தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 24, 2018

ஜப்பான் ஜகன்மோகினி ஜமுனாராணி


என்னடா தம்பி உன்னோட வீட்டுப்பக்கம் போனேன் கொழுந்தியா மாங்காயை கடிச்சுக்கிட்டு இருக்கு..... ஏதும் விஷேசமாடா ?
ஆமாண்ணே... தொழில் சரியில்லை ஊறுகாய் வியாபாரம் தொடங்கினேன்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
இவரு வீடியோ கடை வச்சுருந்தாரே... பின்னே ஏன் சாமியார் ஆனாரு ?
தொழில்ல க்ராப்பிக்ஸ் டெவலப்மெண்ட் படிச்சுக்கிட்டாராம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
இவரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றாரே.. இவருக்கு முன் அனுபவம் இருக்கா ?
ஏற்கனவே பேட்டை தாதாவா இருந்து எட்டு கொலைகள் செய்துருக்காராம்.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
அந்த நடிகை திருமணத்தை வெள்ளி விழா கொண்டாட்டமாக நடத்தப் போறாங்களாமே.... ஏன் ?
இது அவங்களோட 25 வது திருமணமாம்.
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
உன்னோட அம்மா நல்லா மூக்கும், முழியுமா... அழகான பெண்ணைத்தானே பார்த்தாங்க அப்புறம் ஏன் நீ சம்மதிக்கலை ?
அவங்க போட்டோவுல பார்த்துருக்காங்க நான் நேரடியாக பார்க்கும் போது வாயும், வயிறுமா இருந்தாளே...
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
இந்தக் கட்சித்தலைவர் ஊமையாமே இவர் மக்களிடம் எப்படி பேசமுடியும்னு நம்புகின்றார் ?
வாயிருந்தும் உளறுகின்ற தலைவரையே ஏற்றுக்கொண்ட மக்கள் என்னை நிச்சயம் ஏற்பார்கள்னு எழுதிக் காண்பிக்கின்றாரே..
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
இந்த சட்டமன்ற தேர்தலில் நீ யாருக்கு ஓட்டுப் போடுவதாக உத்தேசம் ?
எல்லாக் கட்சிக்காரனிடமும் நோட்டு வாங்கிட்டு நோட்டாவுக்கு போடுவேன்.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
அந்த நீதிபதி வடமலையானை விடுதலை பண்ணிட்டாரே... எப்படி ?
விடுதலை செய்தால்... தயிர்வடை மாலை சாத்துறேன்னு நீதிபதியிடம் சொல்லி இருக்கான்
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
இந்த இன்ஸ்பெக்டர் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாராமே.... உண்மையா ?
ஆமா பேண்ட் பாக்கெட்ல வைச்சு விடணுமாம்.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
ஜப்பான் போன ஜகன்நாதனும், அவரு மனைவி ஜமுனா ராணியும் திரும்பி வரும்போது ஒரு மாதிரியாக பேசுகின்றார்களாமே ஏன் ?
ஜப்பான் போனவங்க இரண்டு பேரும் அந்த நாட்டு ஜகன்மோகினி சினிமா பார்த்தாங்களாம்
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *

காணொளி

62 கருத்துகள்:

 1. மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊ:).. நில்லுங்கோ படிச்சிட்டு வந்திடுறேன்.

  பதிலளிநீக்கு
 2. அச்சச்சோ நித்திரைக்குப் போகும் நேரத்தில இப்படிப் படமா போட்டு மிரட்டுவது கர்ர்ர்:)) எனக்குக் காச்சல் வந்தால்:) இன்சூரன்ஸ் கிளைம் பண்ணுவேன் ஜொள்ளிட்டேன்.

  கொமெடி எழுத்துக்கள் ரசிக்க வைத்தன.. வீடியோ ஆரம்பம் பெரிதாக பயமுறுத்துவதாக தெரியவில்லை ஆனா போகப் போக வயிறு குலுங்க சிரிக்க வைக்குது ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னது காய்சலுக்கு இன்சூரண்ஸா ?

   பயமே இல்லையோ... எல்லாம் ஜேம்ஸ் ஊரணி தந்த அனுபவம்.

   நீக்கு
 3. இந்திய பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வாயும் வயிறுமாகத்தானே இருக்காங்க

  பதிலளிநீக்கு
 4. நீங்க பார்த்த இன்ஸ்பெக்டர் இன்னும் மொடி கொண்டு வந்த டிஜிட்டல் டெக்னாலஜியை பின்பற்றலையா என்ன? அப்படி பண்ணினா கையிலையும் சரி பேண்ட் பாக்கெட்டுலையும் சரி வாங்க வேண்டி இருக்காதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவரு ஓல்ட்மேனாக இருப்பாரு...

   நீக்கு
  2. டிஜிடல் டெக்னாலஜிப்படி லஞ்சம் வாங்கினால் அதுக்கு வருமான வரிக் கணக்குக் காட்டணுமே! அதான் பாக்கெட்டிலே வைக்கச் சொல்லி இருக்கார்! :)

   நீக்கு
  3. சரிதான் அப்ப இவரும் பி.ஜே.பி. ஆள்தானா....?

   நீக்கு
 5. ஆஆ..கடித்து கடிச்சு போடற மாங்காய் ஊறுகாயா...

  ஜாக்கிறதையாவே இருக்கணும் போல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே ஊறுகாயை எச்சிலாக்கி வச்சுருப்பாய்ங்களோ...

   நீக்கு
 6. நோட்டு வாங்கிகிட்டு நோட்டாவுக்கு - நல்ல பாலிஸி!

  பதிலளிநீக்கு
 7. ஊறுகாய் ஜோக் நல்ல ட்விஸ்ட்! மற்றவர்களையும் ரசிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. காணொளியில் யாருங்க அது அப்படி பயமுறுத்தறது? ஏதாவது ஒண்ணு கிடைக்க ஒண்ணு ஆச்சுன்னா என்ன ஆறது! அது சரி, பைக்கிலேயே தப்பிச்சு போன அநேகமா போயிடலாம்... ஏன், அதை கீழே போட்டுட்டு ஓடறாங்க?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி காணொளி "செல்லூர், செட்டப் செல்லப்பன்" வேலையாக இருக்குமோ ?

   நீக்கு
 9. ஜகன்மோகினி நல்லவே எல்லோரையும் மிரட்டுகிறார்.
  வாகனங்கள் இரவு வேளையில் கீழே படுத்து கிடக்கும் வெள்ளை உருவத்தை கடந்து செல்கிறார்களே! எதற்கு வம்பு என்ற எண்ணம்.

  கடைசியில் உதவ வந்த இரண்டு ஆட்களையும் பயமுறுத்தி விரட்டியாச்சு. நல்ல விளையாட்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 10. அனைத்தும் அருமை. உங்கள் பாணியல்லவா?

  பதிலளிநீக்கு
 11. ஹாஹாஹா! எல்லாம் நல்லா இருக்கு! வடமலையானை ரொம்பவே ரசிச்சேன்! :) ஜகன்மோகினிலே என்ன இருக்கு அப்படி? நான் பார்த்தது இல்லை! அதனால் தெரியலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ரசித்தமைக்கு நன்றி.

   ஜப்பான் போய்வந்த ஜகன்நாதன், அவர் மனைவி ஜமுனாராணியிடம் கேளுங்கள் அவர்கள் விளக்கம் தருவார்கள்.

   நீக்கு
  2. கீ சா அவர்களுக்கு,

   ஜகன்மோகினி எல்லாம் பார்க்காம இருக்கிறதே நல்லது..
   ஒருவேளை ஒரிஜினல் எப்படியிருக்குமோ!

   ஆனா அந்தத் தமிழ் டப்பிங்கையும் ஓட்டு ஓட்டு..ன்னு ஓட்டுனானுங்களே!

   நீக்கு
  3. வாங்க ஜி எல்லாம் விட்டலாச்சார்யாவின் திறமைதான்.

   நீக்கு
  4. @துரை செல்வராஜு! அது ஒண்ணுமில்லை. பேய், பிசாசுன்னா ரொம்பப் பிடிக்கும். பார்க்கலாமேனு தான்! :) அதிலும் பதிவு ஆரம்பத்திலேயே பேயைப் பார்த்தாச்சா! மேலும் பார்க்க ஆவல்! :))))

   நீக்கு
  5. பேயை பார்க்க ஆவலா ???
   ஆச்சர்யந்தேங்!!!

   நீக்கு
 12. ஜி... பார்த்தீர்களா...

  நடுச்சாமத்தில் பதிவை வெளியிட்டு
  அதை அதிரா முதல்...ல படிச்சுட்டுப் போக -

  ஜகன் மோகினிக்கு காய்ச்சல் வந்து கெடக்குதாம்...
  கஞ்சி வெச்சுக் கொடுக்கக் கூட ஆளில்லாம் தவிக்குதாம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜகன் மோகினி ஊரணிப்பக்கமாக போயிருக்குமோ...?

   நீக்கு
 13. ஜோக்குகளை ரசித்தேன்.

  ஜெகன்மோகினி படத்தைப் பார்த்தவுடன் எனக்கு 1980, காலேஜ் நினைவு வந்துவிட்டது. ஹாஸ்டலிலிருந்து ஏரிக்கரை வழியாக நண்பர்களுடன் நடந்து சென்று இரவுக் காட்சி பார்த்துவிட்டு நடு நிசியில் அந்தப் பேய்களை நினைத்துப் பயந்துகொண்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை ஏரிக்கரை வழியாக வந்தீர்கள். ஜேம்ஸ் ஊரணியோரமாக வரவில்லை.

   நீக்கு
 14. சிரிச்சு முடியல அண்ணா ஜீ. அனைத்து ஜோக்கும் அருமை. எனக்கு அந்த " கட்சி தலைவர் ஊமையாமே.... ஜோக் செம. இப்ப இருக்கற அரசியல் வாதிகங்க பேசும் உளறல் இருக்கே.. கேட்டு தாங்க முடியல..
  ஜேம்ஸ் ஊரணி ரெம்ப தொலைவில இருக்கு...தப்பிச்சேன்..ஹா..ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நன்றி ஜேம்ஸ் ஊரணி பக்கம் போகாதீங்கோ.... யாராவது குதிக்கிறதுக்கு நிற்பாங்க...

   நீக்கு
 15. ஜோக்ஸ் நல்லா இருக்கு. காணொளி.அதி பயங்கரம்

  பதிலளிநீக்கு
 16. ஜோக் அனைத்த்ம் சுவாரஸ்யம்.வடமலையான் சூப்பர்.
  ஒருத்தனுக்குக் கூட தைரியம் இல்லையே. ஒரு கைத்தடி கொண்டு வந்து போட்டிருக்க வேண்டாமா.
  மிக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா என்னதான் பகுத்தறிவு வளர்ந்தாலும் பேய் என்றால் பயம் வரத்தான் செய்கிறது.

   நீக்கு
 17. முகப்புப் படத்தைப் பார்த்து விட்டு கால்களையே விறகாக உபயோகித்து அடுப்பெரிக்கும் பேய் பற்றியாக்க்கும் என்று வந்தால்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸார் ஏமாந்து விட்டீர்களோ உங்களுக்காக பேய்ப்பதிவு எழுத வேண்டும். வருகைக்கு நன்றி

   நீக்கு
 18. கில்லர்ஜி அனைத்தையும் ரசித்தோம்....

  கீதா: எனக்கு இரண்டாவது மட்டும் என் சிற்றறிவிற்கு எட்டவில்லை ஜி!! ஹா ஹா ஹா ஹா..

  ஜகன்மோகினினு நீங்க தலைப்பு வெச்சதன் ரகசியம் நேக்கு தெரியுமே!!! அந்த நடுநிசியில் இங்கிட்டு ஓடிவந்து.... அங்கிட்டு இங்கிட்டு ஓடி ஓடி....அதிர வைக்கும் ஆள் தானே அது!!! ஹா ஹா ஹா ஹா ஹா...கில்லர்ஜி மீ எஸ்கேப்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது விளங்கவில்லையா ?

   அதை படித்து விட்டு நித்தியானந்தா மடத்திலிருந்து போர்க்கொடி பிடிப்பதாக இரகசிய தகவல் வந்து இருக்கிறதே...

   நீக்கு
 19. ஜகன்மோகினி அப்பப்போ ஸ்ரீராம் வீட்டு முருங்கி மரத்தில் ஏறி நிக்கும்.....தேம்ஸ் பக்கம் ஓடிப் போய் குதிக்கப் போறேன்னு மிரட்டும்!!! ஆனா ஒன்னு உங்க ஜகன்மோகினியக் கண்டு வைரவா காப்பாத்துனு ஓடிப் போயிருக்கும்...இன்னிக்கு ஒருவேளை எங்க வீட்டாண்டை வரும்...இல்லைனா நாளைக்கு வரும்...பார்த்துப்போம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்ஜி வீட்டில் முருங்கை மரம் உண்டா ?
   அதிலொரு கிளை ஒடித்து ஜேம்ஸ் ஊரணியில் நட்டு வைக்கலாம்.

   நீக்கு
 20. நோட்டு வாங்கிக்கொண்டு நோட்டாவுக்கு ஓட்டு - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

  பதிலளிநீக்கு
 21. நகைச்சுவைத் துணுக்குகள் சிரிக்கவைத்தன. சிந்திக்கவும் வைத்தன. பாராட்டுகள்! காணொளியை இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 22. நிறைய ஜோக்ஸ். நல்ல ஜோக்ஸ்

  பதிலளிநீக்கு
 23. நண்பரின் இரசிப்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 24. ஹாஹாஆ :) எல்லா ஜோக்ஸும் ரசித்தேன் ..ரொம்ப பிடித்தது அந்த காணொளி :)
  அந்த video clip ஜெக ஜெக மோகினியை நைட் patrol அனுப்புங்க :) குற்றங்கள் குறையும்

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  அனைத்து ஜோக்ஸ்களையும் ரசித்தேன். நீதிபதி நகைச்சுவை அருமை.இரண்டாவது இரண்டொரு முறை படித்தும் புரியாமல் போக கருத்துரையைப் பார்த்து விளங்கியது. காணொளி பேய் ஏற்கனவே யூ .டியூப்பில் பார்த்திருக்கிறேன்.ஆகவே பயமில்லையென்றாலும் மீண்டும் பார்க்கும் போது ஒடுகிறவர்களை காணும்போது ஏன் அப்படி பயமுறுத்த வேண்டுமென்று தோன்றுகிறது. பாவம்!

  நன்றியுடன்
  கமலா ஹரஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், இரசிப்புக்கும் நன்றி

   நீக்கு
 26. ஜப்பான் ஜகன்..மோகனி முன்னாலேயே குடியேறியே நம்மூர் மோகிினியா இருக்குமோ....?????

  பதிலளிநீக்கு