இன்றைய இளைய தலைமுறையினருக்கு
புரிதல் என்பது துளியளவும் இல்லை எல்லோருமே பட்டதாரிகள் ஆனால் படிப்பிற்கும்,
அறிவிற்கும் பந்தமில்லாத வர்க்கமாக வாழ்கின்றனர். இது அதிக சதவீதமாகவே இருப்பது
வேதனையான விடயமே...
செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பண்பு
இல்லை ஒரு மனிதன் தவறுகளை ஏற்றுக்கொள்ளும்போது எதிர்காலத்தில் தனது செயல்பாட்டில்
தவறுகள் இருக்கின்றதா ? என்பதை ஆலோசித்து வாழும்
பழக்கம் கிடைக்கிறது. அந்த பண்பு இல்லாதவர்கள் தனது வாழ்நாள் முழுவதுமே தவறுகளை
மறைக்க எதிர்வாதம் செய்தால் ? தனது தவறுகளை அடையாளம் காணஇயலாமல் போய்விடும். நமது காலத்தில் நாம்
வீட்டிலுள்ள ஏதாவதொரு சாதாரண பொருளைக்கூட தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டோம்
என்றால் உடன் பயந்து அழுது விடுவோம். காரணம் அப்பா வந்தால் அடிப்பார், அதற்கு முன்
வீட்டிலிருந்த அம்மா இரண்டு அடி கொடுத்து விடுவார் பிறகு தாத்தா, பாட்டி இதர மூத்த
உறவுகள் இருந்தாலும் அவர்களிடமும் அடியோ, அல்லது பேச்சோ பெற்றாக வேண்டும். இதன்
காரணமாக நமக்கு முன்னெச்சரிக்கையோடு வாழும் பண்பும், கவனமும் வளர்கிறது. இன்று
வீட்டிலுள்ள பொருளை அது விலை உயர்ந்த அலைபேசியாக இருந்தாலும் கீழே விழுந்தவுடன்
சற்றும் பதட்டமில்லாமல் உடைந்த அலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு முதலில்
சிரிக்கின்றனர். இதற்கு அடிப்படை காரணமென்ன ? நமது தாத்தா பாட்டி முதியோர் இல்லத்தில் ஆகவே
ஆலோசனை சொல்ல ஆளில்லை நாம் பிள்ளைகளை அடித்தோ, பயமுறுத்தியோ வளர்ப்பதில்லை ஏன் ? நமக்கு இருப்பதோ ஒரே பிள்ளை சத்தமிட்டால்
ஏதாவது ஏடாகூடமாக செய்து விட்டாலோ... அல்லது தற்கொலைக்கு முயன்றால் என்ன செய்வது ? என்ற பயம்.
ஆசிரியரிடமிருந்தும் நல்ல பண்புகள் வளர்வதில்லை
காரணம் நாம் ஆசிரியரிடம் பிள்ளைகள் முன்பே சொல்லி வைக்கிறோம். ///புள்ளையை அடிச்சே... கையை
ஒடிச்சுருவேன்/// என்று பிறகு என்னாகும் இப்படித்தான் இந்த
மனப்போக்கோடு வாழும் பிள்ளைகள் பருவ வயதை தொட்டதும் காதல் என்ற மாயவலைக்குள்
சிக்கி வெளியே வரத்தெரியாத சூழலில் சிக்கி விடுகின்றனர். பெற்றோர்களிடமும் சொல்ல
முடியாது காரணம் உறவுகளின் நிலைப்பாடு அப்படி... அதுவும் ஏதாவது ஜாதிப்பிரச்சனை
என்றால் எல்லாம் இழந்த பிறகே பெற்றோர்களுக்கு தெரிய வருகிறது.
இதோ கள்ள உறவு தவறில்லையாம் நமது நீதியரசர்கள்
நமக்கு கொடுத்திருக்கும் அற்புத பரிசு இந்திய கலாச்சாரத்துக்கு உலக அளவில் பெரும்
மதிப்பு உண்டு என்பது உலக மக்கள் அனைவரும் அறிவர் அதாவது இந்தியர்களைத் தவிர இதை
சீர்குழைக்க சதி நடக்கிறது இது தொடங்கியது இன்று நேற்றல்ல, இந்தியா சுதந்திரம்
பெற்ற காலத்திலேயே இதன் வேலைகள் முடுக்கி விடப்பட்டன... அதன் தொடக்கமாக
கூட்டுக்குடும்பங்கள் உடைத்தெறியப்பட்டன... ஆம் ஒரே வீட்டுக்குள் இருபது நபர்கள்
வாழ்ந்தால் வியாபாரங்களை பெறுக்குவது எப்படி ? இரண்டு, இரண்டாக உடைத்தால் பத்து
குடும்பங்களாகும் பத்து தொலைக்காட்சி பெட்டிகள், பத்து துணி உலர்த்தும்
இயந்திரங்கள், பத்து கணினிகள், பத்து மின் சலவைப்பெட்டிகள், பத்து மின்
அடுப்புகள், பத்து மாவரைக்கும் இயந்திரங்கள் இப்படி இத்யாதி, இத்யாதிகள்.
திரைப்படத்துறைக்கு தணிக்கைகுழு என்ற அமைப்பு இருக்கிறது அனைவரும் அறிந்ததே...
அவைகளில் நுழைந்து நமது பண்பாட்டை நசுக்கினார்கள். அதை நாம் அனைவரும் உணராமலேயே
மூழ்கி கிடந்தோம், கிடக்கின்றோம் இவையெல்லாம். உலகையே இயக்கி ஆளும் இலுமினாட்டிகளின்
வேலை அந்த கம்முனாட்டிகளை அடையாளம் காண்பது அத்தனை சிறிய விடயம் அல்ல நாம் மதி
மயக்கத்தில் இருக்கின்றோம். ஆகவே நல்லது, கெட்டதை பகுந்து அறியும் விழிப்புணர்வு
இல்லை.
இதோ தொலைக்காட்சிகளில் ஸ்மால்பீஸ் என்ற
நிகழ்ச்சியில் மூழ்கி அடுத்த வீட்டு நிகழ்வுகளை காண்பதில் சுகம் கண்டு, மூன்று
மாதங்கள் வீட்டில் அடைந்து கிடக்கிறோம், அது முடிந்ததும் அடுத்த மூன்று மாதம் ஆம்
இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது இவைகளின் பின்னணி என்ன ? என்றாவது நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டாம்
ஆராய்வோம் என்றாவது நினைத்துப் பார்க்கின்றோமா ? இல்லை காரணம் நாம் இன்னும் கூடுதலாக
இதிலிருந்து எதிர் பார்க்கிறோம் எப்படி ? பிரேசிலில் நடத்துகின்றார்கள் பிக் பிரதர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
அதனைப் போலவே அதில் காண்பிப்பது என்ன ? முக்கால் நிர்வாணக் காட்சிகள் நாமும் அவர்களைப் போல பார்த்தாலென்ன ? என்ற வன்மபுத்தி பக்கத்தில் அம்மா
இருக்கின்றாரே... கவலையில்லை, மகள் இருக்கின்றாளே... கவலையில்லை, மாமியார்
இருக்கின்றாரே... கவலையில்லை, மனைவி இருக்கின்றாளே... கவலையில்லை, கொழுந்தியாள்
இருக்கின்றாளே... சேர்ந்தே பார்ப்போமே... என்ற வக்கிரபுத்தி. மனிதனுக்கு இறைபயம்
இல்லாது போனதே இதற்கு அடிப்படை காரணம்.
இதோ ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களும் வரலாம்
என்று நமது நீதியரசர்கள் தீர்ப்பு ஆண்டாண்டு காலமாய் பாதுகாத்து வந்த ஐதீகங்கள்
தளர்த்தப்படுகின்றன.. இறைவனின் ஆகம செயல்பாட்டுக்குள் நீதிக்கு வேலையென்ன ? இவைகள் எல்லாமே நமது கலாச்சாரத்தை சீரழிப்பதே
உள்நோக்கம் இதற்கு நமது ஆட்சியாளர்களும் உடந்தையே.... கட்டப்பொம்மன்
காலத்திலிருந்தே காட்டிக்கொடுக்கும் எட்டப்பன்கள் உண்டு அவர்களின் வாரிசுகளும்
தொடர்ந்து வருகின்றார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்திய கலாச்சாரம்,
பண்பாடு சந்தி சிரிக்கும் நிலைக்கு வரப்போவது உறுதி. அந்நிலையை தொட்டால் நான்
சிலரைப்போல நாடு விட்டு போவேன் என்று சொல்ல விரும்பவில்லை இவ்வுலகை விட்டே போய்
விடுவதே கௌரவம் என்று உணர்கிறேன்.
வாழ்க எம் பாரதம்.
சிவாதாமஸ்அலி-
கள்ள உறவு தப்பில்லைனு காலம் போன காலத்துலயா
சொல்றது ? இருபது வருசத்துக்கு முன்னாலயே சொல்லி
இருக்கலாம். ஹூம் நமக்கு கிடைச்சுது இவ்வளவுதான்.
மீ தான் 1ஸ்ட்டூ 2ண்டூஊ 3 ட்டூஊ:) ச்ச்ச்ச்ச்சும்ம சொல்லி வைப்போம் எதுக்கும்:)..
பதிலளிநீக்குஅனைத்தும் உண்மைதான் இக்காலத்துப் பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையைப் பெரிதாகச் சொல்லி வளர்ப்பதில்லைத்தான் அதனால அவர்களாக உழைக்கத் தொடங்கும்வரை அருமை தெரிவதில்லை..
பதிலளிநீக்குஆம் இன்றைய நிலைப்பாடு இதுதானே வருகைக்கு நன்றி.
நீக்குபிக்கி பிறதர் அது ரி ஆர் பி ரேட்டை மட்டுமே நினைச்சு நடத்தும் ஒரு நிகழ்ச்சியாக்கி விட்டார்கள் தமிழ் நாட்டில்... இம்முறை நீதி நியாயம் கலாச்சாரம் எல்லாமே செத்திருந்தது அதில்...
பதிலளிநீக்குஇன்கு இப்போ நிறுத்தி விட்டார்கள் முன்பு அதற்கென ஒரு சனல் 24 மணித்தியாலத்தையும் காட்டும்... அதில் நடக்கும் கேவலங்கள் சொல்லி முடியாது... பிடிக்காட்டில் பார்க்காமல் விட்டுவிடோணும்.. அதுமட்டும்தான் நம்மால் பண்ண முடியும்.
நமக்கு பிடிக்கவில்லைதான் ஆனால் சமூகமாற்றம்தானே வீட்டுக்குள்ளும் வருகிறது...
நீக்குஐயப்பன் கோயில் சம்பிரதாயத்தில் நீதிமன்றம் மூக்கை நுழைத்தது தப்புத்தான்...
பதிலளிநீக்குஅது ஒரு பிரமச்சரிய விரத முறையைக் கடைப்பிடிக்கும் கோயில், அங்கு பெண்கள் போவது தப்புத்தான். இதில் சட்டம்சொல்ல என்ன இருக்கு, ஒவ்வொரு பெண்ணும் தானாக உணர வேண்டும் அங்கு போகக்கூடாது என்பதை.
பெண்களும் இதற்கு உடந்தையாவதுதான் வியப்பாக இருக்கிறது.
நீக்கு////சிவாதாமஸ்அலி-
பதிலளிநீக்குகள்ள உறவு தப்பில்லைனு காலம் போன காலத்துலயா சொல்றது ? இருபது வருசத்துக்கு முன்னாலயே சொல்லி இருக்கலாம். ஹூம் நமக்கு கிடைச்சுது இவ்வளவுதான்////
ஹா ஹா ஹா சே சே ஜஸ்ட்டு மிஸ்ட்டோ?:)..
இதை நீங்க சிவாதாமஸ்அலியிடம்தான் கேட்கோணும்.
நீக்குஅவரிடம்தான் கேட்டேன் .. நீங்க எதுக்குப் பதறுறீங்க கில்லர்ஜி ஹா ஹா ஹா:))
நீக்குநல்லா கேளுங்கோ, நான் பதறவில்லையே...
நீக்குஅந்தக் காலத்துல தப்பு செய்ய வெட்கப் பட்டார்கள்...
பதிலளிநீக்குஇன்றைக்கு விருது / விருந்து கொடுக்கின்றார்கள்...
ரொம்ப கோவக்கார குடும்பம் என்றால் புளிய மரத்தில் கட்டி வைத்து வெளுத்தார்கள்...
இன்று பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார்கள்...
நீங்களே சொல்லி விட்டீர்கள்...
மானத்தோடு வாழ்வோம் என்றவனுக்கு கிடைத்தது தூக்குக் கயிறு தான்...
வீரத்தோடு வாழ்வோம் என்றார்கள்..
அவர்கள் தலையை வெட்டி தொங்க விட்டான் வெள்ளையன்...
வெள்ளையனுக்கும் அடிவருடி விட்டவன் தமிழன்...
இல்லாவிட்டால் சுதேசி கப்பல் கவிழ்ந்திருக்குமா!...
காசு கொடுத்தான்
காட்டிக் கொடு!... - என்று...
வெள்ளையனைக் கொண்டாடும் வீணரும் இந்தத் தமிழகத்தில் இருக்கின்றார்கள் தானே!...
கல்யாணமின்றி பிள்ளை பெற்றவன்.. அடுத்தவன் பெண்டாட்டியோடு குடித்தனம் நடத்தியவன் எல்லாம் கோலாகமாக கொண்டாடி வருகின்றான் எனில்...
காறி உமிழ்ந்து விட்டு ஒதுங்கி நடக்க வேண்டியது நல்லது..
அதற்காக
கால்களை வெட்டிக் கொள்ளலாமா!...
துரை செல்வராஜூ ஸாரின் கடைசி இரண்டு வரிகள் டாப்.
நீக்குஅன்பின் ஜி அழகான பின்னூட்டம் வாழ்க வளர்க...
நீக்குஆமாம் ஸ்ரீராம்..துரை அண்ணாவின் கடைசி இரண்டு வரிகள்.....நானும் உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன்...
நீக்குகீதா
இனிய காலை வணக்கம் கில்லர்ஜி
பதிலளிநீக்குஆ மய்யமா....அப்பால வாரேன் வாசித்துவிட்டு...சில பணிகள்...
கீதா
வருக, மீண்டும் வறுக்க வருக...
நீக்குநேத்திக்குத் தொலைக்காட்சியில் சினிமா நடிகையைப் பார்க்கக் கூடிய கூட்டத்தையும் அதனால் போக்குவரத்து ஸ்தம்பித்ததையும் காட்டினாங்க! மக்கள் இப்படி அலைந்தால் நாடு முன்னேறுவது எப்படி? சினிமா நடிகையும் நம்மைப் போல் ஒரு மனுஷி தானே! சிறப்பான வடிவமா? அல்லது வேறு ஏதேனும் சிறப்பான குணமா? என்னமோ இந்த சினிமா மோகத்தில் மூழ்கி அனைத்தையும் இழப்பதில் தமிழர்களுக்கு ஈடு இணை இல்லை. அதனால் தான் சமீபத்தில் வந்த தீர்ப்புகளுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை.
பதிலளிநீக்குவருக சகோ இந்நிலை நீடித்துக்கொண்டே போவதுதான் வேதனை என்ன செய்வது....
நீக்குநீங்கள் சொல்லும் சந்தேகம் எல்லோருக்குமே வரும் வகையில்தான் நிகழ்வுகள் இருக்கின்றன.
பதிலளிநீக்குலேட்டஸ்ட்டாக தமிழக அரசு அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை இனி கொண்டாடக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது. எனக்குத் தெரிந்து மதவித்தியாசமின்றி அனைவரும் செய்யும் செயல் அது.
ஆமாம் ஜி நானும் படித்தேன் தி.மு.க. கூட ஆயுதபூஜை என்று சொல்லாமல் விடுமுறை தின வாழ்த்துகள் என்று சொல்கிறது.
நீக்குஅச்ச்சோ இதென்ன புது சட்டம் !! முந்தி ஸ்கூல் நாளில் மளிகை மற்றும் பிற கடைகளில் இருந்து வரும் ஆயுத பூஜை பொரிகடலைக்கு ஆலாய்ப்பறப்பேன் .அது என்ன சுவை தெரியுமா
நீக்குஆம் ஆயுதபூசையை மதப்பிரச்சனை ஆக்கி விட்டார்கள்.
நீக்குசின்ன குழந்தைகள் கையில் விலை உயர்ந்த செல்லை கொடுத்து விடுகிறார்கள் , குழந்தை கீழே போட்டு உடைத்த போது கவலை படுவது இல்லை . நீங்கள் சொல்வது போல் சிரிக்கிறார்கள்.
பதிலளிநீக்குமதக் கோட்பாடுகளை மதிக்க வேண்டும்.
நமக்கு பிடித்தவைகளை பார்த்துக் கொண்டு நிம்மதியாகஇருப்போம். மக்கள் ஆதரவு இல்லை என்றால் இந்த நிகழ்ச்சிகள் குறைந்து விடும்.
வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
நீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குஇன்றைய இளைஞர்கள் படித்தும், படிப்பின் பயன் இன்றியே,
வாழ்கிறார்கள்
ஆம் நண்பரே இது அழிவுக்கு வரும் நிலைப்பாடு.
நீக்குரசிப்புத்தன்மை வெறித்தன்மையாக மாறி பல வருடங்கள் ஆகி விட்டது ஜி...
பதிலளிநீக்குஆமாம் ஜி உண்மைதான் வருகைக்கு நன்றி
நீக்குகாலை வணக்கம் 🙏 ஜி.
பதிலளிநீக்குஇப்போதைய நிகழ்வுகள் பார்த்தால், படித்தால் மனது கஷ்டப்படுகிறது. எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்......
வாங்க ஜி இந்நிலை இன்னும் மோசமாகும்.
நீக்குகாலம் மாறுவதையும் உடைகள் மாறுவதையும் உணவு முறைகள் மாறுவதையும் கலாச்சாரம் மாறுவதையும் நாம் தடுக்க முடியாது .
பதிலளிநீக்குவருக சகோ உண்மைதான் புதுயுகம் எதில் கொண்டு போய் விடுமோ...?
நீக்குநாடு போகும் போக்கு சரியில்லை. எதைத்தான் மேலை நாடுகளைப்பார்த்து காப்பியடிப்பது என்று அளவே இல்லாமல் போய்விட்டது. காலம் காலமாக வரும் கலாச்சாரத்தை எடப்பாடி அரசும் நிறுத்துவது (ஸ்டாலின்/திமுக நிலைப்பாடுகளுக்காக) மிகவும் வேதனை.... இதெல்லாம் பாஜக வளர்ச்சியில்தான் கொண்டுபோய்விடும்.
பதிலளிநீக்குவருக தமிழரே மக்கள் மாக்களாக இருக்கும்போது ஆள்பவர்களை குறை சொல்லி பயன் ?
நீக்குகில்லர்ஜி நீங்க சொல்லிருக்கறது அத்தனையும் சரியே. நடப்பது எதுவும் சரியாகத் தெரியவில்லை.
பதிலளிநீக்குபொதுவாக நான் நினைப்பது நம் குழந்தைகளுக்கு நாம் சொத்து சேர்த்து வைக்கக் கூடாது. அவர்களுக்கு இந்த உலகில் நீந்தி வாழ வகை செய்து வாழ்க்கையை எதிர்கொள்ளக் கற்றுக் கொடுத்தால் மட்டும் போதும். சொத்து சேர்த்து அப்புறம் அப்பா அம்மாவிடம் அந்தச் சொத்திற்காகச் சண்டை போடுவது.... இரு பிள்ளைகள் இல்லை அதற்கு மேல் என்றால் அதற்குச் சண்டை போட்டு அதனால் குடும்பத்தில் பிளவு என்று ...எதற்கு? அதை விட முக்கியம் வாழ்க்கையை வாழக் கற்பது. குழந்தைகள் ஒரு வயதிற்கு மேல் அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே உழைத்துப் பெற வேண்டும் என்றுதான் இருக்க வேண்டும். இதில் நிறைய பேசலாம் ஜி. ஆய கலைகளுள் மிக மிகக் கடினமான கலை குழந்தை வளர்ப்பு...
கீதா
வருக அழகான விடயத்தை பகிர்ந்து கொண்டீர்கள். இதுதான் நமது கடமை.
நீக்குநீங்க சொல்லிருக்கற அந்த பீஸ் எல்லாம் எனக்கு நோ ஐடியா....தொ கா பார்ப்பது என்பதே அரிது.
பதிலளிநீக்குகீதா
இதுவே நல்லது தொடரட்டும்...
நீக்குசெருப்ப சேர்ல வச்சு ஆண்ட பாரதம்தானே...அந்த பாரதத்தில் கேன புத்தி, கிறுக்குபுத்தி,வன்ம புத்தி, செத்து கட்டையில போனாலும் மறையாத சாதிவெறிபுத்தி, மதவெறி புத்திதானே வளரும் நண்பரே....
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மைதான்.
நீக்குஇப்பயும் ஒன்னும் குறைஞ்சுடல.உங்க மீசைக்கே நாலு பொண்ணுங்க வருவாங்க. எஞ்சாய்ண்ணே
பதிலளிநீக்குஹி.. ஹி.. அப்படியா ?
நீக்குமிக சரியான வாதம் பாராட்டுகளுடன் வாழ்த்துகள்
பதிலளிநீக்குகவிஞரின் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குபரம்பரியத்தைக் கட்டிக்காப்பவர்கள் காக்கலாமே எந்த நீதித்தலமும் குறை காணமுடியாது
பதிலளிநீக்குநிச்சயமாக பாரம்பரியமிக்கவர்கள் அங்கிங்கு வாழத்தான் செய்கிறார்கள் ஐயா.
நீக்குஎப்படி ...இப்படியெல்லம் சிந்திக்கிறிங்கோ!....
பதிலளிநீக்குநல்லது...
https://kovaikkothai.wordpress.com/
வாங்க சகோ நலமா ? வருகைக்கு நன்றி.
நீக்குநம் சிந்தனையை மறக்கடிக்கவும், மழுங்கடிக்கவும் பல வேலைகள் நடைபெறுகின்றன, நிகழ்ச்சிகள் என்ற பெயரில். நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
பதிலளிநீக்குஉண்மைதான் அருமையாக சொன்னீர்கள். முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅந்த சின்ன பீஸே பெட்டர் எனும் அளவுக்கு அதை விட கேவலமான ஒரு மைக்ரோ பீஸ் ஒளிபரபரங்களாம் தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் ..
பதிலளிநீக்குஅந்த சின்ன பீஸை கொஞ்சம் நாள் நானும் பார்த்தேன் திட்டுறதுக்காகவே அப்புறம் வெறுத்துப்போச்சு ..நிறுத்திட்டேன் ..
ஒரு பதிவுக்கூட அங்கிளுக்கு எழுதி அப்புறம் அதெலலாம் வேஸ்ட்னு அழிச்சிப்போட்டேன் .
ஆனால் சின்ன பிள்ளைங்க வளரும் பருவத்தில் பார்க்கும் பார்க்கஉகந்தவை இவை அல்ல ..இது மட்டுமில்லை பல தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளில் பெரியவர்களை மரியாதைக்குறைவா பேசுறது முற்றிய பேச்சுக்கள் வயதுக்கு மீறிய பேச்சு செயல்கள்னு எல்லாம் வேதனையளிக்குது .மிக முக்கிய குறிப்பு எங்க வீட்டில் தொலைக்காட்சி இல்லை இந்த விஷயத்தை பத்திலாம் எனக்கு லிங்க் கொடுத்து யூ டியூப் பார்க்க வச்சதே அந்த தேம்ஸ் கரை பூசார்தான் கில்லர்ஜி .
அதேபோல் ஐயப்பன் சாமி கோவில் விஷயத்தில் உண்மையில் எனக்கு கோபமே..இவங்க இப்படிலாம் புது சட்டங்களை கொண்டு வரும் நேரகாலத்தில் முக்கியமான விஷயங்களுக்கு ஆக்கபூர்வமான விஷயங்களில் அவங்க மனதை செலுத்தலாம் ..
ஒரு தப்பை தெரியாம செஞ்சிட்டோம்னா ஐயோன்னு பதறிபோன காலம் போய் இப்போல்லாம் தப்பை நியாயப்படுத்துவதே ஆகிப்போனது நீதியரசர்கள் சில விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது .நம் நாட்டுக்கு லிவிங் டு கெதர் அப்புறம் இந்த திருமணத்துக்கு வெளியே உறவு இதெல்லாம் தேவையற்ற ஒன்று. புரிதல் இல்லாமக்களிடம் இவை தவறான பின் விளைவுகளை ஏற்படுத்தும் ..
///இப்படிலாம் புது சட்டங்களை கொண்டு வரும் நேரகாலத்தில் முக்கியமான விஷயங்களுக்கு ஆக்கபூர்வமான விஷயங்களில் அவங்க மனதை செலுத்தலாம்///
நீக்குஸூப்பர் அருமையாக சொன்னீர்கள் நீதி மன்றம் அவசியமில்லாததில் நுழைக்கப்படுவதற்கு பின்னால் அரசியல் உள்ளது.
கில்லர்ஜி இன்னொன்னும் சொல்லணும் .நாம் சின்ன பிள்ளையா இருந்தப்போ தெரியாம யாரையாவது போல் இமிடேட் பண்ணி காட்டினா அம்மா அப்பா நங்குன்னு கொட்டுவாங்க இல்லின்னா திட்டு கிடைக்கும் .இப்போ சின்ன பிள்ளைங்க பெரியவர்களை அவமானப்படுத்தற மாதிரி சீன்ஸ் வச்சி பெரிசு .கிழம் இப்படிலாம் பேச வச்சி கைதட்டி நடிப்பதை ரசிச்சி அதுக்கு மார்க்கும் தராங்க :(
பதிலளிநீக்குவேதனையா இருக்கு ..
ஒருமுறை அப்போ ஸ்கூல் டேஸ் fm ரேடியோவில் ப்ரியா என்பவரும் அவரது தந்தையும் நிகழ்ச்சி நடத்துவாங்க அதில் தந்தையின் உச்சரிப்பு கொஞ்சம் மாறுபட்டிருக்கும் ..பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு என்பத்தை// பாததியாரின் // என்று உச்சரிப்பார் அப்போ அதை கேட்டுட்டே நானும் அப்படியே சொல்லி சிரிச்சேன் அவ்ளோதான் அம்மா திட்டோ திட்டு கொடுத்தாங்க எனக்கு ..அவர் வயதென்ன உன் வயதென்ன இப்படியா மரியாதையில்லாம பேசறதுன்னு ..ஆனா இப்போ காலம் மாறி காட்சிகளும் மாறியிருக்கு ..கேலி கிண்டல்களை குடும்பத்தோடு ரசிக்கிறார்கள்
ஆம் இன்றைய சமூக சீரழிவுக்கு முக்கிய காரணம் சன் டி.வி மற்றும் விஜய் டி.வி இவை இரண்டும் முக்கிய பங்கு.
நீக்குகலை நிகழ்ச்சி என்ற பெயரில் அலங்கோலமான காட்சிகள் தினம் காண சகிக்கவில்லை, எப்போதுதான் தமிழகத்து மக்களுக்கு உணர்வு வரப்போகிறதோ...?
அத்தனையும் உண்மைதான். நல்லவேளை இந்தக் கூத்தை எல்லாம் பார்ப்பதில்லை. சும்மா இருத்தலே சுகம் என்றிருக்கிறேண். பள்ளிப் பருவத்தில் கையில் அலைபேசியைப் பிடித்தவர்கள், அதைத்தவிர வேறெதையும் பார்ப்பதில்லை.
பதிலளிநீக்குஅதைப் பார்த்துக் கொண்டே பள்ளிப் பேருந்தில் ஏறுகிறார்கள். நான் சொல்வது 11 வயதுக் குழந்தைகளைப் பற்றி.
கவலையாகத்தான் இருக்கிறேது. தானாகத் திருந்தினால் ஒழிய சொல்லித் திருந்துவது நடக்கப் போவதில்லை.
வாங்க அம்மா இதற்கு தீர்வு கல்வித்துறைதான் எடுக்க வேண்டும்.
நீக்குவருகைக்கு நன்றி.
விஞ்ஞானம் பெருக பெருக கலாச்சாரம் சீரழிகிறது.
பதிலளிநீக்குவருக நண்பரே நான் என்றுமே சொல்வது...
நீக்குவிஞ்ஞான வளர்ச்சி, மனித வாழ்வுக்கு வீழ்ச்சியே...
உண்மைதான் படித்தவர்கள் நிறைய சந்தர்ப்பங்களில் சிந்தித்துச் செயல்படுவதில்லை.அரசியமைப்புச் சட்டமும் (அடிப்படையில் அமைந்த தீர்ப்பும்) அய்யப்பனும் இன்று பெரிய விவாதப் பொருள். அடுத்தவர்களின் அந்தரங்கம் தனியுரிமை என்ற நிலை மாறி 100 நாட்கள் வரை கேளிக்கைப் பொருளாகிவிடுகிறது. இதில் நாம் கற்றதும் பெற்றதும் என்ன என்று சிந்திக்க வேண்டும். இந்தப் பதிவு இந்த பொருள்களில் கவனம் செலுத்தியுள்ளது.
பதிலளிநீக்குதங்களது விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது.
நீக்கு