தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 10, 2022

கொரோனா கடுப்பு ஊசி

வணக்கம் நட்பூக்களே... கடந்த 13.01.2022 அன்று பொங்கலுக்கு முன்தினம் கோவிட் ஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு ஊசியை அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டேன் இதுவே எனது முதல் ஊசி என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக எனக்கு சிறு அகவையிலிருந்தே ஊசி போட்டுக் கொள்வது பிடித்தமில்லாத விடயம்.

அபுதாபியில் இருந்தபோது... மூன்று வருடங்களுக்கு ஓர்முறை விசா நீட்டிப்பு செய்யும்போது மருத்துவமனை சென்று குருதி பரிசோதனை செய்து ஊசி போட்டுக்கொண்டு சான்றிதழ் வாங்கி வந்து கொடுக்க வேண்டும். இதனைக் கடப்பது எனக்கு ஒட்டகக் கொம்பாக இருக்கும்.
 
பிறகு உடல் நலமில்லாமல் போனால் மருத்துவமனை போவதில்லையா ? என்று கேட்க வேண்டாம் எந்நிலை வந்தாலும் உடலை உதறி விட்டு நடந்து விடுவேன் கண்டிப்பாக ஊசி போடும் நிலைக்கு போகவே மாட்டேன். அதன் நிலைப்பாட்டுக்காக மட்டும் நான் கொரோனா ஊசி போடுவதை தவிர்க்கவில்லை முக்கியமாக இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் இவர்களிடம் நம்பிக்கை இல்லை.
 
ஆம் கொரோனா ஊசியால் வரும் பின் விளைவுகளுக்கு அரசு பொருப்பு இல்லையாம். அவசர வேலையாக வெளியூர் செல்லும் பொழுது பயணங்களில் தடுப்பு ஊசி போடப்பட்டு விட்டதா ? என்று அதிகாரிகள் பரிசோதிக்கின்றார்களாம். இதன் காரணமாகவே நானும் தடுப்பு ஊசி போடுவதை கடுப்புடன் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டேன். எஸ்.பி.பி. விவேக் மற்றும் உலகம் அறியாமல் மறைக்கப்பட்ட சுப்பன், குப்பன் இவர்களின் மறைவு என்னை கதி கலங்க வைத்து இருந்தது. மரணம் என்னை என்றுமே சலனப்படுத்தியதே இல்லை..
 
//மரணம் நம்மை தழுவும்போது நாம்
அதை அணைத்துக் கொல்லவேண்டும்//
 
என்பதே எமது தாரக மந்திரம் ஆனால் கொரோனாவால் அசிங்கப்பட்டு நமது சரீரத்தை இந்த இந்திய மண் எம்மை உண்ணக்கூடாது என்பதே எமது அவா ஆகவே எனக்கு அழகிய மரணம் அல்லது ஆனந்த மரணம் இவைகளை ஆராதிக்கின்றேன்.. மருத்துவமனைக்கு செல்லும் முன்பே மின்னஞ்சல், வலைப்பூ இணையத்திலிருந்து (Sign out) வெளியேறி விட்டேன். சில்லரைக் கடன்களை கொடுத்து விட்டேன், முக்கிய கடன்களைக் குறித்து எதை வைத்து எப்படி கொடுக்க வேண்டும் என்பதை நண்பர்களுக்கு (குறிப்பு உறவுகளுக்கு அல்ல) இணைய வழியாக கடிதம் எழுதி பொதுவெளியாகவும் வைத்து விட்டேன். பொதுவாக எனக்கு வரவேண்டிய பணத்தை எழுதி வைப்பதைவிட நான் கொடுக்க வேண்டிய பணத்தை எழுதி வைப்பதில் ஒண்ணே முக்கால் அகவையிலிருந்து பழகிக் கொண்டவன்.
 
நான் கடனோடு மரணிப்பதை என்றுமே விரும்பியதில்லை காரணம் நான் கோடிக்கணக்கில் சம்பாரித்தவன். இன்று உறவுகளால் பெரும் பகுதி இழந்து சிறிய அளவில் கடன்காரன்தான். ஆயினும் கடனோடு பயணித்தால் மீண்டும் அந்தக் கடனை அடைக்க மறுபிறவி எடுத்து வரக்கூடும் அப்பொழுது மீண்டும் மோடி போன்ற பிரதமர்களை சந்திக்ககூடும் அது மட்டுமல்ல நமது சந்ததிகளை அப்பாவம் தொடரும் என்பதே எமது முதல் பிரதானம். ஆகவே ஆயிரம் கோடிகள் சம்பாரித்து வைப்பதைவிட ஒரு ரூபாய்கூட கடன் பாக்கி வைக்காமல் மரணிப்பவனே பாக்கியசாலி
 
சாம்பசிவம்-
ஒரு சின்ன ஊசி போடுறதுக்கு டெல்லி, சென்னை, திருச்சிகாரவுங்களை எல்லோரையும் இழுத்து இத்தனை அக்கப்போரா ?
 
Chivas Regal சிவசம்போ-
பொங்கலுக்கு முதல்நாள் ஊசி போடும்போது மறுநாள் பொங்கல் கொண்டாட முடியாமல் போகவும் சாத்தியம் உண்டே ?
 
சிவாதாமஸ்அலி -
இவருதான் முப்பது வருசமாக தீபாவளி, பொங்கல், கொண்டாடுவது இல்லையே.... ?

36 கருத்துகள்:

  1. பின் விளைவுகளுக்கு பொறுப்பேற்காத அவர்கள் நம்மை ஏன் நிர்பந்திக்கிறார்கள் என்று தெரியல நண்பரே.
    அப்புறம் தொடு சிகிச்சை படிப்பு முடித்ததிலிருந்து எனக்கும் ஹலோபதி மருத்துவம் என்றாலே பயமாக தான் உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் நிர்பந்திப்பது எனக்கு உடன்பாடு இல்லாத விடயமே...

      நீக்கு
  2. தடுப்பூசி போட்டுக் கொண்டது நல்ல விடயமே.  பயப்பட வேண்டாம்.  ஒன்றும் ஆகாது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. தடுப்பூசி ஒண்ணும் பிரச்சனை இல்லை கில்லர்ஜி. ஒண்ணும் ஆகாது....பயப்படுவதற்கு அதில் எதுவும் இல்லை. போட்டுக் கொண்டது நல்ல விஷயம் தான். அதைப் பற்றி ஏன் இவ்வளவு நெகட்டிவ் எண்ணங்கள்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. இவ்வளவு நாள்... ம்ஹும் வருடம் கழித்து இப்போது தான் தடுப்பூசியா...?!!! நல்லது...

    பதிலளிநீக்கு
  5. அப்புறம் சொல்ல மறந்துட்டேன், கபட வேடதாரிகளின் இயக்கம் நாட்டின் கேடு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேடுதான் ஜி இந்த மக்களுக்கு வேண்டும்.

      நீக்கு
  6. தடுப்பூசி போட்டு கொண்டது நல்ல விஷயம்.

    சில பின் விளைவுகள் பற்றி வாட்ஸ் அப் செய்திகள் கொஞ்சம் அச்சம் ஏற்படுத்துகிறது என்ன செய்வது?
    நன்றாக இருப்போம் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  7. தவறான பார்வை. எப்படியோ தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதே மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. தடுப்பூசி, உங்கள் பாணியில் கடுப்பூசி, இரண்டு தவணைகள் போட்டபின் எனக்கு கொரோனா வந்து, தொடர்ந்து குடும்பத்தார் அனைவருக்கும் வந்து பாதிக்கப்பட்டோம். போட்டதால் தப்பித்ததாகவும், அதிக தாக்கம் ஏற்படவில்லை என்றும் மருத்துவரும் பிற நண்பர்களும் கூறினர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  9. மோடி போன்ற மோசடிகளை இப்பிறவியிலேயே சந்தித்துவிட்டதால்..அடுத்த பிறவியில் சந்திக்க கிஞ்சித்தும் வாய்ப்பில்லை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் எனது கவலையும் இதுதான்...

      நீக்கு
  10. ஊசி போட்டுக்கொண்டது நல்லதுதான். எனக்கு இரண்டாம் ஊசிக்கு இரு நாள் முன்பு விவேக்கின் மரணம். அந்த லட்சத்தில் ஒருவனாக நானிருந்தால்? என்ற யோசனை வந்ததென்னவோ நிஜம்.

    இப்போ பூஸ்டர் போடும் அனுமதி கிடைக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      விரைவில் இவர்கள் ஹார்லிக்ஸ் அறிமுகப்படுத்துவார்கள்.

      நீக்கு
  11. என்றும் நலமுடன் இருங்கள் அன்பு தேவகோட்டைஜி.

    நம்மால் பிறருக்கும் பிறரால் நமக்கும்
    எந்தக் கேடும் வராமல்
    இறைவன் பார்த்துக் கொள்வான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது ஆசிகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    உங்கள் பதிவை நேற்று இரவு பார்த்தேன். நல்ல நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். ஆனால், எல்லோரையும் போல உங்களை ஊசி போட்டு கொண்டமைக்கு பாராட்ட எனக்கு வார்த்தைகள் வர(தெரிய)வில்லை. காரணம் உங்களின் கருத்துகள்,பயங்கள் என்னுள்ளும் இருப்பதால்தான். நானும் சில நிர்பந்தத்தில்தான் அடுத்த வாரத்தில் அதை சந்திக்கப் போகிறேன் என நினைக்கிறேன். பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு


  13. மக்களுக்கு உதாரணமாக தலைவர்கள் இருக்க வேண்டும் அப்பத்தான் மக்கள் தலைவர்களை நம்புவார்கள் அவர்களின் திட்டங்களை நம்புவார்கள் ஆனால அதற்கு தகுதியில்லாதவர்தான் இந்தியாவை ஆள்கிறார்.... அதனால்தான் என்னவோ உங்களைப் போல உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கி வந்து இருக்கிறார்கள்


    முன்றாவது தடுப்பூசியை போட்டு நாளாகிவிட்டது நாளாவது டோஸ் போட எப்ப உத்தரவு வரும் என காத்து இருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்து மிகச்சரியாக இருக்கிறது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. மீசை இருப்பவன் வாளுக்கே பயப்பட மாட்டான் என்பதே எனது நம்பிக்கை. நீங்க என்னான்னா? துணிந்து ஊசி போட்டுக் கொண்டமைக்கு வாழ்த்துகள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வாள் என்பது போர்க்களத்தில் சந்திப்பது அதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

      ஊசி என்பது விஷம்.

      நீக்கு
  15. எங்கள் இருவர் (என் வீட்டிலும், கீதாவின்) வீட்டிலுமே மருத்துவர்கள் நிறைய உள்ளனர். மட்டுமல்ல பயோமெடிக்கல் குறிப்பாக கொரோனா பற்றிய ஆராய்ச்சியில் தடுப்பூசி ஆராய்ச்சியிலும் இருப்பவர்களும் இருக்கிறார்கள். யாருமே தடுப்பூசியை எதிர்மறையாகச் சொல்லவில்லை. இறப்பிற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது அவர்களின் ஆய்வு. நீங்கள் போட்டுக் கொண்டது நலம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  16. என்னமோ...

    ஒருவழியாக ஊசி போட்டுக் கொண்டு விட்டீர்கள்..

    அந்த ஊசிக்குள் பன்றியின் மரபணு இருப்பதாக யாரோ கிளப்பி விட - அங்கே கொஞ்சம் பேர் கத்திக் கொண்டு கிடந்தார்கள்..

    ஊசி போட்டுக் கொள்ளா விட்டால் சிறை மற்றும் Civil Id - 'டமார்' என்றதும் சத்தம் அடங்கி விட்டது..

    எப்படியோ சப்பை மூக்கன் நினைத்ததை சாதித்து விட்டான்.

    வேறொன்றும் புதிதாக வந்து கொண்டிருக்கின்றதாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஆம் சப்பை மூக்கனின் கனவு நனவாகி விட்டது.

      இதில் பலியாடு மக்கள்தான்...

      நீக்கு
  17. வி.ரட்சகன் கீழக்கரை

    பதிலளிநீக்கு
  18. ஊசி போட்டுக்கொண்டது நல்லதே கில்லர்ஜி. பயம் தேவையில்லை. அடுத்த ஊசியையும் போட்டுக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு