தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 10, 2018

நடந்தது என்ன ?


இறந்து போகும் மனிதர்கள், என்ன ஆவார்கள் ? என ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு விசயங்களை சொல்கிறது, இது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டதா ? இல்லை கற்பனையில் உருவாக்கப்பட்டதா ? என யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை சொல்லவும் முடியாது காரணம் யாருமே அனுபவசாலி இல்லை.

அதேநேரம் விஞ்ஞானிகளும் இதனைப்பற்றிய விசயங்களை நெருங்க முடியவில்லை, நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள் இறந்தவர்கள் மீண்டும் கண் விழித்திருக்கிறார்கள் என, உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்றைய நாள்வரை சுமார் ஏழு நபர்கள் இந்த மாதிரி அனுபவம் பெற்று இருக்கின்றார்கள் என்று கணக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது அவர்களை கேட்டபொழுது எல்லோருமே பெரும்பாலும் ஒரே மாதிரியான விசயத்தைத்தான் சொல்லி இருக்கிறார்கள், இறந்த பிறகு நம் உடல் காற்றில் மிதப்பதுபோல் இருந்தது, இருட்டுக்குள் பறப்பதுபோல் இருந்தது, பறக்கும்போது நாம் இறந்து விட்டோம் என்ற உணர்வு வருகிறது, மனைவி மக்களைப்பற்றி நினைக்க முடிகிறது, இப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் இதற்குமேல் விசயங்கள் யாரும் இதுவரை சொல்லவில்லை, ஒருவேளை அதற்குள் மீண்டும் உயிர் பெற்றிருக்கலாம் என்பதே எமது ஐயப்பாடும், எனக்கு விபரம் அறியாத வயதில் எனது சொந்தக்காரர் ஒருவர் இறந்து விட்டார், சொந்த பந்தங்களும் வந்து விட்டனர் கடைசி நேரத்தில் எழுந்து விட்டார், எழுந்தவர் எனக்கு கோழி குழம்பு வைத்து சாப்பிடவேண்டும் எனக்கேட்டிருக்கிறார், உடன் தயார் செய்து கொடுத்து இருக்கிறார்கள் சாப்பிட்டவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் இறந்து விட்டார் ஆனால் அவரிடம் யாருமே சன் டிவிக்காரனைப் போல நடந்தது என்ன ? என்று கேட்கவில்லை.

 (உணவில் விஷம் வைத்து விட்டார்கள் என எண்ண வேண்டாம்)

மனித உயிர் உடலை விட்டு பிரியும் பொழுது அவை இயல்பான, இயற்கையான மரணமாயினும் சரி அல்லது துர் மரணங்களாக இருந்தாலும் சரி ஒரே நொடியில் ஆயிரம் தேள்கள் கொட்டிய வேதனை உண்டாகும் என்று சொல்லிச் சென்ற தவத்திரு. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜிங்கா மங்கா ஸ்வாமிகளின் நினைவு வருகிறது ஆகவே நான் இறைவனிடம் அழகிய மரணம் கேட்கின்றேன்.

Chivas Regal சிவசம்போ-
நமக்கெல்லாம் போதையிலேயே பொட்டியை கட்டுனா நல்லது.

மரணத்தை நினைவூட்டிய ஐயா திரு. ஜியெம்பி அவர்களால் எழுதியது நன்றி ஐயா.

43 கருத்துகள்:

 1. நல்லா இருக்கு உங்க வேண்டுகோள். அனைவரும் கேட்பதும் அதுவே தானே! இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்பதை நானும் பலர் சொல்லிக் கேட்டிருக்கேன். அவர்களில் ஒருத்தர் எங்களோடு சில வருடங்கள் இருந்தார். பின்னர் இறந்தப்போவும் ஒரு நாள் முழுதும் வைத்துப் பார்த்த பின்னர் மறுநாள் தான் எடுத்தார்கள். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

   நீக்கு

 2. இறந்து விட்டார்கள் என்று சுடுகாட்டுக்கு கொண்டு போனவர் பிழைத்து வந்தார் என்று செய்திகள் ரேடியோவில் வாசிப்பார்கள்.

  நிறைய பேர் சொல்ல கேட்டு இருக்கிறேன் இறந்தவர்கள் என்று நினைத்தவர்கள் பிழைத்த வரலாற்றை.

  என் மாமியாரும் சொல்லி இருக்கிறார்கள்.
  என் மாமா இறந்த அன்று இரவும் நேரிலும் பார்த்தேன்.


  என் மாமியார் ஒரு முறை வயிற்று போக்கு அதிகமாகி ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கும் போது எமதூதர்கள் வந்து அழைத்தார்கள் என்றும் சண்முக கவசம் பாடியவுடன் அவர்கள் போய் விட்டார்கள் என்றும் சொன்னார்கள் அவர்கள் செத்து பிழைத்தாக அவர்கள் அம்மா சொல்வார்கள்.

  மாமா இறந்த அன்றும் பேச்சு மூச்சு இல்லாமல் போய் விட்டது நெஞ்சில் குத்தி, முதுகில் தட்டி , வாயோடு வாய் வைத்து ஊதிய பின் மூச்சு வந்தது, அப்போதும் அத்தை செத்து போய்
  போய் திரும்பியாதாக சொன்னார்கள்.

  எல்லோருக்கும் அழகிய மரணம் உறங்குவது போல சாக்காடு
  வந்தால் நல்லது தான்.

  என் அப்பா 51 வயதில் மடித்த கைமேல் தலையை வைத்து சும்மா படுத்தவர்கள் இறந்து போனார்கள். அவர்களுக்கு நல்ல சாவு ஆனால் அவர்களை பிரிந்த எங்கள் குடும்பம் அடைந்த கஷ்டம்?

  குடும்ப கடமைகளை சரிவர ஆற்றி இன்ப துனபத்தை அனுபவித்து யாருக்கும் துன்பம் தராமல் போவது தான் அழகிய மரணம் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தக்களது விரிவான அனுபவக் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 3. படித்துவிட்டேன். பிறகு எழுதறேன்.

  நீங்கள் எழுதுனதுல மிஸ் ஆனது, இறந்தவர்கள் ஒரு இருண்ட tunnel மாதிரியான வடிவில் தூரத்தே தெரிந்த வெளிச்சத்தை நோக்கி பிரயாணம் பண்ணியதாக. நான், "விக்கவாண்டி ஆறுமுகம் எழுதும் ஆவிகள் உலகம் பத்திரிகை பல வருடங்களாக-30 வருடத்துக்கும் மேல், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வாங்கிப் படிப்பேன். அதில் நிறைய இதுபோன்ற டாபிக், அனுபவங்கள் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது அனுபவக் கதைகளையும் பகிருங்கள்.

   நீக்கு
  2. அனுபவமா? அம்மாடியோவ்.

   ஏன் சுடுகாடுல பிணத்தின்மீது நெருப்பு இட்டபின்பு திரும்பிப் பார்க்காமல் செல்லச் சொல்றாங்க? ஏன் மாலை நேரத்தைத் தாண்டி சடலத்தை வீட்டில் வைத்திருக்கமாட்டார்கள் தெரியுமா?

   இதெல்லாம் இன்டெரெஸ்டிங் டாபிக். இன்னொன்று நாம எதிர்பார்க்கிறதுக்கு மாறாக, இறந்தவர்களின் ஆவி, இறப்பதற்கு முன் இருந்த மதம், கடவுள் நம்பிக்கையைத் தொடருவதாக எழுதியிருந்தார்கள் (இறந்தவரது ஆவி, சற்றுப் பொறுங்கள் நமாஸ் பண்ணிவிட்டு வருகிறேன் என்றதாம்). எல்லாம் நாம் நம்புவதைப் பொருத்துத்தான்.

   நீக்கு
  3. நீங்கள் சொல்வது பிரமிப்பாக இருக்கிறது நண்பரே...

   நீக்கு
 4. // போதையிலயே பொட்டியக் கட்டுனா நல்லது..//

  திரும்பி வந்து குவாட்டர் கேக்காத வரைக்கும் சரி...

  இன்னொரு கண்ணாலம் செஞ்சி வையி.. ந்னு கேட்டா???...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே... மொந்தை கிராக்கி சரியாகத்தான் கேட்குது ஜி

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  மரணம் எப்படியிருக்குமென இதுவரை யாரும் சொன்னதில்லை! நாமும் கேட்டு விட்டு வந்து யாரிடமும் சொல்லவும் இயலாது.(அப்படியே சொல்ல முயற்சித்தாலும் வேப்பிலை அடித்து துரத்தி விடுவார்கள்.) என்றேனும் ஒர் நாள் அதை சந்தித்துதான் ஆக வேண்டுமென்ற ஒரு எண்ணம் அனைவருக்கும் உள்ளது. அதனால்தான்,மனிதாபிமானங்கள் மரண பயமின்றி நம்மிடையே ஜீவித்து சுற்றி வருகின்றன.மரண வேதனை என்ற சொல் வழக்கு இருந்து வருகிறதே! வேதனைகள் பலவிதம். இதில் இந்த மரண வேதனை எப்படியிருக்குமோ? எல்லோரும் தங்கள் எண்ணப்படி ஆனந்த மரணத்தைதான் எதிர்பார்க்கிறோம். கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறி. நானும் இறந்தவர் உயிர் பிழைத்த விபரங்களை கேட்டிருக்கிறேன்.என் பாட்டியும் அவர்கள் வாழ்வில் நடந்தாக சொல்லிக் கேட்டிருக்கிறேன். நானும் யாவருக்கும், எனக்கும் தொந்தரவின்றி என் உயிரை பிரித்து விடு என தினமும் ஆண்டவனை வேண்டிக் கொண்டேயிருக்கிறேன். ஐயோ! மரணபயத்தில் கொஞ்சம் அதிகமாகத்தான் எழுதிக் கொண்டேயிருக்கிறேன் என நினைக்கிறேன். (ஆகா!விட்டால், கருத்துரையும் பதிவையும் மிஞ்சி "உயிரை" வாங்குகிறதே! என நீங்கள் அஞ்சுவதற்குள் நிறுத்துகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அடடே எனது பதிவு பலருடைய நிறைய விடயங்களை வெளிக்கொண்டு வருவதில் மகிழ்ச்சி.

   நீக்கு
 6. மரணம் பற்றிய ஆய்வுகள் தேவையற்றது என்றே கருதுகிறேன். குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே யாருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்தால் மரணத்தைப் பற்றிய பயம் தேவையில்லை வருகைக்கு நன்றி.

   நீக்கு
 7. மரணத்தைப் பற்றி இப்பொழுது என்ன நண்பரே அவசரம்
  வாழ்வோம்
  வாழ்வை சிந்திப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வரும்போது வரட்டும் சிறிய அலசல் அவ்வளவே.

   நீக்கு
 8. நெல்லைத்தமிழன் சொன்னது போல ஒரு டன்னல் வழியே வெளிச்சத்தை நோக்கி மிதப்பது, தான் கிடப்பதை தானே பார்ப்பது உயிர் பிரியும்போது எல்லையில்லாத ஒரு ஆனந்த உணர்வும், மீண்டும் உடலுடன் உயிர் இணையும்போது வேதனையும் உணர்ந்ததாகப் படித்திருக்கிறேன். 'ஒரு யோகியின் சுயசரிதை' படித்திருக்கிறீர்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 9. ஒரு டன்னல் வழியே வெளிச்சதை நோக்கி மிதப்பது , தியானம் செய்யும்போது அனுபவம் கிடைத்திருக்கு.நம்ம உயுருடன் இருப்பது மத்தவங்களு தேவை யென்றால்
  போன உயிர் திரும்பக் கிடைம்பது நல்ல விஷயம். ஆனால் மத்தவளுக்கு நம்ம பாரமா இருக்கும் தருணத்தில் திரும்புவது கொடுமயிலும் கொடுமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமிகு. சுபா ரவீந்திரன் அவர்களின் முதல் வருகைக்கு மலர்க்கொத்து.

   தங்களது கருத்தில் முடிவில் சொன்னது நிதர்சனமான உண்மை.

   நீக்கு
 10. கில்லர்ஜி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 7 பேர் உண்மையிலேயே மரணத்தைத் தழுவவில்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் ஒரு விதமான அதீதமான மயக்க நிலையில் இருந்திருக்கிறார்கள். அவ்வளவே..இந்த அதீதமான மயக்கத்திலும்.அந்த நேரத்திலும் நம் மூளை கன்னாபின்னாவென்று வேலை செய்யும்...அது உடலை இயக்க வைக்கத் தடுமாறிக் கொண்டு சிக்னல் பிறப்பித்துக் கொண்டிருக்கும் நேரம் அதான் அவர்களுக்கு அப்படித் தோன்றியுள்ளது. அல்லாமல் மரணம் நிகழ்ந்தால் நம் மூளை இயங்காது....சில சமயம் மூளை கூட இயங்குவது நின்றிருக்கும் ஆனால் இதயம் கொஞ்சம் துடித்து அடங்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மூளை இயக்கம் நின்றுவிட்டாலே மரணம் தான். அதனால் தான் மூளைச் சாவு ஏற்பட்டதுமே நம் உறுப்புகளைத் தானம் செய்ய நம் உறவினர் முன்வந்தால் எடுத்துக் கொள்கின்றனர். அல்லது முன்னரே நாம் கொடுக்கிறோம் என்று எழுதிக் கொடுத்திருந்தாலும் எடுத்துக் கொள்வர்.

  மரணம் என்பது ஒரு சிலருக்கே எந்தவித சங்கடங்களும் கொடுக்காமல் தழுவும். இல்லை என்றால் நாம் மரணத்தை அது எப்படி வந்தாலும் ஏற்கும் மனநிலையில் இருக்க வேண்டும்!!!

  கீதா

  இப்பத்தான் நெட் வந்துச்சு கில்லர்ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது விரிவான கருத்துரையை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 11. உங்க உறவினர் கூட மரணம் அடைந்திருக்க மாட்டார்னு நினைக்கிறேன் கில்லர்ஜி. ஏதாச்சும் டாக்டர் வந்து செக் பண்ணி உறுதிப்படுத்தினாங்களா? ஏன்னு கேட்டா அப்படி எந்தவித அசைவும் இல்லாமல் சில சமயம் மரணம் போல இருக்கும்...அதனால் தான் மருத்துவரை அழைத்து உறுதிப்படுத்தச் சொல்லுவது வழக்கம்.

  இதைக் கூடக் காமெடியாகச் சொல்லுவதுண்டு.. சித்ரகுப்தன் சரியாகன நேரத்தை மாற்றிச் சொன்னதால் எமன் பாசக் கயிற்றை முன்னாடியே வீசியிருப்பான்...அப்புறம் அம்மனிதரின் உடலுக்குள் என்னடா இது இன்னும் மூணு மணிநேரம் கழித்துத்தானே வந்திருக்கணும் சீக்கிரமா வந்துட்டாரே எமன் அப்படினு போராட்டம் நடந்திருக்கும். எமனும் தனது ரெக்கார்டை செக் செய்து சித்ரகுப்தனுடன் வாதம் புரிந்து உடனே எமன் கயிற்றை திரும்ப எடுத்துக் கொண்டு மீண்டும் சரியான நேரத்தில் வீசியிருப்பார்.

  இந்தக் கோழிக் குழம்பு கதையை முன்னரே கூட வேறு ஒரு பதிவில் சொன்னதாக நினைவு சரியா கில்லர்ஜி?!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த சம்பவம் நிகழ்ந்தது எனது குழந்தை பருவம் ஆகவே முழுவிபரம் தெரியாது செவிவழிச் செய்திகளே...

   கோழிகுழம்பு விடயம் யாருக்கோ பின்னூட்டத்தில் சொன்ன நினைவு பதிவில் அல்ல!

   வருகைக்கு மீண்டும் நன்றி

   நீக்கு
 12. இறந்து பேகும் மனிதர்கள் என்ன ஆவார்கள் என்பது எனக்கு தெரிந்தது...என் கண்ணால் கண்டது ...சுடு காட்டில் இடம் இருந்தால் புதைத்து விடுவார்கள். இடம் இல்லை என்றால் எரித்து விடுவார்கள். புதைக்கப்பட்டவர் மண்ணோடு மக்கி கரையான்களுக்கு உணவாகிவிடுவார். எரிக்கப்பட்டவர் சம்பலாகி விடுவார். மாட்டுச் சானம் எருவாகி..சாம்பலாக மாறுவதுபோல.. இறந்த மனிதரின் உடலும் வேறு பொருளாக மாறிவிடும்.. நண்பரே..கண்ணுக்கு தெரிகிற உண்மையைப் போயி..ஸ்ரீ..ஸ்ரீ..ஸ்ரீ மங்காகிட்ட கேட்டா...அவரு முக்கா படிக்கு ஒரு படியா அளந்து விடுவாரு....நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே இந்த மாதிரி திரித்து விடுவது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜிங்கா மங்கா ஸ்வாமிகள் வேலைதான்.

   நீக்கு
 13. மரணம் என்பது ஒரு நிகழ்வு அதை அடைபவர்களுக்கு ஏதும்தெரியாது தெரிந்ததைச் சொல்ல அவர்கள் வருவதில்லைமற்றபடி இறந்தவர் பிழைத்தெழுவது என்பதெல்லாம் அதீதக் கற்பனையின் விளைவே தூங்கும் போதும் காலை ஆட்டிக்கொண்டுஇருக்கவேண்டும் இல்லைஎன்றால் இறண்டு விட்டான் என்று பிறர் கொண்டுபோகக் கூடும் நன்சொல்லவில்லை பகவான் ஜி சொன்ன நினைவுநன் ஒரு நண்பர் கேட்டதற் கிணங்க எழுதி இருந்த உரத்த சிந்தனைகள் என்னும் பதிவைநீங்களும்படித்திருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உங்கள் பதிவின் விடயமே எனது இப்பதிவு வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. அச்சச்சோ என்ன இது ஒரே மரணப் பயமுறுத்தலா இருக்கே இங்கு... சரியோ பிழையோ நானும் இதுபற்றி நிறைய வாசித்திருக்கிறேன்... பெயர் மறந்துவிட்டது சைனாக்காரர் எழுதிய மரணம் பற்றிய இரு இங்லிஸ் புக் tae என நினைக்கிறேன் அதிலும் நிறைய இருந்தது.

  என்னைப்பொறுத்து மரணம் பற்றி ஆராயாமல் .. தெரியாமல் சாவதே மேல்..

  இந்த விசயத்தில ச்றீ சிவசம்போ அங்கிள் கட்சிக்கு மாறிட்டால் நல்லதென்றே தோணுது:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க உங்கள் அங்கிள் சரியான ஆங்கிலில்தான் பேசுகிறார்.

   நீக்கு
 15. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். அருமையான மனோதத்துவ, சிந்திக்கவைக்க பதிவு. மரணம் வரும்போது வரட்டும். அப்போது எதிர்கொள்வோம். இப்போது சாதிக்கவேண்டியனவற்றைப் பற்றி சிந்திப்போம். சரியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் முத்தாய்ப்பான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 16. தாங்கள் சொல்வதுபோல் அழகிய (அமைதியான) மரணம் நிகழ அனைவரும் விரும்புவர். ஆனாலும் முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்கள் சொல்வதுபோல் மரணம் வரும்போது வரட்டும். அதுவரை சாதிக்கவேண்டியது பற்றி சிந்திப்போம். அதைப்பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் அழகிய கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

   நீக்கு
 17. உடம்பு, உயிர், மனம் இவற்றின் ஒருங்கமைப்பே மனிதன். உயிரோட்டம் பஞ்சேந்திரியங்களால் உணரப்படுவது. இவ்வாறு உணரப்பட்டவை நினைவுகளாக பதிவு செய்து மூளையில் சேமிக்கப்படுகிறது. உடம்பில் உயிரோட்டம் நின்றால் மரணம். மரணத்திற்குப்பின் மனிதனின் உயிரின் நிலை என்ன? இது கேள்வி? பதில்...

  பதிலளிநீக்கு
 18. எல்லாரும் வலியின்றி,இரத்தமின்றி அமையாதியாக மரணம் அடையவே விரும்பவர். என் அம்மா சொல்லுவாங்கா. படிக்கையிலே போயிடனும்ன்னு. சொன்னபடி படுத்துவங்க எழும்பவில்லை. இறந்தபின் ஆவியா வந்து இங்கு என்ன நடக்குது என பார்க்க ஆசை..ஹி..ஹி.
  இறந்தவங்க உயிர்த்தெழுந்த சம்பவம் நியூஸாக வாசித்திருக்கேன். இருக்கும்வரை கொஞ்சம் மகிழ்வாக இருப்போம்.அது வரும்போது வரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

   நீக்கு