தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 01, 2017

சாமி யார் ?


கோடிகள் இருந்தும் பணக்காரர்கள் சாமியார்களை நாடுவது ஏன் ? 
சாமிமீது நம்பிக்கை இல்லாமலா ? அல்லது அவர் நேரடியாக பேசமாட்டார் என்பதாலா ? பணம் சேரச்சேர நிம்மதியான மனம் ஓரங்கட்டப்படுகிறது இந்த பணத்தால் நிம்மதியை வாங்க முடியுமா ? பணமே இல்லாமல் சாமியார்கள் மட்டும் எப்படி சந்தோஷமாக வாழ்கிறார்கள் ? சாமியார்கள் முற்றும் துறந்தவர்கள், என்பது உடையை மட்டுமல்ல பொன்னையும், பொருளையும் சேர்த்துதான் அவர்களால் நமக்கு நிம்மதியை அளிக்க முடியுமா ? நிச்சயமாக முடியும் எப்படி ? அவர்களைப்போல் நாமும் எல்லா ஆசைகளையும் துறக்கவேண்டும் நம்மிடம் உள்ளவற்றை இல்லாதோருக்கு கொடுக்கவேண்டும், இதன் வழியே அவர்களின் பிரார்த்தனையை பெறமுடியும் இது உன்னால் முடிந்தால் ? ? ? நிச்சயம் நிம்மதியை பெறவழி உண்டு. அவர்கள் ஞானத்தால் முக்காலத்தையும் அறிந்தவர்கள் அவர்கள் சொல்லும் விசயத்தை நாம் கடைப்பிடிக்கும்போது, நிம்மதி கிடைக்கிறதோ... இல்லையோ... மனம் சிறிதளவாயினும் அமைதிபெற வழி வகுக்கும்.
இதில் நிம்மதி இழப்பின் அடிப்படையே பணம்தான் இதை போதும் என்று நினைக்கும்போது நிச்சயம் நாம் நிம்மதி அடையமுடியும்.
நாம் பேராசையை ஒழித்தால் ? அமைதியைப் நிச்சயம் பெறலாம்.
நிம்மதி என்பது நம் மனதிலேயே இருக்கிறது அதை உணர்ந்து பார் பின் தானாகவே காணமுடியும்.

நான் இதுவரை சொன்னது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த சாமியார்களை
இன்றும் பணத்தை கொடுத்து சாமியார்களை நாடுகிறார்கள்,
சாமியார்கள் அதை எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்,
பிறகு அவர்களை POLICE வலைவீசி தேடுகிறார்கள்,
பணம் கிடைத்ததால் எங்கோ சாமியார்கள் ஆடுகிறார்கள்,
பணத்தை இழந்ததால் கொடுத்தவர்கள் வாடுகிறார்கள்.
ஏமாந்தவன் முட்டாள், ஏமாற்றியவன் அறிவாளி (புதுமொழி)

53 கருத்துகள்:

 1. பூஷானந்தாவை தவிர வேற யாரையும் நம்புறதில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹாஆஆஆஆஆ இது என்ன புது வம்பாக்கிடக்கூஊஊஊ:)..

   http://images.forwallpaper.com/files/images/9/944a/944aab91/1131044/adorable-kitten-climbing-tree.jpg

   நீக்கு
  2. இந்தச் சாமத்தில இவர் எப்பூடி முதலாவதா வந்தார் கர்ர்:) என் கண்ணுக்கு இப்போதானே தெரிஞ்சுது.. 4 ம் நம்பர் என்னோடது:).

   நீக்கு
  3. கர்ர்ர்ர்ர்ர் :)))

   நீக்கு
  4. இவரு யாரு ஜி புதுசா இருக்கு ?

   நீக்கு
  5. அது அவரு புதுசா வந்தவருக்கு நான் தான் வழிகாட்டிவிட்டேன் .. அது என் கண்ணை நானே குத்திய கதையாகிடப்போகுதே முருகா:) இனி என் கதை அதோ கதிதான்:)

   நீக்கு
  6. நீங்கதான் வழிகாட்டி விட்டீர்களா... அடடே..

   நீக்கு
 2. சாமி..........யார் தேடுதல் தொடர்கிறது.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த தேடலில் முடிவு கிடைக்கும் பொழுது முடிந்து விடுவான் கவிஞரே...

   நீக்கு
 3. இருக்கும் இடம் விட்டு இல்லா இடத்தில தேடுவதுதான் மானிட இயல்பு ..
  ஏமாற்றும் அறிவாளிங்க இருக்கும்வரை ஏமாளிகளும் இருப்பார்கள் ..

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான் இப்பொழுது சாமி என்றாலே பயமாகத்தான் இருக்கு. முன்பு கோயிலுக்குப் போனால் மன அமைதி கிடைக்கும்.. இப்போ கோயிலும் வியாபாரத்துக்காகவே நடக்கிறது போலாகிட்டுது. வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கவே இப்போ அதிகம் கோயில்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இப்பொழுது பூசாரிகள் கருவறைபிலேயே தவறு செய்யும்போது யாரை நம்புவது ?

   நீக்கு
 5. ஏழைகள் சாமியையும் சாமியார்களையும் நம்புவதில்லை அவர்கள் நம்புவது எல்லாம் உழைப்பை மட்டுமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையாய் உழைத்தவர்கள் வீழ்வது இல்லை நண்பரே

   நீக்கு
 6. கூழுக்கும் ஆசை ; மீசைக்கும் ஆசை! பணமும் இருக்கவேண்டும், நிம்மதியும் வேண்டும். எப்படி முடியும்?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம் ஜி இரண்டும் இரயில் தண்டவாளம் போன்றது இணையாது.

   நீக்கு
 7. பெரும்பாலானவர்கள் ஏமாற்ருப் பேர்வழிகளாகவே இருக்கிறார்கள் :(

  பதிலளிநீக்கு
 8. சாமியார்னாலே இப்போல்லாம் அலர்ஜியாக ஆகி விட்டது! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாமியார் என்றால் சன்யாசிதான்... இன்று அவர்கள்தான சுகவாசி

   நீக்கு
 9. சாமியார்கள் பணத்தை மட்டுமே ஏமாற்றுகிறார்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏமாறுவதால்தானே... ஏமாற்றுகிறார்கள் நண்பரே

   நீக்கு
 10. ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையுமா..ங்கறேன்?..

  இதுல ஊசி யாரு?.. நூலு யாரு?..

  எல்லாம் தலை கீழாப் போனதடி தங்கமே தங்கம்!..

  யோவ்.. நீ வேற.. தங்கம் வைரம்..ன்னு கொஞ்சாதே..
  எவனும் வந்து சொரண்டிக்கிட்டு போயிடப் போறான்!..

  ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையுமா..ங்கறேன்?..

  ஆகா.. மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா.. ஆள வுடு சாமீய்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. வாங்க ஜி ஸூப்பர்
   மே நின வாழ்த்துகள்

   நீக்கு
 11. பதில்கள்
  1. சாமியாரு... யாருனு யாருக்கு தெரியும் ?

   நீக்கு
 12. "எனக்கும் சாமியார்களைத் தெரியும்; ‘சாமிமார்’களைத் தெரியாது.

  அடுக்குமொழி, எதுகைமோனை என்று கலக்குகிறீர்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
 13. ஆசையாலும் அச்சத்தாலும் அறியாமையாலும் அல்ல்படும் அப்பாவிகளே இப்படிப் போலிச் சாமியார்களை நாடிச் சீரழிகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே
   தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்னைப் பொருத்தவரை சாமியார்களைவிட அவர்களை நாடிச்செல்பவர்களே.. முதல் குற்றவாளி

   நீக்கு
 14. கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால்தான் கடவுளுக்கு உண்டியல் வைத்து இருக்கின்றார்களோ...

   நீக்கு
 15. ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாகவே ஆன்மீகம் பேசினால், நன்றாகவே கல்லா கட்டலாம்; கார்ப்பரேட் கணக்கில் மடம் கட்டலாம். இது இப்போதைய தமிழ்நாட்டு சூழ்நிலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச்சரியான வார்த்தை நண்பரே ஆங்கிலம் பேசவும் எல்லாம் தெரிந்தவர் என்று மக்களும் நம்புகின்றனர்.

   நீக்கு
 16. பணம் நிம்மதி என்பது புலமை வறுமையைப் போன்றது. ரொம்ப அபூர்வமாத்தான் சேரும்.

  பணமுள்ளவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை (எத்தனைபேரை ஏமாற்றினான் என்பது அவனுக்குத்தானே தெரியும்). நிம்மதி கிடைப்பதில்லை. அதனால் கார்ப்பரேட் சாமியார்களிடம் சென்று பணம் கொடுத்தாலோ அல்லது கடவுளுக்குப் பணம் கொடுத்தாலோ நிம்மதி கிடைக்குமா என்று பார்க்கிறான்.

  பணம் முதலில் வரும். அப்புறம் பிரச்சனை வரும். சாமியார்களுக்கு அளவுக்கு அதிகமாக பணம் சேரும்போது என்ன செய்வதென்று தெரிவதில்லை. வெகுசிலர் தான், பணத்தைக் கையால் தொடாமல் விலகி இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரிவான அழகிய கருத்துரை நன்றி நண்பரே

   நீக்கு
 17. பற்றுக, பற்று விடற்கு- என்று திருவள்ளுவர் கூறினார். எதைப் பற்றுவது என்பதில் சிலருக்குக் குழப்பம் வருகிறது. கையில் கிடைப்பதைப் பற்றிக்கொண்டுவிடுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் பற்றுவது பணமாகவே இருக்கிறது.

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கையில் குழப்பங்கள் வரும்பொழுது சிலருக்கு சாமியார்கள் வடிகாலாக தோன்றுகின்றனர்.

   நீக்கு
 18. அடுத்த வேளக்கு கஞ்சிக்கு இல்லாத சாமியார்களை தவிர மற்ற சாமியார்கள் எல்லாம் பல தொழில் புரிந்து கோடியில் புரள்கிறார்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 19. பித்தானந்தாவை நம்பலாம்.
  நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 20. சாமியாராக இருப்பது என்பது ஒரு வணிகத் தொழில் செய்வது போல! ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை இந்த போலி சாமியார்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இதுதான் அடிப்படை உண்மை

   நீக்கு
 21. ஹஹஹ.... சாமியாருங்க னாலே ஓட்டம்...தான்....தன்னம்பிக்கை இழப்பவன் தான் இப்படி சாமியாரையும், ஜோசியனையும் நம்புவது. ...இப்ப இருக்கற சாமியார் எல்லாம் பணக்காரங்க.....நம்ம் பதிவர்கள் சிலர் நல்ல சாமியாருங்க . பூசானந்தா, பித்தானந்தா....சாமி பூவு.....ஹிஹிஹி...பேசாம நாங்களும் சாமியாராகலாமானு...யோசனை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட... ஆமா.. பதிவர்களிலும் ஸ்வாமி ஜி உண்டே...

   நீக்கு