தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 30, 2017

குறிஞ்சி மலருக்கு...

இன்று (17) ஆம் ஆண்டு நினைவஞ்சலி.


எனது வாழ்வாதாரம் தாழ்வாரம் நோக்கி போய்க் கொண்டிருந்த காலம் காரணம் பொருளாதாரம், எனது கஷ்டகாலம் முழுவதும் என் கரம் பிடித்து என்னுடன் வாழ்ந்த என் தாரம், இது நான் வாங்கி வந்த வரம் என நினைத்ததாளோ... என்னவோ... எனக்கு கொடுக்க வேண்டாம் பாரம் என திரும்பாத தூரம் சென்று விட்டாள். இதன் காரணமாய் நான் ஈரம் இல்லாத வேரருந்த மரம் ஆனேன் இனி தழைக்க உரம் இட்டும் பயனில்லை பிறரின் பார்வையில் எனது நிலையோ அபாரம் எனக்கோ சுமைதாங்கி போல் பாரம் என்று நிற்கும் என் வாழ்க்கை துலாபாரம்.


என்றும் நினைவுகளுடன் உன்னவன்
அழும் விழிகளும் விழும் துளிகளும்.....

என்னவளுக்கு இயற்றிய பாமாலைகள் படிக்காதவர்கள் சொடுக்குக...

 காணொளி

29 கருத்துகள்:

  1. தங்கள் பதிவினைக் கண்டு மனம் நெகிழ்கின்றது..

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா5/30/2017 2:44 AM

    மனம் அமைதியடையட்டும் சகோதரா.
    எல்லாம் கடந்து போகும்.. இது கடந்து போகாது.
    thamil manam - 1
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  3. என்ன சொல்வதெனத் தெரியவில்லை... கடந்த காலத்தை நினைக்கக்கூடாது.. இப்போதையதை மட்டும் நினையுங்கள்..

    யாருமே இவ்வுலகில் நிரந்தரமானவர்கள் இல்லை..
    நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்ம்.....

    வீடியோவை நான் பார்க்க விரும்பவில்லை.. படம் பார்க்க ஒருமாதிரி இருக்கு:(.

    பதிலளிநீக்கு
  4. ஈடு செய்ய இயலாத
    இழப்பைத் தாங்கும் பலத்தை
    இறைவன் தொடர்ந்து வழங்கட்டும்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஜி

    கவலை வேண்டாம் எல்லாம் இறைவன் செயல்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்கள் துயரம் ஆற்றொணாத் துயரம். காலம் மனப்புண்ணை ஆற்றட்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர் நினைவுகளே உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. நினைவுகள் பாரமா, சுகமா தெரியவில்லை. சுகமான பாரங்கள் என்றும் சொல்லலாம். எனது வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  8. பகிரப் பகிர உங்களின் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

    பதிலளிநீக்கு
  9. மனம்ஆறுதல் கொள்ளட்டும் நண்பரே

    பதிலளிநீக்கு
  10. சில நினைவுகள்....சுகம்...சில நினைவுகள்.....பலம்....சில இதம்.....சில...துக்கம்...வேதனை தரும் நினைவுகளையும் சுகமான பாரங்களாய்...மாற்றிக் கொள்ளும் மன நிலையை....கலையை மனிதன் கற்றுக்கொண்டு விட்டால்....மனம் இலகுவாகி விடும் இல்லையா.....எங்கள் வணக்கங்கள்....

    பதிலளிநீக்கு
  11. மறந்துவிடாமல் அழும் தங்கள் விழிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்...

    பதிலளிநீக்கு
  12. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் என்னும் முதுமொழியை நினைத்துக் கொள்ளுங்கள் ஆறுதல் சொல்வது எளிது அனுபவிப்பது கடினம்

    பதிலளிநீக்கு
  13. நினைவோ ஒரு பறவை... விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது நினைக்கும் தன் உறவை.......
    த.ம.8

    பதிலளிநீக்கு
  14. ஈடு செய்ய முடியாத இழப்பு உங்களுக்கு. என்ன சொல்லி தேற்றுவதென தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  15. துன்ப பாரம் படிப்படியாய்க் குறையும். பின்னர் அடியோடு அகலும்.

    இருக்கும்வரை நம்பிக்கைதானே நமக்குத் தோன்றாத் துணை.

    பதிலளிநீக்கு
  16. மனம் கனத்தது .. எத்தனை ஆறுதல் கூறினாலும் ஈடு செய்ய இயலா இழப்பு ..

    பதிலளிநீக்கு
  17. இருப்பவர்களுக்கு இருக்கும் போது அதன் அருமை புரியதில்லை. இல்லாதோரின் வலிகளை உணர்ந்தேனும் இருக்கும் போதே வாழ்க்கையை சீர்ப்படுத்தி கொள்ள இம்மாதிரி அனுபவ உணர்வு மிக்க வார்த்தைகள் வழி காட்டட்டும்.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் வலியை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன் ஜீ..! மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. உங்களுக்கு என் அன்பும் ஆறுதலும்..!!

    பதிலளிநீக்கு
  19. மனம் கனக்க வைத்த பதிவு. காணொளி நான் பார்க்கல எப்படியோ இருக்கு.


    பதிலளிநீக்கு
  20. உள்ளம் உருக வைக்கும்
    உண்மை வரிகள் - உந்தன்
    உன்னவள் உன்னோடு தான்!

    பதிலளிநீக்கு
  21. காலம் எத்தனையோ ரணங்களை ஆற்ற வல்லது. ஆனால் அன்புத்துணையைப்பிரிந்த வேதனையை ஆற்ற வல்லது உலகத்தில் எதுவுமேயில்லை. தங்கள் மனைவியின் இனிய நினைவுகளுடனும் கூடவே பிரிந்து விட்ட வேதனையின் சுவடோடும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போவதைதவிர வேறு வழியுமில்லை. பிள்ளைகளின் அன்பினில் ஆறுதலையடைய வேண்டுகிறேன்!!

    பதிலளிநீக்கு
  22. மனம் கனத்து போனது. என்றும் நினைவுகளில் வாழ்வார்.
    குழந்தைகளை பார்த்து ஆறுதல் அடையுங்கள்.

    பதிலளிநீக்கு
  23. மிகவும் வருந்துகிறேன் ஜி....

    பதிலளிநீக்கு
  24. பொருளாதாரம் வந்த பிறகு தாரம் இல்லையென்றால் கஷ்டமாய்த்தான் இருக்கும் :(

    பதிலளிநீக்கு
  25. இழக்கக்கூடாத இழப்பினால் துயருற்றிருக்கும் தங்களுக்கு காலம் மருந்தாக அமையட்டும். உங்களுக்கு எங்களது ஆறுதல்கள்.
    காணொளி தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  26. மனதை கனக்க வைக்கும் வரிகள். தளர்ந்துவிடாதீங்க அண்ணா ஜீ. உங்க கூடவே இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  27. கவிதைகள் படித்த பின்பு இதயம் கனத்துவிட்டது.. மனைவி மீதான உங்கள் அன்பும் அவரின் இழப்பும் ஈடில்லாதது...

    பதிலளிநீக்கு