தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 14, 2023

கர்வமுள்ளவன்

 

நேசிப்பது எனது இந்திய மண்
சுவாசிப்பது இந்தியக் காற்று
வாசிப்பது எம் தமிழ் மொழி
வசிப்பது தமிழ் இனத்தோடு
 
நான் இந்தியன் என்பதில்
பெருமை கொள்பவன் அதில்
தமிழன் என்ற கர்வமுள்ளவன்
பழந்தமிழனின் சிந்தை எங்கே
 
று பிறவியிலாவது தமிழா
வீறு கொண்டு விழித்தெழு
மக்களாட்சி வேண்டாம்
மன்னர் ஆட்சியே சுபிட்சம்
 
மாவீரர்கள் பரம்பரை நமது
மானம் காப்பதே கடமை
தமிழன் என்பதை காத்திடு
உயிர் மூச்சாய் நிறுத்திடு
 
Chivas Regal சிவசம்போ-
கருவாயனாக இருந்தாலும் இருக்கலாம் கர்வம் இருக்ககூடாது.
 
கில்லர்ஜி தேவகோட்டை


Share this post with your FRIENDS…

29 கருத்துகள்:

 1. நல்ல சிந்தனை. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 2. மன்னராட்சி சுபிட்சம்தான். சோழ பாண்டிய பல்லவ சேர... எந்த மன்னராட்சி? இல்லை தொண்டமானா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   மன்னர்களில் பெரும்பாலோர் மக்களை மகிழ்ச்சியாக வைத்தது உண்மைதானே...

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. கவிதை நன்றாக உள்ளது. உங்கள் மனதின் எண்ணங்களை புரிந்து கொள்ளும் வகையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

  நம் போன்ற சி(ப)லருக்கு இப்போதுள்ள கால நிலைமைகளைப் பார்த்து இப்படித் தோன்றுவது உண்மைதான். ஆனால், பொதுவாக எந்த ஆட்சியிலும் திருப்தி காணாததுதான் இந்த மனித மனம். இக்கரைக்கு அக்கரைப்பச்சையாக பார்ப்பதையும் ஏனோ மனிதனின் குணமாக ஆண்டவன் படைத்து விட்டான். அதுவும் விந்தைதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 4. தமிழனின் பெருமையை பாடலில் வடித்த நண்பருக்கு பாராட்டுகள். ரசித்தேன். பெருமிதம் அடைந்தேன்.

  பதிலளிநீக்கு
 5. மன்னராட்சியில் இல்லாத சண்டைகளா, ஊழல்களா?  ஆனாலும் அவர்களிடம் பொதுநலம் அதிக அளவில் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.  வரலாற்றின் நெகட்டிவ் பக்கங்களைத் தவிர்த்து விட்டு நிறைய பூசி மொழுகுகிறார்கள் என்று காலச்சக்கரம் நரசிம்மா சொல்வார்.

  பதிலளிநீக்கு
 6. பெருமை கொள்பவரா, கொல்பவரா?

  பதிலளிநீக்கு
 7. அதிகார மீறல் இல்லாத ராணுவ ஆட்சி ஓரிரு வருடங்கள்...   சரியான ஆள் கிடைக்காதே..  தொலைநோக்கு திட்டங்கள், முன்னோடி திட்டங்கள், கட்டுப்பாடுகள்..  
  ம்..ஹூம்...   விதம் விதமாய் யோசித்து ஏமாந்து மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் நல்ல ஆட்சி வேண்டுமெனில் ஹிட்லர் போன்ற காமராஜர் மனம் படைத்த மனிதர் வரணும்.

   நீக்கு
 8. தமிழரின் பெருமைகளை அழகிய பாடல் மூலம் தந்துவிட்டீர்கள்.

  நல்லாட்சி மலர காலம்தான் வழி சொல்லவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 9. கில்லஜி உங்க சிந்தனை நல்லாதான் இருக்கு அதாவது நல்ல ஆளுமை வேண்டும். ரைட்டுதான் ஆனா மன்னராட்சி ஒன்றும் அப்படி ஒன்றும் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது என்பது என் தனிப்பட்டக் கருத்து. அதிலும் குறைபாடுகள் இருக்கத்தான் செய்தன. இப்போது நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ஆள்பவரைக் குறித்து அப்போது அப்படி வெளியில் பேச முடியுமா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நீங்கள் சொல்வது சரிதான்.
   ஆனால் இப்போது முன்புபோல் பேச்சுரிமை, எழுத்துரிமை மறுக்கப்படுகிறது .

   நீக்கு
 10. தலைமையை ஆட்டுவிக்கும் கும்பல் ஒழிந்தால், எந்த ஆட்சியும் சிறப்பே...

  பதிலளிநீக்கு
 11. உங்கள் கவிதை அருமை.
  நல்ல ஆட்சி, கொடுங்கோலன் ஆட்சி என்பது மன்னர் ஆட்சியிலும் உண்டு.
  நல்லாட்சி நடைபெற பிரார்த்திப்போம். அவ்வளவுதான் நம்மால் முடியும். மக்கள் மனநிலை மாற வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 12. நல்ல சிந்தனை..

  மன்னராட்சி என்று தனியாக வரவேண்டியது இல்லை..

  குருவி குடித்த சிரட்டைத் தண்ணீரே எறும்புக்கு ஏரி..

  காலம் அதுவாகவே அப்படியாக ஆக்கி விடும்!..

  நாம் தான் உஷாராக இருந்து கொள்ள வேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி
   ஆம் மக்கள் உஷாராக இல்லையே... அதுதான் பிரச்சனை.

   நீக்கு
 13. எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை தான். மன்னர் ஆட்சியில் மட்டும் மக்கள் மன மகிழ்ச்சியுடனும் சுபிக்ஷத்துடனும் வாழ்ந்தார்களா? எந்த மன்னனாவது அண்டை நாட்டோடு போர் தொடுக்காமல் இருந்தானா? அந்தப் போரின் விளைவுகளை மக்கள் தானே அனுபவிக்க வேண்டி இருந்தது? மக்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி நாம் படித்ததில்லையா? இப்போ இங்கிலாந்திலே இன்னமும் மன்னருக்குத் தான் முக்கியத்துவம். மக்கள் மன மகிழ்வுடன் தான் இருக்காங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே...

   ஆனால் இன்று மக்களாட்சி என்று சொல்லிக் கொண்டு மன்னராட்சி நடப்பது சரியாக இல்லை.

   நீக்கு
 14. இன்னாது.... //மக்களாட்சி வேண்டாம் மன்னராட்சியே சுபிட்சமா//?

  ஐயகோ... அப்போ ஓட்டுக்கு "துட்டு" இனி யாரு தருவா?...

  இந்த மன்னராட்சி எல்லாம் வேண்டாம் சாமி மக்களாட்சியே நீடிக்கட்டும்.... ஒரு ஓட்டுக்கு 2000 ரூவா பணமும், பிரியாணி பொட்டலத்தோடு ஒரு குவாட்டரும் கெடைச்சிக்கிட்டு இருக்கு... கவிதை பாடி அதுல மண்ணள்ளி போட்டுராதுங்க ராசா.... (ஒங்க கவிதையில என் பீச்சாங் கைய வைக்க)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   பிரியாணி பொட்டணம்தான் வாழ்க்கையை தீர்மானிக்குதா ?

   ஈரோடு மாவட்டத்தில் ஏழாயிரம் நாய்களை காணோமாம்.

   நீக்கு
  2. இன்னாது.... நாய்களைக் காணோமா? அதுவும் ஏழாயிரமா?... அடி ஆத்தாடி... அதனாலதான் சாப்பிட்ட உடனேயே தண்ணி தவிச்சுதா???....

   முந்தின ஆட்சி வரைக்கும் "காக்கா பிரியாணி" தானய்யா போட்டுக்கிட்டு இருந்தாங்க? இந்த ஆட்சியில காக்காகிட்ட இருந்து நாய்களுக்கு "கன்வெர்ட்" ஆகிட்டாங்களா? என்னடா இது "சுடலை" ஆட்சியில "ஓட்டர்ஸ்"க்கு வந்த சோதன?!!!...

   நீக்கு