தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 05, 2023

விவாஹ(M)ரத்து (2)

 

முந்தைய தொடர்ச்சி ஒன்று
 
இதுவரை.... ஏதோவொரு காரணத்திற்காக அவன் அவளை அறைந்து விட்டாள்ல் நடப்பது என்ன ?
 
கையில் ஹைஹீல் செருப்பு கன்னங்களில் ‘’சட்டீர்‘’ ‘’சட்டீர்‘’
கைக்கு உரிமையாளர் அவள்
கன்னத்துக்கு உரிமையாளர் அவன்
 
ஆம் நண்பர்களே தனது கணவன் தனக்கு ஆசையாக வாங்கி கொடுத்த செருப்பால் திருப்பிக் கொடுப்பாள் இது மட்டுமா ? உடன் கணவன் தனக்கு ஆசையாக வாங்கி கொடுத்த BMW காரை எடுப்பாள், போவாள் விரைவாக மர்க்கஸ் ஸூருத்தா (POLICE STATION) கொடுப்பாள் புகார் மறுநொடி அவன் கையில் விலங்குடன் இஞ்சி தின்ன குரங்கு போல்...
 
எமராத்தில், அவன் எவ்வளவு பெரிய மில்லினியராக இருப்பினும் இதுதான் கதி மிகப்பெரிய போலீஸ் அதிகாரிகள்கூட பெண்களிடம் பேசுவதற்கு பயப்படுவார்கள் காரணம் சட்டென அவள் பிளேட்டை மாற்றிச் சொல்லி விட்டாள்ல் இவனது நிலை தலைகீழாகி விடும்.  நண்பர்களே என்ன நினைக்கின்றீர்கள் ? கணவன் ஒரு அறை அறைந்ததற்கா இப்படி என்றா ?
 
அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சமையல்காரர்கள், தோட்டவேலை செய்பவர்கள், காரோட்டிகள், இந்த வகையான இந்திய வேலைக்காரர்களின் நிலையை ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். இவ்வளவையும் சமாளித்துதான் இவர்கள் ஊருக்கு பணம் அனுப்புகிறார்கள்
 
அழகு, அகம்பாவம், ஆணவம், திமிர் இவற்றின் மொத்த உருவமே அரேபியப் பெண்கள்தான் இறைவன் கிருபையால் எனது ஐயன் ஞானி ஸ்ரீபூவு ஆசியால் எமக்கு அப்படியொரு வாழ்க்கை அமையாமல் அவர்களுடன் சரிசமமாக அமர்ந்து வேலை செய்யும் நிலைக்கு நன்றிகள் கோடி. பணம் கொடுத்தும் மதிக்காமல் நடப்பதின் காரணமாக அரேபியர்கள் பிறநாட்டுப் பெண்களை திருமணம் செய்து அவர்களுக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்று கொடுத்து விடுகிறார்கள் இதன் காரணமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் அந்நாட்டு குடிமகன் என்ற நிலைக்கு வந்து விடுகிறது
 
எவ்வளவு பணம் இருந்தென்ன ? வயதான காலத்தில் மலம், ஜலம் அள்ளுவதற்க்கு ஆள் வேண்டுமே இந்த கட்டத்தில் மூன்றாவது, என்ற நிலையில் இதில் பிழைப்புக்காக வந்த எஜிப்த், பாலஸ்தீனியப் பெண்களின் வறுமையை பயன் படுத்தி திருமணம் செய்து கொள்கிறார்கள் அவர்களும் வளமான சொகுசான வாழ்க்கை இதற்கு ஆசைப்பட்டு கிழவன்தானே... சமாளித்துக் கொல்ளலாம் நமது சொந்த பந்தங்களும் இந்த நாட்டில்தானே என்று காலத்தை கழித்து அங்கேயே வாழ்ந்து, இறந்தும் விடுகிறார்கள்
 
அரபு பேசும் எல்லா நாட்டுப் பெண்களுமே ஒரே மாதிரிதானே இருப்பார்கள் அவர்களின் பிறந்த நாடு எப்படித் தெரியும்... என்று தங்களுக்கு ஐயம் வந்திருக்குமே ? ஒரு மனிதன் உலகில் எங்கு பிறந்து எந்த நாட்டு குடியுரிமை பெற்றாலும் அவர்களது கடவட்டையில் (Passport) அவர்களது பிறந்த இடம் குறிக்கப்பட்டு இருக்கும் இது அவர்கள் எத்தனை குடியுரிமை மாறி, கடவட்டைகள் புதுப்பித்தாலும் மரணகாலம் வரை அந்த விடயத்தை எடுக்க முடியாது இது உலகலாவிய சட்டம் (International Rules) இதன் மூலமே அவர்கள் எந்த நாட்டு பெண்கள் என்பதை கண்டு கொள்வேன். அவர்களது கடவட்டையை நீ எப்படி பார்க்க முடியும்? சொல்லுவோம்ல...
 
சிலர் ஓமன் நாட்டு பெண்களையும் திருமணம் செய்வார்கள் இருப்பினும் அவர்களும் பணக்கார நாடுதான் இதில் ஒரு வேடிக்கை தெரியுமா ? எமராத் சட்டத்தை வகுத்தவர்கள் இந்நாட்டு ஆண்கள் எல்லா நாட்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் பெண்கள் பிறநாட்டு ஆண்களை திருமணம் செய்து நாடு கடந்து போக கூடாது எப்பூடி ?
 
தங்களுக்கு நினைவிருக்கலாம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வீட்டில் டிரைவர் வேலை செய்த ஆந்திராவைச் சேர்ந்த பஷீர் என்ற வாலிபர் அந்த வீட்டின் முதலாளி மகளைக் காதலித்து அந்தப் பெண்ணை இந்தியாவுக்கு சென்னைக்கு கொண்டு வந்து விட்டார்
 
இது அன்றைய தருணத்தில் மிகப்பெரிய சர்ச்சையான விடயம் இதன் எதிரொலி சவுதியில் வேலை செய்த இந்தியர்கள் அனைவருக்கும் பிரச்சனையை கொடுத்தது பிறகு என்ன ஆனது ? என்பது எனது நினைவில் இல்லை. இதெல்லாம் சரி இங்கு இந்தியப் பெண்கள் எப்படி வந்தார்கள் ? அதானே எப்படி வந்தார்கள் ?
 
தொடரும்...
 
காணொளி

Share this post with your FRIENDS…

28 கருத்துகள்:

  1. அந்தச் சம்பவம் நடந்தபோது நான் குவைத்தில் இருந்தேன்...

    பதிலளிநீக்கு
  2. ஆந்திரா சம்பவம் அது நடந்தது
    1992 ல் தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜி அதற்கும் முன்பு நீங்கள் சொல்வது பாபர் மஸ்ஜித் சம்பவம்.

      நீக்கு
    2. இல்லை.. மஜ்ஜித் சம்பவத்தைச் சொல்லவில்லை..

      அப்போது இங்கே ஜெயலலிதா முதல்வர்.. அடுத்த தெரு அரசியல் வியாதிகள் எல்லாம் ஆந்திராக் காரன்
      செஞ்ச காரியத்துக்கு பெருத்த ஆதரவு..

      92ல் என்றாலே அதுவும் நாப்பது வர்சம் ஆச்சுங்களே!..

      நீக்கு
    3. ஆமாம் ஜி நாற்பது வருடம் நெருங்கி விட்டது.

      அப்பொழுது எனக்கு விபரம் தெரியாத குழந்தை போன்ற நினைவு.

      நீக்கு
  3. அரேபிய சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன.  அதைச் சமாளித்தும் வாழ்கிறார்களே...

    பதிலளிநீக்கு
  4. காணொளியில் அந்தப் பெண் மறுக்க மறுக்க திருமணம் நடக்கிறதா?

    பதிலளிநீக்கு
  5. காணொளியை இப்போது தான் பார்த்தேன்...

    போலீஸ் வந்து நொங்கு எடுக்கலையா?..

    மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுற மாதிரி இருக்கு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் ஜி அந்தப் பெண்ணின் இன்றைய நிலை எப்படியோ ?

      நீக்கு
  6. காலையிலேயே பதிவு வாசித்துவிட்டேன் ஜி. மொபைலில் ஆனா இப்ப இங்க வந்து பதிவு திறக்க ரொம்ப நேரம் எடுக்குது..வந்தாலும்..காணொளி வேலை செய்ய மாட்டேங்குது...இங்குள்ள நெட் பிரச்சனைதான்....

    அரபுப் பெண்களுக்கு இதில் கொஞ்சம் சுதந்திரம் இருக்கோ....அதாவது பிடிக்கலைனா டக்குனு டுபுக்கு சொல்லிக் கழண்டுக்கலாம் போல?!!!

    ஆனா நம்ம மக்கள் அப்படிச் சொல்லித் தப்பிக்க முடியாதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      நாம்தான் கலாச்சாரம், பண்பாடு, பான் புரோட்டா என்ற வட்டத்தை அமைத்துக் கொண்டோமே...

      நீக்கு
  7. ஹப்பா காணொளி வந்துடுச்சு....அடப்பாவிகளா இந்தக் கொடுமை எங்க நடக்குது கில்லர்ஜி?!! கடவுளே! பாவம் அந்தப் பொண்ணு....மனசு ஒரு மாதிரி ஆகிடுச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தமிழகத்தில்தான் எங்கு என்று தெரியவில்லை. மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. அரேபிய பெண்களின் சுதந்திர போக்கு வியப்புதான். அவர்களின் மன தைரியங்கள் வேறு எவருக்கும் கிடையாது என்றுதான் தோன்றுகிறது. ஆயினும் காலங்கள் மாறுவதில் இந்த வெளிநாட்டு கலாச்சாரங்கள் இப்போது எங்கும் மாறிவருகிறது. அதையும் கண்கூடாக பார்க்கிறோம்.

    காணொளி வருத்தம் தருகிறது. இப்படியும் சில இடங்களில் பிடிக்காத திருமணங்கள். அந்தப்பெண் வெளிப்படையாக அந்த ஆணுனடான தொடர்பை மறுத்தும் கட்டாயமாக பெண்களாகக்கூடி செய்யும் திருமணத்தை காணவும் மனசு கஸ்டப்படுகிறது.

    ஒரு பெண்ணுக்கு ஒரு பெண்தான் எதிரி என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் எல்லா இடங்களிலும் இப்போது மாற்றம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. அரேபிய பெண்களின் குணநலன் பார்த்துதான் பழைய சினிமாக்களில் பணக்கார பெண் என்றால் அடங்காபிடாரியாக இருப்பதாக சித்தரித்தார்கள் போலும்.
    நம் நாட்டில் பணக்கார பெண்களும் ஆண்களிடம் வாய் இல்லா பூச்சிகளாக வாழ்ந்து மடிந்து இருக்கிறார்கள்.
    மற்ற நாட்டு பெண்களை மணக்க காரணம்! அவர்களின் நிலை எல்லாம் படிக்கும் போது வருத்தம் ஏற்படுகிறது. காணொளி பார்த்து மேலும் வருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. பணம் எதையும் செய்கிறதே...

    காணொளி - ஐயோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பணம்தானே உலகையே அழிக்கிறது.

      நீக்கு
  11. ஏன் இப்படிக் கட்டாயக் கல்யாணம் எல்லாம் பண்ணிக் கொடுக்கிறாங்க? இதிலே எத்தனை பெண்கள் உடந்தை! என்னவோ போங்க மனித நேயம் என்பதே செல்லாக்காசாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ இதில் உடந்தையாக ஆம் பெண்களும் உள்ளனர்.

      தொடர்ந்து வாருங்கள்...

      நீக்கு
  12. வயதான காலத்தில் தன்னைப் பார்த்துக்கொள்ளவும், இளமையில் அனுபவிக்கவும்தான் இந்தக் கல்யாணங்கள் நடக்கின்றன.

    காணொளி... காதலனை கழற்றிவிட சொந்தக் காரனுக்கே மணம் முடிப்பார்களாயிருக்கும். வாழ்வு அழிந்ததே என அவள் நினைக்கிறாள் போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே உண்மையான வார்த்தை.

      இவ்வளவு தூரம் அந்தப் பெண்ணை கதற விட்டு செய்யும் திருமணம் நீடிக்குமா ? என்பதை இங்கு ஒருவர்கூட உணரவில்லையே...

      நீக்கு
  13. காணொளி என்ன கொடுமை ? மனதை வதைக்கிறது.

    பதிலளிநீக்கு