அம்மா தெருவுல உள்ளவங்க பூராம் என்னை வண்டு மகன் வாண்டு அப்படினு சொல்றாங்களே... ஏம்மா ?
உங்க
அப்பா எந்த நேரமும் பேசுறவங்கள்ட்ட காதுல வண்டு குடையுறது மாதிரி தொனத்தொனனு
பேசிக்கிட்டே இருக்காருல அதனாலதான்.
*-------------------------------------------01------------------------------------------*
அப்பா
உன்னை சித்தி விநாயகர் கோயிலுக்கு கூட்டிட்டு போனாரே... நல்லா வேண்டிக்கிட்டியா ?
இல்லேமா, நம்ம சித்தி செல்வநாயகி வீட்டுக்குத்தானே கூட்டிட்டுப்போனாரு...
? ? ?
*-------------------------------------------02------------------------------------------*
ஏம்மா, எனக்கு நிறைய கறியை வச்சுட்டு அப்பாவுக்கு மூளையை மட்டும் வைக்கிறீங்க ?
அப்பவாவது,
உங்க அப்பாவுக்கு வளருதானு பார்ப்போம்.
*-------------------------------------------03------------------------------------------*
அம்மா, செப்டம்பர் 20 தானே உங்களுக்கும், அப்பாவுக்கும் கல்யாண நாளு
ஆமா ஏன் ?
அப்பயேன் அப்பா அவரோட டைரியிலே துக்கநாள்னு எழுதி வச்சு இருக்காரு ?’
? ? ?
*-------------------------------------------04------------------------------------------*
அம்மா கந்தசஷ்டி கவசத்திலே, காக்க காக்க கனகவேல் காக்க அப்படினுதானே படிக்கணும்.
ஆமா,
என்ன... திடீர்னு சந்தேகம் ?
அப்பா, காக்க காக்க கனகவள்ளி காக்க அப்படீனு படிக்கிறாரே அது என்ன கவசம்மா ?
? ? ?
*-------------------------------------------05------------------------------------------*
சித்ரா சித்தி நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்களாமா ?
சித்ரா
சித்தியா அது யாரு... புதுசா ?
அதான்மா, அப்பா என்னை கொண்டு போயி ஸ்கூல்ல விட்டுப்புட்டு ஆஃபீஸ் போகும்போது
ஸ்கூட்டர்ல கூட்டிக்கிட்டு போறாங்களே, அந்த சித்தி.
? ? ?
*-------------------------------------------06------------------------------------------*
சனிக்கிழமை தவறாமல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துறியே, ஏம்மா ?
உன்
அப்பனைத்தான் சாத்தமுடியலை அதுக்காவது சாத்துவோம்னுதான்.
*-------------------------------------------07------------------------------------------*
அம்மா நேத்து அப்பா சொன்னபடி முருகன் கோயில்ல வேண்டிக்கிட்டேன்மா.
அப்பா
என்ன... வேண்டிக்கிற சொன்னாரு ?
சீக்கிரமா புது அம்மா கிடைக்கணும்னு.
? ? ?
*-------------------------------------------08------------------------------------------*
நாம,
அடுத்தவங்களுக்கு செய்யிற உதவியோ, பணமோ வலது கை கொடுக்குறதை இடது கைக்குகூட
தெரியாமல் கொடுக்கணும்.
ஓஹா, அதனாலதான் நேத்து பக்கத்து வீட்டு ஃப்ரீத்தி அம்மாவுக்கு அப்பா
மூக்குத்தி கொடுக்கும்போது மறைச்சு கொடுத்தாங்களோ...?
? ? ?
*-------------------------------------------09------------------------------------------*
அம்மா வாத்தியாரு, என்னை முட்டாப்பய மகனே அப்படினு கூப்புடுறாருமா...
இதிலிருந்து நீ படிச்சுக்கிட்டது என்ன....? என்றைக்கு இருந்தாலும் உண்மை வெளியே வந்தே தீரும் நாளைக்கு உன்னோட மகனை இந்த மாதிரி எந்த வாத்தியாரும் சொல்லக்கூடாது அந்த அளவுக்கு நீ படிப்புல கவனம் செலுத்தி படிக்கணும் கேட்டோ...?
ஓகேமா.
*-------------------------------------------10------------------------------------------*
காணொளி




