தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 17, 2022

சேற்றில் உந்தன் பாதம்...

 

ணக்கம் நண்பர்களே... ‘’காற்றில் எந்தன் கீதம்’’ என்ற கவிஞர் கங்கை அமரனின் எனக்கு பிடித்த அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

இதோ எனது பாடல்...

ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ...
சேற்றில் உந்தன் பாதம்
சேற்றோடு சேறாய் ஆனதே

சேற்றில் உந்தன் பாதம்
சேற்றோடு சேறாய் ஆனதே
மலைபோல கனவாக
நில்லென்று பேசும் காலநேர
சேற்றில் உந்தன் பாதம்
சேற்றோடு சேறாய் ஆனதே

அங்கிங்கும் துன்பம் இது பாலம் போட
உன்னுள்ளம் வீணே மறு தாகம் பாட
பண்புள்ள பிஞ்சை பேணாதோ
ஏனிந்த தேகம் தேடாதோ
மான்கள் இங்கும் நஞ்சின்
கோபம் கீழும் தூற்றும்
சேற்றில் உந்தன் பாதம்
சேற்றோடு சேறாய் ஆனதே

கல்லென்று உன்னால் பணம் வென்றால் மோதும்
நீக்காத நஞ்சில் பிழை சாய்ந்தால் மோதும்
மோகத்தில் தாகம் ஆகாதோ
சோகத்தில் ராகம் பாடாதோ
வீழும் கோலம் மேவும் அங்கே மிஞ்சும் பாடும்

சேற்றில் உந்தன் பாதம்
சேற்றோடு சேறாய் ஆனதே
மலைபோல கனவாக
நில்லென்று பேசும் காலநேர
சேற்றில் உந்தன் பாதம்
சேற்றோடு சேறாய் ஆனதே

பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி


வருடம்: 1980
படம்: ஜானி
பாடலாசிரியர்:  கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

இதோ கவிஞர் கங்கை அமரனின் பாடல் வரிகள்

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ....

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ளம் வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்.. நெஞ்சின்
தாபம் மேலும் ஏற்றும்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மோனத்தில் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

இதோ யூட்டியூப் இணைப்பு

https://www.youtube.com/watch?v=r2qpAACVL-c

நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

36 கருத்துகள்:

  1. ஆஹா! உங்களை மிஞ்ச யாரும் இல்லை. :))))

    பதிலளிநீக்கு
  2. அருமை
    அருமை
    மீசைக்காரக் கவிஞருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. வாழ்க தமிழ்..
    வளர்க தமிழ்!..

    கவிதா பிரவாகம் அருமை...

    பதிலளிநீக்கு
  4. // கவிதா பிரவாகம்..//

    கவிதா தெரியும்..
    அது யாரு பிரவாகம்?..

    அது அவங்க சித்தி மக!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      //அது அவங்க சித்தி மக//
      அட அப்ப கொழுந்தி...

      நீக்கு
  5. தலைப்பை பார்த்ததுமே நீங்கள் இந்த பாடலை தான் remake செய்து இருக்கிறீர்கள் என்று புரிந்து விட்டது நண்பரே.
    (அப்புறம் எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டேன் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கு நானும் சபாஷ் சொல்கிறேன்.

      நீக்கு
  6. வழக்கம்போலவே..அருமை.இதுவும் தங்களின் பதிவு பெட்டகத்தில் பெருமை பெற்றுவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. உல்ட்டாகவியை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. கவிதை நன்றாக இருக்கிறது.
    காற்றில் எந்தன் கீதம் பாடலை கேட்டேன், நல்ல பாடல்.
    தொடரட்டும் உங்கள் கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. "காற்றில் எந்தன் கீதம்" பாடலை அப்படியே ராகம் தப்பாதபடிக்கு வார்த்தைகளை மாற்றிப் போட்டு தந்துள்ளீர்கள். நல்ல கற்பனை நயத்துடன் உங்கள் பாடல் நன்றாக உள்ளது. ரசித்தேன். யூடியூப்பில் சினிமா பாடலையும் பிறகு கேட்கிறேன். அதுவும் பலமுறை கேட்ட பாடல்தான்.!

    முகப்புப் படமும் கவிதைக்கு பொருத்தமாய் எடுத்துப் போட்டுள்ளீர்கள். உங்கள் அசாத்திய திறமைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.தொடரட்டும் சினிமா பாடலுக்கு இணையான உங்கள் கற்பனை பாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  10. மிகவும் இனிமையானதொரு பாடல்... அதேபோல உங்கள் வார்த்தைகள் கொண்டு உருவான கவிதையும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி பாடலை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  12. அன்பு தேவகோட்டைஜி,
    ஜானி படப் பாடல் மிக இனிமை,.
    அதற்கு நீங்கள் கொடுத்திருகும் மாற்றுக் கவிதை
    மிக மிக சிறப்பு. எப்படித்தான் வார்த்தைகள் சேர்க்கிறீர்களோ .

    என்றும் வாழ்க வளமுடன்.
    வாழ்த்துகள்.அப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  13. நேரடியாக பாடலைப் படித்தேன் (அதற்கு முந்தைய பீடிகைகளைப் படிக்காமல்)

    பாடல் என் காதில் அப்படியே பொருந்தி ஒலித்தது. மிக அருமையா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க மகிழ்ச்சி நன்றி.

      இதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் நிரந்தரமாக இப்படி மூன்று வண்ணத்தில் தொடர்ந்து கொண்டு வருகிறேன்.

      நீக்கு
  14. கில்லர்ஜி நேற்றே பார்த்துவிட்டேன். கருத்துதான் போட முடியவில்லை. கொஞ்சம் ப்ளாகர் படுத்தியது.

    சூப்பர். கில்லர்ஜி!! இந்தப் பாட்டு ரொம்பப் பிடித்த பாட்டு கங்கை அமரனின் வரிகள் என்பது இப்போதுதான் தெரியும்

    உங்கள் உல்டா வரிகள் செம. ரொம்ப ரசித்தேன் ஜி நன்றாகப் பொருந்தியிருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா வந்திடுச்சு...கருத்து வந்திடுச்சு!!

      கீதா

      நீக்கு
    2. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  15. கில்லர்ஜி ஒவ்வொரு முறை நீங்கள் இப்படி பாடல் எழுதும் போதும் உங்கள் திறமை மீதான வியப்பு கூடிக் கொண்டே செல்கிறது. வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. கவிஞருக்கு பாராட்டுக்கள்.
    கூடவே பாடி பதிவேற்றம் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே.
    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் பாடினால் நீங்கள் ஓடி விடுவீர்கள்...

      நீக்கு
  17. 'சேற்றில் உன்தன் பாதம் சேறோடு சேறாய் ஆனதே'...... ஆஹா....உங்கள் பாடல். அவர்கள் உழைப்பால்தான் நாங்கள் உணவு உண்கின்றோம் அவர்களை போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விவசாயிகளை மறந்ததால்தான் மக்கள் இன்று உணவுக்கு அவதிப்படுகிறார்கள்.

      நீக்கு