தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 07, 2017

நவரத்தினங்கள்


என் மதியை மயக்கினாள் மஞ்சுளா
என் விதியை எழுதினாள் விமலா
என் வேலையை களைத்தாள் வேணி
என் சிந்தனையை கெடுத்தாள் சிந்துஜா
என் தூக்கத்தை துறத்தினாள் துளசி
என் பணம் தினம் பறித்தாள் பரிமளா
என் வீட்டு பத்திரம் மாற்றினாள் வீணா
என் காரை தாரை வார்த்தாள் காஞ்சனா
என் வங்கி கணக்கை வாங்கினாள் வனஜா

புதன், ஏப்ரல் 05, 2017

சிரிப்போமா ?

 நீர் வில்லன்னா... நானும் வில்லன்தான்.
இவருதான், மல்லுவேட்டி மைனராம்.

திங்கள், ஏப்ரல் 03, 2017

விதியே சிரித்தது


விதி என்பது உண்மையா ? எனக்கு இதில் நம்பிக்கை இருந்ததில்லை பிறகு நம்பிக்கை வந்தது 1991-ல் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்திருந்தால் என் வாழ்க்கை நாசமாய் போயிருக்காது ஒரு செல்வந்தரிடம் போய்க் கேட்டேன் அவர் நினைத்திருந்தால் கொடுத்திருக்கலாம் என் வாழ்வை காப்பாற்றி இருக்கலாம் மறுத்து விட்டார். எனக்கு பத்தாயிரம் பெரிய பணமே அல்ல ! காரணம் அன்றைய காலத்தில் நான் வாரம் 1000/ ரூபாய் வரை சம்பாரித்துக் கொண்டு இருக்கின்ற தொழிலாளி, என் வாழ்வு நாசமாக அவரும் காரணமாகி விட்டாரே எனக்கு கோபமாய் இருந்தது பின்னாளில் என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன் அவர் மீது கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம் ? அவர் எனக்கு கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லையே எனது விதி இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது அவர் என்ன செய்வார் ? 

சனி, ஏப்ரல் 01, 2017

தத்துபுத்து, சுவாமிகள்


அஸிஸ்டெண்டு அழகரு இங்கே வாடா...
ஆயிரம் ஆசிகள் என்றும் உனக்கேடா...

கேமராக்கள் தினம் பெறுகி விட்டதடா...