செவ்வாய், செப்டம்பர் 08, 2015

சாகாக்கலை


நரை திரை மாற்றிடும் வித்தை
உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெல்ல குடைந்துநின் நாடார் வினைகெடப்
பள்ளமும் மேடு்ம் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வி யிலோரே-

உடம்பின் உள்ளே அமுத ஊற்றுச் சுரப்பிகள் பல உள்ளது. மூச்சுப் பயிற்சியின் உதவியால் உள்ளே உள்ள அமுத சுரபி நீரை நாடி, நரம்புகளுக்குச் பாயச்செய்வது காயசித்திமுறையாகும். இந்த சாகாகல்வி முறையை அறியாதவர்கள் தீர்த்தங்களில் நீராடுவதாகக்கூறி காடு மேடு மலைகளில் வீணே சுற்றித்திரிந்து வருவார்கள்.
Page – 53

ஒலி தியானம்
ஒலியாகிய சப்தத்தை கேட்கும் எளிய தியான முறையை கடைப்பிடித்து அதனால் பல சித்திகளை அடையலாம் என்கிறார்கள் சித்த யோகிகள்.

இந்த ஒலி என்னும் சப்தத்தைக் கேட்டு வரும் தியான யோகத்தை அப்யாசிக்க அமைதியாக சுகாசனத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். தர்ஜினி எனப்படும் மோதிர விரல்களால் இருகாதுத் துவாரங்களையும் அடைத்துக் கொள்ள வேண்டும். காதுகளை அடைத்துக் கொண்டு கண்களையும் மூடிக்கொள்ள வேண்டும்.
Page – 97

திருக்குறளில் யோகம்
கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்-

நீங்கள் மெய் அறிவை உணர வேண்டுமானால் புறத்தில் உள்ள நூல்களை எல்லாம் படித்துக் கொண்டேஇருந்தால் அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. ஆகவே மெய்யான அறிவை உணர நமது முதுகுத் தண்டின் கீழ் இருக்கும் மூலக் கனலை நெற்றிக்கு நடுவில் அதாவது புருவ மத்திக்கு கொண்டு வந்து அங்கே உணர்ந்தால் நோய் இல்லாமல் தூய அறிவுடன் விளங்கலாம் என்கிறார் திருவள்ளுவர்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வர்-
-திருக்குறள்
Page – 119

பாம்பாட்டிச் சித்தர் யோகம்
தூணைச் சிறுதுரும்பாகத் தோன்றிடச் செய்வோம்
துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்
ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் செய்குவோம்
ஆரவாரித்து எதிராய் நின்று ஆடுபாம்பே.

தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் இந்த அகண்டவெளியைத் தமக்குள் இருக்கும் தூணாகிய முதுகுத்தண்டின் கீழ் அதை ஒரு துரும்பைப் போல் நினைத்து வைப்பர். இந்த அகண்ட வெளித்தூணை அங்கே துரும்பாக்கி அத்துரும்பை இவ்வுலகத்துக்கு ஒரு தூண்போல் தோன்றிடச் செய்வர். அவர்கள் தம் வல்லமையினால் ஆண்களின் மனதை மாற்றி பெண் மனமாக்குவர். பெண் மனதை மாற்றி ஆண் மனமாக்குவர். அத்தகைய சக்தியை பெற்றோம் என்று நின்று ஆடுபாம்பே என்று சொல்கிறார்.
Page – 127

குணங்குடி மஸ்தான்சித்தர் யோகம்
எல்லோரும் மானிடர் தாமோ இந்த
இழிவான பிரமைகளெல்லார்க்கும் போமோ
கல்லெல்லாமாணிக்கமாமோ என்று
கற்பித்த காரணகுருவடி போற்றி

இவ்வுலகில் பிறந்தவர்களெல்லாம் மானிடராகிய மனிதப் பிறவியல்லர். பார்வைக்கு மனிதனாய்த் தோற்றமளித்த போதிலும் அவனது உள்ளே இருக்கும் குணங்களோடு மனிதக் குணத்தை ஒப்பிட முடியாது. அவற்றை மனிதக் குணத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பவரின் தன்மை எதைப் போன்று உடையது என்றால் இவ்வுலகில் உள்ளவற்றின் மேல்பாசமற்றுப் பார்க்கும் பொருள்களை அறிந்தெறிந்து தெளிந்து உணர்ந்து தெளிவோடு நிற்பர் என்கிறார் குணங்குடியார்.
Page – 143

இதுபோல நாள்தோறும் தியானம் செய்து வரும் யோகியர்களை எமன் அணுக மாட்டான். மேலும் முக்காலத்திலும் அமுத கிரணத்தைப் பருகிச் சாகாத நிலை எய்திருப்பார்கள். எனவே சந்திரகலை பூரணமாக இருக்கும். இதுவே சந்திர யோகமாகும். இதை தகுந்த ஆசான் மூலமாக உபதேசம் பெற்றுச் செய்து மரணமில்லாத வாழ்வு வாழ்வோமாக.
இதுவே சாகாக் கலை ஆகும்.
Page – 183

இதுவரை நன்னுரை, இனி என்னுரை

எனது இனிய நண்பரொருவர் சாகாக்கலை என்னும் ஒரு நூலை எனக்கு கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னார், எனக்கும் பழங்கால நூல் என்றால் பாகற்காய் சாப்பிடுவது மாதிரி பாகற்காய் சாப்பிடுவது எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி எனவே நானும் நூலை மிகவும் விரும்பி படிக்க தொடங்கினேன்.

அதில் பிரக்ஞானம், அஹம்பிரமாஸ்மி, தத்துவமசி, மணிபூரகம், தத்புருஷம், ஈசானியம், வசியநம, பூதசரம், வஸ்ஸியாத், அஜபாஜெபம், ஸோஹம, காம்ஸ்யம், பிரமரந்திரம், விசுத்தி, மூலாக்கினி இப்படி நிறைய வார்த்தைகள் போதுமென நினைக்கிறேன்

இவையெல்லாம் எனக்கு அபுதாபி எனது அலுவலகத்தில் அரேபியர்களோடு அன்றாடம் புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் அதனால் சுலபமாக படித்து முடித்து விட்டேன். இந்நூலை எழுதிய ஆசிரியர் யார் ? என்பது நூலிலேயே இருந்தது முடிவில் இவர் என்ன சொல்கிறார் மரணமில்லாமல் வாழமுடியும் என்கிறார்.

எனது புத்திக்கு  எட்டியவரை இது சத்தியமாக, சாத்தியமாக படவில்லை. எனக்கும், எனது நண்பருக்கும் சர்ச்சை.
சரீரம் இறந்து விடும் ஆனால் ஆன்மா நிலைத்திருக்கும் என்றார்.

சரீரம்தான் இறந்திருக்கிறது ஆன்மா இறக்கவில்லை என ஒருஉடலை நமது வீட்டில் வைத்திருக்க முடியுமா ?
அதை சட்டம்தான் ஏற்றுக்கொள்ளுமா ?
சரீரம் செயல்படாத ஆன்மா கோமா நிலையல்லவா ?
மேலும் ஆன்மாவுக்கும் பேய், பிசாசுக்கும் என்ன வித்யாசம் ?

நான் ஒப்புக் கொள்ளவில்லை முடிவில்லாத சர்ச்சையை முடிப்பதற்கு முடிவில் கேட்டேன் இதை எழுதிய ஆசிரியர் எங்கே அவர் இறந்து விட்டார்.

அப்படியானால் முதலில் அவரல்லவா, இதைக் கடைப்பிடித்து வாழ்ந்து காண்பித்துக் கொண்டிருக்க வேண்டும், ஆகவே இதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். முடிவில் அவர் என்னைச் சொன்னார், நீ ஒரு விதண்டவாதி.


சாம்பசிவம்-
காலம் பூராம் ஒன்னே அப்படி தானய்யா சொல்றாங்கே... அவங்கே வாயில, ண்ப்புத்து வெக்கே.

51 கருத்துகள்:

 1. முதலில் நம் கில்லர்ஜீயா என்று நினைத்தேன் . பின்னால் படிக்கும் போது அறிந்தேன் அவரும் சிந்த்தித்திருக்கிறார் என்று பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 2. வணக்கம் ஜி!! நானும் சித்தர்கள் பற்றிய புத்தகங்கள் படித்திருக்கேன்!! என்னுடைய சிறுதனமான டவுட்! நமக்கு ஒரு விசயம் பார்க்காததாலொ
  தெரியாததாலொ? அது இல்லை என்றும் பொய் என்றும் எடுத்துவிடலாமா???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மெய்ஞானம் இல்லை 80 என் கருத்தல்ல அவைகள் நம்பத் தகுந்தவைகளாக வேண்டும் 80தே எமது கொள்கை.

   நீக்கு
 3. ஏ.. சாமீய்!.. சதாசிவம்!.. நீங்க என்ன சொல்றீங்கே?..

  ஆள.. விடுடா.. சாமி!...

  ஏங்!..

  நானே கோமாவில இருக்கிறதா சந்தேகம் வந்திடுச்சு!..

  அடக் கெரகமே!...

  கெரகந்தான்.. அந்தாக்கில என்னையும் பேய் பிசாசு..ன்னுடுவாங்கே!..

  பதிலளிநீக்கு
 4. //ஆன்மா பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை.எதுவும் இதிலிருந்து உண்டாவதில்லை. இது பிறப்பற்றது. என்றென்றும் இருப்பது. நிலையானது. பழமையானது.உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாது.//

  என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் உங்களைப்போல் இதுபற்றி கேள்வி கேட்டு பதில் பெற முயற்சிக்கவில்லை. பதிவர்களில் இது பற்றி விளக்க முடிந்தவர்கள் விளக்கவேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி கருத்துகள் வரும் என்று காத்திருப்போம்

   நீக்கு
 5. அருமை மற்றும் ஆச்சர்யமான அலசலான பதிவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 6. ஒரே ஒரு கேள்வியில் நண்பரை மடக்கிட்டீங்களே ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கேள்விக்கான இடம் அதில் இருந்ததே.... ஆகவே கேட்டேன்

   நீக்கு
 7. aya thagal padivu padithan arumai. intha udal alinthu aanma oli uadalaga intha ualagathil endrum nelithu irukum oli aaga. pearavi enpathu ilai aanal virupa patal pearavi eadupargal. ithu en karuthu.

  பதிலளிநீக்கு
 8. aya agala maranam adintha alathu thanai thaana alithu kondavargal pengal peiyagavum, aangal pisasasu vaga irupargal.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி

   நீக்கு
 9. மனம் சாகாமல்,ஆரோக்கியம் சாகாமல்,இருப்பதற்குச் சித்தர்கள் வழி சொன்னார்கள்.;அவ்வளவே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் கருத்துரை ஏற்றுக்கொள்ளக்கூடியதே...

   நீக்கு
 10. முதலில் ஆச்சர்யமாக இருந்தது! உங்கள் விவாதம் சரியே! பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள ஜி,

  ‘சாகாக்கலை’ தியானம், யோகாசனம் செய்வது உடல் ஆரோக்கியமாக இருக்க ஒரு நல்ல உடற்பயிற்சி; வேண்டுமானால் வாழ்நாள் நீடித்து வாழ வழி செய்யுமே ஒழிய சாகாவரம் ஒன்றும் இல்லை என்பதை அழுத்தமாகவே சொல்லலாம்.

  ‘பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
  இருக்கின்றது என்பது மெய்தானே

  ஆசைகள் என்ன ஆணவம் என்ன
  உறவுகள் என்பதும் பொய்தானே

  உடம்பு என்பது உண்மையில் என்ன
  கனவுகள் வாங்கும் பை தானே

  கனவு காணும் வாழ்க்கை யாவும்
  கலைந்து போகும் கோலங்கள்
  துடுப்புக்கூட பாரம் என்று
  கரையைத் தேடும் ஓடங்கள்’

  த.ம. 5.

  பதிலளிநீக்கு
 12. ஒரு ஆத்துமாவின் சுய கதை என்கிற புத்தகம் படித்தபோது, அந்த ஆத்துமா மறுபிறவியாக ஒரு குழந்தையாக பிறந்ததுவரை நடந்த நிகழ்வுகள் என்பது சரியான முடிவில்லை. அருமையான சிந்தனை, சிந்தனையின் தொடக்கத்தில் இருந்த தெளிவு முடிவில் இல்லை ... அதாவது "நான்கு சுவற்றுக்கு நடுவில் யாரும் இல்லை என்று மனிதன் நினைப்பது இயல்பு, ஆனால் நம்மைசுற்றி ஏராளமான ஆன்மாக்கள் எப்பொதும் அனைத்து இடங்களிலும் சுற்றிக்கொண்டு இருப்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. எனக்கும் அப்படிப்பட்ட எண்ணம் 12 வயதுவரை இருந்தது, அரவிந்தர் ஆசிரமத்தின் பிரதிநிதியான ஒரு குருவின் ஆசியில் பெற்ற ஆழ்நிலை தியானம் பயின்ற இளம் கன்று பயம் அறியாது என்பதற்கிணங்க, சவாசனத்தில்-ஆழ்நிலை தியானத்தில் இறங்கியபோது நடந்த நிகழ்வு அது(சவாசனத்தில்-அதாவது தரையில் படுத்தநிலையில் ஆழ்நிலை தியானம் செய்யக்கூடாது என்பது நியதி. உட்கார்ந்த நிலையில் மட்டுமே தியானம் செய்யவேண்டும் அதுவும் 20 அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே தியானத்தில் இருக்கலாம்) அப்படி தியானத்தில் இறங்கியபோதுமூன்று முறை என் உடலை நானே பார்த்த அனுபவம், என்னை சுற்றி ஏன் இப்படி ஒரு கூட்டம், கூச்சல், குழப்பம் தெளிவில்லாமல் ஒரு பயம் எனது கால்களை கால்பந்து விளையாடுவதுபோல எட்டி உதைத்து..... விழித்துக்கொண்டேன்... தூக்கத்தில் இருந்திருப்போமா?... தெரியவில்லை... என்ன நடந்தது தெரிந்துகொள்ள மேலும் ஒரு முயற்சி என மூன்று முறை... அதற்குமேல் ஆராய்வதற்கு நேரமில்லாமல் ஓடி ஓடி உழைத்து குடும்ப பொறுப்பு...வயதாகிப்போனதால் மனதுக்கிருந்த தைரியமும், சக்தியும் உடலுக்கு இல்லை... ஆனால் ஒன்று நிச்சயம் ஒவொருவரின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட உணர்வுகளின் நினைவுகள் ஆத்மாக்களுக்கு உண்டு ஆனால் ஆத்துமாக்கள் மீண்டும் பிறவி எடுக்கும்போது அவர்களின் புனர் ஜென்ம நினைவுகள் மங்கிவிடுகிறது அதாவது மறந்து போகும், ஏதோ ஒரு சிலர் மட்டும் புனர் ஜென்ம நினைவுகளை பெற்றிருக்கிறார்கள். நன்றிகளுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி.

  பதிலளிநீக்கு
 13. வருகை மணவையாரே எமது கருத்துடன் இணைந்து வருவதில் மகிழ்ச்சியே...

  பதிலளிநீக்கு
 14. நண்பர் கோபாலகிருஷ்ணனின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தங்களது கருத்தில் உண்மைகள் சில இருக்கின்றது 80தை மறுக்க முடியாது

  பதிலளிநீக்கு
 15. ஆகா! சாகாக்கலை பற்றி இங்கு பகிர்ந்ததற்கு நன்றி
  என்ன? இந்த வார்த்தையெல்லாம் சாதாரணமாய்ப் பயன்படுத்துகிறீர்களா!!!

  பதிலளிநீக்கு
 16. இந்த சாகாக் கலை பற்றி எல்லாம் சித்தர்கள், யோகக்கலை அறிந்தவர்கள் எல்லோரும் விளக்கக் கேட்டிருக்கின்றோம். அப்படி விளக்குபவர்கள், புத்தகம் எழுதியிருக்கும் யோகிகள் எல்லோருமே இன்று உயிரோடு இல்லை...அதாவது நமக்குத் தெரியும் வகையில் இல்லை என்று சொல்லுவார்கள் இதில் நம்பிக்கை உள்ளவர்கள். இந்த ஆன்மா, உடல் இதெல்லாம் குழப்பவாதிகள்.

  இன்று இந்த நொடியில் நம் சுவாசம் இருக்கிறாதா.....மகிழ்வோம்.... அன்பு செய்வோம்....அடுத்த நொடி என்ன என்பது நமக்குத் தெரியாது...எனவே இந்த நொடியை வாழ்வோம்...மனிதத்துடன் அன்பு செய்வோம்...அவ்வளவே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையாக விளக்கவுரை தந்த வில்லங்கத்தாருக்கு எமது நன்றிகள்

   நீக்கு
 17. தாங்களை விதண்டவாதி என்று சொல்லியது உண்மையிலே..பெருமைக்குரியபட்டம்.விதண்டவாதி என்றால் உண்மையை அறிபவர்..அர்த்தம் நண்பரே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பெருமைக்குறிய பட்டமா ? ஹாஹ்ஹாஹா

   நீக்கு
 18. தூக்கத்தில் இருக்கும் போதே ,நாம் எங்கு இருக்கிறோம் என்பதை உணர முடியாது ,செத்த பிறகு ஆன்மா பிறக்கிறதா இல்லையான்னு எப்படி உணரமுடியும் ?
  யோகக் கலை நல்ல மனப் பயிற்சி என்று வேண்டுமானால் சொல்லலாம் ,அதனால் சாகா நிலை என்பதெல்லாம் புருடா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகவான்ஜி + கில்லர்ஜி கருத்துகள் வேறுபடுமா ? நன்றி ஜி

   நீக்கு
 19. உங்கள் கேள்வி சரியானதே.. சாகாநிலை என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது. வாழும்வரை ஆரோக்கியத்துக்கு வேண்டுமானால் இந்தப் பயிற்சிகள் பயன்படலாம். பகிர்வுக்கு நன்றி சகோதரா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எமது கருத்துடன் இணைவதில் சந்தோஷமே...

   நீக்கு
 20. சித்தர்கள் அவர்கள் பாட்டில் சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள் அவசர உலகில் நாம் சிரித்துவிட்டுப்போவோம் ஜீ)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்லும் இதுவும் உண்மைதான் நண்பரே...

   நீக்கு
 21. நல்ல ஆய்வு! அலசல்!

  வந்தவரெல்லாம் தங்கிடவும் முடியாது அதேநேரம்
  வேளைவராமல் போகவும் முடியாது சகோ!

  //சரீரம் செயல்படாத ஆன்மா கோமா நிலையல்லவா?..//

  100 வீதமும் உண்மை சகோ!
  எனது வாழ்க்கையே 13 வருடமாக அந்த நிலை கண்டவருடன்தானே!..
  இதனால் என் வழக்கமான வேலைகளும் எதும் அந்தந்த நேரத்திற் செய்ய முடியாமல் போகிறது, இதோ எவ்வளவு தாமதமாக உங்கள் பதிவைப் பார்த்துக் கருத்து எழுதுகிறேன். பொறுத்திடுங்கள்!

  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி தங்களின் வாழ்க்கைச்சூழல் எனக்கும் தெரியும் சகோ இறைவன் அனைத்துக்கும் நல்வழி தருவானாக....
   தாமதமானலும் வந்து விடுகின்றீர்களே.. அதுவே எமக்கு சந்தோஷம்.

   நீக்கு
 22. அய்யோ சகோ,
  நீங்களுமா?
  அந்த கடைசி வரிகள் தான் உண்மை, வந்தவர் எல்லாம் தங்கிடவும் முடியாது,,,,,,,
  தங்கள் பகிர்வு அருமை,,,,

  பதிலளிநீக்கு
 23. சாகாநிலை பற்றி எனக்கு நம்பிக்கையில்லை. சித்தர்களைப்பற்றிய ஆய்வில் உள்ளீர்களா சகோ.
  கண்ணதாசன் வரிகளோடு முடித்த விதம் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 24. ஹாஹா சரியாக சொன்னீர்கள் தங்கள் கருத்துரைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 25. sitharkal parriya aaivu veku sirappu enna solla sakavaram perum alavukku valarnthirukireerkalae ji vaalthukkal sako!

  பதிலளிநீக்கு
 26. கும்பகோணத்திற்கு மூன்று கோயில்களின் கும்பாபிஷேகம் காண சென்றுவிட்டதால் தங்கள் பதிவினை இப்போதுதான் பார்த்தேன். இருக்கும் கலைகளே போதுமய்யா. சாகாக்கலை தேவையில்லை. ஆரம்பப் பத்திகளைப் படிக்கும்போது வேறு தளத்திற்கு வந்துவிட்டோமோ என்ற ஐயம் எழுந்தது. அனைத்து நிலைகளிலும் எழுதுகின்றீர்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் தாமத வருகைக்கு காரணம் நான் அறிவேன் புதுமைக்காக எழுதினேன்....

   நீக்கு
 27. எப்பவும் வித்தியாசமாய் பகிரும் உங்களிடமிருந்து மிக அருமையான பகிர்வு... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. ஏய்ய்…..........................
  முட்டாள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இன்றுதான் 17.08.2022 தங்களது கருத்தை பார்த்தேன் நலமா ?

   என்னை முட்டாள் என்று சொல்ல வேண்டிய காரணம் இதில் ஏதும் இருக்கிறதா ? அதை விளக்குடா... முட்டாப்பய மவனே...

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...