தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 13, 2023

பிழையின்றி தமிழ் பேசுவோம்


ண்டா மெய்யம்புளி, நம்மளோட படிச்சானே... எழுத்தாளர் எமகாதன் அவனை அடிச்சிட்டியாமே... ஏன் ?
முகவரி கொடு நூல் அனுப்பி வைக்கிறேனு மின்னஞ்சல்ல சொன்னான், சரினு அனுப்பி வச்சுட்டு படிக்கலாமே ஆவலோட இருந்தேன், பார்சலை பிரித்து பார்த்தால் நூல்கண்டு இருக்குடா... அதான் சாத்தூர் போயி நாலு சாத்து சாத்துனேன்.
? ? ?
* * * * * * * 01 * * * * * * *
 
கோயில்ல யாரையோ... குத்திட்டானாமே குமரேசன், நீயும் எதுக்குடா அவன்கூட போனே ?
அடே கோயில்ல அலகு குத்தணும் வாடானு சொல்லி கூட்டிட்டு போனான், அங்கே போனால் திடீர்னு மேலத்தெரு பூசாரி மகள் அழகுமீனாவை குத்திட்டு ஓடிட்டான்.
? ? ?
* * * * * * * 02 * * * * * * *
 
மார்க்கெட்டில் தகராறாமே,,, நீயும் இருந்தியாம் என்ன பிரச்சனை ?
மீனு வாங்கப் போன, பரட்டை குமாரு மீன் கடைக்காரர் மகள் மீனாவை எவ்வளவுனு கேட்டுப்புட்டான், அதான் மீனாட்சி நகர் பயல்க போட்டு அடிச்சிட்டானுக...
? ? ?
* * * * * * * 03 * * * * * * *
 
நம்ம மளிகைக்கடை மனோகரனை அடிச்சிட்டாங்களாமே ஏன் ?
நம்ம, செம்புலிபுரம் செல்லத்துரை கடையில் புளி அரைக்கிலோ வேணும்னு கேட்டுருக்கான், அதுக்கு மனோகரன் நான் புலி வியாபாரம் செய்யலை கசாப்பு கடைக்கு போனு சொல்லி இருக்கான் அதான் அடிச்சிட்டானாம்.
? ? ?
* * * * * * * 04 * * * * * * *
 
நம்ம செட்டியார் தெரு செல்லப்பன், கைலாசம் கையை முறுக்கி ஒடிச்சிட்டானாமே ஏன் ?
கைலாசம் அவன் கடையில் நின்னு கையை ஆட்டி முறுக்கு வேணும்னு சொல்லி இருக்கான், இந்த செவிடன் செல்லப்பன் கையை முறுக்கணும்னு சொல்றானு நினைச்சு கையை முறுக்கி ஒடிச்சிட்டான்.
? ? ?
* * * * * * * 05 * * * * * * *
 
நம்ம குறிஞ்சி நகர் முதலாளி கம்ப்யூட்டர் வாங்குனதுக்காக மகனை அடிச்சிட்டாராமே ஏன் ?
மகன்ட்ட பெட்டியில் பணத்தை எடுத்துட்டு போயி கம்ப்யூட்டர் சாம்புராணி வாங்கிட்டு வானு சொல்லி இருக்காரு, இவனை அவரும் எப்பவுமே சாம்புராணினுதான் சொல்லுவாரா... சரி கம்ப்யூட்டர்தான் வாங்கச் சொன்னாரு போலனு நினைச்சுட்டு வாங்கி வந்துட்டான்.
? ? ?
* * * * * * * 06 * * * * * * *
 
வாடியார் வீதி நகைக்கடைகாரரு, பாஸ்கரன் மகனை அடிச்சிட்டாராமே ?
கோவிந்தன், கடைக்கு மகனை அனுப்பி முதலாளியிடம் சந்தா வேணும்னு கேளுனு சொல்லி இருக்காரு, அவன் போயி அவரோட மகள் சாந்தா வேணும்னு கேட்டுட்டானாம் அதுக்குத்தான் அடிச்சிட்டார்.
? ? ?
* * * * * * * 07 * * * * * * *
 
நம்ம மூவேந்தர்புரம் சன்னாசி, கண்டக்டரை எதுக்கு அடிச்சனாம் ?
கண்டக்டர் ஏதோ வீட்டு கோபத்துல சன்னாசியை உனக்கு டிக்கெட் எடுக்க நேரம் வரலையானு கேட்டுக்கான், இவனும் ஏதோ வீட்டுல இருந்த கோபத்துல என்னை சாகவா சொல்றேனு அடிச்சிட்டானாம்.
? ? ?
* * * * * * * 08 * * * * * * *
 
தியாகிகள் ரோடு பாத்திரக்கடையில இரண்டாயிரம் ரூபாய்க்கு வீட்டுக்கு பாத்திரம் கேட்டதுக்கு முதலாளி உன் மச்சினனை அடிச்சிட்டாராமே ?
இவன் இரண்டாயிரம் ரூபாயை கொடுத்து, வீட்டுக்கு பாத்திரம் கேட்கலை, வீட்டுப் பத்திரத்தை கேட்ருக்கான் அதான் அடியில விட்ருக்காரு
? ? ?
* * * * * * * 09 * * * * * * *
 
அம்முத்தெரு அழகப்பன் மச்சினனை போட்டு அடிச்சிட்டாராமே ?
ஆயிரத்து ஐநூறு ரூபாயை கொடுத்து மொத்தமா கறி வாங்கிட்டு வாடானு சொல்லி இருக்காரு, இவன் மூட்டம் போடுற இடத்துல போயி மொத்த ரூபாய்க்கும் கரி வாங்கிட்டு வந்துட்டானாம்.
? ? ?
* * * * * * *10 * * * * * * *
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
நாக்கை நல்லா வழிச்சுட்டு கேட்கணும், காதை நல்லா குடைஞ்சு விட்டு கேட்கணும் ?
 
Chivas Regal சிவசம்போ-
காதை குடையச் சொன்னால் குடை வாங்கிட்டு வருவான் போலயே... 

Share this post with your FRIENDS…

25 கருத்துகள்:

  1. வித்தியாசமாய் யோசித்து அனாயாசமாக எழுதி இருக்கிறீர்கள்.  அடுக்கடுக்காய் இப்படி தோன்றி இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  2. உங்கள் இந்தப்பதிவு எங்கள் பக்கத்தில்  எங்களுக்கு ஏன் அப்டேட் ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை பார்க்கவில்லை. இப்போது பார்த்தால் கண்ணில் படுகிறது!

      நீக்கு
    2. காரணம் தெரியவில்லை ஒருவேளை எதிர்க்கட்சிகளின் சதியாக இருக்குமோ ?

      நீக்கு
  3. உங்கள அடிச்சிக்க ஆளே இல்லை...

    அருமெ.. அருமெ..

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹா கில்லர்ஜி தலைப்பு பார்த்து ஹிஹிஹிஹி..

    உள்ளே ஒரே ரகளையால்ல இருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம்
      தமிழ இனி...?
      இப்படித்தான் போகும் போல...

      நீக்கு
  5. தமிழ சரியா பேசுடான்னு கவுண்டமணி செந்தில் பாணில இருக்கும்னு நினைச்சேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவுண்டமணி-செந்தில் காமெடி எழுதி விட்டால் போச்சு.

      நீக்கு
  6. இப்போ யாரு ஒழுங்கா தமிழ் பேசறாங்க! எல்லாம் சொல்ல "மாட்"ராங்கக் காரங்க தான். அதே போல் முதலமைச்சர் திரு ஸ்டாலின் என்பதற்கு முதலமைச்சராக இருக்கக் கூடிய திரு ஸ்டாலின் என்பார்கள். அப்போ வேறே ஒருத்தரும் முதலமைச்சராய் இருக்கலாம்னு தான் அர்த்தம் வரும்?

    இந்த ஷ, ஸ, யாருக்குமே வரலை. விஷயத்தை விஸயம் எனவும் கஷ்டம் என்பதைக் கஸ்டம் எனவும் சொல்கின்றார்கள். எழுதுகிறார்கள். இதிலே பயக்க, வயக்கம் எங்கே வரும்? :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஆசிரியர்கள் முதலில் தெளிவாக கற்பிக்கணும்.

      //இதிலே பயக்க, வயக்கம் எங்கே வரும் ?//

      இஃஹி இஃஹி இஃஹி

      நீக்கு
  7. அனைத்தையும் ரசித்தேன், நன்றாக இருக்கிறது.
    கடைசியில் சொன்னதும் அருமை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  8. "ல" வுக்கும் "ழ" விற்கும் வேறுபாடு தெரியலன்னா இப்படி தான் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஆம் தொடக்கமே தவறாக இருக்கிறது இன்றைய கல்வி முறை.

      நீக்கு
  9. வித்தியாசமான சிந்தனை அருமை

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிவு அருமை. ஒரு எழுத்துப் பிழையினால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அடிகள். என்னதான் அடிதடியாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். மிக அருமையாக யோசித்து எழுதியுள்ளீர்கள். இப்படி யோசித்து எழுத தங்கள் ஒருவரால்தான் முடியும். தங்களுடையது ஆழமான சிந்தனை. அருமையான எழுத்துக்கு பாராட்டுக்கள்.

    நான் நேற்று பதிவுலகம் வர இயலவில்லை. அதனால் பதிவுக்கு தாமதம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை ஆழ்ந்து படித்து ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  11. முந்தாநாளு எங்க ஊரு மேலத்தெருவுல அண்ணன் தம்பி ரெண்டு பேரு அடிச்சிக்கிட்டு கிடந்தானுக... ஒருவேளை எழுத்துப் பிழையால் வந்த விபரீதமாகத்தான் இருக்குமோ?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் கீழத்தெரு உயர்ந்தது, மேலத்தெரு தாழ்ந்தது என்ற பிரச்சனைதான்.

      நீக்கு