தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 21, 2015

அறிவுக்கண்.

 
நமஸ்காரம் அம்மா.
நமஸ்காரம் ஐயா பொண்ணு என்ன ? சொல்றா...
நீங்களே கேளுங்க அம்மா.
மேடம் ரெண்டாவது பெயிலாயிட்டேன் ஒண்ணுமே புரியலை வாழ்க்கை இருட்டாயிடுமோனு பயமாக இருக்கு.
பயப்பட இதுல என்னம்மா ? இருக்கு பெயிலானால் என்ன ? தேவகோட்டை மீனாம்பாள் பையன் கில்லர்ஜி இல்லை இவணும் ஒண்ணாவதுலேயே மூணு வருஷம் பெயிலுதான் ஆனாலும் புண்ணை நல்லூர் அமிலம் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் போர்ஜரி மேனேஜ்மெண்ட்ல சேர்ந்து M.Ba. RSW. OPS Tec. KSRTC. Spam. படிச்சான் இங்கேதான் பெயிலாப்போன மண்ணுகளைக்கூட பொன்னாக மாற்றும் திறமையான ஆசிரியர்கள் இருக்காங்க கோட்டு ஸூட்டுப் போட்டு புண்ணை நல்லூர் அமிலம் இவணை எப்படி ? மாத்திருச்சு பார்த்தியா ? இங்கு படிக்கிறதுக்காக விழுந்து விழுந்து படிக்க வேண்டாம் சும்மா வந்துட்டுப்போனால் போதும் எக்ஸாமெல்லாம் எழுத வேண்டிய அவசியமே இல்லை இவண் புண்ணை நல்லூர் அமிலத்திலிருந்து வெளியே வந்து1 ½ மாசந்தான் ஆச்சு இப்பவே அபுதாபியிலே காலையிலே எந்திருச்சு 8 மணிக்கு டூட்டிக்குப் போறதுக்குள்ளே குழந்தைகளை கடத்தி பார்ட்-டைமா மட்டும் மாசத்துக்கு13 ஆயிரம் அமெரிக்கன் டோலர் சம்பாரிக்கிறான் அதுக்குப்பிறகு இவணை வேலைக்கு கூட்டிட்டுப்போக ஃப்ளாட்டு வாசலிலேயே ஒருநாளைக்கு கப்பல் மறுநாளைக்கு ஃப்ளைட் எப்படி ? வாழ்க்கை பார்த்தியா ? அதுபோல ஸ்விச்சர்லாண்ட் பேங்க் அக்கவுண்ட்ல சம்பளம் விழுந்துடும் கையில காசும், வாயில தோசையும் கொடுக்குது.
என் அறிவுக்கண்ணை திறந்திட்டீங்கம்மா ரொம்ப நன்றி.
இதைப்படிக்கிற உங்களுக்கும் சொல்றேன் இப்பவே உங்க குழந்தைகளையும் வீட்டை வித்தாவது பணத்தைக்கட்டி புண்ணை நல்லூர் அமிலத்துல சேர்த்து விடுங்க அதுக்குப் பிறகு உங்களோட தலையெழுத்தை பகவான்ஜி பார்த்துக்கிருவார்.

சாம்பசிவம்-
ஏண்டி, குசலாம்பா வீட்டுப்பத்திரத்தை எடுத்தாடி நம்ம சேட்டு கடைக்குப் போயிட்டு வாறேன்.
சிவாதாமஸ்அலி-
மொட்டையடிச்சவனைப் பார்த்தா வீட்டை அடகு வச்சவனுக்கு கடைசியிலே அடிக்கிறது மா3 இருக்கே.
CHIVAS REGAL சிவசம்போ-
கேட்கிறவன் கேனயனா இருந்தா ? எலி ஹெலிகாப்ட்டர் ஓட்டும்னு சொல்லுவாளுக... இந்த எழவுக்குத்தான் நான் புள்ளையே பெத்துக்கிறலே காலக்கெரகம் வேறென்ன ?

காண்-ஒளி.

குறிப்பு – ஐயா திரு. ஜியெம்பி அவர்களுக்கு விளம்பரங்களைப்பற்றி பதிவு போட்டதற்காக மன்னிக்கவும்.

75 கருத்துகள்:

  1. கல்வியை விளம்பரம் செய்து வியாபாரமாக மாற்றியாகி விட்டாச்சு ...மருத்துவ சேவையை வியாபாரமாக மாற்றியாகி விட்டாச்சு...மக்கள் மனதில் இருக்கும் கொஞ்ச நெஞ்ச மனிதாபிமானமும் சிறிது சிறிதாக வியாபாரமாக மாற்றப்பட்டு கொண்டே வருகிறது ..உங்க பாணில சொன்னா ....நாமல்லாம் 300 வருசத்துக்கும் முன்பே வாழ்ந்து முடிச்சிருக்க வேண்டிய ஆளுங்க சாமி ...தெரியாம இப்ப பிறந்து அல்லாடுறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமது தளத்திற்க்கு முதல் முறையாக வருகை தரும் (எனக்கும் தமிழ் எழுத வருமா ? ? ?) அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. 1.மகிமை
    2.வீரம்
    3.புகழ்
    4.செல்வம்
    5.ஞானம்
    6.வைராக்கியம்
    இந்த ஆறு குணங்களின் நாயகனே எம் பகவானே!
    இந்த கொடுமைக்கு எல்லாம் ஒரு அளவே இல்லையா?
    10 வது ரிசல்ட் வருதுல்ல!
    கில்லர்ஜி பதிவு சும்மா அதிருது இல்ல!!!
    -ஹா! ஹா!
    த ம 1 (முதல் மதிப்பெண் 10TH ரிசல்ட்)
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் யாதவன் நம்பியே வருக கவி மழையை தருக...

      நீக்கு
  3. ஐயையோ, நான் இம்பூட்டுப் படிப்பு படிச்சதெல்லாம் வீண்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அன்று தாங்கள் செலவில்லாமல் படித்தது கல்வி இன்று செலவோடு படிப்பது கலவி.

      நீக்கு
  4. கல்வியின் நிலையையும், பெற்றோர்களின் நிலையையும் தங்கள் பாணியில் பகிர்ந்துள்ள விதம் அருமையாக இருந்தது. இது காலத்தின் கோலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி தாங்கள் சொல்வதுபோல இது காலத்தின் கோலமே...

      நீக்கு
  5. யாரு நம்ம பகவான்ஜியா...? ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி நான் பகவான் அப்படினுதான் சொன்னேன் ஜி

      நீக்கு
  6. உண்மை தான் சகோ, தங்களின் பதிவு மனதின் வலி. கல்வி இன்றைக்கு காசாகிப் போனது மட்டும் இல்லை. முனைவர் பட்டம் பெற்ற என்னைப் போன்றோரின் வேலையும் காசாகிப் போனது.
    ஆனாலும் இந்த வெட்டிங் ஒட்டிங் சூப்பர் அப்பு.
    அப்புறம் நம்ம ராதிகா மேடம் உங்களைத் தேடி வராங்க.
    அட அடுத்த விளம்பரத்தில் தாங்கள் தங்களுடன் சேர்ந்து நடிக்க முடியுமா? என்று கேட்க.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ உண்மையான கருத்தைச் சொன்னீங்க பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்ற நிலையே இன்று இதனால் தங்களைப் போன்றவர்களின் திறமைக்கு கிடைத்த பட்டமும் மதிப்பிழந்து போகும் அவல நிலை தங்களின் மன வேதனையை உணர்கின்றேன்.

      என்னது மேடமா ? அதுவும் நம்ம... இப்படிப் பட்டவங்களுக்கெல்லாம் எனக்கென்று சில பெயர்கள் இருக்கின்றது நான் சினிமா நடிகைக்கு கோயில் கட்டுபவன் கூட்டம் என்று நினைத்து விட்டீர்கள் போல...
      நான் அந்தக்கோயிலை இடிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன் அந்தக் கோயிலைக் கட்டவேண்டும் என்ற யோசனையை முதலில் தந்தவனின் கருவை அறுக்கவேண்டும் என்ற கர்வம் உள்ளவன்.

      எனது பதிவைத் தொடர்ந்தால் எனது குணாதிசயங்கள் தங்களுக்குப் பிடிபடலாம் சகோவின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. பெயரில்லா5/21/2015 5:37 PM

      பதிவு அதிபர், நகைச்சுவை புரியாமல் இப்படி கெடா வெட்டி பொங்கல் வச்சுட்டீங்களே !
      தருமி தங்கப்பன்

      நீக்கு
    3. நண்பர் தருமி தங்கப்பன் அவர்களுக்கு எமது புரிதல் பற்றி சகோதரிக்கு தெரியும் நண்பரே...

      நீக்கு
    4. சகோ, தங்களைப் பற்றி தெரியும், தங்கள் பதிவின் ஊடாக, நான் சும்மா நகைப்புக்கு சொன்னேன். ஏன் இந்த ரௌத்திரம். ஆனாலும் இந்த கோபம் வேண்டும் தான். நன்றி.

      நீக்கு
    5. நானும் நகை வாங்கத்....சாரி நகைச்சுவைக்காகத்தான் சொன்னேன் சகோ மேலே தருமி அவர்களுக்கு சொன்னபதில் படித்தீர்கள்தானே
      எனக்கு இந்த ரௌத்திரம் இல்லையெனில் இந்த தளமும் இல்லை தாங்கள் என்னைத் தெரிநிந்திருக்கவும் முடியாது. மீள் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
    6. உடன் வந்தேன் சகோ,
      எனக்காகவுமா? நங்கள் எல்லாம் 1 கிளாஸ். பரவாயில்லை.இப்ப வந்ததும் நல்லதுக்கு தான் நான் எப்பவும் தங்கள் தெருக்குரல் என்ன என்குரல் என்று தானே இருக்கும். சரி,
      ஏன் இப்படி? நீதிபதியை விமர்சித்தால் கடவுளைத் தவறு சொல்வது போல், தப்பு கன்னத்துல போட்டுக்கோள்ளுங்கள். நன்றி.மற்றவை என் பதிவில்.நன்றி சகோ.

      நீக்கு
  7. தம +
    தொடரட்டும் அதிரடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழர் தொடர்ந்தால் ? தொடர்ந்து வெடி மழை பொழியும்.

      நீக்கு
  8. புண்ணை நல்லூர் அமிலம் என்னை இப்படி மாத்திடுச்சி மேடம்......ஹா...ஹா....ஹா

    பதிலளிநீக்கு
  9. ஏ சாமீ.. சதாசிவம்!...
    இனிமே - கோட்டு சூட்டு போட்டுக்கிறவனெல்லாம் அங்கே படிச்சவனுங்களா..

    என்னா ஒரு கேவலம்!..
    பேசாம (அல்லது பேசிக்கிட்டு) மாடு மேய்க்கலாம்...

    சாணி பொறுக்கி - அடை தட்டி வித்து நேர்மையா நாலு காசு சேத்து நிம்மதியா தூங்கலாம்..

    இப்படி புள்ளை புடிக்கிற வேலைக்கு அது எவ்வளவோ மேல்!..
    கையில காசு சேந்ததும் கல்யாணம் கட்டிக்கிட எங்கிருந்தாவது ஒரு அசலாம்பாள் கிடைக்காமலா போயிடுவாள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இனிமேல் தாங்கள் சொல்லும் முறைதான் சரியாகும்.

      நீக்கு
  10. அன்புள்ள ஜி,

    ’அறிவுக்கண்’ - ‘ஐ ’திறந்திட்டீங்க... !

    ‘அது என்னமோ தெரியல... எல்லாருக்கும் காயம்பட்டா ஆறமாட்டேங்கிது... ஆனா ஒங்களுக்கு மட்டும் காயம்பட்டா உடனே ஆறிடுது.... மனிதர் உணர்ந்துகொள்ள இது..................’

    உங்க காலத்தோட இரண்டாவது பெயில் எல்லாம் மலையேறிப் போச்சு... இப்ப எட்டு வரைக்கும் ஏன் ( ஒன்பதாவதும் சேர்த்துக் கொள்ளலாம்) யாரும் பெயில் கிடையாது.... காலம் மாறிப் போயிடுச்சு...!

    அப்பவே பாடிட்டாங்க... ‘காலேஜு படிப்பு காப்பி ஆத்திது... பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்கிது’ ன்னு!

    அட இதுக்கு போயி அலட்டிக்கலாமா?

    நன்றி.
    த.ம. 7.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே... யாருடைய அறிவுக்கண்ணைனு சொல்லவேஇல்லை.

      நீக்கு
  11. கல்வி வியாபாரக் கொள்ளையை இதைவிட விவரமாக யாரும் சொல்ல முடியாது. அருமையான பதிவு நண்பரே!

    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் கொள்கையை சொல்லும்போது நாம் கொள்ளையை சொல்வோம் நண்பரே வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. என்ன நான் சொல்றது....!!! உங்க காண் ஒளி சூப்பர். சொல்ல வந்த கருத்தை நகைச்சுவையாக, அருமையாக எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரத்தோடு வர ஆரம்பித்து விட்டீர்கள் நன்றி சகோ.

      நீக்கு
  13. வணக்கம் நண்பரே!
    புகைப்படத்தில் உள்ளவரை நான் பார்த்திருக்கிறேனே...!
    அதிகப் பரிச்சயமுள்ள முகம்போலத் தோன்றுகிறதே....!
    யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கவிஞரே தங்களுக்கு பரிச்சயமுள்ள பச்சிளம் குழந்தையை பிடிக்கும் பூச்சாண்டிதான்.

      நீக்கு
  14. ஒரு விளம்பரம் பதிவெழுதக் கரு கொடுத்திருக்கிறதே. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா இதை அனுமதி கொடுத்ததாக எடுத்துக்கொல்வேன் ஐயா.

      நீக்கு
    2. பெயரில்லா5/21/2015 6:40 PM

      அண்ணாச்சி அட யாரைக் கொல்லப் போறீங்க! கொள்வேன் என்பதற்கு பொது ளகரம் வரவேண்டுமல்லவா... குறை சொல்றதா நினைக்கப்பிடாது ஒரு உதவியா தான் இதைச் செய்றேன்.

      தருமி தங்கப்பன்

      நீக்கு
    3. வாங்க நண்பரே நான் சொன்னதே கொல்வேன் என்பதே கொள்வேன் அல்ல இது எமது நண்பர்கள் பலருக்கும் புரியும்.

      நீக்கு
  15. வீடும்...காடும் வச்சு இருக்கிறவுக விப்பாங்க....... குடியிருக்கிற வீட்டுக்காக 18 பதினெட்டு வருடத்துக்கு மேலே ஆகியும் விசாரனையும் நடக்காமா...யேஸ் ஆர் ரைட்ன்னு ஒரு தீர்ப்பையும் சொல்ல இருக்கும் என்னைப் போன்றவர்கள் என்னத் விற்பார்கள் என்னைக் கண்டவுடன் அந்த பகவான்ஜீயே விரட்டிடுவாரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவுங்களெல்லாம் மேட்டுக்குடி மனிதர்கள் நண்பரே... ஒன்றும் செய்யமுடியாது.

      நீக்கு
  16. பெயரில்லா5/21/2015 1:31 PM


    என்றைக்கு வைவஸ்தமான விளிம்பில் பரிகாசிக்கும் வியாபாரகடைகள் அரசுடமையாகி வின்னில் ஜோதியனாய் மன்னில் பிரகாசிக்க வேண்டிய வெகுஆபரன கல்வி காசுள்ள களஞ்சியங்களின் கொள்கைப் பிடிப்பின் சர்வதாவர சங்கமம் ஆனதோ அன்றே ஏழைகள் மிதி பட்டும் விதி வசததால் செளபாக்கிய சுகந்தம் இல்லாதவர்களாகவும் ஆக நேர்ந்ததே என்று வருந்தும் வேளையில் கட்டணம் செலுத்த இயலாத காம்பிகளை கல்விதர வேண்டிய சர்வகலாசாலைகள் விரட்டி விடுவதும் இந்த மாசற்ற மாசாத்துவன் கறுப்பு மானிக்கம் உழைப்புச் சுடர் அண்ணல் காமராஜ் பிறந்த மன்னில் நிகழ்வது கொஞ்சம் கொடுமையா இல்லையா என்று கேட்க எத்தனிக்கும் நிலையில், சமுதாயத்தை அறியாமை இருளில் இருந்து மீட்க அறிவு தீபத்தை ஏற்ற என்னக் கருதுகோல் இல்லாது போய் அனைக்கிறார்கள் என்று சொல்லவும் வேண்டும் என்றாலும் கூட இப்படி உள்ளக்கிடக்கை விட்ட வழியில் சென்றால் ஒபாமா நம்மை கணக்கில் சூரர்கள் என்று பாராட்டியதை புறந்தள்ளிவிட்டு விடமாட்டாமோ, சீனா நம்மை முந்திவிடாது என்றும் நினைத்துப் பார்க்கக் கடைமைப்பட்டிருக்கிறோம் அல்லவா ? இந்த மாதிரி வியாபராமே அனுதின நோக்கமாக கொண்ட கல்விக்கூடங்கள் தான் பொறுப்பற்ற துப்புறவில்லாத தமிழ் சமூகம் உருவாகக் காரணமாகிறது. அந்த கேடுகெட்ட தமிழர்கள் அநியாயமாக குண்டலகேசியைத் தொலைத்துவிட்டமோ வளையாபதி நூலை இழந்து நிக்கிறோமே என்ற என்னம், வருத்தம் என எதையும் கிஞ்சித்தும் இல்லாமல் இருந்து வாழ்கிறார்கள்.அவர்களுக்கு நம் ராமனுஜனைக் கொண்டாடத் தெரியாது அவனுடைய தியரி தான் ஐன்ஸ்டினின் e=mc2-க்கு அடிப்படை அந்த e=mc2தான் இத்துனை சாட்டிலைட்டுகளுக்கு அடிப்படை. தன்னைப்பற்றியும் தெரியாத தன் சக தமிழன் பற்றியம் அறியாத திம்மிகள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிடவும் முடியாமல் திட்டவும் இயலாமல் திரிசங்கில் நிற்கவேண்டியிருக்கிறதே கில்லர்சி.
    டி-பிரிட்டோ தமிழன்
    “டெராபைட்” தாமஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ’’டெராபைட்’’ தாமஸ் அவர்களுக்கு புரிதல் என்பது தமிழனுக்கு உரியது நன்றி எனது பதிவுகளுக்கு வரும் நண்பர்கள் பிறருடைய கருத்தையும் படிக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன் இதை தாங்களும் அறிய வேண்டும் என்பதே எமது விருப்பம்.

      தமிழர்கள்மீது கோபம் இருக்கின்றது என்று சொல்கின்றீர்களே ஒட்டு மொத்தமாக இப்படிச்சொல்வது எந்த விதத்தில் நியாயம் ? நான் தங்களைவிட அதிகம் தமிழ் தெரியாதவனாக இருக்கலாம் இதன் காரணமாய் ஆதாரத்துடன் சொல்லும்போது மன்னிப்பு கோரலோடு நான் ஏற்றுக்கொள்கிறேன்.

      அதேநேரம் தங்களைவிட அதிகம் தமிழ் தெரிந்தவர்கள் இருக்கின்றார்களே அவர்கள் தங்கள்மீது கோபப்பட்டால் ? கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பரே

      பலரும் வந்து கருத்துரை எழுதும் தளத்தில் தாங்கள் இப்படி எழுதுவது முறையற்றது தாங்கள் எனது தளத்திற்க்கு வரலாம் நல்லதை பாராட்டலாம், தவறுகளை சுட்டிக்காட்டலாம் இதில் தவறில்லை அதன் மூலம் நான் என்னை மென்மேலும் மெருகூட்டிக் கொள்ளலாம்.

      கருத்துரை போடும் பல நண்பர்கள் என்னிடம் கேட்டு இருக்கின்றார்கள் ’’பெயரில்லா’’ தளத்திலிருந்து வருபவரை ஏன் ? அனுமதிக்கின்றீர்கள் என்று இவர்களுக்கு நான் என்ன பதில் உரைப்பது.

      இருப்பினும் நான் தங்களது கருத்தை பிரசுரிப்பதற்க்கு காரணம் தங்களின் தமிழ் அழகு எனக்கு பிடித்து இருப்பதே...

      அதிகம் பேசுவது மட்டுமல்ல, தவறு பேச வேண்டிய தருணத்தில் பேசாமலிருப்பதும் தவறே...

      ஆகவே மற்றவர்களும் நமது கருத்தை படிக்கவேண்டும் என்ற சிந்தையை மனதில் கொண்டு ரத்தினச்சுருக்கமாக தங்களது எழுச்சிமிகு கருத்துரையை வழங்குங்கள்.

      என்றும் நட்புடன்
      கில்லர்ஜி.

      நீக்கு
  17. பெயரில்லா5/21/2015 1:34 PM

    மிகப் பெரிய பின்பொழிப்புரை இடுவது தவறென சென்ற பெருவழுதிப்பெயர்ப்பில் குறிப்பால் உணர்த்தி இருந்தீர்கள். மன்னிக்கவும் தமிழர்கள் மீது எனக்கு அத்துனை கோபமிருக்கிறது. இனிமேற் கொண்ட பெயர்ப்புகளில் சிறு துளியாக்க எத்தனிக்க கடைமைப்படிருக்கிறேன் என்று தெரியப்படுத்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அளவுக்கு மீறினால் அமிலமும் அமிர்தமாகலாம் நண்பரே....

      நீக்கு
  18. KSRTC-ஆஹா இது அருமையான படிப்பாச்சே, கர்நாடக மக்கள் போக்குவரத்துக்கு இதைத்தான் நம்பியிருக்காங்கன்னா பாத்துகோங்களேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பர் சரியானபடி எனது படிப்பை கவனித்து இருக்கின்றீர்கள்.

      நீக்கு
  19. வணக்கம்
    ஜி
    உடன் வர முடியாமல் போய் விட்டது மன்னித்து விடுங்கள். இன்றுதான் விடுமுறையாக இருந்தேன்..
    தங்களின் பதிவை படித்தது போது.பிள்ளைகள் தங்களின் கல்வியில் அக்கறையுடன் இருக்க வேண்டும் தேர்வில் தவற விட்டாலும் துவண்டு விடக்கூடாது.. தன் நம்பிக்கை வைத்தால் போதும் காணொளி அருமை
    த.ம 13 பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ரூபனின் வருகைக்கு நன்றி ஜாம்பவான்கள் இருவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டுதான் வருகிறேன் நன்றி

      நீக்கு
  20. கல்வியை வியாபாரமாக்கியதை அருமையான பதிவாக கொடுத்திருக்கீங்க சகோ.

    பதிலளிநீக்கு
  21. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கிற்க்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  22. இந்தப் பதிவுல சூப்பர் என்னன்னா உங்கள் வீடியோ எடிட்டிங்க்....அத உங்க பதிவுக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தது. உங்க பதிவுக்கு அந்த விளம்பரம் தூள். இப்பதான் வீட்டுக்கு வந்து இந்தக் கம்ப்யூட்டரை திறக்கும் முன் நான் டைடல் பார்க் சிக்னல்ல நின்னுக்கிட்டு இருக்கும் போது அங்க ஒரு பெரிய விளம்பர பேனர் பார்த்தேன். ஒரு பெரிய கல்வி ஸ்தாபனம் (பொறியியல் கல்வியில் )தாங்கள் தான் இந்தியாவிலேயே டாப் 2 என்று தற்புகழ்ச்சி பாடியிருந்தார்கள். எனக்கு செம சிரிப்பு.....அதுவும் இரண்டு போர்டுகள் வண்ண விளக்கில் மிளிர்கின்ன. ஆமாம் டாப் 2 தான் பணம் சூறையாடுவதில் என்று நினைத்துக் கொண்டே ஒரு பதிவு போட்டால் என்ன அதுவும் கணவர் இந்த ஸ்தாபனத்தில் பணியாற்றியவர். இதுமட்டுமல்ல தமிழ் நாட்டிலுள்ள பல கல்லூரி ஸ்தாபனங்களில் பணியாற்றியவர் என்பதால் பல உள்மாந்திரமும் நன்றாகத் தெரியும் என்பதால் போட்டுத் தாக்கினால் என்ன என்று சிந்தித்துக் கொண்டே வந்தேன்...எப்படித் தாக்கணும் காமெடியாகவா இல்லை சீர்யஸாகவா, இல்லை உள்குத்து வைத்தா இல்லை டைரக்டாகவா என்று யோசித்துக் கொண்டே வந்து கணினியை சொடுக்கினால் உங்கள் மெசேஜ்.....நான் நினைத்த பதிவு! அட! நாம சொல்ல நினைச்சுக்கிட்டே வந்தோம்..நம்ம ஜி எண்ணையா நிற்கிறாரே என்று...

    இது எல்லாமே வேதனைதான் என்றாலும் மருத்துவத் துறையிலும் விளையாடுவதுதான் வேதனை......வர்ரீங்களா ஜி, பூனைக்கு மணி கட்ட ??

    என்னத்த சொல்ல....கேவலம்...நம்ம ஊர் சர்டிஃபிகேட்டிற்கு வெளி நாடுகளில் அவ்வளவு மதிப்பு இல்லை...இப்படி இருந்தா ....திறமை இருந்தாலும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காணொளி அந்த இடத்தில் நான் என்னைச் சேர்க்க பட்டகஷ்டம் தங்களது இந்த வார்த்தைகளால் பறந்து விட்டது சந்தோஷம்.

      இந்த பதிவு நான் எழுதக்காரணம் சமீபத்தில் தருமி தங்கப்பன் என்பவர் ஒரு பதிவுக்கு என் அறிவுக்கண்ணை திறந்துட்டீங்க என்று சொல்லி இருந்தார் அது உண்மையா ? நக்கலா ? 80 தெரியவில்லை அந்த ஒரு வார்த்தையை மட்டுமே எடுத்துக்கொண்டு எழுதுனேன் அது இப்படி ஆகிடுச்சு

      நான் வந்தால் மணி கட்டுவது போல் இருக்காது கோடரியால் வெட்டுவது போல்தான் இருக்கும் விரிவான கருத்துரை தந்த வில்லங்கத்தாருக்கு நன்றி.

      நீக்கு
  23. நான் இருப்பது மீனாம்பாள் புரத்தில்,நீங்களோ மீனாம்பாளின் மகன் !என் மகனுக்கு உண்மையில் 'இன்ஜி'யில் சேர்க்கும் நேரம் ,என் அறிவுக் கண்ணை திறந்து விட்டீர்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா பகவான்ஜிக்கும், கில்லர்ஜிக்கும் ஏதோ பந்தம் இருக்கத்தான் செய்கிறது.

      நீக்கு
  24. கல்வியும்,காசும்..காலத்திற்கு....எற்றார் போல பதிவு போட்டு இருக்கிறீர்கள்...அருமை சகோ

    தம+1

    பதிலளிநீக்கு
  25. அறிவுக் கண்ணை திறந்திருக்கிறீர்கள் போல ம்..ம். நன்று நன்று ! வழமை போலவே அசத்தல் சரி நடக்கட்டும் நடக்கட்டும். அடுத்த முறை இனி என்ன பதிவோ தெரியலையே ...ம்...ம் வெயிட் அண்ட் சீ ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே உங்களைப்போல என்னால் கவிதையா எழுத முடியும் நாளைக்கு வந்து பாருங்கள்.

      நீக்கு
  26. இன்றைய கல்வியின் நிலையையும்
    பெற்றோர்களின் பேராசையினையும்
    பகிர்ந்து கொண்ட விதம் அருமை நண்பரே

    குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்
    தம 18

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே... சுற்றுலா பதிவைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.

      நீக்கு
  27. பெயரில்லா5/22/2015 9:30 AM

    //புரிதல் என்பது தமிழனுக்கு உரியது //
    இது கருத்தே அல்ல. மிகவும் கண்டனத்திற்கு உரியது. செம்மரக்கட்டைகளை அழிப்பவர்களை,எல்லை தாண்டும் (பாரம்பரிய மீனவர்கள் இதில் இடுபடுவதில்லை. எழுத்தாளர் குரூஸ்-ன் கட்டுரை) கடத்தல் மீனவர்கள் -க்கு தமிழர்கள் என்பதற்காக காரண காரியமே இல்லாமல் கூச்சலிட்டு ஆதரவு என்ற பெயரில் ஒட்டு மொத்த தமிழனையும் இந்தியனையும் தலை குனிய வைப்பவர்கள் ஒரு சில ஆடுகாலிகள் அதைக் கண்டிக்காத அல்லது அது தவறு என்றே உணராத திம்மிகள் கண்டனத்துக்கு உரியவர்களே.தமிழனுக்குப் புரிந்திருந்தால் இது தவறு என்று சொல்லி பழியிலிருந்து மீண்டு இருப்பான்.புரியாத புளியோதரைக் கூட்டம் என்பதே உண்மையாக இருந்திருக்க முடியம் எனக் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இரண்டாயிரம் வருடம் வளரக் கூடிய செம்மரங்களை அழித்து கடத்துபவர்கள் தொழிளாளர் தொடங்கி கடத்தல் முதலாளி வரை அனைவரும் தமிழர்களே. அவனுக்கு தான் பாரம்பரியத்தின் மேல் மரியாதையே கிடையாது, அனேகமாக நிஜத் தமிழன் அழிந்துவிட்டான் இப்போ இருப்பது களப்பிரர் வம்சம் தானோ என்னவோ.
    இவன் டிபிரிட்டோ தமிழன்
    “டெராபைட்” தாமஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நான் சொன்னதின் அர்த்தம் எதையும் உடன் புரிந்து கொள்வதில் தமிழன் முதலாமாவன் என்பதை வலியுறுத்தி... நான் மீண்டும் சொல்கிறேன் பதிவுக்குள் பந்தப்பட்ட கருத்துகளை மட்டுமே தாங்கள் முன் வைக்கவும் தாங்கள் சொல்லும் விடயங்களைக் குறித்து நான் பதிவு போடும்போது கண்டிப்பாக இவைகளை எழுதவும்.

      //அனேகமாக நிஜத் தமிழன் அழிந்து விட்டான் இப்போது இருப்பது களப்பிரர் வம்சம்தானோ என்னவோ//
      அப்படியானால் ? தாங்களும் களப்பிரர்தானே...

      நீக்கு
  28. பெயரில்லா5/22/2015 9:47 AM

    என்னைத் தமிழறிஞனாக நான் எப்போது பறைசாற்றினேன்.பாங்கமர்ந்த பழந்தமிழை நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன். தண்டியலங்காரமா அப்பட்டீன்னா அதென்ன நாட்டிய நூலா என்று கேட்கும் புரியாத புளியோதரைப் பசங்களை வெறுக்கிறேன்,அவ்வளவே!. சீகன் பால்கு அய்யர் வெளிநாட்டினர் கூட தமிழை வளர்த்தார்கள் ஆனால் தமிழர்கள் த்மிழை மிதிப்பது மாதிரி யாரும் மிதிக்க இயாலாது என்று சொன்னால் அது சாற்றமைந்த உண்மைகூற்றே.
    “டெராபைட்”தாமஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நான் மீண்டும் சொல்கிறேன் பதிவைப்பற்றிய கருத்தை மட்டும் எழுதுங்கள் எனக்கு அடுத்த பதிவுகள் எழுத வேண்டிய வேலைகள் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் நான் தங்களது கருத்துகளுக்கு இன்றுவரை மதிப்பளிக்கின்றேன் நன்றி
      நட்புடன்
      கில்லர்ஜி

      நீக்கு
  29. பெயரில்லா5/22/2015 9:52 AM

    ” பெயரில்லா” எனபது தளமா ? ஏன் அனுமதிக்கிறீர்கள் என்ற கூற்றுக்கு விடைபகற நினைத்தால் வடிவேல் அவர்கள் தம் இங்கு மீன் விற்கப்படும் விகித விதுஷாகனத்தில் வரும் கருத்தே உங்களுக்கு தெளிவு தரும். அனுமதிப்பதும் அனுமதிக்காதும் தங்கள் விருப்பம் அய்யனே. இம் மனித்தியானத்தில் எனக்கு விடைபகற சமய பற்றாக்குறை , பிறகு வருகிறேன்

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லா5/22/2015 12:08 PM

    பதிவைப் பற்றி எழுது பதிவைப்பற்றி எழுது என்றால் என்னாத்தை எழுதிக்கிடப்பது என்பதை என்னால் அறிந்திட இயலவில்லை. நாலே நாலுவரியில் விஷயங்கள் குறைவாக வெறும் திப்பிலியாக பதினைந்து பதிவர்கள் அவர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்ளவே எழுதுப்படுகிறது. என் போன்ற நடுநிலையாளர்கள் வந்தால் விரட்டி விட்டுவிட்டு மீண்டும் கொசுவலைக்குள் இந்த கூட்டம் தலையை அமிழ்த்திக் கொண்டுவிடும். இந்தக் கூட்டத்திடம் நேரவிரயம் செய்ய எனக்கு அவாவில்லை. இனிமேல் கொண்டு இத்தளம் வந்து எம் மொழியிட விரும்பவில்லை. பின் எதற்கு வந்தேன் தேவகோட்டை என்றதும் டிபிரிட்டோ என்ற மாபெரும் தன்னிகரற்ற தரணி முழுதும் கொடி நாட்டிகொண்டிருக்கிற அரும் பெரும் மானக்கர்களை உருவாக்கி மெழுகுவர்த்தியாக சுடர் விடும் அற்புதமான பள்ளியின் தயாரிப்பாக தாங்கள் இருப்பீர்களோ என்ற ஆவலே காரணம். ஆனாலும் புரிதல் இல்லாவிட்டாலும் கூட ஆனவமில்லாமல் அடக்கமாக பொறுமையாக இத்தனை நாள் அனுமதித்தற்கு நன்றி.

    பதிவர்களே அதிலும் முனைவர்களே உங்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் எழுதும் பதிவுகளையும் அதற்கான பின்னூட்டங்களையும் உங்களால் நியாயப்படுத்த முடியுமா ? எழுத்து என்பதை மன நிறைவிற்காக செய்யவேண்டிய ஒன்று. ஒரு அதில் 90 சதவிகிதம் போலியாக பாராட்டிக் கொள்கிறீர்களே அது தகுமா? உங்கள் பதிவுகளில் ஏதேனும் திறன் கொண்ட விமர்சனங்கள் வருகிறதா ? யாருக்கேனும் நிறைவான தகுதியான பின்னூட்டம் இட்டுள்ளீர்களா ? அருமை நண்பா , சரியாகச் சொன்னீர்கள் இது போன்ற ஜல்லிகள் தான் ஏராளம்.உங்கள் பதிவுகளால் ஏதேனும் சமுதாயத்திற்கு பயன் இருக்கிறதா ? சிந்தியுங்கள் என் மேல் கோபம் வந்தால் எல்லாரும் மன்னிக்கவும்.

    நான் தமிழ் அறிஞன் இல்லை அதே சமயம் சரியான தமிழ் அறிவு உள்ளவர் ஊருக்கு பத்து தேறினால் அபூர்வம் அதிலும் 4 பேர் இலங்கைத் தமிழாக இருப்பார்கள்.

    இதுவே டிபிரிட்டோ தமிழனின் கடைசி பின்னூட்டம்

    பொறுமைக்கு நன்றி கில்லர்சி.

    ”டெராபைட்” தாமஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ‘’டெராபைட்’’ தாமஸ் அவர்களுக்கு... நான் டி.பிரிட்டோ பள்ளியில் படித்த மானாக்கர் என்று சொல்லிக்கொள்ளும் பாக்கியமெல்லாம் எனக்கு இல்லை மேலும் நான் படித்ததும் மிகமிக குறைவு இது எனது அனைத்து நண்பர்களுக்கும் தெரியும் இதுவரை வந்து கருத்திட்டமைக்கு நன்றி
      தாங்கள் எனது நண்பர்களை கேள்வி கேட்பதற்க்கு இது இடமல்ல அவர்களுடைய தளத்தில் போய்க் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்... காரணம் நான் அவர்களை இழக்க விரும்பவில்லை நட்புடன் பிரிவோம் நன்றி.

      குட்பை.
      KILLERgee

      நீக்கு
  31. அறிஞர் கில்லர்ஜியின் பதிவுகளை
    அறிவுக் கண்ணால தான்
    பார்க்க வேண்டும்...

    பணம் இருந்தால் பள்ளிக்கூடம் போகலாம்
    பணம் இருந்தால் தேர்வில் சித்தியடையலாம்
    பணம் இருந்தால் பட்டங்கள் பெறலாம்
    அப்ப
    அறிவுக் கண்ணுக்குப் பதிலாக
    பணக் கண்ணைப் பாவிக்கலாம் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வார்த்தை ஸூப்பர் சவுக்கடி நண்பரே....
      நண்பரே...எப்பொழுதும் 2 முறை கருத்துரை கொடுப்பது ஏன் ?

      நீக்கு
    2. தவறாகக் கைவிரல் சுட்டெலியை அழுத்தி இருக்கலாம்.

      நீக்கு
  32. கண்டேன் !கல்வி விளம்பர வியாரமாகி பலநாளாயிற்று கில்லர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா உண்மைதான் ஆனால் இப்பொழுது வரும் விளம்பரங்களை காண முடியவில்லையே... அதன் வேதனையே இது.

      நீக்கு
  33. பெயரில்லா தவர்க்கு ஆப்பு வைத்துவிட்டீர்கள் ..கில்லர்ஜீக்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொல்லாதீர்கள் நண்பரே அவர்களாக வைத்துக்கொண்டால் நான் என்ன செய்வது ? நமது பதிவுக்கும் வருகின்றார்களே என்று அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கின்றோம் புரியாமல் நடந்து கொண்டால் நாம் என்ன செய்ய முடியும்.
      யார் மனதையும் புண் படுத்தும் எண்ணம் எமக்கு எப்போதும் இல்லை.

      நீக்கு
  34. பதிவை இரசித்தேன்! கல்லூரியில் சேர சொல்லி கூவிக்கூவி விற்போர் பற்றி நகைச்சுவையாய் உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள். பதிவை படிக்கும்போது முதலில் சிரிப்பு வந்தாலும் இதுபோன்ற அவலங்கள் இங்கு நடக்கின்றனவே என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு