தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 01, 2023

வறண்ட கோலங்கள்

ணக்கம் நண்பர்களே... வசந்தகால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 
 
இதோ எனது பாடல்...
 
கசந்த கால மேளங்கள்
வீணாய் விளைந்த கேடுகள்
நிலைத்திடும் நினைவுகள்
பன்னீர் நீந்தும் கனவுகள்
 
விலையை தேடும் புரோகிதம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
விலையை தேடும் புரோகிதம்
இதிலும் எண்ண ஓவியம்
விலையில்லாத புனிதர்கள்
இவர்க்குமென்ன தரவுகள்
இல்லம் இன்றும் நன்று
இதில் சுரண்டும் நண்டல்லவோ
நிலைத்திடும் நினைவுகள்
பன்னீர் நீந்தும் கனவுகள்
 
கசந்த கால மேளங்கள்
வீணாய் விளைந்த கேடுகள்
நிலைத்திடும் நினைவுகள்
பன்னீர் நீந்தும் கனவுகள்
 
ஊரில் நாறும் பின்னமே
பாலன் கள்ளம் புரிந்தது
கள்ளவேளை கருவூலம்
கடக்கவில்லை மறுமணம்
நந்தி நந்தி பாவா
என்னை துறக்க கடினமா
நிலைத்திடும் நினைவுகள்
பன்னீர் நீந்தும் கனவுகள்
 
கசந்த கால மேளங்கள்
வீணாய் விளைந்த கேடுகள்
நிலைத்திடும் நினைவுகள்
பன்னீர் நீந்தும் கனவுகள்
கசந்த கால மேளங்கள்
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1978
படம்: தியாகம்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
 
இதோ கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்
 
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
 
அலையிலாடும் காகிதம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
அலையிலாடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று
அதில் இரண்டும் ஒன்றல்லவோ
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
 
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
 
தேரில் ஏறும் முன்னமே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்லவேளை திருவுளம்
நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா
உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
 
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள்
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=dWE7tGOL9f4
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

16 கருத்துகள்:

  1. நல்ல பாடல். மாற்றும்போது பொருள் வருமாறு எழுதினால் இன்னும் ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களது கருத்துக்கு நன்றி முயல்கிறேன்.

      நீக்கு
  2. வசந்த கால கோலங்கள் பாட்டும் சோகமாக இருக்கும், நீங்களும் சோகமாக் கவிதை படைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி சோகப் பாடல் இல்லையா....பன்னீரில் நீந்தும் கனவுகள் என்பதற்குப் பதில் கண்ணீரில் நீந்தும் கனவுகள் னு வந்திருக்கலாமோ?!!! அல்லது கண்ணீர் பெருகும் கனவுகள்? ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக "கண்ணீர் சிந்தும் நினைவுகள்" என்பது உண்மையான பாடல் வரிகள்.

      நீக்கு
  4. ஸ்ரீராம் சொல்லியிருப்பது எனக்கும் தோன்றியது கில்லர்ஜி. இனி அடுத்த முறை அப்படி எழுதுங்க...உங்களால் முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்று தற்போதைய செட்யூல்ட் பாடல்கள் முடியட்டும்.

      தாங்கள் சொன்னபடியே எழுதி விடலாம்.

      வருகைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  5. கசந்த கால மேளங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  6. தியாகம்னு ஒரு படம் வந்திருக்கா? இன்னிக்குத் தான் தெரியும். அது என்ன நந்தி நந்தி பாவா! அதுக்கு என்ன அர்த்தம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க என்னது இன்றுதான் தியாகம் படம் தெரியுமா ? நீங்கள் ஜிவாஜி ரசிகை இப்படி சொல்லலாமா ?

      உண்மையான பாடல் வரிகள்
      "நன்றி நன்றி தேவா"

      ஆகவே "நந்தி நந்தி பாவா"

      தத்துவம் சொன்னா ரசிக்கணும்.

      நீக்கு