தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 23, 2023

உண்மையான விசுவாசிகள்

ணக்கம் நட்பூக்களே... அதிமுக அரசியல் தொண்டர்கள் ஈபிஎஸ் அவர்களை துரோகி என்றும், மற்றொரு புறம் ஓபிஎஸ் அவர்களை அயோக்கியர் என்றும் பேசிக்கொண்டு வருகின்றனர். இவரை அவர் கட்சியை விட்டு நீக்குவதாகவும், அவரை இவர் கட்சியை விட்டு நீக்குவதாகவும், இதனோடு மட்டுமில்லை இருவரையும் சசிகலா அவர்கள் கட்சியை விட்டு நீக்குவதாகவும் அறிக்கை விடுகின்றார்கள். யார் தலைமை என்பது தொண்டர்களுக்கு குழப்பமே...
 
இதைப்பார்க்கும் பொழுது பல ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கையில் வந்த நகைச்சுவை ஒன்று எனது நினைவில் ஓடுகிறது அதை தங்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். இரண்டு மனநோயாளிகள் பேசுகின்றார்கள்.

 
பை-ஒன்று
டேய் நான் இந்த உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்...
பை-இரண்டு
ஹா... ஹா... ஹா... நான் விற்றால்தானே... ?
 

மேல் கண்டவைதான் அது அரசியல் நிலைப்பாடும் இதுதான் தலைவர்களை நியாயவாதிகள் இல்லை என்றும், செல்வி ஜெயலலிதா இருந்தபோது தொண்டர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாக இருந்ததாகவும் சிலர் சொல்கின்றார்கள் முதலில் தொண்டர்கள் அனைவரும் உண்மையானவர்கள் இல்லையே... ஆம் தங்களை எம்ஜிஆரின் உண்மையான விசுவாசி என்று சொல்பவர்கள். அவரது மனைவி வி.என்.ஜானகி அவர்களின் பின்னால் போகாமல், திரைப்பட கூத்தாடி செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பின்னால் போனதே எம்ஜிஆருக்கு செய்த துரோகம்தானே ?  

ஆக தலைவர்கள் தொண்டர்களிலிருந்து வந்தவர்கள்தானே பெரும்பாலானோர். ஆகவே இக்கட்சியில் துரோகங்கள் பெரிய விடயமே கிடையாது. வேரின் தன்மையே தூரிலும் தொடரும்... பின்பு மரத்திலும் படரும்... அதுவே கிளையிலும் வளரும்...

சிவாதாமஸ்அலி-
ஏமாறுபவர்களை விட்டு, ஏமாற்றுபவர்களை சொல்லி பயன் ?

சாம்பசிவம்-
இன்னும் மூணு தலைமுறைக்கு இரத்தம் மாறணும் அப்பத்தான் விடியும்.

காணொளி

Share this post with your FRIENDS…

24 கருத்துகள்:

  1. இவர்களின் மம்மி ஜெயலலிதா டாடி மோடி ஆச்சே வேறு என்ன இவர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியும்

    பதிலளிநீக்கு
  2. மிக மோசமாக அடித்துக் கொள்கிறார்கள்.  தங்கள் கட்சியின் தோல்விக்கு தங்கள் ஒற்றுமையின்மையே காரணம் என்று அறியாதவர்களா இவர்கள்!  பதவி வெறி எப்படி ஆட்டி வைக்கிறது..

    பதிலளிநீக்கு
  3. ஜெ காரின் முன் எவ்வளவு குனிந்து காட்சி அளிக்கிறார் அந்த மனிதர்!  வீட்டுக்குப் போனதும் சுளுக்கிக் கொண்ட முதுகுக்கு மருந்து தடவி இருப்பார் நிச்சயம்!

    பதிலளிநீக்கு
  4. காலத்தின்
    பீடைகள்..
    கழிவுநீர்
    ஓடைகள்..

    துரோகத்தின்
    காடைகள்..
    துன்பத்தின்
    மேடைகள்..

    பதிலளிநீக்கு
  5. கில்லர்ஜி, ஆ...இது நம்ம ஏரியா இல்லையே....ஜாலி பதிவு போடுங்க கில்லர்ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அரசியலை சார்ந்ததே மனித வாழ்வு.

      வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. அரசியல் பேசணும் பெரியவங்க நீங்கலே தயங்கினால் எப்படி? இங்கு பள்ளிகளில் அன்றாட அரசியல் பற்றியும் கலந்துரையாடல் செய்கிறார்கள். பேசாமல் உங்களை எல்லாம் இங்குள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் கீதா

      நீக்கு
    3. அதானே... இதுதான் சரி.

      நீக்கு
  6. கட்சியை வெங்கோலனிடம் அடகு வைத்து விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இனி மக்கள்தான் திருப்பணும்....

      நீக்கு
  7. நீங்கள் சொல்வது போல ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் சகோ. காணொளி அருமை. படங்கள் பகிர்வும் சிரிப்பு, வேதனை. மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. இது எங்கள் நாட்டுக்கும் பொருந்தும் .
    பதவி வெறிதான் காரணம்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    நலமா? தாங்கள் எபியில் கொஞ்ச நாட்களாக என்னை காணாதது குறித்து விசாரித்தமைக்கு மிக்க நன்றி. அது குறித்து சகோதரி கோமதி அரசு அவர்களும் விபரமாக மறுகருத்து தந்திருந்தார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவரது பதிவுகளையும் இதுவரை தவற விட்டு விட்டேன். இனி தொடர்கிறேன்.

    இன்றைய அரசியல் பதிவு குறித்து ஏதும் சொல்வதற்கில்லை. ஏனெனில் அதுபற்றி அவ்வளவாக அறியேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது நலமறிந்து மகிழ்ச்சி.

      தொடர்ந்து வாருங்கள் நன்றி

      நீக்கு
  10. திருமதி ஜானகி அவர்கள் பின்னால் செல்லாமல் செல்வி.ஜெயலலிதா அவர்கள் வழி சென்றது துரோகம் இல்லை. ஏனெனில் (எனக்கு) தெரிந்து MGR தான் அரசியல் வாரிசை அறிவிக்கவே இல்லையே நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      நான் சொல்வது அவர்மீது உள்ள பற்றை அவரது குடும்பத்து மீதும் காட்டவேண்டும்.

      ஜெயலலிதா மீது காட்டியது உண்மையல்ல கவர்ச்சி மோகம்.

      இவரை விட திறமையான அனுபவசாலி ஆர்.எம்.வீரப்பன் மீது காட்டாதது ஏன் ?
      (அனைவருமே திருடர்கள் தான்)

      நீக்கு