திங்கள்
கீரி வேலையாளின் கையை கீறி விட்டது.
தம்பி பணத்தை எடுத்து கம்பி நீட்டினான்.
பம்பு செட் அறையில் பாம்பு நுழைந்தது.
தார் சாலையில் புதிய கார் வழுக்கியது.
கீரி வேலையாளின் கையை கீறி விட்டது.
தம்பி பணத்தை எடுத்து கம்பி நீட்டினான்.
பம்பு செட் அறையில் பாம்பு நுழைந்தது.
தார் சாலையில் புதிய கார் வழுக்கியது.
உரம் போட்ட தென்னை மரம் செழித்தது.
தனியார் விமானத்தில் மணி சென்றார்.
வாளி சுடுநீரை காலி செய்தாள் சிறுமி.
ரதி திருமணத்தை நிறுத்த சதி செய்தனர்.
கால் தடுக்கி விழுந்ததில் பல் உடைந்தது.
காதல் பிரச்சனையில் மோதல் நடந்தது.
வருண் கொடுத்த புகாரில் அருண் கைது.
காடு விற்ற பணம் வீடு கட்ட உதவியது.
பைக் மோதியதில் சைக்கிள் நசுங்கியது.
ரயில் ஏறியதில் மயில் நசுங்கி செத்தது.
ட்றெம்ப் வருகைக்கு ட்ரம் செட் வரவேற்பு.
கீதாவின் வீட்டில் சீதா விருந்துண்டாள்.
பாட்டி தன் பேத்திக்கு பெட்டி கொடுத்தார்.
பேய் வருகையை கண்டு நாய் குரைத்தது.
மகன் இளமையிலேயே மகான் ஆனார்.
மாமியார் கோயிலில் சாமி வந்து ஆடினார்.
புளியமரத்தில் புலியை கட்டி வைத்தனர்.
அகதிகளுக்கு தந்த ஏரியா சகதியாக இருந்தது.
மோடியை டெல்லியில் எடப்பாடி சந்தித்தார்.
மனம் ஒப்பாமல் இருவர் திருமணம் நடந்தது.
பனையில் வந்த கள்ளை பானையில் பிடித்தான்.
அந்த ஏழு நாட்கள் போல, இந்த ஏழு நாட்கள் - குறிப்புகள் நன்று. தொடரட்டும் உங்கள் தனித்துவமான பதிவுகள்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது உடனடி வருகைக்கு நன்றி.
நீக்குஇப்படி எல்லாம் யோசிக்க முடியுமா என்று வியக்க வைக்கிறீர்கள் நண்பரே. இதை எழுத 7 நாட்களா இல்ல 7 மணி நேரமா
பதிலளிநீக்குவருக நண்பரே... ஹா.. ஹா.. ஏழு மணி நேரம் எதற்கு ?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. வாரத்தின் ஏழுநாட்களிலும் வார்த்தைகள் அநாயசமாக துள்ளி வந்து விழுந்திருக்கின்றன. அத்தனை வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று பொருத்தமாய் அமைத்திருக்கும் விதத்தை ரசித்தேன். எப்படி இந்த மாதிரி விதவிதமாக சிந்தித்து எழுதுகிறீர்கள். வியக்கிறேன். பாராட்டுகளுடன் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குதார் சாலையில் கார் வழுக்கியது என்றிருக்கலாமே? ஏன் புதிய கார்?
பதிலளிநீக்குவருக முனைவர் அவர்களே வாக்கியங்களில் நீளத்தை ஒரே அளவுகளில் நிறுத்துவதற்காக வார்த்தைகளை கோர்த்தேன்.
நீக்குமற்றபடி புதிய என்ற வார்த்தை அவசியமில்லைதான். இப்பொழுது நீளம் சரியாக இருக்கும். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
நல்லா இருக்கு ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி.
நீக்குஅருமையான கற்பனை வளம்.
பதிலளிநீக்குவாரத்தின் நாட்கள் ஏழுக்கு 28 வரிகள்.
எல்லாமே அருமை. எதுகை மோனை
என்று தூள் கிளப்புகிறீர்கள்
அன்பு தேவகோட்டைஜி.
வாங்க அம்மா பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குஹாஹாஹா கில்லர்ஜி அந்த ஏழு நாட்கள்!! நல்ல கற்பனை!!! அதுவும் வார்த்தை ரைம் விளையாட்டு. நல்லாருக்கு கில்லர்ஜி.
பதிலளிநீக்குகீதா
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குவார்த்தை விளையாட்டும் உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. பாராட்டுகள்!
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்.
நீக்குவித்தியாசமா யோசிக்கறீங்க.. ரயில் ஏறி மயில் செத்தது படிக்க கொடூரமாக இருந்தது. நாய் குறைத்தது இல்லை, குரைத்தது!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி சமீபத்தில் மயில் மின்சாரத்தில் அடிபட்டு இறந்து விட்டதை கண்டதும் இதை எழுத தோன்றியது.
நீக்குஇதோ நாய் குறையை, நிறை செய்கிறேன் நன்றி.
அந்த ஏழு நாடகள் எண்ணங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவருக சகோ இது இந்த ஏழு நாட்கள் வருகைக்கு நன்றி.
நீக்குஅன்பின் இனிய பொங்கல்
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்..
வாங்க ஜி தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
நீக்குஅருமை..இந்த ஏழு நாட்கள்...!!
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி.
நீக்குவார்த்தை விளையாட்டு அருமை. பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்குமயில்கள் நிறையவே செத்துப் போகின்றன. :( யானைகளும் தான். ஆனாலும் படிக்கையில் மனம் வருந்தியது. நல்ல கற்பனை வளத்துடன் தமிழோடு விளையாடிக் களிக்கிறீர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஅடடா! இப்படியும் ஏழு நாட்களா அசத்திவிட்டீர்கள்.
பதிலளிநீக்குவருக சகோ வருகைக்கு நன்றி.
நீக்கு