தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், பிப்ரவரி 26, 2018

தமிழ் அருவி


வணக்கம் கடந்த எனது பதிவு பேராசை பெருநஷ்டம் அதில் ஆண் குழந்தைகள் மட்டும் எனக்கு ஐந்து பிறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு எழுதி இருந்தது வில்லங்கத்தாருக்கும், திருச்சி பி.ஜே.பி அவர்களுக்கும் நான் பெண் குழந்தைகள் வேண்டாமென்று சொன்னது போல் புரிதலைக் கொடுத்து விட்டது காரணம் நான் சொன்ன விதமும் அவ்வண்ணமே இருந்தது உண்மையே... வருந்துகிறேன். அதோடு அதிராம்பட்டணத்துக்காரர்களும் ஊரணியில் நின்று கொண்டு கொதித்து விட்டார்கள். ஆகவே இந்த தன்நிலை விளக்கம் பெண் குழந்தைகள் மூன்று வேண்டும் என்பதும் எமது அவா இத்தனை குழந்தைகள் பெற்றால் கிடைக்குமா புவா ? என்று கேட்டு விடாதீர்கள்.

நமது மோடி அரசை நம்பி எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெறலாம் என்று உகாண்டாவில் நள்ளிரவில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்று புள்ளி விபரங்கள் கொடுத்து இருக்கிறது. அதாவது நான் எனது குழந்தைகளுக்கு எனது பதினைந்தாவது வயதிலேயே பெயர்கள் தேர்வு செய்து விட்டேன் இதுதான் உண்மை அவைகளில் தமிழ் இணைந்து பிண்ணிப் பிணைந்து வரவேண்டும் என்பதற்காகவே இப்பெயர்கள் இதோ...

TAMILVANAN
AABAVANAN
MATHYVANAN
INBAVANAN
LALVANAN
மலா
ரூபலா
விமலா

எமது வீட்டில் தமிழ் அருவியாய் கொட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயர்களை தேர்வு செய்திருந்தேன் இவைகளில் தற்போது மகன் தமிழ்வாணனும், மகள் ரூபலாவுமே செல்வங்கள். முதலில் அமலா பெயர் வைக்காமல் ரூபலா வைத்தற்கான காரணமும் உண்டு.


சிவாதாமஸ்அலி-
காரணம்கூட பதிவாகுமோ...

சாம்பசிவம்-
அதையும் எழுதிக் கொல்ல’’ட்டும்

Chivas Regal சிவசம்போ-
எட்டு குழந்தைகளா....? கெட்டவனுக்கு எட்டுனு சொல்வாங்களே...

67 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    நல்ல பெயர்கள்.சிறப்பான பெயர்களைதான் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். இனி தமிழ் அருவி என்றும் கொட்டட்டும். (தங்கள் வலைத்தளத்தில்.) தங்களின் வாரிசான தமிழ் செல்வங்களுக்கு மனமார்ந்த நல்லாசிகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது உடனடி முதல் வருகைக்கும், நல்லாசிகளுக்கும் நன்றி

      நீக்கு
  2. வாசிச்சாச்சு.....ஆஜர் வைச்சாச்சு....கருத்து கணினியில் சரியாக இணையம் இயங்கனும்...வரோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வீட்டில் தமிழ் அருவியாய் கொட்டட்டடும்.
    -வாழ்துக்கள் நண்பரே-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இனி பெயரன்-பெயர்த்திகளின் பெயர்களில்தான் பார்க்கணும்.

      நீக்கு
  4. வாழ்த்துக்கள் ஜி!அருமையான பெயர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ? வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  5. ரூபலா பெயர் காரணம் அறிய ஆவல்.
    இந்த நியூஸ் எப்போது வந்தது நான் பார்க்கவில்லையே!
    என்னமோ நடக்குது ஒன்றுமே புரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மேலே "பேராசை பெருநஷ்டம்" இணைப்பை சொடுக்கி படிக்கவும்.

      நீக்கு
    2. அந்த பதிவு படித்து விட்டேன் முன்பே கருத்து சொல்லி விட்டேன்.
      அமலா பேர் வைக்காமல் ரூபலா என்று வைத்தற்கு காரணம் உண்டு என்று சொன்னதை கேட்டேன்.

      கீழே கடைசியாக வந்த தொலைக்காட்சி நியூஸ் பார்க்கவில்லை என்றேன்.

      நீக்கு
    3. விளக்கத்துக்கு நன்றி சகோ.

      நியூஸ் வில்லங்கத்தார் ஜடியாவை கேட்டு நாந்தான் ஏதும் 'கோல்மால்' செய்து விட்டோனோ... ? என்ற ஞாபகமும் வருகிறது.

      நீக்கு
  6. ஓஹோ நான் கொஞ்சம் ஒன் வீக் gap விட்டப்போ தான் அதிராம்பட்டினம் பொங்கியிருக்காங்க போல :)
    அழகான தமிழ்ப்பெயர்கள் .

    இது சமீபத்து செய்தியா ?ரேஷன் இல்லை என்பது ?
    இதென்ன அப்போ ஆண் பிள்ளைகள் சாப்பிடக்கூடாதா !!

    .
    கெட்டவனுக்கு எட்டா ? :)
    சித்தப்பா கூட எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோன்னு தான் பாடினார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நீங்கள் இடைவெளி விடவும் ஊரணி பிரச்சனை ஆகிவிட்டது.

      அது உங்கள் சித்தப்பாவின் சொந்த கருத்து அல்ல!

      எங்கள் தாத்தா சித்தர் ஸ்வாமிகள் சொன்னதை...

      அதிராவின் அங்கிள் வைரமுத்து மாற்றியமைத்து எழுதிக் கொடுத்தது.

      நீக்கு
    2. அஞ்சூஊஊஊஊஉ நீங்க கொஞ்ச நாள் ஓஃப் ல இருந்தீங்களா:) உங்களுக்கும் சேர்த்து மீ பொயிங்கியிருந்தேன்:)).

      ஹையோ அது ஊரணியாஆஆஆஆ கர்ர்:) இதை நான் குயின் அம்மம்மாவின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்போகிறேன்:).. நேக்கு நீதி வேணும்ம்ம்:)..

      நீக்கு
    3. குயின் ஆன்ட்டி என்னை ஒண்ணும் ஜொள்ள மாட்டாங்களே...

      நீக்கு
    4. அதிரா கில்லர்ஜி எந்த தகிரியத்துல சொல்லிருக்கார் தெரியுமா ஊரணினு...அவர்கிட்ட ஜகன்மோகினி இருக்குன்ற தகிரியத்துல..ஹா ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஆஹா மாறுபட்ட கருத்துக்கு நன்றி நண்பரே...
      (அதிரா அவர்கள் கவனிக்கவும் உங்கள் கவலை தீர்ந்தது)

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அவர் ஒருவேளை சிறீ சிவசம்போ அங்கிளின் திருக்குறளுக்குத்தான்:) வாழ்த்து ஜொள்ளியிருப்பார்ர்:))

      நீக்கு
  8. ரூபலான்னு பேர் வச்சா விவேக் கோச்சுக்க மாட்டாரோ? ஷர்மிளா, பிரமிளா, ஊர்மிளா எல்லாம் நல்ல பெயர் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி நீங்க ராஜேஸ்குமார் வாசகர் என்பது விளங்குகிறது.

      மேலும் விளக்கம் தருவேன்...

      நீக்கு
    2. ஹை ஸ்ரீராம் நான் சொல்ல வந்தது...யெஸ் ரூபலா நா விவேக் தான் நினைவுக்கு வந்துச்சு....

      எனக்கு ரொம்பப் பிடித்த காரெக்டர் விவேக் ராஜேஷ்குமார் நாவலில்...

      கீதா

      நீக்கு
  9. அவங்க சிறப்பா வாழ்வாங்க. பொதுவா ஆண் பெண் அப்படீன்னா, இரண்டு பெயரும் ஒத்துப்போகிறமாதிரி பெயர் வைப்பாங்க. ரூபலா பெயரைப் பார்த்ததும் எனக்கு எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்த பெயருக்கான காரணம் விரைவில் தருகிறேன்.

      வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  10. ஹ ஹா பெயர்கள் அருமை நண்பரே
    தமிழ்அருவி கொட்டட்டும் நனையுங்கள்
    தமிழ்அருவியின் அன்புச்சாரலினிலே!

    பதிலளிநீக்கு
  11. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:) நான் சத்து ஆலமரத்தடியில் தியானம் பண்ணியபோது இப்பதிவைப் போட்டு ...குழப்பமின்றி[ஐ மீன் குழப்ப ஆள் இன்றி:)] நகர்த்திச் சென்றிருக்கிறார் கில்லர்ஜி:)... உங்கள் தமிழில் பிழை இருக்கிறதே:).. அருவி யில் ரு தானே வருகிறது அப்போ நெடில்ல்ல்ல் க்கு மாற்றி விட்டீங்களே... நோஓஓஓஓஓஓஒ நா இதை ஒத்துக்கவே மாட்டேன்ன்:))..

    ஆணுக்குப் பெண் சமமாக்கும்:).. அப்போ அஞ்சுக்கு மூணு எப்பூடிச் சமனாகுமென்னேன்ன்ன்ன்?:))... அஞ்சுக்கு அஞ்சுதானே வந்திருக்கோணும்ம்ம்ம்:))... நேக்கு நீதி வேணும்.. நீதி வேணும்:))... ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ அஞ்சூஊஊஊ ஒரு ஜோடா பிளீஸ்ஸ்ஸ் தொண்டை ஓவர் ட்ரை ஆகிடுச்சு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் பிழையை நீங்களா... ஜொள்றீங்க...?

      'ருத்ரா' என்ற பெயரைக்கூட சொல்வீங்களோனு எதிர் பார்த்தேன்.

      நீக்கு
    2. அதாவது மூணு பெண்ணுகளை கட்டிக் கொடுக்க ஆறு ஆண்கள் உழைச்சாத்தான் சரியாகும்.

      நீக்கு
    3. ஆனா உண்மையில் கில்லர்ஜி, இலங்கையில் பெயர் வைக்கும்போது.. ர, ரு, ல, இப்படி எழுத்துக்களில் வைக்க மாட்டினம்.. வைப்பினம் ஆனா தமிழில் எழுதும்போது.. உருத்திரா... உருபாலா... இரவி... இலம்போதரன்.. இப்படித்தான் எழுதுவார்கள்.. ஆங்கிலத்தில் மட்டும்தான்.. Ravi, Rupala... 2 இப்படி எழுதப்பட்டிருக்கும்.

      பஞ்சாங்கத்தில் கூட இரகுநாத ஐயர் எனத்தான் இருக்கும்.

      நோஓஓஓஓஓஓஓ உங்களிடம் அப்பெண்களைக் கட்டிக் கொடுக்கும் வசதி வாய்ப்பு இருந்தா ம்,அட்டுமே பெறோணும்:) பாவமில்லையா ஆண் பிள்ளைகள்.. நீங்க பெற்றதற்காக அவர்களை வருத்தலாமோ?:)).. சரி சரி விடுங்கோ :)

      நீக்கு
    4. நானும் கேள்விபட்டதுண்டு...
      உருத்திரா நாளடைவில் உபத்திராவாகாதா ?

      நீக்கு
  12. பிரேக்கிங் நியூஸ் பார்த்தா:) கில்லர்ஜி க்கு ரேசன் அரிசி கிடைச்சிருக்காதூஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  13. கீசாக்கா இப்போ இங்கின இல்லை எனும் தெகிறியத்தில:) மோடி அங்கிளில் கை வச்சிருக்கிறீங்க:) இல்லை எனில் அவ இப்போ காவேரியில குதிச்சிருப்பாவே:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

    பதிலளிநீக்கு
  14. சிறீ சிவசம்போ அங்கிள் கரெக்ட்டாத்தான் ஜொள்றார்:) அப்போ கெடாதவருக்கு எத்தனையாம் எனவும் கொஞ்சம் அவரிடம் கேட்டுச் சொல்லுங்கோ கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  15. மன்னிக்கவும் தங்களின் அனைத்து பதிவுகளையும் படிக்க முடியவில்லை....கிடைக்கும் இடைவெளியில்..அப்பப்போ வந்து படித்து விடுகிறேன்..சிவசம்போவிடம் படிக்காத காரணத்தை சொல்லி விடாதீர்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவசம்மோ பெருந்தன்மையானவர் நண்பரே கவலை வேண்டாம்.

      நீக்கு
  16. ஹா ஹா ஹா பேரெல்லாம் நல்லாத்தான் இருக்கு..இருந்தாலும் கணக்கு சரியாகலை கில்லர்ஜி!!
    கீதா: ஜி! அதெப்படி ஆண் குழந்தைகள் நிறைய பெண் குழந்தைகள் நம்பர் கம்மி....ஆ அப்ப உங்களுக்கு ரேஷன் கிடையாதா...ஹையோ நான் வேற இப்ப புதுகார்ட் அப்ளை பண்ண நினைச்சேனே அப்போ எனக்கும் கிடையாதா..அடப்பாவிங்களா....மோடி மாமா இப்படி தான் ஒரு ஆணாக இருந்து இப்படிச் செய்யலாமோ?!!! ஹோ நம்மூர் ரேஷன் மோடிமாமா கன்ட்ரோல் கிடையாதே!!! எபா, ஒப வாச்சே...

    தமிழ்மலர், தமிழ்ச்செல்வி, பனிமலர், இன்னும் இப்படியும் சொல்லலாமோ இ?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 5+3 விளக்கம் மேலே அதிராவுக்கு சொல்லி இருக்கிறேன்.

      தாங்கள் சொன்ன பெயர்களும் அருமை குடும்பத்தில் ஏற்கனவே தமிழ்செல்வி உண்டு.

      நீக்கு
  17. அதிரா முந்தைய பதிவு ஜகன் மோகினியைப் பார்த்ததும் என் இணையம் இப்போ ஜகன்மோகினியாகிடுச்சு கில்லர்ஜியின் ஜகன் மோகினி புகுந்துருச்சு...விரட்ட சாமியாடல் பார்க்கணும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மோகினி வாரம் இப்படித்தான்.

      நீக்கு
    2. நோஓஓஓஒ கீதா நான் ஒத்துக்கவே மாய்ட்டேன்ன்ன்:) அதெப்பூடி காலை 6 மணிக்கு மட்டும் நெட் கரெக்ட்டா வேர்க் அகுதூஊஊஊஊஊஉ?:) அதிரா போஸ்ட் போட்டா மட்டும் ஓஃப் ஆவேன் என அடம்புய்க்குதூஊஊஊஉ:). நேக்கு இதுக்கு மட்டுமாவது நீதி வேணும்ம்ம்ம்ம்ம்ம்:)).. கில்லர்ஜி கீதாவிடம் கேட்டாவது நேக்கு நீதி பெற்றுத் தாங்கோ:)..

      நீக்கு
    3. இதோ உங்கள் அங்கிள் சிவசம்போவிடம் ஜொள்ளிட்டேன்

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கர்:) அவர் ஒரு அப்பாவி அவருக்கு நெட் பற்றி என்ன தெரியும்?:)

      நீக்கு
    5. வாங்க அதற்காக உங்கள் அங்கிளை "அடப்பாவி" என்று சொல்லலாமா ?

      நீக்கு
  18. வாழ்த்துகள் நண்பரே
    தங்களின் தமிழ் உணர்வு போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
  19. எனக்கு ரூபலா வில டவுட். அது ருபலா என வந்தால்தான் அருவி வரும். ஆனா ராஜேஷ்குமாரின் விவேக் ரூபலா கதை ஞாபகம் வந்தது. நிறைய பாகமா வந்தது.
    கொஞ்ச நாள் இந்த பெயர் உலகத்தை கலக்கிவிட்டதே தெரியுமா அண்ணா ஜீ.
    ஆசைபடு ஆனா பேராசை படாதே ஞாபகம் வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக எல்லோருமே ராஜேஸ்குமாரின் கற்பனை பிம்பங்களை அறிந்து இருப்பது கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  20. எந்தப் பெயர் வைத்தால்தான் என்ன ஜி ரோஜா எந்தப் பெயரில் சொன்னாலும் ரோஜாதானே எனக்கு அந்தக் காலப் பாட்டுஒன்று நினைவுக்கு வருகிறது “ என்ன பெயர் வைக்கலாம் எப்படி அழைக்கலாம் “

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோ!

    தமிழருவி இப்படிச் சலசலவென ஓடுகிறதே... நான்தான் அதனழகை ரசித்திடக் காலதாமதமாகிவிட்டேன் போலும்...:)

    பெயர்கள் மிக அழகு. அதிரா சொன்னது போல இலங்கையில் முன்பெல்லாம் இந்த ர முதல் எழுத்தாக வரப் பெயர் வைக்க மாட்டார்கள்.ரசித்தேன் என்பதை இரசித்தேன், ராமலிங்கம் என்றால் இராமலிங்கம் இப்படி....:))

    இன்னும் இன்னும் உங்களின் தமிழார்வப் பதிவுகள் பல்கிப் பெருகட்டும்!
    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கும். வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  22. தமிழ் அருவியாக ஓட வேண்டும் என்று நினைத்து விட்டு இப்படி சம்ஸ்க்ருதம் கலந்த பெயர்கள் வைப்பது என்ன நியாயம்? இதை கேட்பார் இல்லையா? கேள்வி கேட்கும் இருவரில் ஒருவர் லீவில் போய் விட்டார், இன்னொருவருக்கு பிறந்த நாள் ஹாங் ஓவர் தீரவில்லை போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா சமஸ்கிருதமா... இதென்ன புதுக்குழப்பம் ?

      நீக்கு
  23. அமலா, விமலா, ருபலா - என்பதெல்லாம் சமஸ்க்ருதம் அல்லவா!...

    ஜி!.. - என்று அன்புடன் அழைப்பதையும் Fb ல் கிழி..கிழி என்று முகமூடி போட்டுக் கொண்டு கிழிக்கிறானுங்கள்..

    ஸ்ரீதேவி வட நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் பற்றுடன் தான் வாழ்ந்தார் என - நாட்டிற்கு மிக மிக அவசியமான காணொளி ஒன்றினைக் கண்டேன்..

    அதில் - ல, ழ, ள, ண, ந, ன, ர, ற - என்பனவற்றின் ஒலி வேறுபாடுகளை அறியாமல் ஒருத்தி பேசிக் கொண்டிருக்கிறாள்...

    அவர்கள் நடத்தும் அமைப்பில் இணையவும் சொல்கிறாள்..

    அந்தக் காணொளி வலைத்தளம் ஒன்றிலும் இடம் பெற்றுள்ளது..

    தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் பாடவில்லை..
    சமஸ்கிருதத்தில் ஏன் பாடினாய்?..
    - என்று இணையத்தில் பெரும் பிரச்னை...

    அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்திலேயே (வதனம்,பரதம்,தெக்கணம், திராவிடம்,திலகம்) வடமொழிச் சொற்கள் இருக்கின்றனவே!...

    இத்தனைக்கும் இன்றைக்கு வழக்கில் பாடப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் வாழ்த்துப் பாடலும் முழுமையானதல்ல..

    காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
    நாமம் கெடக்கெடும் நோய்.. (360)

    இந்தத் திருக்குறளை என்ன செய்யலாம்!...

    பதிலளிநீக்கு
  24. அன்பின் ஜி
    தங்களது விளக்கம் கண்டு பிரமித்தேன்.

    இதில் "லா" மட்டுமே கணக்கில் எடுத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  25. அது சரி, நான் இல்லைனதும் இப்படி ஒரு பதிவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதென்ன எல்லாப் பெயர்களும் சம்ஸ்க்ருதப் பெயர்களா வைச்சிருக்கீங்க? தமிழருவி ஒண்ணும் கொட்டக் காணோமே! ரூபலானதுமே எல்லோருக்குமே ராஜேஷ்குமார் நினைவு தான் வரும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு போட்டதாலதான் லீவு எடுத்தீங்க போலயே...

      நீக்கு
  26. ஹாஹாஹா, பானுமதி சொன்னமாதிரி நான் வந்து கேள்வி கேட்டுட்டேன். அதிரடியும் கேட்டிருக்காங்க! :) நான் இல்லைனா கிளவி சேச்சே, இந்த அதிரடியோடு சேர்ந்து சேர்ந்து எனக்கும் இப்படியே வருது! கேள்வி கேட்பாங்க இனிமேலே எனக்குப் பதிலா! :) அதனாலே நான் லீவிலே போயிட்டேன்னு நினைச்சுக்க வேண்டாம்! எப்போ வேணா, எப்படி வேணா, என்னிக்கு வேணா வந்து குதிப்பேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜேம்ஸ் ஊரணியில் குதிப்பேன்னு சொல்வது போல் இருக்கிறதே...

      நீக்கு
  27. தங்கள் தமிழ் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. தமிழில் பெயரிடுதல் என்பது பாராட்டத்தக்க முயற்சி. நல்ல முன்னுதாரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க மகிழ்ச்சி தங்கள் வரவு கண்டு.

      நீக்கு