அவ்வ்வ்வ்வ்வ்.

   தூத்துக்குடி துறைமுகத்தில் எனது முகவரிக்கு சிங்கப்பூரிலிருந்து நானே அனுப்பி விட்டு வந்த கார்கோ பெட்டி பார்சலை மதியம் நுழைந்தவன் அவர்களின் கெடுபிடியில் அழுது கட்டி விட்டு மாலை 06.00 மணிக்குதான் வாங்கிவிட்டு வெளியேறினேன் இருட்டுவதற்குள் வீட்டுக்கு போய் விடலாம் 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உழைத்து சம்பாரித்தது போதுமென்று திருச்செந்தூர் முருகன் அருளால் வீடு கட்டுவதற்கான கதவின் பாட்லாக், பூட்டு சாவி, பெயிண்ட் மற்றும் வீட்டுக்கான சாமான்கள் நான் வேலை செய்த கம்பெனியில் டிரைவராக இருந்ததால் ஸ்டோருக்கும் போவதும் வருவதுமாக இருந்து சுட்டதும், சுடாததுமாக சேர்த்து வைத்து 1 டன் சேர்த்து அனுப்பி விட்டு கேன்ஷலில் வந்து விட்டேன் பிக்கப்பை நானே ஓட்டி வந்தேன் பக்கத்து ஊர்தானே என்பதால் துணைக்கும் யாரையும் அழைத்து வராமல் நான் மட்டுமே வந்தேன் காரணம் சொந்தக்காரனைக் கூட்டி வந்தால் வாயைப் பிளப்பான் ரயில்வே கேட்டை தாண்டியதும் ஒரு கணவனும், மனைவியும் நின்று கொண்டு கையை ஆட்ட நிறுத்தி என்ன ? என்றேன் அண்ணே நானும் எம் பொஞ்சாதியும் பஸ்ஸுக்காக ரொம்ப நேரமா நிற்கிறோம் எங்களை உடன்குடியிலே இறக்கி விட்ருங்களேன் நான் அவளைப்பார்த்தேன் செம கிராமத்துக்கட்டை பார்வையே ஒரு மாதிரியிருக்க சரி உடன்குடிதானே ஏறுங்க என்றேன் உடனே ஏ புள்ளே சட்டுனு ஏறு என்று முதலில் அவளைப்பிடித்து ஏற்றி விட்டு பிறகு அவன் ஏற அவள் மையத்தில் உட்கார்ந்து இருந்தது எனக்கு என்னவோ போலிருந்தது அவன் சட்டென சாய்ந்தவன் உறங்கிவிட இவள் கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள் வண்டியே தடுமாறியது கையிலிருந்த பையிலிருந்து பிஸ்கெட்டை எடுத்து தின்றாள் தின்றவள் எனக்கு கொடுக்க நான் வேண்டாம் என்றேன் அவள் சட்டென கணவனை ஒரு கள்ளப்பார்வை பார்த்து விட்டு எனது வாயில் பிஸ்கெட்டை திணிக்க வேண்டாமென்று சொல்லத்தான் முடியுமா ? ’’சுள்’’ என முகத்தில் வெயில் அடிக்க முழித்தேன் கருவக்காட்டோரம் கிடந்தேன் எழுந்து எனது பிக்கப் எங்கே ? அடிவயிறு கலக்கியது காரணம் மனக்கண்னில் மனைவி மருதவள்ளியின் முகம் அவ்வ்வ்வ்வ்வ்.

   சென்னை விமான நிலையத்தின் உள்புறம். குவைத்திலிருந்து ஒருமாத விடுமுறையில் வருகிறேன்
எஸ்க்யூஸ்மி சார்
திரும்பிப் பார்த்தேன் ஏர்ஹோஸ்டல் ட்ரெஸ் போட்டிருந்தாள் இவள் எந்த ஏர்லைன்ஸ் யோசித்துக் கொண்டே எஸ் ப்ளீஸ் என்றேன்
ஐ வாட்ச் யூ வொய் திங்கிங்
நெவர் நோ நத்திங்
ஐ நோ சார்
கௌ யூ நோ
யூ ஹேவ் கோல்ட் அன் லிமிட் கரைட்
நோ...
எஸ் சார் நௌவ் ஹியர் கஸ்டம்ஸ் ப்ராப்ளம் டூ மச் கென் ஐ ஹெல்ப் யூ
கௌ ஹெல்ப் மீ
கிவ் மீ யுவர் கோல்ட் ஐ வில் ரிடெர்ன் அவுட்ஸைட் மை சார்ஜ் ஜஸ்ட் ட்டூ பெர்சண்ட் ஒன்லி
யூ நாட் மீ டெரெட் கரைட் என்ன ? செய்யலாம் கோல்ட் நிறையாத்தான் இருக்கு நண்பர்களும் கொடுத்து விட்டார்கள் தட்ட முடியவில்லை டி.வியும் 42 இஞ்ச் டூட்டி போடாமல் விடமாட்டார்கள் இவள் ஏர்ஹோஸ்டஸ்தானே எவ்வளவு அழகாக இருக்கின்றாள் இவளா ஏமாற்றப்போகிறாள் ? லிப்டிக் போட்டவள் பொய் சொல்ல மாட்டாள் வாய்மையே வெல்லும் என்று சிறுவயதில் குருந்தன் வாத்தியார் சொல்லிக் கொடுத்தாரே.... கூடவே வரப்போகிறாள் வெளியில் வந்து தருவாள் வாங்கி கொள்வோம் அவ்வளவுதானே.... ஓகே யூ ஆர் ஃப்ரம் வேர்
ஐம் ஃப்ரம் மோண்டியா ஐ நோ லிட்டில் டமிள் வண்க்கோம்
இட்ஸ் ஓகே ஐ கிவ் யூ டூ பிக் செயின் அன்ட் ப்ரேஸ் லெட் ஒன்லி
ஓகே டோட்டல் கௌமெனி க்ராம் சார்
டோட்டல் மேபி 60 கிராம் கம்மிங்
ஓகே மை சார்ஜ் 3000 தௌடண்ட் ஒன்லி சார் யூ ஹேவ் இண்டியன் மொணி
நோ ப்ராப்ளம் மை ஃபேமிலி அவுட்ஸைட் வெயிட்டிங்க்
ஓகே கிவ்
ப்ளீஸ் கம் ட்டூ தட் ஸைட் ஒதுக்குப்புறமாகப் போய் கேமரா இல்லாத இடத்தில் பேண்டுக்குள் இருந்த நண்பர்கள் கொடுத்து விட்ட இரண்டு செயினையும் ப்ரேஸ் லெட்டையும் அவளிடம் கொடுக்க அவள் சட்டென வாங்கி ஹேண்ட் பேக்கில் திணித்து விட்டு
ஓகே சார் ஐம் வாட்சிங் யூ யூவில் எக்ஸிட் ஐம் கம்மிங் ஸ்டாஃப் எக்ஸிட் வேய் ஓகே
ஓகே ப்ளீஸ் கிவ் மீ யுவர் செல் நம்பர்
நோட் த நம்பர் 9876543210 பை சீ யூ
அவள் விடைபெற நான் கஸ்டம்ஸ் வரிசையில் நின்று நான் அவளையும் அவள் என்னையும் பார்த்துகொண்டு நிற்க எனக்கு பிரச்சனைகள் சுமூகமாக முடிந்து டி.விக்கு மட்டும் 3000 ரூபாயை தள்ளி விட்டு எனது பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவளுக்கு கண்களால் சைகை காட்டி விட்டு வெளியேறி மனைவி மக்களைப் பார்த்து குழந்தைகளுக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்து விட்டு ஸ்டாஃப் வாசலிலேயே நின்று கொண்டு காத்திருந்தேன் அவளுக்காக.... அவள் வருவாளா ? அவ்வ்வ்வ்வ்வ்.

53 கருத்துகள்:

 1. ஆவ்வ்வ்வ் இங்கேயும் நானே தமிழ்மணத்தில் இணைச்சேன்ன்.. முதேல்ல் வோட்டும் என்னோடதூஊஊஉ:)

  பதிலளிநீக்கு
 2. #ஏர் ஹோஸ்டஸ் டிரஸ் போட்டிருந்தாள்#
  ஒரு நிமிஷம் அரண்டு போயிட்டேன் ,யூனிபார்ம் டிரஸ்ஸா?மரமண்டைக்கு லேட்டா புரிந்தது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி "ல்" தவறுதலாக "ஸ்" ஆகிவிட்டது மாற்றுகிறேன் Sorry

   நீக்கு
 3. ஆஹா! நல்லா ஏமாந்திருக்காங்களே! :))) ஆனால் இவை எல்லாமும் நடப்பவையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நடந்ததுதான் ஏமாந்ததுனாலதானே.. உண்மையை எழுதுனேன்.

   நீக்கு
 4. வகை வகையாக ஏமாந்தாலும் சொந்த புத்தி வரலயே..... சோணமுத்து!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோணைமுத்து சொரணை கெட்டவனா இருப்பானோ... ஜி

   நீக்கு
 5. ஹா ஹா ஹா ஹா வயிறு குலுங்கச் சிரிக்க வச்சிட்டீங்க கில்லர்ஜீ.. சிரிச்சு முடியுதில்ல...

  கண் முழிச்சபோது கருவக்காட்டோரம் கிடந்தேன்ன்.. ஹா ஹா ஹா..

  அதிலயும் கடசி அந்த நீங்க இருவரும் பேசின இங்கிலிசுக்கே 100 மார்க்ஸ் போடலாம் ஹா ஹா ஹா...

  எவ்ளோ அடிவாங்கினாலும் திருந்த மாட்டீங்கபோல:)..

  வருவா வருவா.. அவ இல்ல இன்னொரு பெண்:) வெயிட் பண்ணுங்கோ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவளுக்கு பதிலாக இன்னொரு பெண் வருவாளா ? வரட்டும் காத்திருக்கிறேன்.

   நீக்கு
 6. ஏமாற்றுதல்தான் எத்தனை வகை
  கொஞ்சம் ஜொள்ளு விட்டால்
  லொள்ளுதான் எனச் சொல்லிப் போனவிதம்
  அருமை

  வித்தியாசமான அருமையான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 7. .அடடா.... சொல்லிச் சொல்லி ஏமாத்தியிருக்காங்களே... அந்த மீசையைப் பார்த்துமா பயமில்லை?!! நானும் எங்களின் ஒருசில ஏமாந்த அனுபவங்களை முன்பு பதிவாக்கியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் யாருக்கும் பயம் என்பதே கிடையாது.
   ஸ்ரீராம் ஜியின் வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. அப்போ இன்னும் எதுக்கு அந்த மீசையை வச்சிருக்கிறீங்க??? ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ச்ஸ்ஸ்:)

   நீக்கு
  3. அது ஒண்ணுதான் மிச்சம் அதுவும் பிடிக்கவில்லையா ?

   நீக்கு
 8. இதென்ன தினுசு தினுசா ஏமாந்திருக்கீங்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எல்லாம் தலையெழுத்து வேறென்ன சொல்ல ?

   நீக்கு
 9. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும்! :)

  பதிலளிநீக்கு
 10. உண்மைதான் நண்பரே
  ஏமாற்றுவது ஒரு பெரும் கலை
  நம்மைப்போல் ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரை
  இக்கலை வளரத்தான் செய்யும்

  பதிலளிநீக்கு
 11. ஏமாந்துறுவோம்னு தெரிஞ்சும் ஏமாறுவதுதான் மனித இயல்போ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. மகேந்திரன் அவர்களின் முதல் வருகையை வரவேற்கிறேன்.

   ஆம் நண்பரே ஏமாறப்போகிறோம் என்று அறிந்தே ஓட்டுப்போடுவதில்லையா... அதைப்போல்தான்.

   நீக்கு
 12. ’ஏமாறச் சொன்னதும் நானோ என்மீது கோபம் தானோ’ என்று பாடத் தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. சரியான பாடல்தான் நன்றி நண்பரே

   நீக்கு
 13. கொடுவா மீசை இருந்தும்...இப்படியா...கோடரி எங்க?..பெண் என்றால் பேயும் இறங்கும்..என்பது சரிதானோ.... ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமயத்துல புத்தி கூர்மையாகி விடுகிறது.

   நீக்கு
  2. என்னாதூஊஊஊ பெண்ணில பேய் இற:)ங்குமாஆஆஆ?:)

   நீக்கு
 14. கில்லர்ஜி,ஸ்வாமி சபலானந்தா ஆகியிருக்கிறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. என்னங்கையா... இப்படி சொல்லிட்டீங்க.

   நீக்கு
 15. அதெப்படி உங்களைப் பாத்தவுடனே சரியான ஏமாளின்னு பொண்ணுகளுக்கு மட்டும் தெரிஞ்சு போகுது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே...
   முகத்தை பார்த்தவுடன் அப்பாவி என்று கணித்து விடுகின்றார்களே...

   நீக்கு
 16. எல்லாமே நீங்க ஏமாந்ததா? கொடுவாள் மீசையைப் பாத்துமா இந்த ஆள் அப்பாவின்னு கண்டுபிடிக்கறாங்க..

  சார்்் ஒரு ஆறு இடுகை எழுதித் தர்றீங்களா? ப்ரூஃப் பாத்துட்டு உங்ககிட்ட அனுப்பிடறேன்னு நிறையபேர் உங்கள்ட்ட வாங்கிடலாம் போலிருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே இப்படி குமுதம், குங்குமம், ராணி, கல்கண்டு, பாக்யா, பத்திரிக்கைகள் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன்.

   நீக்கு
 17. வாழ்க்கையில் ஏமாறாதவர்களே இருக்க முடியாது ஆனால் கில்லர்ஜீபெண்களிடம் தொடர்ந்து ஏமாறுவதுதான் ஆச்சரியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா... உங்கள் நம்பிக்கை வீண்போகாது ஐயா.

   நீக்கு
 18. ஏமாற்றுபவர்கள் எங்கும் நிறைந்து இருப்பதால் இப்ப எல்லாம் ஆபத்துக்கு உதவி கூட செய்ய மனம் வருவதில்லை!

  பதிலளிநீக்கு
 19. ஐயாவின் அழகுக்கு
  வேறு எவருமில்லை என்றதும்
  ஐயா குளிர்ந்திடுவார்...
  வந்தவள் தேநீர் குடிக்க
  இரண்டு உரூபா கேட்பாள்
  ஐயாவும் காசுப் பையைத் திறக்க
  வந்தவளும் பறித்துச் செல்வாள்!

  ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
  ஏமாற்றுபவர்கள் இருக்கத் தானே செய்யும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே என்னோட அழகு எனக்கே எதிரி

   நீக்கு
 20. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
  அவள் வருவாள், தொடர்ந்து ஏமாற்ற.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே வாழ்த்துகள்.
   தங்களது விழா பதிவைக்கண்டேன் மகிழ்ச்சி தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி

   நீக்கு
 21. சுவாரசியமாக சொல்லி இருகிறீர்கள்எப்ப்பபேர்ட்ட கில்லாடியும் ஏமாந்து விடுகிறார்களே!
  மூத்த பதிவர் நடன சபாபதி அவர்கள்கூடா ஏமாற்றுவது ஒரு கலை என்று சுவாரசியமான தொடர் பதிவு எழுதி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவருடையது தொடர் இது இத்துடன் முடிந்தது மேலும் இதில் நலைப்பில் வித்யாசம் இருக்கிறது. வருகைக்கு நன்றி

   நீக்கு
 22. நீங்க டன் கணக்கில ஏமாந்திருக்கிங்க ..ஏமாற்றுவதும் கலைதான் என்னனா அதில உங்களை மாதிரி அப்பாவிகளும் மாட்டிக்கறாங்க ..அந்த ஏர் ஹோஸ்டஸ் வேற இடத்தில வேற ரூபத்தில் வரலாம் கவனமா இருங்க ..

  9 ஆம் தமிழ் மணம் ப்ளஸ் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப்பெண் இனியும் வேறு ரூபத்திலலா ? இனி கவனமாகத்தான் இருக்கணும்.

   நீக்கு
 23. திரு டி.என் முரளிதரன் அவர்களின் பின்னூட்டத்திற்கு தாங்கள் சொன்ன பதில் சரியே. என்னுடையது தொடர் பதிவு. மேலும் நான் ஏமாற்றுவது ஒரு கலை என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். தாங்கள் ஏமா(ற்)றுவதும் ஒரு கலைதான் என்று தலைப்பிட்டிருக்கிறீர்க்லா. அது சரி! ஏன் பெண்களிடமே ஏமாந்திருக்கிறீர்கள்? ஆண்களிடம் ஏமாறவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண்கள் என்னை மயக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கலாம் என்று நினைக்கிறேன் நண்பரே.

   நீக்கு