தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 05, 2022

ஐயா நீ சாப்பிட்டியா ?

வலையும், மகிழ்ச்சியும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது இதை சந்திக்காத மனிதர்களே கிடையாது இவைகளை இறைவன் கலந்தே கொடுக்கின்றான். ஆயினும் எனக்கு மட்டும் இறைவன் மகிழ்ச்சியை மிகவும் குறைந்த பட்சமாகவே அளித்துள்ளான். அதேநேரம் கவலைகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் நிறைவாகவே கொடுத்துள்ளான். இவைகளின் அடிப்படை எனது நேர்மையான வாழ்க்கையே...
 
இவ்வழியிலிருந்து விலகி விடலாம் என்றால் எம் மனது கேட்பதே இல்லை. இவ்வளவு காலம் கடந்து விட்டோம் இறுதி கட்டத்தில் பாதை விலகுவது சரியில்லை என்பதே எனது மனசாட்சியின் எதிர் வாதம். நான் இவ்வளவு காலமும் எனது மனசாட்சியின் ஆலோசனையை கலந்துதான் கடந்து வந்து இருக்கிறேன். மனசாட்சி ஓர் நல்ல நண்பன் இவனிடம் வெட்கப்படாமல் எதையும் கேட்கலாம். உண்மையை மட்டுமே பேச இயலும் பொய்க்கு வேலையே கிடையாது. பெயரன், பெயர்த்திகளோடு கொஞ்சி உறவாடுவது பிறவிப்பயன் என்பது நாம் அறிந்த விடயமே எனினும் அதை அனுபவித்தவர்களுக்கு அதன் முழு இன்பமும் கிடைக்கும் ஆம் கடந்த மாதம் எனது மூத்த பெயர்த்தியின் குரலை அலைபேசியில் ஒளியலையில் பார்த்துக் கொண்டே கேட்டேன்.
 
ஐயா.... நீ... சாப்ட்டியா... ஆ... ஆ... ?
 
என்று தலையை ஆட்டிக் கொண்டே இந்த ஒற்றை வரியை அவளது மழலை மொழியால் சுமார் எட்டு நொடிகள்வரை இழுத்துக் கொண்டே கேட்டது. எனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சியது போன்ற இன்ப அதிர்ச்சி. அவளது இரண்டரை அகவையில்தானா இதை நான் கேட்க வேண்டும் ? இந்நொடியே மரணித்தாலும் தகும் என்றே மனதுக்குள் தோன்றியது. இருப்பினும் என்னுள் வாழும் மனசாட்சி இந்த ஒலியலையை பேழையில் ஏற்றி கேட்டுக் கொண்டே இந்த சுகத்தில் லயித்துக் கொண்டு இந்த துயரமான, கேவலமான வாழ்க்கையை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு கடத்தலாமே என்றும் கூறியது. அடப்பாவிகளா... எனது சொர்க்கத்தை பறித்து விட்டீர்களேடா...
 
இதற்கான தண்டனைகளை தவறிழைத்தவர்கள் அடைவதை நானும் காணும் நிலை வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம் ஆனால் செய்த பாவத்திற்கான தண்டனை உறுதி. பெயரன், பெயர்த்தியோடு தினந்தோரும் பழகி வாழ்பவர்கள் எத்தனை பாக்கியசாலி. புண்ணியம் செய்தவர்கள் போலும் நிலைக்கட்டும் அவர்களுக்கு இவ்வாழ்வு. பெயர்த்தி ஐயாவை நீ என்று ஒருமையில் அழைப்பது எத்தனை சுகந்தமான மொழி.
 
நான் பிறவியிலிருந்தே சராசரி மனிதர்களைவிட இருமடங்கு ரோசமானவன். ஏனோ தெரியவில்லை இறைவன் எனக்கு இவைகளை அதிகமாகவே அளித்து விட்டான். இருப்பினும் எனது பெயர்த்திகளுக்காக, அவள்களை பார்ப்பதற்காக, பேசுவதற்காக, எனது மான, ரோசத்தை பெரிதாகவே இழந்து அலைகிறேன். அவள்களுக்காக எனது உயிரைக் கொடுக்ககூட தயக்கமில்லை.
 
எனது பார்வையில் பெரும்பான்மையான நேர்மையாளன் சந்தோஷத்தை இழந்தே வாழ்கின்றான் எனது கணிப்பு எப்பொழுதும் தவறுவதேயில்லை. அதேநேரம் இறுதியில் இறைவனின் திருவடியில் அவனுக்கு இதற்கான நற்பலன் கிடைக்கும் என்றே ஆத்மார்த்தமாய் நம்புகின்றேன்.
 
மனிதனின் கேவலமான கெட்ட செயல்கள் எவ்வளவு அழகான வாழ்க்கையை அலங்கோலமாக்குகின்றது இதைப்போல இந்த சமூகத்தில் எத்தனை எத்தனை இழிவான வாழ்க்கை நிலைப்பாடுகள். எது எப்படியோ இறுதியில் இறைவன் அதை உணர வைத்தே இறுதி யாத்திரை அனுப்புகின்றான். இது நான் கண்ட, கண்டு கொண்டு இருக்கின்ற நிதர்சனமான உண்மை.

32 கருத்துகள்:

  1. உங்கள் ஆதங்கம் புரிகிறது.  உங்கள் சந்தோஷம் புரிகிறது.  எட்டு நொடி இன்பம்.-   ரெகார்ட் செய்து வைத்திருக்கலாம்.  அந்த இன்பம் தொடர்ந்து மறுபடி மறுபடி  உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பதிவு செய்யாமல் இருப்பேனா ?

      நீக்கு
  2. ஒவ்வொரு இரவும் விடியலை நோக்கித்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அனைவருக்கும் நல் விடியல் ஆகட்டும்.

      நீக்கு
  3. பேத்தி பேசியதை அதுவும் "சாப்ட்டியா" என்று கேட்டது மகிழ்ச்சியை தருகிறது.
    பேத்தி பேசி விட்டாள் இனி எல்லாம் நல்லதே நடக்கும்.
    நான் சொன்னது போல் உங்களுடன் விளையாடுவாள். உங்கள் பொறுமைக்கு கிடைத்த பரிசு. நீங்களும் பதில் அனுப்புங்கள். அடிக்கடி அவளுடன் பேசுங்கள்.
    பேத்திகளுடன் மகிழ்ந்து இருக்க என் பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவில் தங்களின் மன வேதனை ஆதங்கம் புரிகிறது. தங்களை அன்போடு "சாப்பிட்டாயா" என அலைபேசியில் கேட்டு நலம் விசாரித்த தங்கள் பேத்திக்கு (கிரிஷ்ணியாதானே) வாழ்த்துகள். அன்பு மிகுந்த அவளின் சொற்களை கேட்ட மாத்திரத்தில் தாங்கள் அவளுடைய அருகாமையை விரும்பி மனம் வேதனையுறுவதை கண்டு நானும் மனவருத்தமடைகிறேன். விரைவில் அனைத்தும் மாறும். கவலைப்படாதீர்கள். அவள் உங்கள் அருகிலேயே இருந்து, தன் மழலையில் பேசி மகிழ்வித்து தன்னுடைய அன்பால் உங்கள் துயர் மாற்றும் காலங்கள் விரைவிலேயே வந்து விடும். . அந்த நல்ல நாட்களுக்காக நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தையும், பிரார்த்தனைகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல!

      நீக்கு
  5. 'அமிழ்தினும் இனிது ... குழந்தைகளின் மொழி அதை கேட்பதே இன்பம். மகிழ்ந்திருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. விரைவில் நேரில் நடக்கட்டும்... நடக்கும்...

    பதிலளிநீக்கு
  7. மழலை மொழி...... இன்பம் தான். தொடர்ந்து அந்த இன்பம் கிடைக்கட்டும். விரைவில் அனைவரும் ஒன்று கூடும் நாள் வரட்டும். எனது பிரார்த்தனைகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  8. கில்லர்ஜி உங்கள் ஆதங்கம் புரிகின்றது. பாருங்கள் இத்தனை வருடங்களில் முதன் முறையாகப் பேத்தி உங்களைக் கேட்ட அந்த இன்பமான மொழி கண்டிப்பாகப் பாருங்கள் தொடரும். உங்களோடு பேசுவாள். நீங்கள் எல்லோரும் சேரும் அந்த நாளும் வந்திடும். எங்கள் பிரார்த்தனைகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது பிரார்த்தனைகளுக்கு மனம் நிறைந்த நன்றி

      நீக்கு
  9. உங்கள் பெயர்த்திக்கு உங்கள் ஜாடை இருக்கிறது போன்று தோன்றுகிறது. இன்பத் தேன் வந்து பாய்ந்தது உங்கள் காதினிலே! இந்த இன்பத் தேன் மீண்டும் மீண்டும் பாய்ந்திடும் ஒளியலையில் மட்டுமல்ல நேரினிலும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  10. கில்லர்ஜி என் கருத்து எங்கே போயிற்று? ஆ ஆ ஆ ஆ இதென்ன இது இந்த ப்ளாகர் இப்படிச் செய்கிறது.

    கில்லர்ஜி உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் பாருங்கள் இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது கேட்டிருக்கிறாள். எனவே இது ஒரு நல்ல தொடக்கம். கண்டிப்பாக இது தொடரும். விரைவிலேயே நீங்கள் எல்லோரும் சேர்ந்திடும் வாய்ப்பும் அமையும். பேத்தி செம அழகு. செல்லம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. உங்கள் இரு பெயர்த்திகளும் விரைவில் உங்களிடம் கொஞ்சி விளையாடுவார்கள். இறைவன் அருள் புரிவான். நீங்களும் மனமார, ஆசை தீரக் கொஞ்சலாம். பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்காக.

      நீக்கு
    3. நீங்க சாப்பிட்டாலும்/சாப்பிடாட்டியும் குழந்தை கேட்டதே மனது. வயிறு இரண்டும் நிறைந்திருக்கும்.

      நீக்கு
    4. வருக தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி

      நீக்கு
  11. கில்லர்ஜி பக்கமும் பார்க்க வந்தேன், பேர்த்தியின் அழகு கொள்ளை கொள்ளுது மனதை, திருஸ்டி சுத்திப் போடுங்கோ. சில குழந்தைகள் பேசுவதற்கு சற்றுத் தாமதமாகும், ஆனால் இனிப் பாருங்கோ, பேசுவதை நிறுத்த மாட்டா, பதில் சொல்லி நீங்கள் களைக்கப் போகிறீங்கள், நன்கு சாப்பிட்டுத் தென்பாக இருங்கோ கில்லர்ஜி...

    நாம் என்ன பண்ணினாலும் கோபித்தாலும் அழுதாலும் சிரித்தாலும் .. எது நடக்க இருக்கிறதோ அதுதான் நடக்கும், அதனால, நல்லதே நடக்கும் எனும் நம்பிக்கையுடன் எப்பவும் மகிழ்ச்சியாக சிரிச்சுக்கொண்டு இருங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா நலமா ?
      அழகாக சொன்னீர்கள் எது நடக்க இருக்கிறதோ அதுவே நடக்கும்.

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நன்றி

      நீக்கு
    2. சின்ன டவுட்டு அந்தாட்டிக்கா எந்தப்பக்கம் இருக்கிறது ?

      நீக்கு
    3. உங்களுக்குத் தெரியாததோ கில்லர்ஜி:), உங்கட நியூயோர்க்குக்கு கொஞ்சம் கிழக்கால மேற்குப் பக்கம் சாய்ந்ததுபோல இருக்கும்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. ஓஹோ மார்ச்சான்பட்டி கிழக்காலே ஒரு கப்பி ரோடு போகுமே அதுவா ?

      நீக்கு
    5. எங்கட அம்மம்மா அப்பவே ஜொன்னா:)), கதையைக் குறை பிள்ளை எண்டு:)))...

      https://www.reddit.com/r/pics/comments/9jcx17/cat_running_to_play_1920_x_1080

      நீக்கு
    6. ஜொன்னதை ஜொள்"ளவில்லையே....

      நீக்கு
  12. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு