தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஏப்ரல் 04, 2018

முதிர்ந்த கன்னி


திரைப்பட நடிகர்களின் கிரிக்கெட் பலமுறை நடந்து இருக்கின்றது தாங்கள் அனைவரும் அறிந்ததே அபுதாபியில் ஒருநாள் கணினியில் மூழ்கியிருந்த நான் ஒருமுறை இணையம் பிரச்சனை செய்ததால் தொலைக்காட்சியில் இதைக்காணும் துர்பாக்கியம் எனக்கு நேர்ந்தது சாதாரணமாக இந்த கொடுமைகளை எல்லாம் நான் பார்ப்பது கிடையாது காரணம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் நேர்மை, நாட்டுப்பற்று சம்பாரிப்பது போதாதென்று விளம்பரங்களில் நச்சுப்பொருள் எனத்தெரிந்தும் குளிர்பானங்களை நம்மை குடிக்கச் சொல்லும் நல்ல எண்ணமுள்ளவர்கள் அவர்களும் என்ன செய்வார்கள் ? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதை அறிந்த அறிவாளிகள் இதனால் எவனும் நான் உனது ரசிகனாக இருக்க மாட்டேன் எனச் சொல்லப் போகிறானா ? இல்லையே... கிரிக்கெட் நடக்குமிடத்தில் ஆபாச உடையணிந்து அழகிகள் ஆடவேண்டிய அவசியம் என்ன ? இதைக் காணும்போது எனக்கு கோபம் வரும் தேவையில்லாமல் ஃப்ரஷர் ஏறும் ஆகவே இவைகளை தவிர்ப்பேன் அப்படியானால் நீ பெண்களை விரும்பியதில்லையா ? எனக் கேட்பவர்களுக்கு அதைக்காண நமக்கு சில தருணங்களும், அதற்கென சில தளங்களும் இருக்கிறது அதில் போய் இதைவிட மோசமான விசயத்தைப் பார்ப்பேன் என்பதை சொல்லிக் கொள்வதில் எமக்கு துளியளவும் பயமோ, வெட்கமோ கிடையாது எப்பேர்ப்பட்ட மச்சான் விஸ்வாமித்திரரே மயங்கியபோது இந்தப்பாமரன் கில்லர்ஜி எம்மாத்திரம் என்னைப் பொருத்தவரை சொல்வதையும் செயலில் காட்டவேண்டும் என்பது எனக்கு உலகம் அறியத் தொடங்கிய இரண்டேகால் வயதிலிருந்தே.... நான் வகுத்துக் கொண்ட கொள்கை.

இப்பொழுது நான் சொல்லவரும் விடயம் என்னவென்றால் ? கிரிக்கெட் நடைபெறும் தருணத்தில் ஒரு நடிக(ர்)ன் வந்தா(ர்)ன் உடனே முதிர்ந்த கன்னியொருத்தி கன்னியென்றே சொல்லவேண்டும் காரணம் ஆறு பதிகளை சதி செய்து விட்டு தற்காலம் ஏழாவது பதியோடு வாழ்பவளை வேறு எப்படி சொல்லமுடியும் ? உட்கார்ந்திருந்த இவள் உடனே அவனிடம் போய் பேசுகிறாள் காரணம் அவன் தற்சமயம் ரசிகன் என்ற ஏமாளிப் பயல்களால் உச்சாணிக் கொம்பில் இருக்கிறா(ர்)ன் அவனின் விரல் அசைவுக்கு எதுவும் நடக்கும் உடனே இந்த ஊடகங்கள் முழுவதும் அவர்களை மொய்க்கின்றனர் இளம் வளரும் ? ? ?  நடிகையொருத்தி அங்கு வருகிறாள் பெண்களை சகோதரிகளாவே நினைக்கும் ஒரு நடிகரின் மகள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். உடன் இந்த முதிர்கன்னி அவளை அழைத்து அவளின் கையை பிடித்து இழுத்து இந்த நடிகனின் பக்கத்தில் நிறுத்துகிறாள் ஊடகங்கள் உடனே ‘’கிளிக்’’ ‘’கிளிக்’’ ‘’கிளிக்’’ அவைகளை ப்ளாஸ்டிக் பிரிண்ட் போட்டு விற்க பாமரர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்க... இந்த சமூகம் எப்போதுதான் விழிக்கும் ? இன்று படிப்பறிவு எவ்வளவோ சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று பெருமையாக சொல்கிறோமே அப்படியானால் இவைகள் எப்படி ?

சரி அடுத்த விடயத்துக்கு வருகிறேன் நிற்கும்போதும் விஸ்தாரமான இடம் இருக்க முதிர்ந்தகன்னி இளம் நடிகையை நெருக்குகிறாள் காரணம் அவனுடன் உரச வைக்க, பிறகு அங்கிருக்கும் இருக்கைகளில் அமர இவள் நல்ல குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தால் அந்த நடிகையை தனக்கு பக்கத்தில்தானே உட்கார வைக்கவேண்டும் அவனுக்கு பக்கத்தில் உட்கார வைத்த முதிர்கன்னி வேண்டுமென்றே இளம் நடிகைமீது சாய்ந்து சாய்ந்து அவனுடன் மோத வைக்கின்றாள் கூட்டிக் கொடுப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் என்ன ? பொது இடத்தில் இப்படிச் செய்யும் இவளும்கூட தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறாள் அதைக்கேட்க, அவளைக்காண அவளுக்கு கோஷம்போட ஒருகூட்டம் அட மானங்கெட்ட சமுதாயமே அரிசி விலை பின்னே எப்படி குறையும் ?  

இவள் தேர்தல் பிரச்சாரம் செய்யவரும் நேரத்தில் நான் விடுமுறையில் எனது இனிய இந்தியா தி கிரேட் தேவகோட்டை வந்திருந்தேன் கூட்டத்திற்கு என்னை அழைக்க வந்தான் நண்பன் நான் சொன்னேன் இவள் சொல்லி நான் நாட்டு அரசியல் படிக்கவேண்டும் என்றால் நான் இந்தப் பூமியில் பிறந்ததே வீண் நீ வேண்டுமெனில் போ என்றேன் அவன் பதில் சொல்வது அறியாது எனது வீட்டிலேயே அந்த இடத்திலேயே படுத்து விட்டான் காலையில் எழுப்பி காஃபி கோப்பையை கொடுத்து விட்டு சொன்னேன் நீ என் நண்பேன்டா

உனக்கும் ஆறறிவு எனச்சொல்லப்படும் மானிடா கூத்தாடிகளுக்கு நீ இவ்வளவு மரியாதை கொடுப்பதால்தான் இன்று உண்மையான உத்தமிகள்கூட கூத்தாடிகள் பிழைப்பை நோக்கி படையெடுக்கின்றார்கள் இதனாலும்கூட இழப்புகள் நமக்கு மட்டுமல்ல, நாளைய நமது சந்ததிகளுக்கும்தான் என்பதை நினைவிள் கொள். ஒரு வேதத்தில் சொல்லப்பட்டதை இந்த தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன் //நடக்கும் அக்கிரமங்களை துணிச்சலுடன் எதிர். முடியாத பட்டசத்தில் மனதளவில் வெறுத்து ஒதுங்கு// இதைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன் காரணம் என்னிடம் அவர்களை எதிர்க்கும் பலம் இல்லை ஆனால் அவர்களை புழுவைப்போல் உதாசீனப்படுத்தும் நெஞ்சுரம் எமக்கு இறுதி வரை உண்டு இதை எமக்குத் தந்த இறைவனுக்கு நன்றி.

காணொளி

59 கருத்துகள்:

  1. எதிர்க்க முடியாவிட்டால்
    ஒதுங்கிப் போ
    அருமையான தத்துவம்

    பதிலளிநீக்கு
  2. அதுதானே...
    விஸ்வாமித்திரரையே தடுக்கி விழ வைத்த விசயம்....

    அதையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் போய்க்கிட்டே இருக்கோணும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. இப்ப மொபைலில் இருந் து....மாலை வருகிறோம்..கணினி வழி...

    பதிலளிநீக்கு
  4. இலவுகள் = இழவுகள்!

    இதோ இன்னும் சில தினங்களில் ஐ பி எல் திருவிழா தொடங்கப்போகிறது. அதையும் கண்டு களியுங்கள்!

    காணொளியையும், பொயிங்கிய உங்கள் குரலையும் கேட்டு மகிழ்ந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி
      முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் 'இலவு' என்றே குறிப்பிட்டு இருந்தார்.

      இழவு
      இலவு
      எது சரி ?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா எனக்கும் முதலில் கண்ணில் பட்டது அந்த “இலவு” தான்:) பாருங்கோ கடவுள்கூட கில்லர்ஜி பக்கம் இல்லை:)) திட்ட விடாமல் அதை இலவு ஆக்கிட்டார்ர்:)..

      எனக்கு ல வில் டவுட் இல்லை கில்லர்ஜி ஆனா ள வில் எப்பவும் டவுட் உண்டு.. அது ஸ்ரீராம் சொன்னதுதான் கரெக்ட்டாகும் என நினைக்கிறேன்.. நான் நினைச்சது அது இளவு என வந்திருக்கோணும் என:))..

      நீக்கு
    3. வாங்க நான் பிரச்சனை இல்லாமல் கொடுமை என்று மாற்றி விட்டேன்.

      நீக்கு
  5. காலை வணக்கம்.

    இதெல்லாம் இப்படித்தான் - ஒண்ணும் செய்ய முடியாது! நமக்குப் பிடிக்கலையா, ஒதுங்கிடணும்.... அவ்வளவு தான்!

    பதிலளிநீக்கு
  6. இழவு - நீங்கள் சொல்ல வருவது. மோசமான நிகழ்வு என்று அர்த்தம்
    இலவு - இலவம் பஞ்சு

    ஊரோடு ஒத்துவாழணும்னா, கிரிக்கெட் போட்டியில் ஆடும் சியர்ஸ் பெண்களைப் பார்த்து வாய் பிளக்கவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதுதான் எனக்கு சரியாக வரமாட்டுது.

      நீக்கு
  7. பல நேரங்களில் நான் எதிர்த்து தோற்றுவிட்ட நிலையில், பின்னர் ஒதுங்க ஆரம்பித்தேன். அது அதிக பலனைத் தந்தது.

    பதிலளிநீக்கு
  8. இப்படிலாம் பொங்குனா நீங்க போகோ சேனல்தான் பார்க்கனும்.

    பதிலளிநீக்கு
  9. நான் நேற்று செக் பண்ணினேன், ஆனா இப்போ நேரம் மாத்திவிட்டார்களெல்லோ நமக்கு அதனால கொஞ்சம் மிஸ் ஆகிட்டுது என் கணக்கு.. இல்லை எனில் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)))..

    சரி அது போகட்டும் போஸ்ட்டில் பொயிங்கியிருக்கிறார் கில்லர்ஜி ஆனா கடசிவரைக்கும் கில்லர்ஜியின் பிரச்சனை என்ன என ஜொள்ளவே இல்லையே:))..

    பல விசயங்கள் பார்க்க பலசமயம் ரத்தம் கொதிக்கும்.. ஹார்ட் பீட் அதிகமாகும்.. பிபி ஏறும்.... ஆனா நம்மைத்தான் கொன்றோல் பண்ணோனும் ஏனெனில் நமக்கு நம் ஹார்ட் முக்கியமெல்லோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஹார்ட் அட்டாக் ஆகாமல் பார்க்கோணும் உண்மைதான்.

      நீக்கு
  10. இன்னொரு விசயம்.. நமக்கு பெரும்பாலும் நமக்கு பிடித்தவர்களைத்தான் அதிகம் திட்டுவோமாம்.. அதிகமாக அவர்களோடு சண்டை போடுவோமாம், குறை சொல்வோமாம்.. கோபித்துக் கொள்வோமாம்:))... இது தத்துவம்:))..

    கில்லர்ஜி எப்போ பார்த்தாலும் பெண்களையேதானே திட்டுறார்:).. பெண்களின் உடை நடை பாவனை என குற்றம் சொல்றார்ர்:)... ஹா ஹா ஹா இது தத்துவம் அல்ல டவுட்டூஊஊஊஊ:)).. ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடித்தவங்களை திட்டுவோமா ? இந்த தத்துவம் புதுசாகீது.

      நீக்கு
  11. ஹா ஹா ஹா வீடியோ.. ராதிகா ஆன்ரி மீது தனுஸ் கை போட்டிருப்பதில் என்ன டப்பூஊஊஊஊஊஊ? பார்வையை மாத்துங்கோ:).. அவ தனுஸ் க்கு அம்மா மாதிரி:) “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”...

    கில்லர்ஜி இன்னொன்று புரிஞ்சுகொள்ளோணும்... நாம் சாதாரண மக்கள்.. நமக்கு ஒருவரைத்தொடுவதெனில் கூசும்.

    ஆனா அவர்கள் நடிகர்கள்.. அவர்களுக்கு அது ஒருவரை தொடுகிறோம் என்பதுகூடத் தெரியாது.. அது தப்பு அல்ல பழக்கப்பட்டு விட்ட ஒன்று.. அவர்களுக்கு பெண்ணைத்தொடுவதும் ஆணைத்தொடுவதும் ஒரு அனிமலைத் தொடுவதும் ஒன்று என்பதுபோல மனம் கொஞ்சம் பக்குவப்பட்டிருக்கும்....

    இல்லை எனில் நடிக்க முடியாதெல்லோ.. அதனால அவர்களைப் பார்க்கும்போது நம்மோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பொயிங்கக்கூடாது:))... ஹையோ எனக்கு கல்லெறி வந்திடப்போகுதே:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பின்னூட்டம் சரிதான். அவங்கள்ட அந்த கூச்சம் அவங்க தொழில்னால இருக்காது. அதுக்காக அவங்க மோசம்னு சொல்லக்கூடாது. சாக்கடையைச் சுத்தம் பண்றவங்க, டிரிங்க்ஸ் பாட்டில் தொடறவங்க, சிகரெட் பிடிக்கறவங்க... இவங்களுக்கெல்லாம் அந்தச் செயலின்போது மனதில் அருவருப்பு தோன்றாதுன்னு நினைக்கறேன். ஆனா எனக்கு சிகரெட் மேல பட்டாலே அருவருப்பா இருக்கும். டியூட்டி ஃப்ரீல விஸ்கி போன்ற பாட்டில்கள் மேல படவே ஒரு மாதிரி இருக்கும். எல்லாம் நம் எண்ணத்தில்தான் இருக்கு.

      நீக்கு
    2. உங்கள் ஆன்ட்டி செய்த அட்டூழியத்தை காண முடியலை.

      நீக்கு
    3. இதில் நெலைத்தமிழனுக்கு ஒரு பதில் போட்டேன், சரியாக அனுப்புப்படவில்லைப்போலும்..:)... அது மொபைல் கொமெண்ட்.

      நீக்கு
  12. உங்களின் எண்ணம் நல்லது ஜி...

    பதிலளிநீக்கு
  13. பிடிக்கவில்லை என்றால் பார்க்கவேண்டாமே ஜி ரிமோட் நம் கையில்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ இவ்வழியில்தான் செல்கிறேன்.

      நீக்கு
  14. எதையும் எப்படிப்பட்ட சூழலையும் சமாளிக்கும் தன்மை பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு உண்டு .அதனால்தான் சில விஷயங்கள் நம் கண்ணை உறுத்துகிறது ..சிலவற்றை தவிர்ப்பதே நன்று .

    முனைவர் ஐயா கூட ஒதுங்குவது சிறந்ததின்னு சொல்லியிருக்கார் பாருங்க .

    நமக்கு நமது உடல்நலன் முக்கியம் ஆகவே சிலரை சிலவற்றை கண்டும் காணாதிருப்பதே நன்று ..நாம் பொங்குவதால் அவர்கள் திருந்தப்போவதுமில்லை ..

    ஆனா இவங்களைப்பார்த்து சாமானியரும் புலியை பார்த்து சூடுபோட்ட கதைக்கு மாறுறாங்க அதான் கொஞ்சம் நெருடல்

    பதிலளிநீக்கு
  15. அன்பின் ஜி..
    தங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தேனே...

    பதிலளிநீக்கு
  16. பல பதிவுகளாக கில்லர்ஜியைப் பார்த்து விட்டேன் அவருக்கு சினிமா கிரிக்கட் என்றாலே காழ்ப்பு. தவிர்க்க முடியாமல் எல்லாவற்றையும் பார்க்கிறார் என்று தோன்று கிறது இல்லாவிட்டால் இப்படியெல்லாம் நினைக்க முடியுமா எழுத முடியுமா எண்ணங்கள் இனிதானால் எல்லாம் இனிதே அதிராவின் பொன் மொழி என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா சமூகச்சீரழிப்பாளர்கள் நான்கு நபரே ஆனால் இதற்கு ஆதரவு நானூறு நபர்கள்.

      பாதிப்பு அந்த நான்கு நபர்களுக்கு அல்ல!
      ஆதரித்த நானூறு நபருக்கும், அவர்களது சந்ததிகளுக்குமே...

      ஆகவே நான் ஆதரிப்பவர்களை எதிர்க்கிறேன்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    தங்களின் உள்ளக் கொந்தளிப்பு புரிகிறது. அவரவர்களின் எண்ணப்படிதான் அனைவரும் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். எதையும் தட்டிக் கேட்க முடியாது. பார்க்காமல் இருந்து விடுவோம். வேறு வழியில்லை...

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ ஒதுங்கி விடுவதே நமக்கு மரியாதை.

      நீக்கு
  18. //நடக்கும் அக்கிரமங்களை துணிச்சலுடன் எதிர். முடியாத பட்டசத்தில் மனதளவில் வெறுத்து ஒதுங்கு// இன்றைய காலத்திற்குத் தேவையான தத்துவம்.

    பதிலளிநீக்கு
  19. எனக்கு பிடிக்காத விளையாட்டு கிரிக்கெட். கிராமங்களில் கிட்டிப்புள் என்பார்கள் அதுதான் வளர்ந்து கிரிக்கெட் ஆகிவிட்டது. கிட்டிப்புள் விளையாடும் கிடைக்கும் சந்தோஷம் கூட இதைப் பார்ப்பதால் கிடைக்காது. இது வணிகமயம்தான் உங்களைப் போலவே ஒதுங்கித்தான் செல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே தமிழன் கண்டுபிடிப்பு என்பதால் இது மட்டம் தட்டப்பட்டு விட்டது.

      நீக்கு
  20. ஜி! எங்கள் இருவரின் கருத்தும்... உங்கள் கருத்து ஒரு வகையில் சரிதான். மற்றொரு வகையில் இதற்கெல்லாம் நாம் கொதிக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் என்ன நம் உறவுகாரர்களா? சமூகம் இவர்களால்தான் கெடுகிறது என்றும் பாதிதான் சொல்ல முடியும் பாதி நம் கையில்தான். நாம் தவறு செய்தோம் என்றால் அதற்குப் பழியை பிறர் மீதோ இந்த சமூகத்தின் மீதோ அல்லது சினிமா மீதோ சொல்லுஅது சரியில்லையே ஜி. நம்மைச் சுற்றி நலல்தும் நடக்கும் கெட்டதும் நடக்கும். எல்லாமே ப்ளஸ் ஆக த்தான் இருக்கணும் என்றால் இவ்வுலகம் இயங்கவே இயங்காது. எனவே நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் மூளையை நாம்தான் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எப்போதுமே நாம் சரியாக நம் பார்வையை சரியாக எண்ணங்களைச் சரியாக வைத்துக் கொண்டால் போதும். ..நாங்களும் குறும்படங்கள்...என்று செய்திருப்பதால்....நடிப்புத் தொழில் என்று வந்துவிட்டால் தொடாமலோ இல்லை அருகில் இல்லாமலோ என்பதெல்லாம் நடப்பது கடினம். அப்படிச் செய்வதால் அவர்கள் தவறானவர்கள் என்று சொல்லுவதற்கில்லையே ஜி. குடிப்பவர்களும் சரி ஸ்மோக் செய்பவர்களும் சரி மோசமானவர்கள் என்று சொல்வதற்கில்லை. நமக்குப் பிடிப்பதில்லை அவ்வளவே. அதே சமயம் இந்தப் பழக்கம் இல்லாதவர்களில் மோசமானவர்களும் இருக்கிறார்களே. எனவே நாம் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கியிருப்பது நலல்து....
    இது போன்றவற்றைப் பார்த்தாலும் பார்க்க நேர்ந்தாலும் மனம் பொங்காமல் தாமரை இலை தண்ணீர் போல இருந்து கடந்து செல்வது நல்லது. நம்மால் இயலாத காரியத்திற்கு நாம் பொங்குவதால் என்ன லாபம் ஜி நட்டம்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக விரிவான கருத்துரை

      அவர்களது சொந்த வாழ்க்கை எப்படியும் இருக்கட்டும் ஆனால் இதனால் சமூகச்சீரழிவு வருவதை பொதுமக்கள் உணர்ந்து தடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

      நீக்கு
  21. தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே
    காலம் மாறும்

    பதிலளிநீக்கு
  22. எனக்கொரு சந்தேகம் நண்பரே.... முதிர் கன்னி என்பது திருமணம் ஆகாதவரைத்தானே குறிக்கும்....தாங்கள் குறிப்பிடும் முதிர்ந்த கன்னிக்கு ஒன்னுக்கு இரண்டு திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கின்றனவே....முதிர்கன்னி..முதிர்ந்த கன்னி யாரைக் குறிக்கும் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக்கன்னியை எதுலயும் சேர்க்க இயலாது நண்பரே.

      நீக்கு
  23. ஏஞ்சலின் கருத்து தான் என் கருத்தும்!

    மேலும் கிரிக்கெட் பற்றி ஒரு சில வரிகள்! கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டென்டுல்கர் என்று மகத்தானவர்கள் சாதனை புரிந்த விளையாட்டு இது. மாட்ச் ஃபிக்ஸிங், கவர்ச்சிகரமாக பெண்கள் ஆடுவது என்று நிறைய குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் கிரிக்கெட்டை ரசிப்பவர்களுக்கு இதெல்லாம் மனதினில் பதிவதில்லை. வாழ்க்கை கூட அப்படித்தான்! நம் மனதைக் கலங்கடிக்கின்ற எத்தனையோ விஷயங்கள் நாம் போகும் வழியில் தென்படத்தான் செய்கின்றன. கலங்கடிக்கின்ற அனுபவங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. அப்படியே நின்று விடுகிறோமா என்ன? நம்முடைய பாதையில் நாம் தொடர்ந்து செல்லத்தானே செய்கிறோம்? இலக்கு மட்டும் தான் முக்கியம். வழித்தடைகள் அல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      கிரிக்கெட்டை, சினிமாவை கண்மூடித்தனமாக இரசிப்பது, அவர்களை கடவுளாக பாவிப்பது தமிழகத்தில்தால் அதிகமாக இருக்கிறது.

      டோணி பெயரில் மதுரையில் தெரு இருக்கிறது ஏற்கனவே அந்த தெரு சுதந்திர போராட்ட வீரரில் பெயராக இருந்தது இவன் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ?

      இதுதான் நன்றி விசுவாசமா ?

      நீக்கு
  24. இத்தகைய ’முதிர்கன்னி’களைப் பார்க்கையில் ஒரு பக்கம் சிரிப்பும், இன்னொரு பக்கம் ஆத்திரமும் வரத்தான் செய்கிறது. கன்னி என்கிற வார்த்தைக்கே சின்னவயதின் மனதில் ஒரு கவர்ச்சியோடு மரியாதையும் கூடவே இருந்தது. அதெல்லாம் எப்போதோ போய்விட்டது.

    தனிமனித ஒழுக்கம்பற்றி இப்போது பேசுவாரில்லை.
    ஆரம்பப்பள்ளிக்கூட ஆசிரியர்களும் பெற்றோரும்கூட இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாய்த் தெரியவில்லை. (ஆங்காங்கே விதிவிலக்குகள் இருப்பார்கள். அவர்களுக்கு நம் மரியாதை). ஒழுக்கம்பற்றி பேச ஒருவன் ஆரம்பித்தால் அவனைப் பைத்தியம் எனச்சொல்லும் இவ்வுலகம். அம்மணங்களின் உலகத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் தானே ! என்ன சொல்வது, எங்கேபோய் முட்டிக்கொள்வது?

    க்ரிக்கெட்டிலும் மற்ற விளையாட்டுக்களைப்போலவே பேடித்தனமும், பணத்தாசையும் வெகுவாக நுழைந்துவிட்டது என்பது உண்மை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, ஊழல் நிர்வாகிகளுக்கு இதில் பெரும்பங்குண்டு. இருந்தும் க்ரிக்கெட் ஒரு உன்னத விளையாட்டு. நமது நாடு சில உலகத்தரம் வாய்ந்த, சில சமயங்களில் உலகத்தரத்தை விஞ்சிய வீரர்களைத் தந்திருக்கிறது. அவர்கள் சாதாரண குடும்பங்கள், பின்னணி கொண்டவர்கள். கடும் உழைப்பு, அசாதாரணப் போராட்ட மனநிலை, மாளாத பயிற்சியினால் போராடி உச்சம் எட்டியவர்கள். இப்போதுள்ள அணியிலும் பலர் வெவ்வேறான திறன் படைத்தவர்கள். நேர்மையானவர்கள்.சாதாரணப் பின்னணியிலிருந்து வந்திருக்கும், இன்னும் மேலே மேலே உயரவேண்டிய இளசுகள் சிலருண்டு. நல்ல ஆட்டத்தைக் கண்டு களிப்போம். நல்லவர்கள், திறனாளர்களைப் புகழ்வோம் - அது எந்த ஆட்டமாயினும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான, அழகிய கருத்துரையை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  25. உங்கள் சமுக அக்கறை புரிகிறது நன்பரே.நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய இயலும் என்று உங்களிடம் பேசுகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. என்னைப் பொறுத்தவரை இவங்களை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டுச் செல்வதே நல்லது.

    பதிலளிநீக்கு
  27. பிடிக்கவில்லையெனில் ஒதுங்(க்)கிவிடுவதே நல்லது என்ற கொள்கை சரியே. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே

      நீக்கு