தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 24, 2023

கடவுளிடம் கேள்வி கேளுங்கள்

 

ன்று பகலில் ஓர் குட்டித்தூக்கம் கனவு வந்தது, அது கனவென்று விழித்த பிறகே எனக்கு விளங்கியது என்பதையும் இங்கு விளக்குகிறேன். கனவில் நான் கடவுளைக் கண்டேன் ஆம் அவர் கடவுள் என்பதும் பிறகே விளங்கியது, அதாவது நான் விழித்த பிறகு. இருப்பினும் அவரிடம் நான் உரையாடும் பொழுதே இவர்தான் இறைவனோ என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது.
 
இறைவா நான் ஏன் இங்கு இருக்கிறேன் ?
உனது பூலோக வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது ஆகவே உம்மை அழைத்து வந்தோம்.
 
நான் வாழவே இல்லையே... பிறகு எப்படி முடிவுக்கு வந்தது என்று சொல்லலாம் ?
நீர் உடலோடு உயிரோடு, உலாவி வந்தாயே... அதுதான் வாழ்வு.
 
உடலோடும், உயிரோடும் நடைபிணமாகத்தானே நடந்தேன் அது எப்படி வாழ்வாகும் ?
ஆம் பலரும் உடலிருந்தும் உலாவ இயலாமல் கிடந்து வாழ்ந்ததை நீர் பார்த்து இருப்பாயே அவ்வகையில் உமக்கு உயர்வான வாழ்வுதான்.
 
நான் பூலோகத்தில் நினைவு தெரிந்த காலம் முதல் சந்தோஷமாக இருந்ததாக தெரியவில்லையே... ?
உனக்கு கொடுத்ததை உணர்ந்து வாழாமல் பிறருக்கு கொடுத்துக் கொண்டே இருந்ததால் உமது வாழ்வு முடிந்து விட்டது தெரியாமலே காலத்தை கடத்தி விட்டாய். ஆகவே சந்தோஷத்தை நீர் உணராமலேயே முடித்து விட்டாய்.
 
எனக்கு துரோகம் செய்தவர்கள் சந்தோஷமாகவே வாழ்கிறார்கள், ஆனால் நான்தான் அவைகளை தொட முடியாமல் போய் விட்டது.
நீ எதற்காக அடுத்தவர்களின் சந்தோஷத்தை பார்க்கிறாய் ?
 
அவர்கள் நல்லது செய்ததை நான் பார்த்ததே இல்லையே ?
அது உனது வேலை இல்லையே...அது நான் பந்தப்படும் நிர்வாகம்.
 
சரி நான் மீண்டும் சந்தோஷமாக வாழமுடியாதா ?
உமது காலம் முடிந்து விட்டதே ?
 
சரி மனிதன் சந்தோஷத்தை உணர்வது எப்படி ?
அது மனம் பந்தப்பட்ட விடயம்.
 
சரி மீண்டுமொரு வாய்ப்பு கொடுக்க கூடாதா ?
தீர்ப்புகள் இங்கு திருத்தப்படுவதில்லை.
 
பூலோகத்தில் நீதியரசர்கள் சன்மானம் கொடுத்தால் கொலை செய்தவனையே நிரபராதி என்று மாற்றி எழுதுகின்றார்களே... ?
இங்கு அதற்கு வாய்ப்பு இல்லை ராஜா.
 
நீர் படைத்த மனித ஜடங்களே மாற்றி எழுதும் பொழுது உம்மால் முடியாதா ?
அவர்களின் அறிவுக்கு எட்டாத விடயங்கள் நிறைய இருக்கிறது.
 
நானும் அறிந்து கொள்கிறேன் அவர்களுக்கு எட்டாத அறிவுதான் என்ன ?
ஒரு ஐந்து அகவை சிறுமியை காமுகன் பலாத்காரம் செய்து கொன்று விடுகிறான் என்று வைத்துக்கொள். அவனுக்கு நீதிபதிகள் கொடுக்கும் தண்டனை என்ன ?
 
அதிகபட்சமாக மரணதண்டனை கொடுப்பார்கள்.
சரி இன்னொரு மனிதன் ஒட்டு மொத்தமாக ஆயிரம் மனிதர்களை கொன்று விடுகிறான் என்று வைத்துக்கொள் அவனது தண்டனை என்ன ?
 
அதுவும் மரணதண்டனையாகத்தான் இருக்க முடியும்.
அது எப்படி ஒரு கொலை செய்தவனுக்கும், மரணதண்டனை, ஆயிரம் மனிதர்களை கொன்றவனுக்கும் மரணதண்டனை ?
 
வேறு வழியில்லையே... அதற்காக ஆயிரம் முறைகள் அவனுக்கு மரணதண்டனை கொடுக்க முடியுமா ?
முடியும் அதற்கு இங்குதான் சாத்தியம்.
 
அவனுக்கு இந்த அளவுக்கு மட்டுமே அறிவைக் கொடுத்தது யார் ?
யாம்தான் கொடுத்தோம்.
 
ஒவ்வொரு மனிதனும் ஆலயங்களுக்கு சென்று நல்ல அறிவைக்கொடு இறைவா என்று உம்மை வணங்கி உம்மிடம் அருள் பெற்று நல்ல மனிதனாக, உலகுக்கு நல்ல செயல்கள் செய்கின்றனரே இதற்கு காரணவாதி யார் நீர்தானே ?
ஆம் யாமேதான் வேறு யாராக இருக்க முடியும் ?
 
அப்படியானால் அவன் நல்ல மனிதனாக வாழ்ந்து முடித்ததற்கு காரணம் அவனல்ல நீர்தான் இல்லையா ?
நிச்சயமாக யாம்தான் இதற்குள் உமது வாரியாரும், பெரியாரும் இருந்தனர்.
 
அப்படியானால், கெட்டவனாக வாழ்ந்து இந்த உலகை நாசமாக்கியவனின் செயலுக்கும் நீர்தானே காரணமாக இருக்க முடியும். காரணம் நீயின்றி அசையாது உலகு என்பது மெய்தானே... ?
? ? ?
 
என்ன பதிலைக் காணோம் ?
இப்பொழுது என்னதான் சொல்ல வருகிறாய் ?
 
உம்மால் ஆக்கவும் முடியும், அழிக்கவும், முடியும், தீர்க்கவும் முடியும், தீர்ப்பை திருத்தவும் முடியும் ஆகவே எமக்கு சற்று காலஅவகாசம் கொடுத்து இவ்வுலக வாழ்வில் சந்தோஷத்தை அனுபவிக்க இயலாமல் போனாலும் பரவாயில்லை. தொட்டுப் பார்க்க, மீண்டுமொரு சந்தர்ப்பம் கொடுப்பாயாக. நான் நிச்சயம் திரும்பி வருகிறேன் வாக்கு மாறமாட்டேன் நான் இந்திய அரசியல்வாதி அல்ல.
(ஆஹா... இவன் தேவகோட்டைக்காரன்ல... தேவையில்லாமல் வாயைக் கொடுத்து மாட்டி விட்டோமே... வந்தவுடன் தண்டனையை கொடுத்து தூக்கிப் போட்டு ராவாமல் தர்க்கம் செய்தது நமது தவறு)
 
மைண்ட் வாய்ஸில் நினைப்பது எனக்கும் கேட்கிறது பதிவர்களுக்கும் கேட்டு இருக்கும். தீர்ப்புகள் திருத்தப்படலாமே...
நல்லது உமது வாழ்வு சிறிது காலம் சொர்க்க பூமியான கைலாசாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வா என்று ஆசீர்வதித்தோம். நித்திஞ்சிதம் நமஹ...
 
ரஞ்சிதமே... ரஞ்சிதமே... உன் உதட்டை... கடிச்சு...
திடீரென அலைபேசியின் ரிங்டோன் சத்தம் கேட்டு விழித்தேன். கனவேதான். இதை பதிவர்களுக்கு சொல்லணுமே... உடன் கணினியை திறந்தேன்.
 
கில்லர்ஜி https://www.youtube.com/watch?v=Q-SES2h92j4 தேவகோட்டை
 
சாம்பசிவம்-
இப்படி தர்க்கம் செய்து மறு வாய்ப்பு கிடைக்கும் என்றால் மேலே போன அரசியல்வாதிகள் எல்லோரும் மறுபடியும் வந்து ஆட்சியை புடிக்கலாமே ?

Share this post with your FRIENDS…

42 கருத்துகள்:

  1. நன்றாய் இருந்தது.  இறைவனின் கணக்கு என்றும் தோற்பதில்லை.  நீடிக்க வேண்டும் என்பதும் இறைவனின் விருப்பமாகவே இருக்கும்!

    பதிலளிநீக்கு
  2. தொடங்கிய விதம் ரொம்ப தத்துவார்த்தமாக இருந்தது.  அதை அப்படியே அதே பாதையில் தொடர்ந்திருக்கலாம் என்றும் தோன்றியது.  அப்புறம் நகைச்சுவையாக்கி விட்டீர்கள்.  எனினும் ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எந்த பதிவாயினும் இரசிக்க முடிந்தால் மகிழ்ச்சியே...

      நீக்கு
  3. இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் என்றும் இனிமை. இணைப்புகளை வேறு தளத்தில் திறப்பது போல அமைத்தால் நலம். பாடல் கேட்டு விட்டு பின்னால் வரவேண்டும் என்று தோன்றாமல் மூடினால் மறுபடி புதிதாக தளத்துக்கு வர வேண்டி இருந்தது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நானும் சென்று வந்தேன் ஏதோ குழப்பம் வந்து விட்டது.

      நீக்கு
  4. கர்ணன் திரைப்படப் பாடலில் கண்ணதாசன் இந்த வரிகளை அமர்க்களமாக எழுதி இருப்பார்...  அதாவது மனிதன் நல்லவனாக வாழ வைத்ததும் இறைவன்தான், கெட்டவனாக வாழ வைத்ததும் இறைவன்தான் என்று வரும் வரிகளை..

    "மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன்  கண்ணன் புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்...அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான் கண்ணனே கொலை செய்கின்றான்..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் சிறப்பான பாடல் வரிகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் நன்றி ஜி

      நீக்கு
  5. உத்திரகோசமங்கை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.
    கனவில் இறைவனுடன் உரையாடியது அருமை.
    நீடிக்க வேண்டும் உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக பேரன் , பேத்திகளுடன் பல்லாண்டு.
    நல்ல காலம் வந்து விட்டது, இறைவன் கனவில் வந்து இருக்கிறார் அதுவே நல்ல அறிகுறி.
    பழைய பதிவை படித்தேன்.

    நாம் எல்லாம் அவன் ஆட்டி வைக்கும் பொம்மைகள். எல்லாம் அவன் செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்து கருத்தை பதிவு செய்தமைக்கும், சுட்டிக்கு சென்று வந்தமைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. லோக்கல் கவுன்சிலரிடமே கேள்வி கேட்கமுடியாது... இவர் கடவுள்ட கேள்வி கேட்கச் சொல்றாரே.. பதிவைப் படித்துப் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே கவுன்சிலர் பதவியை கொடுத்ததே நாம்தானே......

      நீக்கு
  7. எப்படியோ வரம் வாங்கி பூமிக்குத் திரும்பியாச்சு... இனி என்ன.. பதிவுகள் எழுத வேண்டியதுதான்.

    இறை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைலாசாவில் போய் பதிவு எழுதினால் நித்தியை புகழ வேண்டுமாமே...

      நீக்கு
  8. உங்களிடம் மாட்டிக்கொண்ட கடவுள் எப்படி இருந்தார்? அதையும் சற்று விவரித்து இருக்கலாமே.

    நான் கடவுளைக் கண்டேன். ஒரு குழந்தை வடிவிலே.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அவரை உணரத்தான் முடிந்தது

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  9. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கும் நெறி 477

    பதிலளிநீக்கு
  10. நீதியரசர்களும் நம்ம வெங்கோலனின் கும்பல் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      எல்லா இடமும் இப்படித்தான்...

      நீக்கு
  11. "மாமாஸ்" எல்லாம் எந்த தவறும் செய்யலாம், தண்டனை கிடையாது... மநுநீதி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதிக்கு நீதி போலும்...

      நீக்கு
    2. யார் தவறிழைத்தாலும் தண்டனை உண்டு என்பது மனு நீதியை முழுமையாக உள்வாங்கிப் படித்தோருக்குத் தெரிந்திருக்கும். இப்போதுள்ள அரசியல் வியாதிகளில் துண்டுப் பிரசுரங்களில் அல்ல.

      நீக்கு
    3. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  12. // வாரியாரும், பெரியாரும் //

    சிறப்பு...

    பதிலளிநீக்கு
  13. தர்க்க வாதம் சிறப்பு .
    உத்திரகோசமங்கை நான் பிறந்து வளர்ந்த ஊர். நாங்கள் விளையாடிய அந்தக் கோபுர வாசல் தரிசனம் கிடைத்தது . நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே அப்படியா ? மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  14. கனவில் கடவுளைக் கண்டு வரம் பெற்று வந்தமைக்கு வாழ்த்துகள். நீண்ட காலம் பேரன், பேத்தியரோடு மனம் மகிழ, உள்ளம் குளிர சந்தோஷமாக வாழவேண்டி அந்தக் கடவுளையே பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கனவில் கடவுளை கண்டு வந்தமைக்கு வாழ்த்துகள். கடைசியில் கடவுளை கேள்விகணைகளால் தாக்கி விட்டீர்கள். அதன் பரிசாக உங்கள் வாழ்வில் எல்லாம் நல்லதாக நடத்தி தந்து விடுவார் கடவுள். நானும் பிரார்த்தித்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. கில்லர்ஜி ரொம்ப ரசித்து வாசித்தேன். உங்கள் பதிவுகளில் இதை பெஸ்ட் என்று கூடச்சொல்வேன்!!! நல்ல கேள்விகள்....கடைசியில் சிரித்துவிட்டேன்!!

    உங்ககிட்ட மாட்டிக்கிட்டவர் சிவாஸ்‌ரீகல் கிட்ட மாட்டியிருந்தா என்ன கேள்விகள் கேட்டிருப்பா சிவாஸ்னு யோசிச்சேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      சிவாஸிடம் மாட்டினால் கடவுளும் டாஸ்மாக் கடையை தேடி ஓடியிருப்பார்.

      நீக்கு
  17. சிறப்பான பதிவு..
    மகிழ்ச்சி ஜி..

    பதிலளிநீக்கு
  18. தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடமை அம்மா என்று அகம் மகிழ்க!..

    இது நீதிநெறி விளக்கப் பாடல் வரிகள்.. இதுவே இறை தத்துவம்..

    இது திருக்குறளிலும் உள்ளது..

    மனிதன் இதை உணர்ந்து கொண்டால் பிரச்சினை ஏதும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமரகுருபரரின் பொன்மொழியோடு கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஜி

      நீக்கு
  19. அண்ணியின் முந்தானையைப் பற்றி இழுத்த துச்சாதனனும் கடைசியில் சொர்க்கத்துக்குத் தான் சென்றான்!..

    நமது பார்வையில் அது மகா பாவம் தான்!..

    ஆனாலும், எல்லாமும் முன்னரே தீர்மானிக்கப் பட்டவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

      வாழ்க வையகம்

      நீக்கு
  20. முப்பாட்டன் ஒருத்தர் அடுத்தவன் பொண்டாட்டியைத் தூக்கிக் கொண்டு வந்துட்டார்..

    ஆனாலும், அவர் தோள் ல தான் அவர் ஈஸ்வரனும் ஈஸ்வரியும் ஊர்வலம் வர்றாங்க..

    எல்லாமும் முன்னரே தீர்மானிக்கப் பட்டவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி காரணம் இன்றி காரியங்கள் நிகழ்வது இல்லை.

      நீக்கு