தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 05, 2023

அம்மணத்தான் ஊரில்...

ணக்கம் நட்பூக்களே... வீட்டுப் பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை மட்டுமல்ல உலக அளவிலான எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி பேசித் தீர்க்கலாம் இதற்கு இரண்டு விடயங்கள் ஒத்துப் போகவேண்டும். ஒன்று இருதரப்பினரும் உண்மை மட்டுமே பேசவேண்டும், இரண்டாவது அகம்பாவத்தை விட்டு இறங்கி வரவேண்டும். இதில் முதலாவதுதான் நமது முக்கிய பிரச்சனை ஆம் உண்மை பேச மறுப்பதால் நியாயம் இங்கு கேள்விக் குறியாகிறது
 
இரண்டாவது பிரச்சனை இல்லை யாராவது ஈகோவை விட்டு இறங்கி வந்து விடுவார்கள். வந்து பயன் என்ன ? இருவரும் பேசுவதில் உண்மை இல்லையே... இதன் காரணமாய் நியாய தர்மம் இல்லை. வந்தவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள் அதாவது இரு தரப்பினரும் அடியாட்களுக்கு தண்ணி வாங்கி ஊற்றி விட்டுத்தான் அழைத்து வருவார்கள்.
 
நான் அயல் தேசத்திலிருந்து வந்ததிலிருந்து நிறைய மனிதர்களை சந்தித்து விட்டேன் வாயைத் திறந்தாலே பொய்தான் வருகிறது அவசியமற்ற விசயத்திற்குகூட பொய் பேசுகின்றனர். எனக்கு இப்படி மனிதர்களை கண்டாலே மனம் கொதிக்கிறது, விருமாண்டி திரைப்படம் பார்த்து இருப்பீர்கள் அதில் கமல்ஹாசன் சொல்வது நியாயமாக இருக்கும் அதாவது தான் நிரபராதி போல, பசுபதி சொல்வதும் நியாயமாக இருக்கும். ஆனால் இருவர் சொல்வதும் ஒரே விடயம்தான் கோணங்கள் வேறாக காட்சிபடுத்தப்பட்டு இருக்கும் அவ்வளவுதான்.
 
ஒருமுறை எனக்கும் ஓர் ஆட்டு மூளைக்கும் வாக்குவாதம் நான் பொன்னமராவதியில் இருக்கிறேன் என்று சொன்னதாக சத்தியம் செய்து பேசுகிறான் அதாவது ஊரை மறந்து அவன் மாற்றி சொல்லி இருக்கலாம். அதை அவன் ஒத்துக் கொள்ளவேயில்லை. நான் வாழ்நாளில் இன்று வரையில் அந்த ஊர் போனதே இல்லை எந்த வகையிலும் அந்த ஊருக்கு நான் போவதற்கு சாத்தியமே இல்லை. பொன்னமராவதி ஆறுமுகம் என்ற நாடக பபூன் ஒருவர் இருக்கிறார் இவர் எல்லா வருடமும் எங்கள் ஊருக்கு நாடகத்துக்கு கண்டிப்பாக வந்து விடுவார். இவ்வளவுதான் எனக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு.
 
அபுதாபியில் அவ்வளவு காலம் வாழ்ந்தேனே தமிழகம் முழுவதிலும் எனக்கு தெரிந்த நண்பர்கள் அபுதாபியில் இருக்கின்றார்கள் ஆனால் பொன்னமராவதி நண்பர் ஒருவர்கூட கிடையாது. பேச்சு வார்த்தையில் சில நேரம் கோயிலுக்கு வந்து சத்தியம் செய் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிடும். அதிலும் சிலர் முனியய்யா கோயிலுக்கு வா, கொல்லங்குடி காளி கோயிலுக்கு வா என்றும் அழைப்பார்கள். காரணம் அது கொடூரமான தெய்வங்கள் என்று நான் எழுதவில்லை மக்கள் சொல்கிறார்கள் அவ்வளவுதான் தெய்வம் அன்பே உருவமாகத்தானே காட்சி தரவேண்டும்.
 
ஒரு சிலர் எங்கெங்கோ, எதெதிலோ சத்தியம் கேட்பவர்களும் உண்டு சிலர் குலதெய்வக் கோயிலுக்கு அழைப்பார்கள். சிலருக்கு நம்பிக்கை உண்டு நம்முடைய குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துப் போனால் நம்ம தெய்வம் நம்மை மன்னித்து காக்கும், எதிரியை அழித்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையும் உண்டு. இதில் ஆட்டு மூளை என்னை எங்கு அழைத்தான் தெரியுமா ? எனது குலதெய்வக் கோயிலுக்கு... எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அவன் சொல்வது இருநூறு சதவீதம் பொய் ஆனால் அவன் கொஞ்சம்கூட இறைபயமின்றி எனது குலதெய்வக் கோயிலுக்கு அழைக்கின்றானே...
 
எனக்கு ஒன்றுமே பயமில்லை காரணம் எனக்கு அம்மா, அப்பா, குழந்தைகள் தலையோ, கோயிலோ, வீடோ, ரோடோ, சுடுகாடோ எல்லா இடங்களும் ஒன்றுதான் காரணம் பொய் சொல்லாதவனுக்கு எல்லாமே சமம். என்னை அறிந்தவர்கள் ஆட்டு மூளையைத்தான் பேசினார்கள்.
 
எனக்கு இந்த ஆட்டு மூளை மட்டும் தப்பானவனாக தெரியவில்லை இந்த சமூகத்தில் 99.7 சதவீதம் மனிதர்களும் இப்படித்தானே பேசுகின்றனர். பல நேரங்களில் அம்மணத்தான் ஊரில் கோவணம் கட்டியவன் நிலையில்தான் நான் இருக்கிறேன். இந்தப் போலி மனிதர்களுடன், போலியாக சிரித்து, போலியாக நடித்து, வாழ்வது எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் எவ்வளவு காலம்தான் போலி மனிதர்களுடன் இணைந்து வாழ்வது ?
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

20 கருத்துகள்:

  1. சமூக வலைத்தளங்களில் அதிலும் சோசியல் மீடியாவில் எதற்காக உண்மையை எதிர் பார்க்கிறீர்கள். என்னை போன்ற ப்ளாக் இல்லாதவர்கள் வேண்டுமானால் உண்மையை பேசலாம் உண்மை முகவரியை மறைத்து கொண்டு . பெரும்பாலான பிளாக் உள்ளவர்கள் எழுதுவது பணம் மற்றும் பெருமைக்காகத்தான் . அதற்காக கண்ட குப்பைகளை எழுதுவார்கள்
    வலை தளங்களில் வரும் மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்னையும் சேர்த்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் உண்மைத் தமிழன் அவர்களின் முதல் வருகைக்கு வந்தனம்.

      இங்கு வலைப்பதிவர்கள் வரவில்லையே... நான் பந்தப்பட்ட சில சகடைகளை குறிப்பிட்டு இருக்கிறேன் அவ்வளவுதான் நண்பரே...

      நீக்கு
  2. அவருக்கு ஏதாவது மனோவியாதி இருக்கலாம்.  தான் பேசுவதை அவரே நூறு சதவிகிதம் நம்புகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. சிலபேர் இல்யூஷன்ல எதையோ நம்பி அதையே உண்மைன்னு நினைச்சுக்குவாங்க. என்ன பண்ண..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழரின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. இதற்கு மூல காரணம் (முதலில்) பணம்...

    பதிலளிநீக்கு
  5. சிலர் தான் செய்த தப்பை ஒத்துக் கொள்ள மனம் வராது. அடுத்தவர் மேல் பழி போட்டே பழக்கம். இவர்களை போன்றவர்களை சட்டை செய்யாமல் நம் வேலையை பார்த்து கொண்டு இருக்க வேண்டியதுதான். இறைவன் மேல் பாரத்தை போடுங்கள்.
    நமக்கு தெரியும் உண்மைதான் பேசுகிறோம் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. நமக்கு தெரியும், இறைவனுக்கு தெரியும் எது உண்மை என்று.

    பதிலளிநீக்கு
  7. /போலி மனிதர்களுடன் போலியாக சிரித்து, போலியாகப்பழகி/
    சகிப்புத்தன்மை இருக்கும் வரை இப்படித்தானே உலகத்தில் வாழ வேண்டியிருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. கில்லர்ஜி நாம் இப்படிப் பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. நாம் கண்டும் காணாதது போல நம் வேலையை மட்டும் செய்துகொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

    உங்கள் எனர்ஜியை இதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வேஸ்ட் பண்ணிக்காதீங்க ஜி. யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அவங்களுக்குக் கொடுங்க.

    அப்படிச் செய்யும் போது இவை நம்மை விட்டுத் தூர விலகிவிடும். நம் மனதை தொல்லைப்படுத்தாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றிகள் பல!

      நீக்கு
  9. தாம் செய்த தப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தான் பெரும்பாலும் பொய் கூறுபவர்கள் .

    என்ன செய்வது போலிகளுடன்தானே வாழவேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. இதுதான் இன்றைய உலகம்.
    இவர்களைப் போன்றோருடன்தான் நமது வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு