தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 28, 2023

வினைப்பயன்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
 
அறத்துப்பால்
குறள் 374
 
இரண்டு வகையான இயற்கையை படைத்தது இந்த உலகம் இரவு இருக்கும்போது பகலில்லை, பகல் இருக்கும்போது இரவில்லை, இதைப் போலவே ஞானம் உள்ளவனிடம் செல்வமில்லை, செல்வம் உள்ளவனிடம் ஞானம் இல்லை.
 
திரைப்படக் கூத்தாடிகளை அறிவு ஜீவிகளாக நம்மில் பலரும் நினைக்கின்றோம் அதிலும் புகழின் உச்சியில் இருப்பவரை மிகப்பெரிய அறிவாளியாக அவர் வாயைத் திறந்து எதைச் சொன்னாலும் பொக்கிஷக் கருத்தாக எடுத்துக் கொள்கிறோம். உதாரணம் நடிகர் ரஜினிகாந்தை விட அறிவில் சிறந்தவர் நடிகர் குமரிமுத்து என்றால் நம்புவார்களா ? நம்பியே தீரவேண்டும் இதுதான் உண்மை.
 
மேற்கண்ட குறளின் அர்த்தத்தை இவர்கள் இருவரையும் ஒப்பீடு செய்து பார்த்தால் புரிந்து விடும். அவர் கன்னடர், இவர் தமிழர் ஆகவே அவரிடம் தமிழ்ப்பண்பாடுகளை, இலக்கியங்களை எதிர் பார்க்க கூடாது என்று சொல்லாதீர்கள். ஒருமுறை ரஜினி அயல் தேசத்தில் மகிழுந்தில் போய்க்கொண்டு இருந்தபோது சாதாரண பட்டனை Rec என்று போட்டு இருந்தும் இது எதற்காக ? என்று நண்பரிடம் கேட்டு இருக்கிறார் இந்த அளவுக்குத்தான் பொது அறிவில் நாட்டமுள்ளவர் என்று அந்த பிரபலமானவர் பேட்டியில் சொன்ன விடயமிது.
 
//எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிடும்//
 
இதை சொன்னது யார் ? என்று அனைவருக்கும் தெரியும் ஆயினும் நமது விசிலடிச்சான் குஞ்சுகள் இதைத்தான் முதல்வராக்க வேண்டும் என்றே கோஷமிட்டு ஓய்ந்து விட்டனர் என்பது வேறு விடயம். திரைப்படங்களில் இவர் போராட்ட களத்தில் வீரனாக நடிப்பார் அதைப்பார்த்து நாம் கை தட்ட வேண்டும். என்னாங்கடா உங்கள் நியாயம் ? காசுக்காக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நடிப்பீங்க, அதை நாங்க ரசிக்கணும்... உங்களைச் சொல்லி குற்றமில்லை ஆண்டாண்டு காலமாக தமிழன் கூத்தாடிகளிடம் அடிமையாக போய் விட்டான் அவன் சுய அறிவு பெற்றால்தான் இதற்கு தீர்வு.
 
திரு. குமரிமுத்து அவர்கள் மிகச்சிறந்த அறிவு ஞானம் உள்ளவர் என்பதை அவரது பல பேட்டிகளில் அறிந்து கொண்டேன். ஆனாலும் இவரது அறிவை மு.கருணாநிதி அவர்கள் மிகத்தெளிவாக கட்சிக்கு பயன்படுத்திக் கொண்டார். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இதுதான். ஆயினும் என்ன ? அவரால் செல்வத்தை சேர்க்க இயலவில்லையே... காரணம் தெள்ளிய ராதலும் வேறு
 
நடிகர் வடிவேலு பல கோடிகளை சம்பாதித்தார், ஆயினும் அறிவு ? இதற்கு எங்கு போவது ? ஒரு பேட்டியில் வடிவேலுவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு 2001-ல் நான்தான் முதல்வர் என்கிறார், பின்புறம் நின்ற உதவியாளர் சார் 2021 என்று சொல்லிக் கொடுக்க மீண்டும் ஆமா 2021-ல் நான்தான் முதல்வர் என்று சொல்கிறார்,
 
ஆக நடப்பில் வருடம் என்ன ? என்பதுகூட தெரியாத வடிவேலு இருபது வருடங்கள் பின்தங்கியே வாழ்கிறார். ஆயினும் பல கோடிகளை சம்பாரித்ததும், இவ்வளவு அறிவு ஞானம் உள்ள குமரிமுத்து ஏழையாகவே வாழ்ந்து உடல் நலம் காக்க பணம் இல்லாமல் இறந்து போனதற்கு காரணம் ? முன் வினைப்பயன்
 
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்.
(நாலடி 265)
 
இப்பாடலின் கருத்து
இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும் நல்ல குணமுடையோரும் வறியராக இருப்ப, அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்குக் காரணம் பழைய வினைப் பயனேயன்றி, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு காரணம் இல்லை. அறிவொழுக்கம் அற்றவர் செல்வராக வாழ்வதற்குக் காரணம் ஊழ்வினையே ஆயினும் அவரிடம் இரக்கத் தன்மையின்மையால், செல்வம் பெற்றும் ஒரு பயனும் இல்லை என்பது கருத்து.
 
இதோ கீழே - மஞ்சள் சொடுக்கி காணலாம்
அறிவற்ற செல்வந்தனாய், ஈகையற்ற மடந்தையன்றி ஊழ்வினை அகற்றி, நல்லறிவு வறியராய் முன் வினைப்பயனே நன்று.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
நம்ம நாட்டான் பாசம் வச்சுட்டா சாகும்வரை மாற மாட்டானே....
 
Chivas Regal சிவசம்போ-
இவ்வளவு அறிவாற்றலான மனுசன் சினிமாவுல ஜொலிக்க முடியலையே...
 

ஏழாம் ஆண்டு (2016--2023) நினைவு தினமான 28 பிப்ரவரி இன்று திரு.குமரிமுத்து அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.
 
காணொளி

Share this post with your FRIENDS…

44 கருத்துகள்:

  1. சிறப்பான சிந்தனை. இங்கே திறமைக்கும் அறிவுக்கும் அத்தனை வரவேற்பில்லை நண்பரே. சினிமா மோகம் அப்படி ஆட்டி வத்துக்கொண்டு இருக்கிறது. அரசியல் மோகமும் கூட சேர்ந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்து உண்மைதான்.

      நீக்கு
  2. குமரி முத்து  காணொளிகள் முன்னர் கண்டு/ கேட்டிருக்கிறேன்.  நடிகர்களில் ராஜேஷ் நிறைய படிப்பார்.  நிறைய பேசுவார்.  சார்லி கூட நிறைய படிப்பார். விவேக்கைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி அவர் சிறந்த ஜோதிடரும்கூட ....

      நீக்கு
  3. ராஜேஷ், தாமு, விவேக், சார்லி என் பெரிய லிஸ்ட் உண்டு. அத்ருஷ்டம் வேறு அறிவு வேறு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழரே பழைய பாடல் ஒன்று இருக்கிதே...

      எம்.ஜி.ஆர் அறிவாளியாகவும், என்.எஸ்.கே மூடராகவும் சித்தரித்து

      "உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது"

      நீக்கு
  4. குமரி முத்து பேச்சு காணொளி அருமை. முன்பும் கேட்டு இருக்கிறேன்.
    திறமைக்கும் , புலமைக்கும் வறுமைதான் . அந்தக்கால புலவர்கள் அரசர்களை பாடி பொருள் பெற்று செல்வார்கள். கதை எழுதி சம்பாதிக்க வந்தவர்கள் எல்லாம் வறுமையில் வாடி காச நோய் வந்து மடிந்த கதை ஏராளம்.

    திருவிளையாடல் தருமியும் சிவனும் பேசும் வசனம்
    சேர்ந்தே இருப்பது என்று தருமி கேட்கும் கேள்விக்கு ஈசன் பதில்
    வறுமையும், புலமையும் என்பார்.

    நலாடியார், பாடலும், விளக்கமும் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் திருவிளையாடல் சிறந்த உதாரணம்.

      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. பழைய பதிவு சுட்டியில் போய் காணொளி பார்த்து மீண்டும் சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய முதல்வரின் காணொளியும் இருக்கிறது.

      விரைவில் பதிவில் தருகிறேன்.

      நீக்கு
  6. குமரி முத்து அவர்களின்
    பேச்சு காணொளி முன்பு கேட்டு இருக்கிறேன்..

    திறமையும் அதிர்ஷ்டமும்
    ஒன்றோடொன்று கலப்பது அரிது..

    அத்தனை எளிதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. பொது வாழ்விலும் தனி வாழ்விலும் தூயவராகத் திகழ்ந்த தலைவர் ஒருவருக்கு ஊர்ப் பணத்தை கொள்ளையடித்துக் குவித்து வைக்கும் மனம் அமையவில்லை..

    இதெல்லாம் இயற்கையால் இயற்கையாகவே அமைவது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் காமராஜரை புறக்கணித்ததின் பாவத்தை அவர்களது சந்ததிகள் அனுபவிக்கின்றோம்.

      நீக்கு
  8. குமரி முத்து அவர்களுக்கு சிறப்பான அஞ்சலி..

    பதிலளிநீக்கு
  9. சமீபத்தில் மறைந்த மயில்சாமி அவர்களின் இரக்க குணத்திற்கு ஈடேது...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      மதுரைத் தமிழன் அவர்கள் சொன்னபடி இறந்த பிறகு நல்லவர் என்ற தொகுதி மக்கள் சுயேட்சையாக நின்றபோது வாக்களிக்கவில்லையே...

      காசுக்காக கட்சி மாறும் மா'க்கல்.

      நீக்கு
  10. கவனத்தி்ல் வர வேண்டிய குறள் :-

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

    ஊழ்...

    பதிலளிநீக்கு
  11. குமரி முத்து அவர்களுக்கு சிறப்பான அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  12. பழைய காணொளிக்கு இணைப்பு தந்து கதி கலங்கும்படி செய்து விட்டீர்கள்..

    தறுதலைகள் தான் கல்விக் கூடங்களில் இருந்து வெளியே வருகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      இந்த அறிவாளிகளை தேர்ந்தெடுத்தவர்கள் யார் ? தவறுகளின் தொடக்கம் மா"க்கள் தானே ?

      நீக்கு
  13. அந்தப் பழைய காணொளியை சம்பந்தப்பட்ட வர்கள் பார்த்து விட்டு - இனிமேல் எல்லாரும் தமிழைப் பழுதறப் பேச வேண்டும் என்று உத்தரவு போட்டால் அதை எதிர்த்து ஊளையிட்டபடி நீதி மன்றத்தில் போய் நிற்கும் ஒரு கூட்டம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இன்றைய அரசியல்வாதிகளில் தெளிவாக பேசக் கூடியவர்கள் ஒரு சிலரே

      திரு. சீமான்
      திருமதி. காளியம்மாள்
      திரு. வைகோ
      திரு. திருச்சி சிவா

      திருமதி. குஷ்பு
      செல்வி ‌ நக்மா
      செல்வி. நமீதா

      நீக்கு
  14. கில்லர்ஜி இது டெஸ்டிங்க் .....கருத்து வருதா இல்லையான்னு. நேற்று தளம் (ரொம்ப கனம் போல...) திறக்கவே 10 நிமிஷம் ஆச்சு. கருத்து போட்டா போகவே இல்லை பிழை பிழைன்னு வந்தது,,,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று கிழக்கே சூலம் அதுகூட காரணமாக இருக்கலாம்.

      நீக்கு
  15. கில்லர்ஜி லஷ்மியும் சரஸ்வதியும் - இப்படித்தான் நம் வீட்டில் பேசுவது - சேர்ந்திருப்பது அபூர்வம். ஒருவர் இருந்தால் மற்றொருவர் முறைத்துக் கொள்வார். சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர்கள் பெரும்பாலும் சாதாரணமானவங்களாகத்தான் இருப்பாங்க. சங்ககாலப் புலவர்கள் உட்பட!!!

    திரையுலகில் நிறைய வாசிப்பவங்க இருக்காங்க.....ராஜேஷ், வாசிப்பார் பேசவும் செய்கிறார். அது போல சிவகுமார், விவேக், மையக்காரரும் நிறைய வாசிப்பார். பேச்சு ஒன்றும் புரியாது!!!! இன்னும் பெயர்கள் உண்டு டக்கென்று சொல்ல வரவில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கவியசர் கண்ணதாசன்கூட தனது இறுதிக் காலத்தில் ஏழ்மையில்தான் இருந்தார்.

      நீக்கு
  16. கருத்து ஒரு வழியா வந்துவிட்டது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. குமரி முத்து அவர்களின் காணொளியை மிகவும் ரசித்துப் பார்த்தேன். இதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். மனிதன் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார். கடைசி வரி ரொம்ப அழகா சொல்கிறார். நன்றி கில்லர்ஜி பகிர்ந்ததற்கு. இல்லைனா எனக்குத் தெரிந்திருக்காது. நெட்டில் இவர் இப்படிப் பேசியவற்றைத் தேடிப் பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நிறைய காணொளிகள் இருக்கின்றன அவசியம் பாருங்கள். தங்களது வருகைக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  18. திறமையும் அதிஷ்ரமும் ஓரிடத்தில் அமைவது அரிது. ' இரண்டும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது' பாடல்கள் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  19. காங்கிரஸ் தலைவரான மண்ணின் மைந்தன் "குமரி அனந்தன்" பற்றி பதிவிடப்போவதாக தாங்கள் என்னிடம் சொன்னதாக நினைவு... ஓடி வந்து பார்த்தால் அட நம்ம "குமரிமுத்து" சார்!!!... "குமரி அனந்தன்", "குமரிமுத்து", "என்.எஸ்.கே" அனைவருமே குமரி மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்கள். அனைவர் மனதிலும் இவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை..

    "குமரிமுத்து" சாருக்கு அவருடைய நினைவு தினத்தில் சிறப்பான நினைவஞ்சலியை சமர்பித்த தங்களுக்கு இந்த குமரி மைந்தனின் சிறப்பான வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      நான் குமரி முத்து என்றுதான் சொன்னேன்.

      எழுதாத ஓர் நபரை நான் எப்படி சொல்வேன் ?

      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. o.k ... நான்தான் பெயரை சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.... நன்றி!

      நீக்கு
  20. காணொளி மிக மிக அற்புதம்...

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    பதிவை நன்றாக எடுத்து எழுதியுள்ளீர்கள். அதிர்ஷ்டம் என்ற ஒன்றுதான் அனைத்திற்கும் காரணம். எல்லாம் ஊழ்வினைப்பயனின் காரணமாக இவை சிலருக்கு பிறப்பிலேயே அமைவதும், நழுவுவதும் நடக்கிறது. காணொளி முன்பே கேட்டுள்ளேன். இப்போதும் ரசித்து கேட்டேன். நடிகர் திரு.குமரிமுத்து அவர்களுக்கு அஞ்சலி சிறப்பாக இருந்தது.

    "தலையெழுத்தென்ன மொழியடா... தப்பிச்செல்ல என்ன வழியடா .." என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது.

    இருதினங்களாக பதிவுலகம் வர இயலவில்லை. எனவே தாமதமாக வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ?
      தங்களது வருகைக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  22. சிறந்த அறிவாளி எனில் அவர்கள் பிரபலம் அடைவது என்பது அதிலும் பணம் ஈட்டுவது என்பது கஷ்டம் தானே. ஆனால் குமரிமுத்து பற்றிய தகவல்கள் முற்றிலும் புதியவை. நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. இப்போது தான் தெரிந்து கொண்டேன். நல்ல சிறப்பான அஞ்சலி. சுட்டி அனுப்பியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் அறிவாளியை உணர்ந்து பார்க்கும் ஆற்றல் உள்ள மனிதர்கள் மிகவும் குறைவே...

      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு