You Want See Big size ? Just Click One Time Photo Inside.
பிரான்ஸ்
தலைநகரம் பாரீஸில், நண்பர் பிரபு கண்ணுச்சாமியின் வீட்டில் தங்கினேன், வாழ்வில்
மறக்க கூடாத உதவியாளர்.
பிரான்ஸில், நான் மட்டுமே
புகைப்படக்கருவியுடன், சுற்றியதால் பெரும்பாலான சித்திரங்களும், காட்சிகளும் நானிலில்லாமல்...
நான் கண்டு ரசித்தவை உங்கள் விழிகளுக்கும்...
பாரீஸ் கோபுரத்தின்
உச்சிக்கு தொங்கு பெட்டியில் சென்றுவர, 14.00 € யூரோ வசூலிக்கிறார்கள், இதில் இரண்டு நிலைவரை
படியில் ஏறிபோய் தொங்கு பெட்டியில் சென்றுவர, 8.50 € யூரோ வசூலிக்கிறார்கள், மேலும் ஊனமுற்றோர்களுக்கு
கூடுதல் சலுகைகளும் உண்டு.
பழமை வாய்ந்த கட்டிடங்களை பாதுகாத்து
வருகிறார்கள், பெரும்பாலும் இடித்து விடாமல், உள்ளுக்குள்ளேயே புதிய நவீனங்களை
புகுத்தி விடுவதுதான் இவர்களின் சிறப்பம்சம்.
பெரும்பாலும்
ஆறு நிலைகளுக்கும் கீழான கட்டிடங்கள்தான் அதிகமாக காணப்படுகின்றன.
புகைவண்டி போக்குவரத்து
என்னைப் போன்ற பாமரனுக்கும், புரியும் வகையில் வழிவகை செய்து இருக்கிறார்கள்.
பிரயாணச்சீட்டு 6.50 € யூரோவுக்கு எடுத்துக் கொண்டால், ஒருநாள் முழுவதும் உபயோகப்படுத்தி, எங்கும் எத்தனை முறையும் சென்று வரலாம்,
பிரயாணச்சீட்டு 6.50 € யூரோவுக்கு எடுத்துக் கொண்டால், ஒருநாள் முழுவதும் உபயோகப்படுத்தி, எங்கும் எத்தனை முறையும் சென்று வரலாம்,
பயணிக்கும் போதே அடுத்த நிலையத்தில் நாம் இறங்க வேண்டியது
இடதுபுறமா, அல்லது வலதுபுறமா, என்பதை ஒலிபெருக்கியில் ப்ரெஞ்சு மொழியில் அறிவித்து
விடுகிறார்கள், இதனால் பயணிகள் இறங்கத் தயாராகி விடுகிறார்கள், நிலையம் வந்ததும்
தாணியங்கி கதவுகள் திறக்க, ஒரு வினாடியில் பயணிகள் இறங்கி, மறு வினாடியில் பயணிகள்
ஏறி, அடுத்த வினாடியில் வண்டி புறப்பட்டு விடுகிறது.
எல்லோருமே, எப்போதுமே
சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள், நம்மூரிலுள்ள வாழைபழ சோம்பேறிகள் வந்தால்
அவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும்.
எனக்கு ஆச்சர்யமான விசயம்
என்னவென்றால் சுரங்கப்பாதையில் ஓடும் புகைவண்டிகள், நான்கு திசைகளிலும் செல்கிறது
மேலே நகரம், இது எப்படி சாத்தியம் ?
அதுவும் இதை புகைவண்டி கண்டு பிடித்த
ஆண்டுகளிலேயே அமைக்கத் தொடங்கி விட்டார்கள், இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது நாம்
எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறோம் ?
தொலைதூர புகைவண்டிகளின் சக்கரங்கள் நமது
ஊரைப் போலவே இருக்கிறது.
உள்ளுக்குள்ளேயே, அதாவது சுரங்கப்பாதையில்,
ஓடும் புகைவண்டியில் இரும்பு சக்கரத்துடன் பேருந்தில் உள்ள ரப்பர் சக்கரங்களையும்
பொருத்தி உள்ளார்கள், இதனால் பயணிகளுக்கு இது அதிகமாக இறைச்சல் கொடுப்பதில்லை.
நான், வியந்த ஓவியமே, நல்ல கலைக்காவியமே...
கோபுரத்தின் உச்சியில், எனது இந்தியாவைப்பற்றி....
மனிதன் எப்படி, எப்படியோ, முடிவில் இப்படி.
போட்டோ, எடுக்க போட்டா போட்டி.
காவலர் விரைவூர்தி.
My, Great Indian Train from My Sweet India.
குறிப்பு – நம் இந்தியாவில், இருப்புப் பாதைக்காண திட்டம் 1832 ஆம் ஆண்டில் வரையப்பட்டது, 1836 ரில் முதல் இருப்புப்பாதை தற்போதைய, சென்னையின்
சிந்தாரிப்பேட்டை பாலம் அருகே சோதனை ஓட்டமாக அமைக்கப்பட்டது.
1837 லில்
செங்குன்றம் ஏரிக்கும், செயின்ட் தாமஸ் மவுண்ட்டின் (பரங்கிமலை) கற்சுரங்களுக்கும் இடையே 56 கி.மீ. (35 மைல்) தொலைவிற்கு
நிறுவப்பட்டது.
1844-லில் அப்போதைய கவர்னர் ஜெனரல் Enry Artinge தனியார் துறையினரும் இருப்புப் பாதைகள்
அமைக்க அனுமதித்தார்.
1853 April 16 முதல்
பயணிகள் போக்குவரத்து தொடர்வண்டி மும்பையின் போரிபந்தருக்கும், தானேக்கும் இடையே 36 கி.மீ. (21மைல்) தொலைவிற்கு இயக்கப்பட்டது.
காணொளி
F.P- 19 Nov 2012
.jpg)
.jpg)


