தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 09, 2023

விவாஹ(M)ரத்து (4)

 

முந்தைய தொடர்ச்சிகள் ஒன்று இரண்டு மூன்று
 
துவரை.... அந்த இரண்டு குழந்தைகள் பிறப்பு,  அந்தக் கோப்புபற்றி எனது அலுவலகத்தில் வேலை செய்யும் அரபியிடம் சாதாரணமாக பேசிய பேச்சு விகாரமாகி விட்டது
 
அதா சேவா சவி அரூஸ் சனா 1989 ஊவா உம்ரு 86 ஹுர்மா உம்ரு 20 பாதின் மிலாத் இத்னீன் ஸீக்கோ ?
இந்த கிழவன் கல்யாணம் செய்யும்போது வருஷம் 1989 அவருக்கு வயது 86 பெண்ணுக்கு வயது 20 அதற்கப்புறம் இரண்டு குழந்தை பிறந்ததா ?.
ஹா ஹா, அதா சேவா கேப் ? அதா ஹுர்மா சவி முஷ்கில் மின்னி மின்னி.
ஹா ஹா, கிழவன் எப்படி ? அந்தப்பெண் பிரச்சனைதான் அப்படி இப்படி.
 
இந்தே கூல் அதா, ஸீக்கோ மாஃபி மிலாத் மிஷான் சேவா ?
அப்படினா... அந்தக் குழந்தை கிழவனுக்கு பிறக்கவில்லைனு சொல்றே ?
ஐவா லாசம் மிலாத் மிஷான் நபர் த்தாணி அதா ஸீக்கோ, சவி ஹராம் அதா ஹுர்மா இந்தி.
ஆமா கண்டிப்பாக அந்தக்குழந்தை வேறு நபருக்குதான் பிறந்திருக்கணும் அந்த இந்தியப்பெண் செய்தது தவறு.
 
இந்தே கலம்த் வல்லாஹி ? மாஃபி கலாத் ஹுர்மா, கலாத் மால் ரிஜால்.
நீ சொல்வது உண்மையானால் ? தவறு பெண் மீது அல்ல, ஆண் மீதுதான்.
ஹுர்மா சீர் பர்ரா நபர் த்தாணி மாஃபி ஹராம் கேஃப் ?
எப்படி ? பெண் வெளி நபரிடம் போனால் தவறில்லையா ?
 
அனா மாஃபி கூல் அதா நமூனா, லேகின் சேவா சவி அரூஸ் அதா ஹராம்.
நான் அந்த மாதிரி சொல்லவில்லை ஆனால் கிழவன் கல்யாணம் செய்தது தவறு.
ஃபீ கானூன் சவி அரூஸ் ஹம்சா மர்ரா மாஃபி முஷ்கில் கேஃப் மாஃபி ஹராம் ?.
எப்படி தவறில்லை ? சட்டம் இருக்கு ஐந்து முறை திருமணம் செய்யலாம் பிரச்சனை இல்லை.
 
அனா மாஃபி கலம்த் அக்பார் மால் அரூஸ், சேவா சவி அரூஸ் அஷரா மர்ரா மாஃபி முஷ்கில் லேகின் உம்ரு ரீத் நப்ஸ்யானி சோய்ய ஃபர்ஹ் ஷா, ஸ்யாதா ஃபர்ஹ் ஹராம்.
நான் திருமண விபரத்துக்கு வரவில்லை கிழவன் பத்து முறை திருமணம் செய்யட்டும் பிரச்சனையில்லை ஆனால் வயது கொஞ்ச வித்தியாசம் சரிதான், கூடுதல் வித்தியாசம் தவறு.
மாஃபி ஹராம் ஊவா ரீத் ஹுர்மா சவி அரூஸ் ஸ்சூபீ முஷ்கில்
அவருக்கு பெண் வேணும் திருமணம் செய்துக்கிட்டார் என்ன பிரச்சனை ?
 
ஜெய்ன், மிஷான் ஹுர்மா மாரீத் மப்ஸூத் ?
நல்லது, பெண்ணுக்கு சந்தோஷம் வேண்டாமா ?
ஐவா, அதா ரிஜால் குல்லும் ஜீப் மிஷான் ஹுர்மா பாதின் லேஷ் சீர் நபர் த்தாணி ?
ஆமா, அந்த ஆள் எல்லாம் கொடுக்கிறார் பெண்ணுக்கு அப்புறம் எதற்கு வெளி நபரிடம் போகவேண்டும் ?
 
லேகின் பில்லேல் மாஃபி மப்ஸூத் லேஷ் ஹயா மால் அதா துனியா ?
ஆனால் இரவில் சந்தோஷம் இல்லையென்றால் எதற்கு இந்த உலக வாழ்க்கை ?
லா இந்தே கலம்த் மாஃபி ஜெய்ன், மாஅறஃப் இந்தே துனியா.
இல்லை நீ பேசுவது சரியில்லை உனக்கு உலகம் தெரியலை.
 
துனியா அனா மாஅறஃப் ? லா, இந்தே மாஅறஃப் ?
உலகம் எனக்கு தெரியலையா ? இல்லை உனக்கு தெரியலையா ?
அல்லாஹ் ஜீப் ஹயா மிஷான் மப்ஸூத் அலசான் நபராத் சவி அரூஸ்.
இறைவன் சந்தோஷத்திற்காக வாழ்க்கையை கொடுத்தான் அதனால் மனிதன் திருமணம் செய்து கொள்கிறான்.
 
ஷா லேகின் அதா ஹயா மிஷான் ரிஜால் ஃபகத் ? மாஃபி ஹுர்மா ?
சரி ஆனால் இந்த வாழ்க்கை ஆணுக்கு மட்டுமா ? பெண்ணுக்கு இல்லையா ?
ஐவா, ரிஜால் ஜீப் மப்ஸூத் மிஷான் ஹுர்மா.
ஆமா, ஆண்தான் பெண்ணுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறான்.
 
தொடரும்...

Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

 1. பேச்சு எக்குத்தப்பா போகுதே... இப்படி நடந்தால் பெரிய தவறல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   நல்லாத்தான் தொடங்கியது...
   ஆனால் கதை கப்பி ரோட்டில் போய் விட்டது.

   நீக்கு
 2. பெண்களை எந்த விதத்திலும் மதிக்க மாட்டேன் என்று விரதம் போல...!

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. நன்மைகளும், தீமைகளும் இரட்டைக் குழந்தைகள்.

   நீக்கு
 4. ம்ம்ம்ம்ம் மனித மனம் எவ்வளவு வக்கிரமானது என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. பெண்ணை ஒரு சக மனுஷியாய்க் கூட நினைக்க மாட்டாங்க போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   சரிதான் ஆனால் பெண்களுக்கு பயந்துதான் வாழணும்.

   நீக்கு
 5. இதெல்லாம் காலத்தின் கொடுமை..

  நானும் இப்படி எல்லாம் கேட்டிருக்கின்றேன்..

  பொது வெளியில் பேசக்கூடாது..

  நாமும் பிழைக்க வேண்டாமா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   உண்மை பேச தயங்ககூடாது.

   பொய் பேச வெட்கப்படணும்.
   இது எனது உண்மை குணம்.

   நீக்கு
  2. இன்றைய சூழ்நிலையில் பொது வெளியில் மெய் தான்
   பேசக் கூடாது..

   நீக்கு
  3. ஆமாம் ஜி உண்மைதான் அதனால்தான் உறவுகள் பகையாகிறது.

   ஆனால் எனக்கு பொய்யாக நடிப்பு வருவதில்லை.
   மீள் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 6. வேதனை. வட இந்திய மாநிலங்களிலும் இப்படியான பேச்சுக்கள் நிறையவே உண்டு. பெண்ணை ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் சிந்தனை அங்கே நிறைய - குறிப்பாக ஹரியானா, பீஹார், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில்…

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  மிகவும் கஸ்டபடுத்தும் பேச்சுக்கள். கற்புநெறி என்பது ஆண், பெண் இருவருக்கும் சமமானது. அதை இருவருமே புரிந்து நடந்து கொண்டால் சரி. ஆனால், எங்குமே பெண்தான் இறுதியில் மாட்டிக் கொள்கிறாள். இது இறைவன் தீர்ப்பு. என்ன செய்வது?
  பதிவை தொடர்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   மிகச் சரியான விளக்கம் சொன்னீர்கள்.

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 8. பெண் என்றால் போகப் பொருள் இது ஒரு காலத்தில் கூடுதலாக இருந்தது. இப்போது வேறு வடிவத்தில் நம்மூரிலும் உண்டே. இதற்கு முந்தைய பகுதியில் வடக்கு பற்றி போட்டதுதான்.....

  அந்த நபர் பேசியது அதைத்தான் சொல்கிறது.

  எனக்கு ஒரு வியப்பு, அரபு பிரதேசத்தில் சில சட்டங்கள் அருமையான சட்டங்கள் என்று நான் வியப்பதுண்டு ஆனால் இப்படியானவற்றை மட்டும் ஏற்க முடிவதில்லை. இங்கு இந்த விஷயத்தில் சட்டம் இருந்தாலும் வலுவாக இல்லை.

  ஆனால், பெண்களும் தவறு செய்கிறார்கள் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஆம் இதைத்தான் திண்டுக்கல் ஜி அவர்களுக்கு மறுமொழி கொடுத்து இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 9. பெண்களின் நிலை மனம் வருந்த செய்கிறது.
  பெண்களின் உணர்வுகளை புரிந்து கொண்டால் இப்படி நிகழாது.
  அவளுக்கு மனம் இருக்க கூடாது. உடல் அளவில் மென்மை ஆனல் மனதிடம் படைத்தவள். அதனால் அவளை எப்படி வேண்டு மென்றாலும் நடத்தலாம் தாங்கி கொள்வாள் என்று நினைக்கிறார்கள் போலும்.
  கமலாவின் கருத்தை சொல்ல நினைத்தேன், அவர்கள் சொல்லி விட்டார்கள். பாரதியும் சொன்னார் இருவருக்கும் பொது என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 10. பெண்ணை இக் காலத்திலும் போகப் பொருளாகப் பார்ப்பது வேதனை தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு