தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 06, 2018

பேராசை பெருநஷ்டம்


நான் உலகை அறிந்த சிறிய அகவை முதலே நானொரு பேராசைக்காரன் எனக்கு ஆண் குழந்தைகள் மட்டும் ஐந்து வேண்டுமென பெயர் கூட வைத்து இருந்தேன்.


நான் இப்படி பேராசைப்பட்டதாலோ... என்னவோ இறைவன் எனது வாரிசை TAMILவாணனோடு நிறுத்தி விட்டான். நினைத்தது எதுவுமே நடவாத எனது வாழ்வில் இது மட்டும் நடந்து விடுமா என்ன ?

ஆசையே துன்பத்திற்கு மூலதனம்.

Chivas Regal சிவசம்போ-
இருந்தாலும் மனுஷனுக்கு இப்படி எல்லாம் ஆசையிருக்க கூடாது.

55 கருத்துகள்:

 1. பெயர்கள் அழகு!!!.ஆமாம் பேராசை அது எதுவாக இருந்தாலும் பல சமயங்களில் நஷ்டப்படுகிறதுதான்...

  கீதா:..அது சரி..ஏன் கில்லர்ஜி பெண் குழந்தைகள் பிடிக்காதா.!!! இந்த ஐந்தில் ஒன்றைக் கூடவா பெண்ணாக யோசிக்க முடியலை!!! ஹா ஹா ஹா..ஒன்னு கூடச் கூடச் சொல்லலியே...ஹோ ஒருவேளை அது 6 வதா ஆசைப்பட்டீங்களா?!

  இருந்தாலும் சிவாஸ் அதைக் கேள்வியே கேட்கலைனு எனக்கு
  அவர் மீது கோபம்..மத்த ரெண்டு மேலயும் தான்....சிவாஸ் நார்மலா மிதந்தா தத்துவங்களா உதிரும்...இன்னிக்கு என்னவோ இன்னும் அடிக்கலை போல...ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசரப்பட்டு விட்டீர்கள் "ஆண் குழந்தை மட்டும்" என்று சொல்லி இருந்தேன் பெண் குழந்தைகள் தனிவரிசை நானா பெண் குழந்தையை விரும்பாதவன் ?

   நீக்கு
  2. அந்த "மட்டும்" என்பது வேறே மாதிரி பொருள் கொள்ளவும் வாய்ப்பு உண்டே கில்லர்ஜி! ஆண் குழந்தை "மட்டும்" போதும் என்னும் நினைப்பு உள்ளதாகவும் தோன்றும் அல்லவா? :)))) ஆண் குழந்தைகள் ஐந்து+ பெண் குழந்தைகள் 5 என்று வந்திருக்கலாமோ? :)

   நீக்கு
  3. சரிதான் அதுவும் பெண் குழந்தைகளை வேண்டாம் என்ற வேறு தீர்மானத்தை கொடுத்து விடுகிறதோ...

   நான் மூன்று பெண் குழந்தைகளுக்கு பெயர் வைத்து இருந்தேன்.

   நீக்கு
  4. ஆஆஆவ்வ்வ்வ் இம்முறை கிதாவா 1ஸ்ட்டூஊஊஊஊஊ அப்போ கீசாக்கா இன்ரும் இல்லையா:) ஹையோ ஹையோ:) சரி சரி விடுங்கோ..:)

   நான் இல்லாத நேரமாப் பார்த்து இப்பூடி ஒரு போஸ்ட் போட்டு தப்பிடலாம் என கில்லர்ஜி நினைச்சிருக்கிறார் போலும்:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விட்டிடுவேனா நான்ன்ன்:))

   கீசாக்கா அப்பூடித்தான் விட்டிடாதீங்கோ... உள்ளே இருந்தது வெளியே வந்திட்டுது:) இப்போ ஜமாளிப்புக்கேசன் நடத்துறார் கில்லர்ஜி:)..

   நெற்றிக் கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே:).. பெண் பிள்ளைகளையும் லிஸ்ட்டில சேர்த்திருக்கோணும்ம்ம்ம்ம்ம்ம்:)).. எதுக்கு ஆண் பிள்ளைகளை மட்டும் முதல்ல ஜொள்ளிட்டார்ர்ர்ர்ர்?:)) ஹா ஹா ஹா:))

   நீக்கு
  5. ///நான் மூன்று பெண் குழந்தைகளுக்கு பெயர் வைத்து இருந்தேன்.////

   அச்சச்சோ அச்சோ...:) மருதமலையானே எங்க போயிட்டீங்க:) இதை எல்லாம் டட்டிக் கேய்க்க மாட்டீகளோ:)...

   அப்போ அஞ்சூஊஊஊம்ம்ம்ம் மூணும் எட்டுக் குழந்தைகளுக்குப் பிளான் போட்டிருக்கிறார்ர்ர்:) இவருக்கென்ன நொந்தது:) பெறப்போவது மனைவிதானே... கணக்கு மட்டும் இவிக போடுவினமாம்ம்ம்ம்... நோ இப்பவே புறப்படுறேன்ன்ன்ன் சுப்பையா கோர்ட்டுக்கூஊஊஊஉ:) நேக்கு நீடி:) வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்:)...

   நீக்கு
  6. கீசாக்கா பொயிண்ட் ஐ எடுத்துத் தாறேன் பக்கெனப் பிடிங்கோ:)).. இதில இன்னொரு ஓர வஞ்சனை:)) ஆப்புளப்பிள்ளைகள் அஞ்சூஊஊஊஊஊஉ வேணுமாம்:)) பொம்பிளைப்பிள்ளைகள் மூணூஊஊஊஉ போதுமாமேஏஏஏஏ கர்ர்:)) இது ஓர வஞ்சனைதானே:)).. நேக்கு சம உரிமை வேணும்ம்ம்ம்ம்ம்:)).. சம உரிமை கிடைக்கும் வரை பெண்களுக்காகப் போராடுவேன்ன்ன்:)).. ஹையோ லெக்ஸ்சூ காண்ட்டு எல்லாம் ரைப் அடிக்குதே:).. எங்கேஏஏஏஏஏ என் செக்க்க்:)).. ஆபத்து வரும்போதுதான் அவவை மனம் தேடுது:)) ஹா ஹா ஹா:)

   நீக்கு
  7. வாங்க அதாவது மூன்று பெண்களை கட்டிக் கொடுக்க ஐந்து பசங்களும் நானும் சேர்ந்து ஆறு பேர் உழைக்கணும் இதுதான் பட்ஜெட் பட்டாபியின் கணக்கு

   நீக்கு
  8. விளக்கம் ஜொள்ள ஒரு பதிவு போடணும் அப்பத்தான் சரியாகும்.

   நீக்கு
  9. ///பிற்பகல்
   விளக்கம் ஜொள்ள ஒரு பதிவு போடணும் அப்பத்தான் சரியாகும்.///
   ஹா ஹா ஹா ஜொள்ளுங்கோ பார்ப்போம்:)

   நீக்கு
 2. போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியான விடயம் நன்றி ஸ்ரீராம் ஜி

   நீக்கு
  2. இதில போதும் என்பது:) எத்தனை எனவும் சொல்லவும் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா:)..

   நீக்கு
  3. அது அவரவர் சாய்ஸ்

   நீக்கு
 3. ஆணும் வேண்டும், பெண்ணும் வேண்டும் தான்! என் மாமியார் பெண்ணே வேண்டாம் என்பார். ஆனால் அவருக்குப் பேத்திகள் தான் அதிகம்! :) கொள்ளுப் பேத்திகளும் அதிகம்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பெண் குழந்தைகளுக்கு வேறு லிஸ்ட் இருந்தது.

   இன்றைய எனது செல்வங்களின் பெயர்கள் பிறக்கும் முன்பே தீர்மானித்தது.

   எனது மகன் பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து எனது அம்மா அவசரமாக சங்கு வாங்கி வரச்சொன்னார்கள்.

   பாத்திரக்கடையில் வாங்கிய அவசர நொடியிலும் "தமிழ்" என்று பெயர் பொரித்தேன்

   என்னவள் மயக்கம் தெளிந்தவுடன் முதலில் பார்த்தது தமிழ் பெயர் எழுதிய சங்கு.

   என் நினைவில் பசுமையாக உள்ளது.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கீசாக்கா நானும் கவனிச்சிருக்கிறேன்ன்.. பெண்ணே வேண்டாம் எனச் சொல்லுவோருக்கும்.. அடுத்தவருக்கு பெண் குழந்தைகள் மட்டும்தான்.. எனக்கு ஆண்குழந்தைகள் என மார் தட்டுவோருக்கும்.. தொடர்ந்து அடுத்த அடுத்த பரம்பரையில் பெண் குழந்தைகளாகவே கடவுள் கொடுத்திருக்கிறார் என...

   நீக்கு
  3. இன்று எந்த வீட்டிலும் ஆண் குழந்தைகள் பெற்றோரை காப்பாற்றுவதில்லை பெண் குழந்தைகளே பாசமானவர்கள் எனது வீட்டிலும்...

   நீக்கு
  4. உப்பூடி எடுத்தோம் கவிழ்த்தோம் என ஒரேயடியா:) வளர்த்தால் குடும்பி அடிச்சா மொட்டை எனத் தாவக்குடா:).. இரண்டிலும் இரண்டும் உண்டு:).. அது பெற்றோர் கொண்டு வரும் பலனைப் பொறுத்தது:)..

   இப்போ உங்களுக்கு உங்கள் அம்மாவில் எவ்ளோ பாசம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்..

   நீக்கு
  5. உண்மை எல்லாமே பெற்றோர் கையில்தான்...

   நீக்கு
 4. பெண் குழந்தை ஒன்று வீட்டில் இருந்தாலே வீடே விளக்கு ஏற்றி வைத்தாற்போல் பளிச்சென்று உயிரோட்டத்துடன் இருக்கும். பையரும் வேண்டும் தான்! என்றாலும் குத்துவிளக்குப் போன்ற பெண் குழந்தைகள் தனி தான்! என்றாலும் ஆண்டவன் எல்லோருக்கும் பிள்ளைகளைக் கொடுப்பதில்லை. பிள்ளைக் குழந்தைகள் வேண்டுவோருக்குப் பெண்ணையே கொடுக்கிறான். பெண் வேண்டுவோருக்குப் பிள்ளைகளே பிறக்கின்றன! அவரவர் விதிப்படி! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நான் ஏற்கனவே வீட்டில் பெண் குழந்தைகள் எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தி ஒரு பதிவு இட்டது நினைவிருக்கலாம் நான்.

   அதில் தங்களது கருத்தும் உண்டு.

   நீக்கு
 5. அன்புள்ள ஜி,

  ஆசையே அலை போலே
  நாமெல்லாம் அதன் மேலே
  ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே இப்படித்தான் ஆடுகிறோம் வருகைக்கு நன்றி

   நீக்கு
 6. ஆகா ஐந்து பிள்ளைகளுக்கு ஆசைப் பட்டீர்களா
  பேராசைதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே நான் இன்றைய மனிதன் அல்லவே!

   நீக்கு

 7. தமிழ்வண்ண(ம்)ன் இங்கே கண்டேன்...! சிங்கம் சிங்கிளாத்தான் வரும்ஜி...!

  பதிலளிநீக்கு
 8. ஆசையே துன்பத்திற்கு மூலக்னம்..
  அதைச் சொன்ன புத்தரும்
  ஆசைப்பட்டார் -அனைவரும்
  ஆசையைத் துறக்க வேண்டும் என்று!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி
   அதுவும்கூட நிகழவில்லையே...

   நீக்கு
 9. ஆசை இருந்ததுஐந்து பிள்ளைகளுக்கு வாய்த்தது ஏனோ ஒன்றே தான் ஒரு சொல்வழக்கு நினைவுக்கு வருகிறது ஆசை இருக்கு தாசில் பண்ண......

  பதிலளிநீக்கு
 10. நல்ல ஆசை. கூடவே எவ்வளவு பெண் குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தீர்களோ அதையும் போட்டிருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும். (இல்லாததுனால 'நீங்க சொல்ல நினைத்தது சரியா வரலை)

  எல்லோருக்கும் ஒரு ஆண் குழந்தையாவது வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் பெண் குழந்தைகள்தான் பதின்ம வயதிலிருந்து கடைசி காலம் வரை பெற்றோர்களிடம் அன்பு செலுத்துவார்கள் (ஆண்களுக்கும் பாசம் இருக்கும் ஆனால் காட்டத் தெரியாது, அதனால் வெளிப்படையாக பெற்றோருக்கு நன்மை கிடைக்காது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனக்கு ஆணொன்று பெண்ணொன்று உண்டு.

   அதையும் எழுதி இருக்க வேண்டும் எழுதுகிறேன்.

   நீக்கு
  2. உங்களுக்கு இப்போ இருப்பதுதான் எங்களுக்குத் தெரியுமே (சமீபத்தில் புதுக்காரோடு, அம்மாவையும் அவங்களையும்தானே கூட்டிக்கிட்டுப் போனேன்னு படங்கள் போட்டிருந்தீங்க)

   நீக்கு
  3. ஆம் நண்பரே மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. அழகான பேர்கள் .

  மனதுக்கு கஷ்டமாய் தான் இருக்கிறது ஆசை நிறைவேறவில்லை என்று.
  ஆனால் இத்தனை குழந்தைகளை பெற
  அவர்கள் ஒத்து கொண்டு இருப்பார்களா?
  உங்கள் ஆசை அவர்களுக்கு துன்பமாய் தான் இருந்து இருக்கும்.
  இப்போது பெண், ஆண் என்பது எல்லாம் ஒன்று போல் தான் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எனது ஆசை நிறைவேறாது என்பதை நான் அறிந்து கொண்டேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. ‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்’ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. நமக்கு எது கிட்டுமோ அதுதான் கிட்டும் என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான வார்த்தை வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. வணக்கம் சகோ!

  ஆதங்கத்தின் வெளிப்பாடு கண்டேன்…
  என்ன செய்வது அளந்ததுதான் வாழ்க்கை!...:)

  வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 14. சிறீ சிவசம்போ அங்கிள்.. ஒரு வரியில ஜொன்னாலும் நச்செனத்தான் ஜொள்ளுவார்:)) அவரின் ஸ்டைலே வேற:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க உங்க அங்கிளாச்சே அப்படித்தான் ஜொள்ளுவார்

   நீக்கு
 15. உங்க பிள்ளைகளிற்கு(பிறந்தால்) வைக்கவிருக்கும் பெயரை பார்த்ததும் எங்க ஊரில் ஒருவருக்கு அமுதவாணன் பெயர்.அவர் தன் மகனுக்கு வைத்தது லலிதவாணன். (அப்பா,அம்மாவின் பெயரிலிருந்து பாதியை எடுத்து சேர்த்து வைத்தார்.)
  இது பேராசையில்லை. பெரிய(பேர் ஆசை)பேராசை 😀

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே இதுவும் நல்ல பெயர்களாகத்தான் இருக்கின்றது வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. அது என்ன பெயர் ஜி? லால்வாணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாணன் பொதுவானது ஆங்கிலத்தில் L வரவேண்டும் அப்பொழுதுதான் TAMIL என்று வரும் இரண்டாவது புகைப்படம் காண்க...

   நீக்கு
 17. நல்ல ஆசை. ஆணோ பெண்ணோ இரண்டும் சமம் தான்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  நல்ல அழகான பெயர்கள். தங்கள் ஆசைகளும் நியாயமானவைதான். ஆனால் நமக்கு எது கொடுப்பினையோ அதுதானே நடக்கும். இந்த காலத்தில் ஆணும், பெண்ணும் கல்வி,தைரியம் உரிமைகள் என அனைத்திலும் சமம்தான். தங்களின் இரு செல்வங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் ரசனையான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு