தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 10, 2023

ப்ரியாவால் கிடைத்த ஃப்ரீ


தீபாவளி அன்று தீபாவுக்கு வலி
எடுக்க, வழியில் போன ஆட்டோவை
அழைத்து மருத்துவமனை போனான்
தீபக்,  அழகான ஆண் மகவு பிறந்தது.
* * * * * * * 01 * * * * * * *
 
ஓவியப்பாடத்தில் மதிப்பெண்
எடுக்க நான் தீட்டிய ஓவியத்தை
கண்டு திட்டினார் ஆசிரியர் ஆர்யா
காரணம் படத்தில் ஆடையில்லை.
* * * * * * * 02 * * * * * * *
 
கன்னி ஒருத்தி கடந்து போனாள்
பெயரென்ன  என்றேன் ‘’கனிஷ்கா’’
ஆண் குரல் கேட்டு திரும்பினேன்  
அவளது அப்பா ஏட்டு ஏகாம்பரம்.
* * * * * * * 03 * * * * * * *
 
நகைகள் வாங்க வழக்கம்போல்
நாகைக்கு போனாள் நாகலட்சுமி,
அங்கு வாங்கினால் ராசியாம் கூட
போனான் கணவன் நாகநாதன்.
* * * * * * * 04 * * * * * * *
 
மனைவியும் நானும் திருமணத்திற்கு
புறப்பட்டோம் ஏங்க ‘’பேக்கு’’ எடுத்துட்டு
வாங்க என்றாள், அவள் சொன்னது
அவளது ஹேண்ட் பேக்கைத்தான்.
* * * * * * * 05 * * * * * * *
 
அவளை பிடித்து முத்தமிட்டேன்
அவளோ அலறி சத்தமிட்டாள்
ஏனென்று காரணம் கேட்டேன்
கணவன் வருகிறான் என்றாள்.
* * * * * * * 06 * * * * * * *
 
காய்கறிக்கடையில் கூடையுடன்
நின்ற என்னை ‘’வாங்க வெங்காயம்’’
கிலோ இருபது என்றவரை பார்த்தேன்
அவர் சொன்னது வெங்காயத்தைதான்.
* * * * * * * 07 * * * * * * *
 
வானத்தில்  சுதந்திரமாக பறந்து
சென்றன ஜோடியாக புறாக்கள்
மொட்டை மாடி கொடியில் காயப்
போட்டேன் மனைவியின் பிராக்கள்.
* * * * * * * 08 * * * * * * *
 
பூக்கடையில் நின்ற அத்தை மகள்
‘’வாடா’’ மல்லி வாங்கித்தா என்றதை
கேட்டு அதிர்ந்தேன் அவள் கேட்டது
வாடாமல்லி என்று பிறகே புரிந்தது.
* * * * * * * 09 * * * * * * *
 
ஜன்னலோரத்தில் நின்று ஜடை
பின்னிய பிரியாவை  ஜாடையாக
பார்த்ததால்  அவளது அண்ணன்
பின்னி எடுத்தான் ஃப்ரியாக எனை
* * * * * * * 10 * * * * * * *
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
இப்பத்தான் புருஷனை வாடா, போடானு சொல்றதுதானே புதிய கலாச்சாரம்.
 
சிவாதாமஸ்அலி-
வானத்து புறாக்களுக்கு கிடைத்த சுதந்திரம் பூமியில் புருசனுக்கு கிடைக்கவில்லையே...

Share this post with your FRIENDS…

36 கருத்துகள்:

 1. அவனுக்கு தீபன் என்று பெயரிட்டு விடலாம்!

  முட்டை முகம் குச்சிக்கை, குச்சிகால்களுக்கு ஆடை எதற்கு என்று கேட்கலாம்!

  என் சகோதரி போலவே இருக்கிறாள் நைனா என்றேன்!

  பதிலளிநீக்கு
 2. நாக்குத்தள்ளி காத்திருந்து காரைக்குடி வந்தான் மறுபடி !

  உடனே எடுத்துக் கொண்டு கூடக்கிளம்பினான் ஷோக்கு சுந்தரம்!

  உடன் வருபவள் என் மனைவி என்றேன்!

  பதிலளிநீக்கு
 3. - இருங்க வெண்ணெய் 

  வாங்கிட்டு வர்றேன் என்றேன்.

  - அடுப்பெரிய பயன்பட்டன கொட்டாங்கச்சி சிராய்கள்.

  பதிலளிநீக்கு
 4. வாங்கி கொடுத்து விட்டு 'வாடி சாப்பிடலாம்' என்றேன்.  அதிர்ந்தவள் புரிந்து கொண்டாள் "வா டீ சாப்பிடலாம்"; என்பதை!

  அண்ணன் எடுத்தான் பின்னி..  ப்ரியாவின் கண்களில் கண்ணீர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கவிதைகள் எல்லாமே சிறப்பு ஸ்ரீராம்ஜி.

   வருகைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
  2. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

   வாடாவுக்கு போட்டியாக "வா" டீ நன்றாகவே இருக்கிறது. ரொம்பவே ரசித்தேன். இப்படி நூறு வருடங்களுக்கும் முன்னிருந்த "வா" டீக்கள் தாம் சூடு பொறுக்காமல் வாடாமல்லியாகவே இருந்து இப்போது வாடாவாக உருமாறி வந்திருக்குமோ.? ஹா ஹா. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. ஹாஹாஹா ஸ்ரீராம், வா டீ குடிக்கலாம் சூப்பர்!!!!

   கீதா

   நீக்கு
 5. கில்லர்ஜியின் கவிதை அருமை... எண்ணச் சிறகுகள்தாம் எங்கெங்கோ செல்லுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தங்களது ரசிப்புக்கு நன்றி

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை அத்தனை கவிதைகளும் சிறப்பாக இருக்கிறது. ரசித்தேன். உண்மை.. காலம் மாறி விட்டது. இப்போதுள்ள பூவையர்களின் வாடா, போடாக்கள் இப்போது சகஜமாகி விட்டது. இது தெரிந்திருந்தால், அந்த வாடா மல்லி பூவும் தன் பெயரை அன்றே மாற்றிக் கொண்டிருக்கும்.:))
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 7. மற்றவன் பெண்டாட்டியை முத்தமிடத் துவங்கியது என்று முதல்? 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இது நினைவு தொடங்கிய காலம் முதல்...

   கைக்குழந்தையாக இருந்தபோது பாட்டி, அப்பத்தா, அம்மாயி, பெரியம்மா, சின்னம்மா, அத்தைகளிடம் தொடங்கியது...

   நீக்கு
 8. கவிதை நன்றாக இருக்கிறது.நன்றாக யோசிக்கிறீர்கள்.
  சந்திரசேகரன் சாருக்கு சொன்ன பதில் அருமை.
  உங்கள் பாணியில் ஸ்ரீராம் எழுதிய கவிதையும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பதிவை ஆழ்ந்து ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்.

   நீக்கு
 9. 'திருப்பக்' கவிதைகளில் திறமை தெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. கில்ல்ர்ஜி எல்லாமே ரசித்தேன் அதில் குறிப்பாக, வாடா மல்லி!!

  பெயரேன்ன - பெயரென்ன

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ரசித்தமைக்கு நன்றி. இதோ பிழையை மாற்றுகின்றேன்.

   நீக்கு
 11. இப்பத்தான் புருஷனை வாடா, போடானு சொல்றதுதானே புதிய கலாச்சாரம்.

  வெளக்குமாத்தால மாத்துறததை உட்டுட்டீங்களே..

  பதிலளிநீக்கு
 12. பாட்டி, அப்பத்தா, அம்மாயி, பெரியம்மா, சின்னம்மா, அத்தைகளிடம்..

  ஆகா!..

  பதிலளிநீக்கு
 13. ப்ரியாவால் கிடைத்த ஃப்ரீ..

  ஒன்னும்
  இல்லையே!..

  பதிலளிநீக்கு
 14. ப்ரியாவால் கிடைத்த ஃப்ரீ..

  என்னன்னு சொல்லுங்க!..

  பதிலளிநீக்கு
 15. கில்லர்ஜியும் ஸ்ரீராமும் போட்டி போட்டுக் கொண்டு எழுதி இருப்பவை எல்லாமே அருமை. எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ! ஜேகே அவர்களுக்குச் சொல்லி இருக்கும் பதில் மிக அருமை. பொருத்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

   நீக்கு