மன்னா...என்னா ?
எதிரி நாட்டு படையை தோற்கடிப்பதற்கு சிறந்த யோசனை ஒன்று நேற்று நள்ளிரவில் டாய்லெட் போகும் போது எமக்கு உதித்தது...
சொல்லுங்கள் மந்திரியாரே....
போர்க்களத்தில் திடீரென நமது அந்தப்புரத்து அழகிகளை ஆடவிட்டு வீரர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு அவர்கள் மயங்கும் தருணத்தில் டாஸ்மாக்கில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டால் சுலபமாக வென்று விடலாமே...
ஹூம் மங்குனி அமைச்சரே, அவர்கள் மதுவுக்கு மயங்காமல் மாதுவுக்கு மயங்கி அழகிகளை அள்ளிக் கொண்டு பரியில் ஏறிப்பறந்து விட்டால் நாளை நான் என்ன சிங்கி அடிப்பதா ?
மன்னிக்கவும் மன்னா, நான் இந்த வழியை யோசிக்கவில்லை.
இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குள் வேறு நல்ல யோசனை கூறாவிடில் உமது வாயில் ¾ படி அமிலம் ஊற்றப்படும்.
? ? ?
***********************************************************************
மன்னா, சந்தோஷமான செய்தியொன்றை தங்களுக்காக தாங்கி வந்துள்ளேன்.
அப்படியா... உடன் அந்தச் செய்தியை சொல்லுங்கள் படை வீரரே...?
எதிரி நாட்டு மன்னருக்கு ஓலை அனுப்பினேன் உடன் மறு ஓலை வந்திருக்கிறது இனி சோழக்காட்டு திசையை நோக்கித் தலையை வைத்துக்கூட படுக்க மாட்டோம் என்று.
ஆஹா கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது படை வீரரே... அப்படி என்ன செய்தி சொல்லி அனுப்பினீர்கள் பாலக்காட்டு படைகளுக்கு ?
எங்கள் மீது போர் தொடுத்தால் ? போர்க்களத்தில் திரைப்பட முன்னணி, பின்னணி நடிகைகளை மேக்கப் இல்லாமல் நிறுத்தி வைப்போம் என்று.
ஆஹா அற்புதமான யோசனை, வெல்டன் படை வீரரே...
***********************************************************************
மந்திரியாரே, நொங்கு நாட்டு மன்னருக்கு படை உதவி அனுப்பினோமே... உடன் திருப்பி அனுப்பி விட்டாரே... ஏன் ?
மன்னரே படை வீரர்கள் 100 பேரும் சொறி, சிரங்கு, படை, பத்தோடு போனார்களாம் ஆகவே கோபப்பட்டு நம் மீது போர் தொடுப்பதாக அறிவித்துள்ளார் மன்னா.
அப்படியா... அறிவித்தார் உடன் நமது நாட்டு வீரர்கள் 1000 பேரை அந்த நாட்டுக்குள் ஊடுறுவி குடிபுக ஏற்பாடு செய்யுங்கள்.
மன்னிக்க வேண்டும் அரசே... அப்படிச் செய்யமுடியாது...
ஏன் ?
நம்மிடம் உள்ள 1000 படை வீரர்களுமே ஏற்கனவே அந்த நாட்டு ‘’குடி’’மகன்களே ஆகவே அவர்கள் பயந்து கொண்டு போக மறுக்கிறார்கள்.
? ? ?
***********************************************************************
மந்திரியாரே, மங்களதேசத்து மன்னர் தங்குவதற்கு நமது பங்களாவை தயார் செய்து விட்டீர்களா ?
இல்லை அரசே...
ஏன் ?
அந்தப் பங்களாவில்தானே பங்களாதேஷிலிருந்து வந்த தங்களது மங்களாவின் தாயார் தங்கி இருக்கிறார்கள்.
அப்படியானால், ராமாவரம் தோட்டத்தில் ஏற்பாடு செய்யலாமே...
அதில்தான் மன்னா, தங்களது புவனேஷ்வரம் புவனா தங்கி இருக்கிறார்கள்.
அப்படியானால், நமது நீலாம்பூர் அரண்மனையில் தங்க வைக்கலாமே...
நேற்றுதானே மன்னா, நீடாமங்கலம் நீலாம்பரியை தங்க வைத்தோம்.
? ? ?
***********************************************************************
என்ன மந்திரியாரே சொல்கிறீர்கள் நண்பர் அலிக்கு போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த உணவுகள் திரும்பி விட்டனாவா ?
ஆம் மன்னா அவர்கள் சொன்னபடிதான் கேப்பைக்களியும், புளிக்குழம்பும் வைத்து அனுப்பினோம் இப்பொழுது சொல்கிறார்கள் நாங்கள் கேட்டது புலிக்குழம்பு என்று குழப்புகிறார்கள்
அப்படியா... சொன்னார்கள், இது நமது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் தாங்கள் உடனடியாக 1000 எலிகளை பிடித்து ஆச்சி மசாலாவில் கலந்து எலிக்குழம்பு வைத்து புலிக்குழம்புதான் எனச்சொல்லி அவர்களை குழப்பி பழி வாங்கி விடுங்கள்.
நல்லது மன்னா, அப்படியே ஏற்பாடு செய்கிறேன்.
***********************************************************************
மறுநாள்....
மன்னரே நேற்று தாங்கள் சொன்னதைப்போலவே 1000 எலிகளை பிடித்து புலிக்குழம்பு எனக்குழப்பி விட்டோம் ஆனால் இப்பொழுது அதேபோல் கேட்கிறார்களே... தினமும் எலிகளுக்கு எங்கே போவது ? ஆச்சி மசாலாவாவது நிறுவனத்தை மிரட்டி ஓசி வாங்கி விடலாம்.
அப்படியானால் இன்று பல்லிகளை பிடித்து குழம்பு வைத்துக் கொடுங்கள்.
எல்லாம் சரி மன்னா, ஆனால்..... திடீரென்று பல்லிகளுக்கு....
உடன் மக்களுக்கு அறிவியுங்கள் வீட்டிலிருக்கும் பல்லிகளை இன்றே பிடித்து கொடுப்பவருக்கு ஒரு பல்லிக்கு 2 ½ குவைத் தினார் வரும் வைகாசி முதல் நாளில் கொடுக்கப்படுமென அறிவியுங்கள்.
மன்னா, அப்படிச் செய்தால்....... வீரர்கள் அனைவரும் இறந்து விடுவார்களே...
விளங்கா முடுமை அமைச்சரே நான் பல்லியை போடச்சொல்வதே... அவர்களை பலி கொடுக்கத்தானே... அந்த வீரர்களை வைத்துக் கொண்டுதானே மன்னன் அலி நம்மை எள்ளி நகையாடுகின்றான்.
சரி மன்னரே அப்படியே செய்து விடுகிறேன், உடனே தங்களது குவைத் நண்பர் தஞ்சையம்பதி திருவாளர். துரை செல்வராஜூ அவர்களுக்கும் ஓலை அனுப்பி விடுகிறேன் மன்னா.
அவருக்கு எதற்காக ?
வைகாசி முதல் தேதி மக்கள் கூடி விடுவார்களே, குவைத் தினார் வேண்டுமே....
மண்ணு முக்குழி அமைச்சரே அதெல்லாம் வேண்டாம் தினார் வேண்டும் என்பவர்கள் காளி கோயிலின் பலி பீடத்தில் வலது கையின் கட்டை விரலை பலி கொடுத்து விட்டு தினார் பெற்றுச் செல்லவும் என அன்று காலை அறிவியுங்கள் மறு நொடியே கூட்டம் காவல்துறை கண்ணீர் புகை விட்டது போல் கலைந்து விடும்.
? ? ?
***********************************************************************
சுகமான சுமைகள்.
அனைவருக்கும் இனிய
சுதந்திர தின வாழ்த்துகள்.











