தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 21, 2023

நடந்தது நன்றாகவே நடந்தது

   னிதர்களுக்கு, சந்தோஷங்களும் கவலைகளும் இணைந்து இருப்பதுதான் வாழ்க்கை மகிழ்ச்சிகளை ஏற்றுக் கொள்ளும் மனது, கவலைகளை ஏற்பதில்லை. ஒரு மனிதன் இறுதிவரை சந்தோஷமாக வாழ்ந்து கழிக்க வேண்டுமெனில் பணம் இருந்தால் மட்டும் போதும் என்று நினைப்பது அறிவீனம். எத்தனையோ செல்வந்தர்கள் மகிழ்ச்சியை இழந்து நிற்பதற்கு காரணம் என்ன ?
 
பணமே இல்லாத எத்தனையோ ஏழைகள் மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் உண்டு போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. நாம் மகிழ்ச்சியாக வாழ்வது வேறெங்கும் இல்லை நமது மனதில்தான் இருக்கிறது. சரி இந்த மனதை கொடுப்பது யார் ? அதுதான் இறைவன். என்ன நடந்தாலும் அவைகளை இயல்பாக பார்த்து, கடந்து போகும் மனப்பக்குவம் நமக்கு இருக்கிறது என்றால் ? அதுதான் இறைவனை நமக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய அருட்கொடை.
 
இது நமது இறுதி வாழ்வுவரை நமக்கு மகிழ்ச்சியைத்தரும். மரணமே நிகழ்ந்தாலும் இது நமது வாழ்வின் ஓர் அங்கம் நடந்தது நன்றாகவே நடந்தது என்ற கீதாசாரத்தின் வார்த்தையை மனதுள் ஏற்றி கடந்து போகிறவர் எவரோ அவரே நல்ல வாழ்வு வாழ்பவர். கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது ? ஆனாலும் அதனை விட்டு சிலரால் வெளியேற முடியாது. காரணம் இறைவன் அவனுக்கு கொடுத்த மனது இப்படித்தான்.
 
சமூகத்தில் வெட்கப்பட மறுப்பவனும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறான். வெட்கப்படுபவனிடம் சமூக தவறுகள் இருக்காது. பிறருக்கு சொல்லும் ஆறுதல்கள் என்றுமே அவர்களுக்கு பயன்தரக்கூடியதாக இருக்காது. இதில் நாம் பிறருக்கு சொல்லும் ஆறுதலும் அடங்கும். இருப்பினும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வது நமது பண்டைய காலம் முதல் உள்ள மரபு. அவரவர் வேதனை அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.
 
நாம் இறைவனிடம் நமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பையும், செல்வத்தையும், சிறந்த வாழ்க்கையையும் கொடு என்று பிரார்த்திக்கின்றோம் ஆனால் யாராவது நமது மக்களுக்கு எந்த நிலையிலும் கவலைப்படாத நல்ல மனதைக்கொடு என்று கேட்கின்றோமா ? கிடையாது. மனம்தான் நமது வாழ்க்கையில் நிம்மதியைத் தருகிறது. ஆகவே இறையிடம் நமது மக்களுக்கு நல்ல மனதைக் கேட்போம்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
இல்லாத மனசை எங்கே போயி கேட்கிறது ?

Share this post with your FRIENDS…

21 கருத்துகள்:

  1. எல்லாவற்றுக்கும் மனசுதான் காரணம் என்பது சரிதான்.  நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று போவது எல்லா நேரங்களிலும் உடனே  சாத்தியப்படுவதில்லை.  ஆனால் எவ்வளவு சீக்கிரம் சுதாரிக்கிறோம் என்பதில் இருக்கிறது.  விழுவது சகஜம்.  எப்போது எழுகிறோம் என்பதே விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  2. சிலரின் மனது எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக்கொண்டேதான் இருக்கும், அவரவர் குணநலன்கள் போல. சிலர் சட்னு கோப்ப்படுவாங்க, முன்கோபிகள், எப்போதும் டென்ஷன் பார்ட்டி.... இதைல்லாம் படைப்பின் விசித்திரங்கள், அவரவர் பிறந்த கிரகநிலையைப்்பொறுத்தது. மாறாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      //கிரகநிலையைப்்பொறுத்தது//
      உண்மை தங்களது கூற்றும் சரியே...

      நீக்கு
  3. கில்லர்ஜி, மாபெரும் சக்தி நமக்கு எல்லாமே நல்லதாகத்தான் தருகிறது. மனம் உட்பட. அதை நல்லதா வைச்சுக்கறதும் நம்ம கையிலதான் இருக்கு. ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு விதத்தில். சில சமயம் நடப்பதை ஏற்றுக் கொண்டுவிட முடியும் சில சமயம் சோர்வு ஏற்படும்தான் ஆனால் அதிலிருந்து மீண்டுவிடுவது நல்லது. அதற்குத்தான் நிறைய நல்ல வழிகள் இருக்கின்றனவே. அதில் எது நமக்கு சரியாகிறதோ அதை பற்றிக் கொண்டுவிட வேண்டியதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  4. எல்லாம் நம் மனதில்... அருமை...

    பதிலளிநீக்கு
  5. மனம் தான் அனைத்துக்கும் காரணம். என்பது உண்மை.
    மனமே இறைவன் வாழும் இருப்பிடம். அந்த இறைவனிடம் நல்ல மனதை கேட்போம்.

    மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
    மனமதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே
    மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம்
    மனத்திலே உள எல்லாம் மற்றெங்குத் தேடுவீர்
    - வேதாத்திரி மகரிஷி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      வேதாத்திரி மகரிஷி அவர்களின் தத்துவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  6. சிறப்பான கருத்து தோழர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. மனமே முருகனின் மயில் வாகனம்.

    பதிலளிநீக்கு
  8. இது தான்..
    இவ்வளவு தான்..
    இப்படித் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. மிக அருமை. ஆழ்ந்த கருத்துள்ள பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. அருமைங்க ஐயா 👏 இது போன்ற பதிவை பதிவிட எனக்கும் கற்று தாருங்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கு வந்தனம்.

      தொடர்ந்து வாருங்கள் நண்பரே...

      நீக்கு