தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 02, 2023

கனவு இல்லம்

திரு
சிவனேசன்
தனக்கோர் வீடு
வேண்டும் என்று ஆசை
பட்டான் பணம் வேண்டுமே
என்ன செய்வது ? கொள்ளையில்
இறங்கிடலாமா ? வேறு வழியில்லை
எந்த வங்கியில் கொள்ளை அடிக்கலாம் ?
கோவிந்தாபுரம் அரோகரா வங்கி அதுதான் நம்
வீட்டின் அருகிலேயே இருக்கிறது அடித்த வேகத்தில்
வீட்டுக்கு வந்து விடலாம். பழைய கட்டிடம் மேலிருந்து
உள்ளே இறங்கும் வழி இருப்பதை தனது வீட்டு மொட்டை
மாடியிலிருந்து பார்த்து இருக்கிறான். வீட்டில் இருந்து வெளியே
போகாமல் திட்டம் போட்டான் சுமார் ஒரு வாரம் கடந்தது. அன்று
வெள்ளிக்கிழமை இரவு சாமி கும்பிட்டு விட்டு, தனது வீட்டு மொட்டை
மாடியிலிருந்தே  குதித்து அந்த வங்கி மொட்டை மாடிக்கு வந்தான்.
அந்த வெண்டிலேட்டரின் வழியே              மெதுவாக உள்ளே வந்தான்.
சரியாக... அந்த அறைக்கு வந்தது              அந்த கும் இருட்டில். சற்றே
அமர்ந்து கண்களுக்கு வெளிச்சம்               தெரியட்டும் காத்திருப்போம்
சிறிது நேரமானதும் தன் கையில்             ஏதோ ஊர்வது போலிருந்தது
கையை உதறியவன் அம்மா என             கத்தி... அலறினான் காரணம்
தேள் கொட்டியிருக்கிறது சத்தமிட            மறு வினாடி விளக்கு ஒளிர
எவன்டா இந்த நேரத்திலே சத்தம்             போடுறது யாருமே இல்லாத
லாக்கப்புல..... கேட்டுக் கொண்டே            கையில் லத்தியோடு வந்தார்
உள்ளே இருந்து கையை பிடித்து             அலறிய சிவநேசனை பார்த்து
டேய்.. யாருடா நீ ? எப்படி உள்ளே             வந்தே... ? என்று கேட்ட பிறகே
சிவநேசனுக்கு நாம் வந்திருப்பது              போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்
என்று விளங்கியது.   ஸார்...   அது                வந்து நான் பேங்குக்கு பணம்
போட வந்தேன்.... திக்கி தினறி சொன்னான். என்னது பேங்க்ல பணம் 
போட வந்தியா இல்லை எடுக்க    வந்தியாடா.... ? ஏண்டா பேங்க் மாற்றி
போலீஸ் ஸ்டேஷனாகி பத்து நாளாச்சு. இன்னும் லாக்கப் வேலையே 
முழுமையாக முடியலை நீயா வந்து... முதல் போணியாக வந்துட்டியா
வெளியே வாடா அந்த லாக்கப்புக்கு உள்ளே போடா. என்று சொல்லிய 
வேகத்திலேயே லத்தியால் சிவனேசனுக்கு லத்தி வரும் இடத்தில் ஒன்று 
போட்டு உள்ளே தள்ளி விட்டார்
             ஸார் கைல தேள் கொட்டிடுச்சு
                  ஆஸ்பெட்டலுக்கு போகணும்
                                  வலிக்குது ஸார் காப்பாத்துங்க...
                                    இருடா நாங்களே ரெண்டு பேரு
                                         தான் இருக்கோம், ரங்கசாமியும்
                                              தூங்குறாரு... இருடா சுண்ணாம்பு
                                              தாறேன் தடவிட்டு இரு காலைய
                                                     இன்ஸ்பெக்டர் வந்து ட்ரீட்மெண்ட்
                                                       கொடுப்பாரு உனக்கு  சரியாகும்.
                                                          சொல்லி விட்டு.... தனது டேபிளில்
                                                               போய் உறங்கினார் கான்ஸ்டபிள்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
இவ்வகை பதிவுகளின் முந்தைய சுட்டிகள்


Share this post with your FRIENDS…

26 கருத்துகள்:

 1. வித்தியாசமா யோசிச்சு பதிவு போடறீங்க. வீடு மாதிரியே செட் பண்ணிக் கதை... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. பதிவு வீடு நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள், வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  முதல் படம் நன்றாக இருக்கிறது.
  சிவனேசன் கனவு இல்லம் இப்படி கனவாகி விட்டதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   என்ன செய்வது ? நெல்லைக்தமிழர் மாதிரி பஹ்ரைனில் போயாவது உழைத்து இருக்கலாம்.

   நீக்கு
 3. பதிவு சூப்பர்.  எப்படி இப்படி அமைத்தீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி பழைய அனுபவம் இருப்பதை வைத்துதான்.

   நீக்கு
 4. பதிவு அருமை..
  நன்றாக இருக்கிறது.

  நகைச்சுவை யாக முடித்து வைத்தது மிகவும் விசேசம்..

  பாராட்டுக்கள்..

  வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி ஜி.

   ஆமாம் ஜி கான்ஸ்டபிள் வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததால் சுண்ணாம்பு கிடைத்தது இல்லை என்றால் ?

   நீக்கு
 5. அரோகரா வங்கி தப்பித்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கும் இந்த வங்கியில்தான் கணக்கு இருக்கிறதா ?
   நல்லவேளையாப்போச்சு.

   நீக்கு
 6. அது எப்படிங்க பக்கத்துக்கு வீட்டில் இருக்கிறவனுக்குக் கூட தெரியாமல் வங்கி போலீஸ் ஸ்டேஷனாக மாறும். இது சிவ தாமஸ் அலி கேட்கும் கேள்வி? 

  எது எப்படியானாலும் காலிகிராபி முறையில் கதை எழுதியது வியப்பு தான்.  பாராட்டுக்கள்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா

   //வீட்டில் இருந்து வெளியே
   போகாமல் திட்டம் போட்டான், சுமார் ஒரு வாரம் கடந்தது//

   கதையின் தொடக்கத்திலேயே வந்த விசயம். இது. வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. வீடு நுட்பம் சிறப்பு... பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 8. வீடு கட்டி அடிக்கிறதுனா, இதுதானா?
  லத்தி அடி... இல்லை, நெத்தி அடி!

  பதிலளிநீக்கு
 9. படத்திலே வீடும் அழகு. கதையிலே நகைச்சுவையும் அழகு .

  பதிலளிநீக்கு
 10. கல்லு சிமென்ட் நு வீடு கட்டி எதுக்குக் கஷ்டப்படணும்!!!! இப்படி எழுத்துகளினால் வீடு கட்டிட்டா!!! சூப்பர் ஜி. வித்தியாசமான சிந்தனை ப்ளஸ் வடிவமைப்பு..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 11. நல்ல அருமையான வீடு கட்டி இருக்கீங்க. தேள் கொட்டினது தான் வருத்தம். உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் சிந்திக்கவும், செயலாற்றவும் முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ?
   திருடனுக்கு தேள் கொட்டியது தவறில்லையே...

   நீக்கு
 12. சிவனேசன்னு பெயரை பார்த்ததுமே அப்படியே "பக்" ன்னு இருந்துச்சு.... இங்க பார்றா இது எப்போ நடந்துச்சுன்னு... அப்புறம் இது வேறு ஆளா இருக்குமுன்னு நினைச்சு மனச தேத்திக்கிட்டேன்...

  அதெல்லாம் இருக்கட்டும்.. அதென்ன //லத்தியால் சிவனேசனுக்கு லத்தி வரும் இடத்தில் அடிக்கிறது//...

  ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு குசும்பு கூடாது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இவர் நீங்கள் இல்லை.

   இவரை யானைக்கு இணையாக வைக்கிறேன் ஆகவே லத்தி"யை வைத்தேன்.

   நீக்கு