தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 01, 2017

தத்துபுத்து, சுவாமிகள்


அஸிஸ்டெண்டு அழகரு இங்கே வாடா...
ஆயிரம் ஆசிகள் என்றும் உனக்கேடா...

கேமராக்கள் தினம் பெறுகி விட்டதடா...
கேனப்பயல் கருப்பன் சதி செய்ததடா...

கருத்த போர்வை ஒன்றை போர்த்திக் கொள்ளடா...
வெறுத்த பார்வை கொண்டு வெகுண்டு நில்லடா...

அர்த்த ராத்திரியில் இந்த வேலையை செய்யடா...
அறுத்த தலையை ஆற்றில் எரிந்து செல்லடா...

சத்தம் கேட்காமல் நித்திரையில் கொல்லடா...
சுத்தம் செய்து கத்தியை எடுத்து கொள்ளடா...

 போலீஸ் பிடித்தால்.. என்நாமம் சொல்லடா...
போகணுமா... டிரான்ஸ்பர் என மிரட்டடா...

பித்தம் தெளிய நிறைய நித்திரை கொள்ளடா...
நித்தம் நான் சொல்லும் புத்தியை கேளடா...

- தத்துபுத்து தவசிதெரு தர்மானந்தா சுவாமிகள்

அபுதாபி அல்வஹ்தா மாலில் ஒருநாள் மூன்றாவது தளத்தில் சும்மா ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தேன் கால் மணிநேரம் போயிருக்கும் தலையை உயர்த்தி பார்த்தேன் எதிர்புறம் ஒரு பொம்மையின் மூக்கில் கருப்பன் நிறத்தில் கேமரா என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது எனக்கு கோபம் வந்து விட்டது நான் பப்பரப்பான்னு உட்காந்திருக்கும்போது முன்னறிவிப்பு இல்லாமல் என்னை வீடியோ எடுக்கலாமா ?
எனக்கு எனது பிரைவசி முக்கியம்)(
நேராக மேனேஜ்மெண்ட் ஆபீஸில் போய்...
 How can you take me a video ?  
எனக்கேட்டேன் அவர்கள் கூடுதலாக பேசவில்லை ஒரேயொரு வார்த்தை சொன்னதும் அர்த்தம் புரிந்து விட்டது, எத்தனை இங்கிலீஷ் சினிமா பார்த்திருக்கோம் வீட்டுக்கு வந்து கோபத்தில் எழுதினேன் அது இப்படி தத்தக்கா புத்தாக்கானு ஆயிடுச்சு. அவங்கே என்ன சொன்னாங்கே தெரியுமா ?
Get Out

நித்தியானந்தா சுவாமிகள் வெளியே மன்னிக்கவும் உள்ளே இருந்தபோது எழுதியது இப்பொழுதுதான் வெளியே வருகிறது
 - கில்லர்ஜி -

38 கருத்துகள்:

 1. நடுராத்திரி சாமியார் உண்மையில் பயங்கரம்.. தவசி தெரு சாமியார் இன்னுமா மாமியார் வீட்டுக்குப் போகவில்லை????...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரை இன்னும்தானே ஜி வணங்குகின்றார்கள் மக்கள்.

   நீக்கு
 2. ஆளுக்கொரு கோட்பாடுகள் உடன்
  ஆயிரம் சுவாமிகள் உருவானாலும்
  உண்மைக் கோட்பாடு மாறாதே!

  பதிலளிநீக்கு
 3. கில்லர்ஜிக்கே கெட் அவுட்டா
  கட் அவுட் வைத்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன்

  பதிலளிநீக்கு
 4. அருமை.
  நித்தியானந்தம் எங்கிருந்தாலும் அவரது ஆசி உங்களுக்கு உண்டு. நண்பரே!
  வாழ்க தர்மானந்தா சுவாமிகள் புகழ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலமா ?
   அவருடைய ஆசி யாருக்கு வேணும் நீங்கள் அவரின் பக்தரோ... ?

   நீக்கு
 5. தத்து பித்து ...இல்ல தத்து புத்து சுவாமியின் தத்துவங்கள்...ஐயோ கொஞ்சம் பயமா தான் இருக்கு..


  உங்களுக்கே கெட் அவுட் டா...oh god...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் இப்படி குழம்புறீங்க...? பயப்படக்கூடாது.

   நீக்கு
 6. ஹா..ஹா... சுவாமிஜியின் தத்துவங்கள் நல்லாயிருக்கு....
  உங்க மீசையைப் பார்த்துமா கெட் அவுட் சொன்னானுங்க....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே அன்றைக்கு கோடரி எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்.

   நீக்கு
 7. நீதி :சில இடங்களில் வாய் திறக்காமலிருப்பது உத்தமம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்காக நீங்களும் பயந்து கொண்டு கருத்து சொல்லாமல் போகலாமா ?

   நீக்கு
  2. ம்ஹூம் ... கோடி ரூபா குடுத்தாலும் வாயே திறக்க மாட்டேன்

   நீக்கு
  3. என்னிடமிருந்து "நயா" பைசா வராது.

   நீக்கு
 8. cctv கேமரா இருப்பதையும் ,அதை செயலாகாமல் தடுக்க முடிந்து இருந்தால் இவரை சக்தி வாய்ந்த சாமியார் என்று நம்பி இருக்கலாம் !கருப்பன் ஜெயித்து விட்டானே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைகள் நிரந்தரமாக உறங்கி விடாது ஜி

   நீக்கு
 9. சுவாமிகளுக்கு என் ஆசிகள்...தப்புத் தப்பு, சுவாமிகளின் ஆசி எனக்குத் தேவை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டீர்களா... நண்பரே.

   நீக்கு
 10. தத்துப்பித்துவம் நன்றாக இருக்கிறது. :)

  பதிலளிநீக்கு
 11. ஹஹாஹ்ஹ செமையா இருக்கு கில்லர்ஜி!~ நித்யானந்தாவுக்குப் போட்டியா ஹிஹிஹிஹ் மீண்டும் வரோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நித்தியோடு நான் எதற்கு போட்டி போடணும் ?

   நீக்கு
 12. சுவாமிகளுக்கெல்லாம் முன்னோடி நித்தியானந்தா என்றால் இம்மாதிரி பதிவுக்கும் கூடவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவுக்கு 'கரு' நித்திதானே ஐயா வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. முட்டாள் மக்கள் உள்ளவரை சாமியார்கள் எல்லோருக்கும் கொண்டாட்டமே

  சரி சரி கொடுவா மீசைக்காரரை கெட் அவுட் சொல்லிவிட்டதால் அவர் ஸாமியாராகப் போவதாகச் சொன்னாரே? இல்ல நிறைய சிஷ்யகோடிகள் வெயிட்டிங்க் ஆம்....ஹ்ஹஹஹ்ஹ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிஷ்யர்களை நம்புவதற்கில்லை காலம் கணினி மயமாகி விட்டது பட்டனில் கேமரா வந்து விட்டதே...

   நீக்கு
 14. உங்களை வெளியே போக சொன்னதால் உள்ளிருந்து கவிதை வந்தது போலும். இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 15. தாமதமாக வந்தாலும் அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படினாக்கா, முதலில் வந்தால் அருமையாக இருக்காதோ ?

   நீக்கு