தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 28, 2023

ஜேம்ஸ் ஊரணி


(மேலே இருப்பதை சொடுக்கினால் தண்ணீருக்குள் தள்ளி விடுவர்)
 
ந்த பெண்ணை வெகு காலமாக
தொடர்ந்து கவனித்து வருகிறேன்
அவளை பார்க்கும் போதெல்லாம்
சிரிக்கின்றாள். நானும் இன்று
கேட்டு விடுவோம் என்ற முடிவு
கட்டி அருகில் சென்றேன். பெயர்
என்ன ? என்றேன் பே.. பே... பே...
என்றாள் உடன் நகர்ந்து விட்டேன்.
ச்சே இதற்காகவா மூன்று வருசம் ?
* * * * * * * 01 * * * * * * *
 
ந்த இடத்துக்கு தினமும் போகும்
போதெல்லாம் கேட்டில் பூட்டு
தொங்கியது ஆகவே ஒருநாள்
கேட்டின் அருகில் சென்று உள்ளே
எட்டிப் பார்த்தேன், அந்த நேரத்தில்
அங்கு வந்த பெரியவர் தம்பி
யார் வேண்டும் ? என்றார் கேட்
பூட்டி இருக்கே.... அதான் பூட்டி
ஒரு வருசமாச்சே என்றார்.
* * * * * * * 02 * * * * * * *
 
ந்த திரையரங்கத்தின் சுவரொட்டி
ஒட்டும் இடத்தை தினமும் பார்த்து
வந்தேன், புதிய படம் மாற்றவே
இல்லை. இது நல்ல படம்தானே
ஒருநாள் உள்ளே போய் கேட்கலாம்
என்று போனால் வாசலில் பூட்டு
தொங்கியது. என்னவென்று கேட்டேன்
அதான் பூட்டி பத்து வருசமாச்சே...
நான் பார்த்த அந்த படம் விஸ்வரூபம்.
* * * * * * * 03 * * * * * * *
 
ந்த சோபாவில் அமர்ந்து ரிமோட்டை
எடுத்து தொலைக்காட்சியை ஆன்
செய்தேன். வெகுநேரமாக இருந்தேன்
காட்சிகள் வரவேயில்லை. மாலதி
ஏன் படமே வரவில்லை ? என்றேன்
அதட்டலாக, என்னை மேலிருந்து
கீழ் ஒரு மாதிரியாக பார்த்தவள்
அதான் கரண்டு போய் ஆறு மணி
நேரமாச்சே... ச்சே அதான் தெரியலை.
* * * * * * * 04 * * * * * * *
 
ந்த பூங்காவில் உட்கார்ந்திருந்தேன்
அவள் என்னை பார்த்துக் கொண்டே
இருந்தாள். எனது மனம் ஏதேதோ
சொல்லியது பக்கத்தில் போய் கேட்டு
விடலாம். தைரியமாக சென்றேன்
சிரித்துக் கொண்டே என்ன விசயம்
என்றேன் பத்து வருசத்துக்கு முன்பு
செத்துப் போன சித்தப்பா மாதிரி
இருக்கீங்க... ச்சீ... மானக்கேடு.
* * * * * * * 05 * * * * * * *
 
ந்த டேபிளில் இருந்த எல்லா
டெண்டர் பேப்பர்களையும் திருத்தம்
செய்த பிறகு பியூன் பிரசாத்துக்கு
பெல்லை தட்டினேன், வந்தவுடன்
இந்த டெண்டரை எல்லாம் போஸ்ட்
செய் என்றதும் சார் இதெல்லாம்
ஸ்டாப்புக்கு வந்த லட்டர் பிறகு.
புரிந்தது நான் கண்ணாடி போடாதது
எல்லாமும் பிரித்து விட்டோமே...  
* * * * * * * 06 * * * * * * *
 
ந்த வானத்தைப் போல மனம்
படைச்ச மன்னவனே இளையராஜா
டிவியில் பாடிக்கொண்டு இருந்தார்.
நாமும் சேர்ந்தே பாடுவோம் என்று
மெய் மறந்து பாடிக்கொண்டு இருந்தேன்.
திடீரென்று ஏன் இசையை காணோம் ?
எதிரில் மனைவி டிவியை ஆஃப்
செய்து விட்டு நீங்க பாடுங்க கரண்டு
செலவாவது மிச்சமாகும் என்றாள்.
* * * * * * * 07 * * * * * * *
 
ந்த புத்தகத்தை தூக்கி எறிந்தேன்
வந்து நின்ற மனைவி புத்தகத்தை
எதுக்கு வீசுறீங்க ? என்னடி கதையிது
ஒண்ணுமே புரியமாட்டுது குனிந்து
புத்தகத்தை எடுத்து பார்த்தவள்
என்னை முறைத்து விட்டு சொன்னாள்.
வாங்கிட்டு வரும் போது பார்க்கிறது
இல்லையா ? குஜராத்தி புத்தகத்தை
வாங்கிட்டு வந்தால் எப்படி புரியும் ?
* * * * * * * 08 * * * * * * *
 
ந்த கடையில் நான் வைத்திருந்த
அறுநூறு ரூபாய் நோட்டை கொடுத்து
சில்லறை கேட்டேன். அவனும் உடனே
கொடுத்து விட்டான். அப்பாடா நம்மிடம்
வந்த கள்ள நோட்டை மாற்றி விட்டோம்.
வேகமாக இடத்தை காலி செய்தாச்சு
சந்தோஷமாக வீட்டுக்கு வந்து பார்த்தால் ?
இரண்டு முன்னூறு ரூபாய்த்தாள்கள்
இதை வைத்து நான் என்ன செய்வது ?
* * * * * * * 09 * * * * * * *
 
ந்த ஊரணியோரம் அழகிய
நடைபாதையில் அலைபேசியில்
மெலிதான சப்தத்தில் தியாகராஜ
பாகவதர் பாடலைக் கேட்டுக்
கொண்டு போனபோது திடீரென்று
ஒரு குரல் நான் தேம்ஸ்ல குதிக்கப்
போறேன். என் மனசு சொன்னது இது
நடக்காது பொய்யான வார்த்தை
எத்தனை வருசமாக கேட்கிறோம் ?
* * * * * * * 10 * * * * * * *
 
கில்லர்ஜி தேவகோட்டை 

Share this post with your FRIENDS…

30 கருத்துகள்:

 1. எல்லாமே ஏடா கூடமாக ஆகிறதே உங்களுக்கு.... செய்வினையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே இருக்கலாம் ஊருல நிறைய சகடைகள் இப்படித்தான் செய்கிறது.

   நீக்கு
 2. அதிரடி அதிரா, ஏஞ்சலின் ஆகியோரை நினைவுபடுத்திவிட்டீர்கள். நல்ல சகோதரிகள்... திடுமென காணாமல் போய் விட்டார்கள்... காலம்தான் எப்படி மாறிவிடுகிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் உகாண்டா காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்.

   நீக்கு
 3. இப்போது உள்ள பிள்ளைகள் பல்பு வாங்கினாயா! என்று பேசி கொள்வார்கள்.
  அது போல இருக்கிறது நீங்கள் எழுதி இருப்பது. சிரிப்பு கவிதை அருமை.
  அதிராவை தேடுகிறது மனம். முதல் படத்தை பார்த்தவுடனே நினைவுக்கு வந்தார்
  அதிரா.
  உங்கள் பதிவை படித்தால் வந்து விடுவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 4. ஆகா!..

  அருமை.. அருமை..

  அடித்து விளையாடுகின்றீர்கள்...

  பதிலளிநீக்கு
 5. தேம்ஸ்காரங்கன்னு தெரிஞ்சுருச்சு முதல் படமே....

  சிரித்துவிட்டேன்....கில்லர்ஜி...அனைத்தும் ரசித்தேன்.

  என்னாச்சு சிவாஸ் வந்து கலாய்க்கலை!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஏஞ்சல் வந்து அதிராவை கலாய்ப்பது போல் எழுதினேன் பிறகு மாற்றி விட்டேன்.

   நீக்கு
 6. நினைப்பது ஒன்று
  நடப்பது ஒன்று

  பதிலளிநீக்கு
 7. நினைப்பு வேறு நடப்பு வேறு என்பதற்கு உதாரணச் சம்பவங்கள் அனைத்தும் சுவையானவை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. அனைத்தும் சிறப்பு. மிகவும் ரசித்தேன் ஜி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. எல்லாவற்றையும் படித்து ரசித்தேன். இரண்டாவதும், ஒன்பதாவதும் வாய் விட்டு சிரிக்க வைத்தது. சகோதரி அதிரா, ஏஞ்சல் அவர்களை நினைவு கூர்ந்து எழுதியது சிறப்பு. கொஞ்ச நாட்களாக அவர்களை காணாமல் நாம் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தப்பதிவு கண்டு அவர்கள் இதற்குள் வந்திருப்பார்கள் எனவும் நினைத்தேன்:((. ஆனால் அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பதிவை ஆழ்ந்து படித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. இப்படியா ஒண்ணும் தெரியாத அப்பாவியா இருக்கறது.

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் அசத்தல். ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 12. இப்படி எல்லாம் ஏடாகூடமாக எழுத உங்களால் தான் முடியும். நன்கு ரசித்தேன். முக்கியமாக் கள்ள நோட்டை மாற்றிய விவகாரம்.

  பதிலளிநீக்கு
 13. பல ஏமாற்றங்கள் உங்களுக்கு, எங்களுக்கு பல சுவாரஸ்யங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் நான் ஏமாறுவது உங்களுக்கு மகிழ்ச்சியா ?

   நீக்கு