தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 03, 2018

ஏக் ஹஸார், தீன் ஸோ பந்த்ரா (1315)


புதாபியில் இருக்கும் பொழுது எனது கைப்பேசிக்கு, தொலைபேசி தலைமை தகவல் தொடர்புத்துறை அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தி வந்தது தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்து கொள்ளவும் என்று போனேன் ஐந்து நிமிடத்தில் பதிவு செய்து கொடுத்து விட்டார்கள், அடுத்த வாரம் எனது கைப்பேசி (Du No: 055) இணைப்பு துண்டிக்கப்பட்டது மீண்டும் போனால் சந்தைக்கடையைப் போல் கூட்டம் இது எனக்கு மட்டுமல்ல எமிரேட்ஸில் இருக்கும் பல்லாயிரம் பேருக்கும் எனத்தெரிந்தது காரணம் கேட்டால் ? இது சர்வரின் தவறு (சரவணபவன் ஹோட்டலில் வேலை பார்க்கும் சர்வர் அல்ல) என்று சொல்லி ஐ.டி.யை பதிவு செய்து செல்லுங்கள் என்றார்கள் சரியென்று இயந்திரத்தில் வரிசைச்சீட்டு எடுத்தால் எனக்கு வந்த இலக்கம் 1448 நிலுவையில் 960 போய்க்கொண்டு இருந்தது இதனிடையில் ஃபாரத்தில் முத்திரை பதிக்க ஒரு வரிசையும் போனது நானும் நின்று கொண்டிருந்தேன் எனக்கு முன் ஒரு பாக்கிஸ்தானி நின்றிருந்தான்ர் யதார்த்தமாக கவனித்திருந்தேன் காரணம் அவனது ஃபுல்தாடி நான் முத்திரையை குத்த அருகில் போகும்போது ஒரு சீட்டு கீழே கிடந்தது எடுத்தேன் எண் 1315 அவன் அலறிக்கொண்டு வந்தான் எனது சீட்டைக் காணோம் என்று நான் இதுவா ? எனக்கேட்க (எண் எனது அழகிய முகத்துக்கு நேராக இருக்கிறது) அவன் சீட்டைப் பார்க்காமல் எத்தனை ? எனக்கேட்டான், நான் எண்ணை சொல்ல, அவன் என்னுடையது இதில்லை என்று போய் விட்டான், எனக்குப் பின்னால் நின்றவர்கள் சிரித்துக்கொண்டே... உனது எண் பெரியது என்றால் நீ வைத்துக்கொள். நான் நினைத்தேன் இந்த எண்ணை நாம் உபயோகப்படுத்திக் கொண்டால் எப்படியும் ஒரு மணிநேரம் மிச்சமாகும் அவனை மீண்டும் பார்த்தேன் தேடிக்கொண்டிருந்தான் எப்படி ? கிடைக்கும் அதுதான் என் கையிலிருக்கின்றதே, எனக்கு பாவமாக இருந்தது எனக்கு மனது உறுத்தினாலும், சரி அவன் இனிபோய் இயந்திரத்தில் சீட்டு எண் எடுத்தாலும் எப்படியும் 1600க்கு மேல்தான் கிடைக்கும் நமது வேலை முடிந்ததும் நமது எண்னை அவனிடம் கொடுத்து எனக்கு அவசர வேலை இருக்கிறது நீ வைத்துக்கொள் என அவனிடம் கொடுத்து விடுவோம் என நினைத்தேன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மின்பலகையில் 1315 வர கௌண்டரில் இருந்த பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சீட்டைக் கொடுத்தேன்.

அவள் ஊதாக்கலரில் ஜீன்ஸ் பேண்ட், லைட் கலரில் டி.சர்ட் போட்டிருந்தாள், ப்ரௌன் கலரின் கழுத்தில் டை மாதிரி கட்டியிருந்தாள், காதில் இரண்டு வளையல்கள் போல தொங்கி கொண்டிருந்தது, கழுத்தில் ஒரு பாசி போட்டிருந்தாள், அவள் கட்டியிருந்த டை மறைத்திருந்ததால் பாசியின் கலரைக் கவனிக்க முடியவில்லை, தலையில் மஞ்சக்கலரில் பிளாஷ்டிக் ரோஜாப்பூ வைத்திருந்தாள், மூன்று ஹேர்பின்கள் குத்தியிருந்தாள், விழிகளின் புருவத்தில்கூட அழகாக மை தீட்டியிருந்தாள், மூக்கின் வடக்கு திசையில் சிறிதாக கருப்பு மச்சம் ஒன்று, உதட்டிலும் சிவப்பு கலரில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள், கையில் ரோலக்ஸ் வாட்ச் கட்டியிருந்தாள், நெகத்தை நீளமாக வளர்த்து வார்ணீஷ் அடித்திருந்தாள், விரலில் வெள்ளியிலான மோதிரத்தில் M என்று கற்கள் பதித்திருந்தது, நேம் பேட்ஜில் பெயர் மைலீன் என்று இருந்தது, காலில் கொலுசோ, செருப்போ, போட்டிருக்கின்றாளா ? என்பதை கவனிக்க முடியவில்லை காரணம் டேபிள் மறைத்திருந்தது எட்டிப்பார்க்கும் உத்தேசமும் இல்லை காரணம் இதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை இரண்டரை மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் காத்திருக்கின்றேனே அதன் வெறுப்பு.

அந்தப் பாக்கிஸ்தானி இந்தக்கூட்டத்தில் எங்கு நின்றானோ.. தெரியவில்லை மின்பலகையில் எண்ணை பார்த்ததும் ஓடி வந்து விட்டான், வந்தவன் பிலிப்பைனிக்கு அருகில் போய் எட்டி, எட்டி சீட்டைப்பார்க்க அவள் கோபமாகி ‘’கோ ட்டூ தட் சைட்’’ என்று சத்தமிட காரணம் பாக்கிஸ்தானியர் மேலிருந்து எப்பொழுதுமே ஒரு விதமான ஊழை நாற்றம் வரும் இது பிலிப்பைனி பெண்களுக்கு பிடிக்காது இவர்களுக்கு கக்குSoap இருப்பது தெரியாதுபோல இவன் சரியாக பேசத்தெரியாததாலோ, என்னவோ, பெரும்பாலும் பாக்கிஸ்தானியர்களுக்கு ஆங்கிலமும் வராது, இப்புறம் வந்து என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் நான் கவனிக்காதது மாதிரி Yes Madam என விபரம் சொல்லிக்கொண்டு இருந்தேன் இடையில் கவனமாக மீசையை முறுக்கிக்கொண்டே இருந்தேன் அவனுக்கு என்மீது சந்தேகம் வந்து விட்டது. எனது ஐ.டி.யை வாங்கி குறித்துக்கொண்டு அடுத்த 48 மணி நேரத்தில் இணைப்பு வந்தாலும் வரலாம் நமது ரமணன் ஐயா போலவே சொன்னாள். அப்பாடா வந்தவேலை முடிந்து விட்டது திரும்பினால் பாக்கிஸ்தானி என்னிடம் ஏதோ கேட்பதற்காக வர, நான் சட்டென மற்றொரு கைப்பேசியை எடுத்து (Etisalat No: 050) வராத அழைப்பில் Sir I applied for a project in America yesterday but the managing director did not approve that project. Shut up bloody nonsense I will kill you… இப்படி சத்தமாக கையை ஆட்டி ங்கொய்யாலே கொன்னேபுடுவேன் என்பது போல் பேசிக்கொண்டே வெளியே வந்து விட்டேன் கொஞ்ச தூரம் பின்னால் வந்தவன் நின்று விட்டான் நான் சீருந்தை முடுக்கி விட்டு எடுக்கும்வரை கைப்பேசி என் காதோடு... அவனை மீண்டும் பார்த்தேன் பாவமாக இருந்தது இவனுக்கு எப்படி ? எனது எண் 1448 டை கொடுக்க முடியும். சந்தேகம் ஊர்ஜிதமாகி சண்டைக்கு வந்து விட்டால் ?

ஆம் அந்த எண் அவனுடையதே அதாவது நான் உன்னுடையதா ? எனக்கேட்டும் அவன்தான் என்னுடையது இல்லை என்று போனான் தவறு என் மீதல்ல.... அதாவது அவன் எத்தனை எனக்கேட்டபோது நான் ஏக் ஹஸார், தீன் ஸோ பந்த்ரா என்றேன் அதற்கு அவன் என்னுடையது தேரா ஸோ, பந்த்ரா என்று சொல்லிவிட்டு உடனே போய் விட்டான் இரண்டுமே ஒன்றுதான் ஆம் அதாவது ஏக் ஹஸார் தீன் ஸோ பந்த்ரா என்றால், ஓராயிரத்து, முன்னூற்றி பதினைந்து, தேரா ஸோ பந்த்ரா என்றால் பதிமூன்று நூறுகளும், பதினைந்தும். உதாரணத்திற்கு இந்தியர்கள் ஏக் ஹஸார், ஆட் ஸோ (ஆயிரத்து, எண்ணூறு) என்று சொல்வோம், பாக்கிஸ்தானியர்கள் ஆயிரத்து எண்ணூறை, அட்டாரா ஸோ என்பார்கள் அதாவது (பதினெட்டு நூறுகள்) ஒவ்வொரு வார்த்தைகளின் ஜாலம் மாறி விடுவதால் சிலருக்கு பலனும் உண்டு அந்த சிலரில் அன்று நான்.

காணொளி

53 கருத்துகள்:

 1. நல்ல அனுபவம் தான்.

  பஞ்சாபிகள் கூட இப்படி அட்டாரா சோ என்று தான் சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான் முதல் வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. ஹாஹாஹாஹாஹாஆ...ரசித்தோம்...கில்லர்ஜி...

  கீதா: ஹாஹாஹாஹாஹா....இந்தியன்னா கொக்கான்னா....பொதுவா நாம tthousand five hundred என்று நாம் சொல்லுவோம்....ஆனால் வெளிநாட்டவர்...என் இங்கும் சிலர்..fifteen hundred என்பார் ...பாவம் பாகிஸ்தான் ஆள்...

  அது போகட்டும்...அது என்ன அந்த புலிப்பாணி பெண்ணை அப்படி கவனித்து.... எல்லாம் விவரிச்சுட்டு...கவனிக்கும் நிலையில் இல்லைனு...உதான்ஸ்... ஹாஹாஹாஹா....சிவாஸ் இருந்திருந்தா இன்னும் விவரமா வரணிச்சு ருப்பார்.. ஹிஹிஹிஹி...

  பதிலளிநீக்கு
 3. நல்ல தில்லாலங்கடி தான் நீங்க...ஹாஹாஹா...
  இணையம் இல்ல...மொபைலில் இருந்து....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க உண்மையை நான் எப்பொழுதும் உளறி விடுவேன் என்பது உண்மையே...

   இரசித்து கருத்திட்டமைக்கு நன்றி

   நீக்கு
 4. வணக்கம் நண்பரே,

  நலமா ? நீண்ட நாட்களாகிவிட்டது... முதலில் இந்த பதிவில் என்னை கவர்ந்தது ஹாஸ்யம் !... " சரவணபவன் சர்வர் அல்ல " தொடங்கி பிலிப்பைன்ஸ் பெண் பற்றிய வர்ணனை !!! அந்த வர்ணனையின் இறுதியில் "இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை "....

  கவனிக்கும் மானநிலையில் இருந்திருந்தால் கவிதையே எழுதியிருப்பீர்கள் போலிருக்கிறதே ஜீ ?!

  இந்த எண் குழப்பம் சமீபகாலமாக ஐரோப்பாவிலும் உண்டு... ஆயிரத்து தொள்ளாயிரம் என்பதை பத்தொன்பது நூறுகள் என பிரெஞ்சில் விளிக்க தொடங்கியிருக்கிறார்கள் !!!

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
  http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
   தங்கள் தளம் வந்து வட்டலப்பம் தின்று வந்தேன் நல்ல சுவையே...

   நீக்கு
 5. நல்லா கவனிச்சு அந்தப் பெண்ணை வர்ணிச்சுட்டுக் கவனிக்கும் மனோநிலையில் இல்லையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நல்ல அனுபவம் தான். பாவம் அந்த பாகிஸ்தானி! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நானா... ஏமாற்றினேன் அவன்தான் ஏமாந்தான்.

   நீக்கு
 6. பாகிஸ்தானி பாவம்தான், ஆனால் அது அவன் தவறுதானே. எப்போவும் இங்க வங்கில டிக்கெட் எடுக்கும்போது இரண்டு எடுத்துக்கொள்வேன், யாராவது தெரிந்தவர் வந்தால் கொடுக்கலாம் என.

  பிலிப்பீனியை உங்க அவசரத்தில் பார்க்கவே இல்லை போலிருக்கே.

  அனுபவம் புதுமை, ரசனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ப(வ)ழக்கம் நண்பரே...

   நானே டென்ஷன்ல இருக்கும்போது... எதுக்கு அவளைப் பார்க்கணும் ?

   நீக்கு
 7. வார்த்தை ஜாலத்தால் வென்று விட்டிர்கள் இதைத்தான் வாயுள்ள புள்ளை பிழைக்கும் என்பார்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே என்ன செய்வது அரை ஜான் பீட்டர் வயிறு இருக்கிறதே...

   நீக்கு
 8. வெறுப்பாய் இருக்குபோதே இந்த கவனிப்பு என்றால் மகிழ்ச்சியாக இருக்கும் போது?

  சந்தேகம் ஊர்ஜிதம் ஆகி
  நல்ல வேளை சண்டை இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ மகிழ்ச்சியாய் எப்படி வரிசையில் காத்திருக்க முடியும் ?

   ஆமாம் தப்பித்து விட்டேன்.

   நீக்கு
 9. பாகிஸ்தானியர் கொஞ்சம் எப்பவும் அவசரப்படுவாங்க என்னமோ உலக பாரமெல்லாம் அவங்க தலையில் இருக்கிறமாதிரி ..கொஞ்சம் யோசித்திருந்தா பார்த்திருந்தா அந்த சீட்டு அவர்க்கு கிடைச்சிருக்கும் :)
  இரண்டரை மணிநேரமா இத்தினை வெறுப்பிலும் மைலினை கவனிச்சீங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஆமாம் அவசரக்காரனுக்கு புத்தி மட்டுதான்.


   மைலீனா... யாரது ? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே...

   நீக்கு
 10. அப்பப்பா அத்தனையும் கவனிச்சு வர்ணிச்சிட்டு...சரி சரி நம்பிட்டோம் அண்ணா ஜீ. இந்த வாயும் இல்லாட்டி நம்மை மிதிச்சிட்டே போயிடுவாங்க..
  காணொளியும் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நமது தளத்தை நம்பி வரலாம் நீங்களாவது காணொளி கண்டு அதனைக்குறித்து எழுதியமைக்கு நன்றி

   நீக்கு
 11. வணக்கம் சகோ!

  ஆஹா.... இப்படியுமா ஏமாளி இருப்பான்..:)
  நானும் ரசித்தேன் சகோ..:))

  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இரசித்து கருத்திட்டமைக்கு நன்றி

   நீக்கு
 12. பிலிப்பைனி பெண் நல்ல அவ தானிப்பு. சுவாரஸ்யமான அனுபவம்.

  பதிலளிநீக்கு
 13. எண்களின் விளையாட்டுக்குள்ளும் ஒரு புதிய அனுபவம்.அருமை.

  பதிலளிநீக்கு
 14. தபால் அலுவலகத்தில் பதிவு செய்ய என் தந்தை வயதுடையவரை என் முன்னால் இடை சொருகலாக நிற்க அனுமதித்தேன்.... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னால் நின்றவர்கள் என்னை திட்டினார்கள்....பாருங்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதிலிருந்து தெரிவது...
   மனிதநேயம் வளர்கிறது நண்பரே.

   நீக்கு
 15. அச்சச்சோ அச்சச்சோஓஒ கில்லர்ஜிக்கு மறதி அதிகமாகிட்டுதூஊஊஉ.. நேரம் மாறிப் போஸ்ட்டைப் போட்டு என்னை மீ த 1ஸ்ட்டா வர விடாமல் பண்னிட்டார்ர்:)).. அப்பூடி மாறிப் போட்டும் கீசாக்காவால 1ஸ்ட்டா வர முடில்லயே:)) ஹா ஹா ஹா சந்தோசம் பொயிங்குதே....:))

  பதிலளிநீக்கு
 16. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எப்பவோ நடந்த அந்த சம்பவத்தில பிலிப்பைன் பெண்ணை இப்படி கலர் கலரா வர்ணிக்கிறார்:) அதிக ரை கட்டியிருந்ததால கழுத்தில இருந்த கலரை ஒழுங்காப் பார்க்க முடியல்லியே எனக் கவலை வேறு:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  இப்போ பக்கெனக் கில்லர்ஜியின் கண்ணைப் பொத்திக்கொண்டு ஆரவது கேளுங்கோ.. கில்லர்ஜியின் அம்மா இப்போ என்ன கலர் சாறி கட்டியிருக்கிறா என ஜொள்ளுறாரோ பார்ப்போம்ம்:)) கரீட்டாச் சொல்லிட்டால் மீ தேம்ஸ்ல ஜம் பண்ணுவென்ன்ன்ன்ன்:)

  ஊசிக் குறிப்பு:
  என் செக் ஐ கையில பிடிச்சுக் கொண்டு:) தனியாக் குதிக்கப் பயம்ம்ம்ம்ம்மாஅக் கிடக்கூஊஊஊஊ:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க அம்மா இப்போ கட்டியிருக்கும் சேலையின் நிறம் நீலமும், ஊதாவும், ப்ளூவும் கலந்த நிறம்.

   ஊரணியில் இன்று யாரும் நிற்பார்களோ...

   நீக்கு
  2. /// நீலமும், ஊதாவும், ப்ளூவும் கலந்த நிறம்.
   ///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
 17. ஆஹஹா நீங்க அந்த அமெரிக்க ஜொப் பற்றி திட்டின திட்டு கேட்டு நானே ஓடிப்போய் முருங்கில ஏறிட்டேன்ன்ன்ன்ன்ன்.. பயத்திலதேன்ன்:))

  பதிலளிநீக்கு
 18. சுவையான பதிவு
  பல மொழி சொல் தேடல்
  தங்களின் வெற்றி
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 19. //////எனக்கேட்க (எண் எனது அழகிய முகத்துக்கு நேராக இருக்கிறது) அவன் சீட்டைப் பார்க்காமல் எத்தனை ? எனக்கேட்டான், நான் எண்ணை சொல்ல, அவன் என்னுடையது இதில்லை என்று போய் விட்டான், /////

  ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் கில்லர்ஜி லொக்கா போட்டு வச்டிருக்கிறீங்க:) மீ லொக்கை உடைக்கப் பழகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன் கொப்பி பேஸ்ட் பண்ணுறேனே:).... எங்கிட்டயேவா?:) பூஸோ கொக்கோ:)... ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடியாத்தி வெவரமானவங்கதான்... "வலையுலக அரசி" என்று ஜொன்னது உண்மைதான்.

   நீக்கு
 20. வடநாட்டில் எண்களை ஹிந்தியில் சொல்லத் தெரியவில்லை என்றால் சார் ஊப்பர் பீஸ் 24ஐ இருபதின் மேல் நான்கு என்று சொல்லி சமாளித்தது நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது நினைவுகளையும் மீட்டி விட்டதா ?

   நீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  சுவாரஸ்யமான அனுபவங்கள்.என்ன இருந்தாலும் பாவந்தான் அந்த பாகிஸ்தானி! இரண்டரை மணி நேரம் ஒரே இடத்தில் நின்றிருந்ததின் விளைவையும், உங்களோடு நானும் ரசித்தேன். காணொளியும் பொருத்தம். நம்மையும் மீறி சில சமயங்கள் இதெல்லாம் நடந்து விடுகின்றன. பல மொழிகள் தெரிந்ததினால் இதையெல்லாம் சுலபமாக சமாளித்தீர்கள்.வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 22. தவறு உங்கள் பேரில் இல்லையென்றாலும், உங்கள் பார்வையில் நீங்கள் செய்தது சரியென்றாலும் அந்த பாகிஸ்தானியருக்கு உதவியிருக்கலாமே என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மனிதாபிமானம் சற்றே சறுக்கி விட்டது என்று எண்ணிக்கொள்ளுங்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 23. இந்திய இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் ஜாட் இனத்த்தவர்கள். இவர்களைப்பற்றி பல நகைச்சுவையான சம்பவங்கள் உள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் இரசிக்கத் தக்கது. இவர்கள் எப்படி வெளிநாட்டில் நம்மவர்களுடன் சரிக்குச் சரியாய் பணிபுரிகிறாரகள்? ஆச்சர்யமாயிருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனக்கும் இருபது ஆண்டுகள் அனுபவமாகி விட்டது.

   தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு