தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 07, 2023

விவாஹ(M)ரத்து (3)

முந்தைய தொடர்ச்சிகள் ஒன்று இரண்டு
 
இதுவரை.... இதெல்லாம் சரி இங்கு இந்தியப் பெண்கள் எப்படி வந்தார்கள் ? அதானே எப்படி வந்தார்கள் ?
 
ண்பர்களே... நான் சொல்லி இருந்தேன் இந்தியப் பெண்கள் இதில் 50% இருக்கின்றார்கள் ஆம் அவர்கள் யார் ? இந்தியாவில் எந்த மாநிலம் என்பதுதானே தங்களது கேள்வி ? பயப்பட வேண்டாம் நம் இன தமிழச்சிகள் இல்லை நாம் பெருமை கொள்வோம் நான் பலமுறை பெருமைப்பட்டு பேசியிருக்கின்றேன் பல அரேபியர்களிடம் பார்த்தாயா ? என் இன தமிழச்சிகள் இல்லை இதில் எனக்கு சந்தோஷமே என்று,
 
(ஸூப் ஹுர்மா மால் மதராஸி மாஃபி தாக்கல் ஜவாஜ் அனா ஃபீ மப்ஸூத்)
 
இந்த 50% தில் 35% ஆந்திர பெண்கள்15% கேரள பெண்கள் என்று சொல்லலாம் இது இந்திய அரசாங்கத்தின் சர்வே அல்ல எனது தனிப்பட்ட கணக்கெடுப்பு ஆம் வறுமையின் காரணமாகவும், சதியின் காரணமாகவும், இளவயது ஆந்திர பெண்கள் பலர் அரேபியர்களிடம் விற்கப்படுகிறார்கள் அவர்களை சட்டப்படி திருமணம் செய்து குடியுரிமை ஆக்கி விடுகிறார்கள் இவர்கள் இந்தியாவுக்கும் வரமுடியாது குழந்தைகள் பிறந்து அதன் பந்த பாசத்தில் இணைந்து இது இயல்பு வாழ்க்கைக்கு போய் விடுகிறார்கள்
 
அரேபியர்கள் பெண்களை சதிக்கின்றார்கள் என்று நான் குறை சொல்ல வரவில்லை நல்லதொரு ஆடம்பரமான வாழ்க்கைதான், குறை சொல்வதற்கு எதுவுமே இல்லை ஆனால் உணர்ச்சிகளை மதிக்காமல் பெயர்த்தி வயதுடைய பெண்களை திருமணம் செய்து கொல்கிறார்களே என்ற எனது தனிப்பட்ட வேதனையின் விளைவே இந்தப் பதிவுகள் மற்றபடி நான் மதவாதம் பேசவரவில்லை என்பதையும் குறிப்பிடுகிறேன்
 
ஒரு அரபி அவர் பிறந்த வருடம் 1903 ஒரு பெண் (ஆந்திரா) இவர் பிறந்த வருடம் 1969 இவர்கள் இருவருக்கும் 1989 ல் திருமணம் என்மீது கோபப்படும் நண்பர்களுக்கு மட்டும் ஒரு கேள்வி அந்த சகோதரியை உங்களது உடன் பிறந்தவளாக நினைத்து இதன் கணக்குகளை பாருங்கள்.
 
இவர்கள் யார் ?
எந்த ஊர் ?
பெயர் என்ன
?
 
அனைத்து வியடங்களையும் என்னால் தரமுடியும் ஆனால் நான் மனசாட்சிக்கு பயந்து வாழ்பவன் ஆம் இது எமராத் அரசின் லட்சக்கணக்கான கோப்புகளில் உள்ளவை நான் நினைத்தால் சொல்ல முடியும் தவறு வேண்டாமே உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விதைக்கலாமா ? தவறு நான் அந்த நாட்டின் அரசு அலுவலகத்தில் (Filing Controller) வேலை செய்துதான் எனது அன்புச் செல்வங்களை படிக்க வைத்தேன், அவர்களுக்கு பொருள் ஈட்டினேன், அவர்களை வாழவைத்தேன், வாழவும் வைப்பேன்.
 
ஆகவே அந்த விடயங்களை நான் வெளியில் இடுவதை தவறாக கருதுகிறேன் வேலை நேரத்தில் சும்மாக இருக்கும் பொழுது கோப்புகளை படித்துப் பார்ப்பேன் இதில் இறந்து போனவர்களின் கோப்புகள் வந்தவுடன் அவர்களுக்கு எத்தனை மனைவிகள், எத்தனை குழந்தைகள் என்பதை படித்துப் பார்ப்பேன் இதில் தவ்ஸியா என்று சொல்லப்படும் பேப்பரில் அவர்களின் மனைவிமார்கள் பெயர் வரிசையாக வரும்
 
இதில் அர்மலஹ் (விதவை) என்று எழுதியிருக்கும் பிறகு குழந்தைகளின் பெயர்கள் வருட வாரியாக எழுதியிருக்கும் இதில்தான் மனைவிகள் மூன்றுவரை இருக்கும் குழந்தைகள் 12 முதல் 18 வரை அதையும் தாண்டிகூட இருக்கும் அவர்களுக்கு அரசு கொடுக்கும் பணம் வங்கிகள் மூலமே சென்றடையும் அதில் வங்கி கணக்கு வழக்குகளும் நான் காண நேரிடும் அந்த தருணங்களில்தான் அவர்களுக்கு எட்டு இலக்கங்களையும் தாண்டிப் போகும் பார்த்து பிரமித்து சந்தோஷப்பட்டதுண்டு ஆனால் ஒருக்காலும் பொறாமைப்பட்டதில்லை காரணம் எமது பணம் இல்லையே எனக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும் இதில் நம்பிக்கை உண்டு.
 
நண்பர்களே மேலே சொல்லியிருந்த 1903 பிறந்தவர் 1969ல் பிறந்த ஆந்திர பெண்ணை திருமணம் செய்தவருக்கு இரண்டு குழந்தைகள் ஒருமுறை இந்த கோப்பு நான் காணும் போது (அந்த கோப்பின் இலக்கம்கூட இன்னும் எனது நினைவில் இருக்கிறது) அதனைக் குறித்து அரபி ஒருவனிடம் பேசும்போது எனக்கும், அவனுக்கும் அந்த இரண்டு குழந்தைகள் பிறப்பைப்பற்றி மிகப்பெரிய வாக்கு வாதமானது அதை அடுத்த பதிவில் பார்ப்போமா ?
 
தொடரும்...

Share this post with your FRIENDS…

28 கருத்துகள்:

 1. பணம் ஒன்றுதான் வாழ்க்கையா என்று கேள்வி தோன்றினாலும், சில சமயங்களில் சிலர் வாழ்வில் ஒன்றுமே இல்லாத நிலையில் அது எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி
   பணம் தேவை என்று ஓடுபவர் அவைகள் முழுமையாக கிடைக்கும்போது இதனால்தான் நமது வாழ்வு வீணாக போய் விட்டது என்பதை உணர்வர்.

   நீக்கு
 2. ஆனால் எப்படி ஒரு தமிழ்ப்பெண் கூட இல்லாமல் தப்பித்தார்கள்? அல்லது கணக்கில் அவர்களும் இருந்து, சதவிகிதத்தில் மிகவும் குறைவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம் ஜி நான் சந்திக்கவில்லை. இருப்பினும் சதவீதம் சொல்லும் எண்ணிக்கையில் வராது.

   நீக்கு
 3. "அனைத்து வியடங்களையும் என்னால் தரமுடியும்
  ஆனால் நான் மனசாட்சிக்கு பயந்து வாழ்பவன்"
  இதை தெரிந்து யாரும் எதுவும் கிழிக்க முடியாது .தரித்திரம் பிடித்த இந்தியா அரசுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. ட்ரூ அவர்களின் கருத்து உண்மையே...
   ஆந்திராவில் மரம் வெட்டிய கூலித்தொழிலாளர்களை சுட்டுக் கொன்றதையே கேட்க முடியாத அரசா அடுத்த நாட்டில் தலையிடப் போகின்றது ?

   நீக்கு
 4. முன்பு இப்படி அரபு நாட்டில் மாட்டிக் கொண்ட பெண்ணாக பத்மபிரியா நடித்த (தவமாய் தவமிருந்து படத்தில் நடித்த பத்மபிரியா, பழைய பத்மபிரியா இல்லை)மலையாள படம் பார்த்தேன், வீட்டு வேலைக்கு என்று அழைத்து வந்து வீட்டில் பெரியவர்கள் முதல் சின்ன பையன் வரை கொடுமை படுத்துவார்கள். அந்த வீட்டு கார்டிரைவர் அவளுக்கு உதவுவான் ஊருக்கு திரும்பி போக .

  உங்கள் குழந்தைகளை பற்றி சொன்னது நெகிழ்வு.குடும்பத்தினர், குழந்தைகளுக்கு தானே உழைக்க போனது வெளி நாடு.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ வீட்டில் வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கை வெளியில் சொல்ல இயலாது. தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. திருமணமாகி ஆரம்பத்தில்தான் கஷ்டம். பிறகு, குழந்தைகள் என்று அந்த வாழ்க்கைக்குப் பழகிவிடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தமிழரே எல்லாமே பழகி விடுகிறது. பிறகு சோகம்கூட சுகமாகும்.

   நீக்கு
 6. தமிழச்சி இனி மேலும் இருக்க வாய்ப்பில்லை... தமிழ் இனம் அப்படி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இனி வாப்பு இ்ல்லைதான் காரணம் இன்றைய பெண்கள் அனைவருமே பட்டதாரிகள்.

   நீக்கு
  2. கில்லர்ஜி இதுக்கெல்லாம் படித்தவங்க படிக்காதவங்கன்னு வித்தியாசம் கிடையாது. படிச்சவங்களும் ஒழுங்கு கிடையாது.,

   கீதா

   நீக்கு
  3. நான் ஒழுங்கை சொல்லவில்லை இப்படி அப்பாவியாக ஏமாறமாட்டார்கள் என்பதற்காக சொன்னேன்.

   நீக்கு
 7. கில்லர்ஜி, இது மிகவும் கொடுமைதான்.

  ஒரு வேளை அப்பெண்கள் தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற விரும்பியோ வேறு வழியில்லாமலோ செல்கிறார்களா? அப்படி என்றால் எதுவும் சொல்ல முடியாது....ஆனால் நம் ஊர்ச்சட்டம் இதற்கு என்ன சொல்கிறது?

  இது நீங்கள் இங்கிருந்து அங்கு விற்கப்படுவதைச் சொல்றீங்க. ஆனால் இங்கு நம் ஊரிலேயே மூன்றாவது நான்காவது என்று விற்கப்படுகிறார்களே அதுவும் 10 வயது கூட நிரம்பாத பெண்கள். இதோ இங்கு வட கர்நாடகாவில், இந்தியாவின் வடக்குப் பகுதியில்...சர்வ சகஜமாக நடக்கிறதே....அதுவும் 70 வயதுக் கிழவன்கள் சிறுமிகளை விலை கொடுத்து வாங்குகிறாங்களே இதை என்ன சொல்றீங்க? இதைப் பத்திதானே நான் ஒரு கதை எழுதினேன் எபி/மின் நிலாவில்...எனக்குத் தெரிந்த ஒரு பெண் குழந்தை விற்கப்படுவதை வைத்து...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக உண்மைதான் குடும்பத்திற்காக வாழ்வை தெரிந்தும், தெரியாமலும் இழந்தவர்கள் இருக்கின்றார்கள்.

   நமது அரசாங்கம் எதுவும் செய்யாது காரணம் அவர்கள் ஐந்து வருடத்திற்குள் தனக்கு வேண்டியதை சுருட்டி விடவேண்டும் என்ற முனைப்பு.

   மதுக்கடைகள் திறப்பு இதற்கு அடிப்படை காரணம் என்று சொல்வேன். காரணம் இன்றைய மனிதன் குடிப்பதற்காக எதையும் செய்வான். அவனது மனப்போக்கை இப்படி மாற்றியது யார் ?

   அரசை குறை சொல்லும் நாம் அவர்களை உட்கார வைத்த தவறு நம்முடையது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

   நீக்கு
 8. கில்லர்ஜி தமிழச்சி தமிழச்சின்னு சொல்றீங்களே அவங்க அங்கு விற்கப்படவில்லை என்று....என்னவோ இங்கு நடக்காத மாதிரி...இங்கே நடக்கிறது. அங்கும் விற்க்படுவதுண்டு. உங்கள் கணக்கில் வரவில்லை...நீங்கள் இருந்த நாட்டில் இல்லையாக இருக்கலாம்..

  சரி இதாவது ஏதோ ஒரு விதத்தில் பணக்கார வாழ்க்கை எந்தவிதக் குறையும் இல்லாமல் குழந்தை குட்டின்னு வாழ்ந்திடறாங்க...ஆனால் பாலியலை நினைத்துப் பாருங்க....அந்த நிலைக்குத் தள்ளப்படுவதை நினைக்கும் போது....... முன்பையில் இத்தொழிலில் தமிழ் மக்களும் உண்டு. வேதனையான விஷயம்...

  எனக்குத் தெரிந்த பெண்ணே அவள் வறுமையினால் இரண்டாவது மனைவியாக கிழவனுக்குக் கொடுக்கப்பட்டு....குழந்தை குட்டின்னு ஆகி, அவன் குடிச்சு குடிச்சே போக இவள் கடனைச் சரிக்கட்ட அரபு தேசத்துக்குப் போய்......இப்படியான வாழ்க்கையைக் கேட்கும் போது.....என்ன சொல்ல? நம்மால் எதுவும் செய்ய முடியாத போது அமைதியாகக் கடப்பதுதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்தை பதிலாக ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு சொல்லி இருக்கிறேன்.

   மும்பையிலும், கொல்கத்தாவிலும் இருக்கும் ரெட்லைட் ஏரியாவை அரசு நினைத்தால் ஒரே இரவில் நிறுத்தி ஒழித்து விடமுடியாதா ?

   செய்ய மாட்டார்கள் காரணம் இதுவொரு மிகப்பெரிய வருமானத்தையும், கமிஷனையும் தரும் பெரிய கூட்டத்தினரின் நிர்வாகம். அரசாள வருபவர்கள் தான் சம்பாரிக்கவே...

   ஹிட்லர் போன்ற சர்வாதிகாரி காமராஜரைப் போல் மனமுள்ள ஓர் மனிதர் வந்தால் எல்லாவற்றையும் சரி செய்யலாம்.

   நீக்கு
 9. மிகவும் பயங்கரமாக இருக்கு, கேட்கவும்/படிக்கவும். இவை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பதால் கண்ணுக்குத் தெரிந்த அநியாயங்கள். கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் எத்தனையோ? மனசு வேதனைப் படுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   நான் அடிக்கடி நினைப்பது...

   இந்த நிலையில் மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கும் இறைவன்தானே துணை ?

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரேசுக்

  பதிவை படிக்கையில் மனது கஸ்டபடுகிறது. பெரும்பாலும் பெண்கள்தான் இந்த இழி நிலைகளை (குடும்ப சூழ்நிலை காரணமாக வயதானவர்களை அரைமனதான திருமணமாகவோ, இல்லை வலுக்கட்டாய திருமணமாகவோ) சந்திக்கிறார்கள். நீங்கள் இவைகளை பார்த்திருக்கும் போது உங்கள் மனமும் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துரைகளில் உள்ள நிகழ்வு பேசச்சுக்கள் இன்னமும் மனதை வருத்தப்படுத்துகிறது. பெண்ணாக பிறப்பதே பாவம் போலும்...! ஆனால் அந்த காலத்திலிருந்தே ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்தான் எதிரியாக வந்து அமைகிறாள். இதுவும் இறைவன் சித்தம் போலும்...! பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பதிவை ஆழ்ந்து படித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 11. பெண்களின் வாழ்வின் நிலைமை கஷ்டப்படுத்துகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களின் கிராமங்களில் இந்த நிலை உள்ளது என்ற உண்மையும் உரைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே
   இந்தக் கொடுமை இந்தியாவிலும் பரவலாக நிகழ்கிறது.

   நீக்கு
 12. வேதனை...... பல பெண்களின் நிலை இப்படித்தான்..... மாநில வேறுபாடு இன்றி இப்படியான விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்து சில ஜார்க்கண்ட் maanila பெண்கள் இப்படி திருமணம் செய்யப்பட்டு அவர்களது வாழ்க்கை வீண் ஆனது. சோகம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 13. வறுமை படுத்தும்பாடு . சோகம்தான்.

  பதிலளிநீக்கு