தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 20, 2017

கேள்விக்கென்ன பதில்

பல மனிதர்கள் தான் நியாயமானவன் என்பதால் மற்றவர்களும் நியாயமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இந்த எண்ணம் பிறரின் பார்வையில் அவரை கோமாளியாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் தான் நஷ்டப்பட்டு கெட்டுப் போனதால் மற்றவர்களும் கெட்டுப்போக வேண்டுமென நினைத்தால் நாட்டில் தொழில் வளர்ச்சியின் நிலையென்ன ?

பல மனிதர்கள் தான் மதவாதி என்பதால் மற்றவர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் இந்த எண்ணம் பிறரின் பார்வையில் அவரை மதவெறியனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் தான் திருடன் என்பதால் மற்றவர்களும் திருட வேண்டுமென நினைத்தால் நாட்டில் திருட்டுத் தொழில் நலிந்திடுமோ ?

பல மனிதர்கள் திடீரென பக்திமான் ஆகி விடுவதோடு மற்றவர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள், இதுவும்கூட பிறரின் பார்வையில் அவரை கேலிக்குறியவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் தான் பணக்காரன் என்பதால் மற்றவர்களும் பணக்காரனாக வேண்டுமென நினைத்தால் நாட்டில் தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்களோ ?

பல மனிதர்கள் தான் ஆத்திகன் என்பதால் மற்றவர்களும் அதனைபோல் இருக்க வேண்டும் எனநினைக்கிறார்கள் இது அவன் அயோக்கியன் ஆயினும் அவனை நல்லவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் தான் வாக்களிப்பதில்லை என்பதால் மற்றவர்களும் வாக்களிக்ககூடாது என நினைப்பதுபோல் எல்லோரும் இருந்தால் நாடு
முன்னேற சாத்தியமுண்டா ?

பல மனிதர்கள் தான் நாத்திகன் என்பதால் மற்றவர்களும் அதனை போலவே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இது அவன் நல்லவன் ஆயினும் அவனை கெட்டவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள் உலக நாடுகள் அனைத்தும் நமது கைக்குள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென நினைப்பதுபோல் நடந்து விட்டால் அவனது ஆசைகள் இத்துடன் தீர்ந்து விடுமா ?

கில்லர்ஜி தேவகோட்டை

திங்கள், ஜூலை 17, 2017

என் நினைவுக்கூண்டு (4)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


தேவகோட்டை நமது வீட்டுக்கு நீ வாழ்ந்த வீட்டில் உன்னை கொண்டு வந்து இரவு முழுவதும் உறங்க வைத்ததில் அந்நிலையிலும் எனது மனதில் சிறிய நிறைவு ஏற்பட்டது.

சனி, ஜூலை 15, 2017

புரியாத புதிர்


இது எப்படி சாத்தியம் ? தன் உடம்பை உலகிற்கு காண்பிப்பவர்களுக்கு நடந்து வர சிவப்பு கம்பளம் விரிப்பது இவர்கள் என்ன தியாகிகளா ? இந்த மரியாதையை இவர்களுக்கு கொடுக்க தீர்மானித்தது இந்த சமூகம்தானே... அப்படியானால் இந்த சமூகம் இளைஞிகளுக்கு என்ன சொல்கிறது ? விபச்சாரிகளுக்கு மரியாதை கிடைக்கும் என்றா ?

வியாழன், ஜூலை 13, 2017

காட்சிக்கு நான் சாட்சி


ஒருமுறை அபுதாபியிலிருந்து... துபாய்க்கு காரில் போய்க்கொண்டு இருந்தேன் வழக்கமாக நான் முதல் ஃபாஸ்ட் டிராக்கில்தான் போவேன் பின்னால் வரும் நபர் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் லைட் அடித்துக் காண்பித்தால் உடன் வழிவிட்டு மீண்டும் அவரை விரட்டிப்போய் பிடித்து அவருக்கு லைட் அடித்து வழி கேட்பதில் எனக்கு ஒரு விதமான சந்தோஷம் எப்போதுமே உண்டு.

அன்றும் அப்படி நூற்றி அறுபதில் போய்க்கொண்டு இருந்தேன் கேமரா வரும் இடம் எனக்கு முன்கூட்டியே தெரியும் அந்த இடத்தில் மட்டும் நூற்றி நாற்பதுக்கு வந்து விடுவேன் எனக்குப் பின்னால் என்னையும்விட வேகமாக வந்தவன் லைட் அடித்துக் கொண்டே வர நான் இரண்டாவது ட்ராக்குக்கு போக முடியாத சூழல் காரணம் வரிசையாக கார்கள் இத்தனைக்கும் நான் விலகுவதற்காக உடன் வலதுபுற இண்டிக்கேட்டரை போட்டு விட்டேன் சுமார் கால் கி.மீ தூரத்திற்கு விலகமுடியாத நிலையில் கார்கள் போய்க்கொண்டு இருக்க இவனும் விடாமல் லைட் அடித்து முட்டிவிடும் நிலையில் உரசுவதுபோல் வருகிறான் கண்ணாடி வழியே பார்த்தேன் நான் நினைத்ததுபோல அரபிக்காரனே ஒரு வழியாக இரண்டாவது ட்ராக் போனேன் அவனும் இரண்டாவது ட்ராக் மாறி லைட் அடித்தான், மீண்டும் மூன்றாவது ட்ராக் மாறினேன் அவனும்... நான்காவது மாற, அவனும்... ஐந்தாவது மாற, அவனும்... ரைட்டு சைத்தான் செவ்ரோலெட்டுல வருது ஓரமாக நிறுத்தி டபுள் இண்டிக்கேட்டரை போட்டு விட்டு இறங்கினேன் பின்புறமாய் நிறுத்தி விட்டு அவனும் இறங்கினான் முதலில் ஸலாம் சொல்வதுதான் இங்கு மரபு நான் சொல்ல அவன் கோபமாக கேட்டான்

லேஷ் இந்தே மாஃபி ஜீப் தரீக்... ?
ஏன் நீ வழி தரவில்லை.. ?
அனா கேஃப் ஜீப் எஹ்தர் தரீக் ஸாராக் த்தாணி மாஃபி மக்கான் அலத்தூல் ஈஜி சையாராஹ் இந்தே மாஃபி ஸூப் ?
நான் எப்படி வழி கொடுப்பது இரண்டாவது ட்ராக்கில் தொடர்ந்து கார்கள் வந்தது நீ பார்க்கவில்லை ?

அனா மோத்தன் லாசம் இந்தே ஜீப் தரீக்
நான் இந்த நாட்டுக்காரன் நீ கண்டிப்பாக வழி கொடுக்கணும்
அனா அறஃப் இந்தே மோத்தன் லேகின் அனா கேஃப் சீர் தரீக் த்தாணி ஃபோக் ?
எனக்குத்தெரியும் நீ இந்த நாட்டான் ஆனால் நான் எப்படி அடுத்த ட்ராக் போவது மேலேயா ?

லா இந்தே கலம்த் வாஜித், அனா மோத்தன்
இல்லை நீ ரொம்ப பேசுறே நான் இந்த நாட்டுக்காரன்

ஆஹா லூசுப்பக்கியில வந்துருக்கு இன்றைக்கு காலையிலே யாரு... பதிவை முதல்ல படிச்சோம் இந்த லூசை எப்படி... சமாளிப்பது ? என நான் யோசிக்கத் தொடங்கும் முன்பே சைரன் ஒலி கேட்டு கலைந்தேன் எங்கிருந்துதான் வந்தார்களோ... தெரியவில்லை அவனது காருக்குப் பின்னே விளக்குடன் இரண்டு போலீஸ்காரர்கள் இறங்கி வந்தார்கள் வந்தவர்கள் ஸலாம் சொல்லி கை கொடுத்து முதலில் என்னிடம்தான் கேட்டார்கள் அரபு மொழி போதுமே....


என்ன பிரச்சனை ?
அவர் முதலில் சொல்லட்டும் பிறகு நான் சொல்கிறேன்.
என்ன பிரச்சனை ?
இவன் ஃபாஸ்ட் ட்ராக்கில் போனான் லைட் அடிச்சுக் கேட்டால் ? வழி விடவே இல்லை நான் இந்த நாட்டுக்காரன்...
நீ சொல்லு...
தெளிவாக எல்லா விடயத்தையும் சொன்னேன்... அவனிடம் திரும்பி...
சத்தியம் செய்து சொல் இவன் சொல்வதில் பொய் இருக்கா ?
அவன் என்னை சிறிது முறைத்து விட்டு...
அல்லா மீது ஆணையாக இவன் பொய் சொல்லவில்லை
பின்னே அவன் எப்படி உனக்கு வழி கொடுப்பான் ?
நான் இந்த நாட்டுக்காரன்.
நீ எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அவன் எப்படி வழி கொடுக்கமுடியும் மேலே பறந்து போக முடியுமா ?
நான் இந்த நாட்டுக்காரன், அவன் இந்தியக்காரன் நீ அவனுக்கு ஆதரவா பேசுறே...
நான் யாருக்கும் ஆதரவாக பேசலை இதுதான் சட்டம் இப்படித்தான் பேசணும் காரை எடுத்துக்கிட்டு கிளம்பு.
அவன் போலீஸ்காரர்களை முறைத்து விட்டு அவனது காரை நோக்கிப்போக... போலீஸ் சொன்னார் என்னிடம்...
அவன் பேச்சு சரியில்லை அவன் போகட்டும் நீ கொஞ்சம் நேரம் கழித்து கிளம்பு உன்னைக்கண்டால், உனது கார் மீது மோதினாலும் மோதுவான்... நாங்க துபாய் பார்டர் வரை வருவோம்.
நன்றி ஸார்.

மூவருமே ரோட்டை விட்டு சரளிக்கற்களில் நிறுத்தியிருந்தோம் அவன் காரை எடுத்தவன் கோபத்தை ஆக்ஸிலேட்டரில் காண்பிக்க சடக்கென

‘’க்ரீச்ச்ச்ச்ச்
என்ற சத்தத்தை தொடர்ந்து...
‘’டொம்ம்ம்ம்‘’

என்ற பயங்கர ஒலியும் சரளியில் தேய்ந்த டயர்கள் ஐந்து ட்ராக்குகளையும் கடந்து தடுப்புச்சுவர் கம்பிகளை மடக்கி பேரீட்சம்பழ மரத்தை சாய்த்து காரின் பேனட் கீழே கிடக்க நல்லவேளையாக அந்த நேரம் கார்கள் தூரத்தில் வந்து கொண்டு இருந்தது ஓடிய போலீஸ்காரர்கள் கதவைத்திறந்து அரபியை வெளியில் தூக்கிக் கொண்டு வந்தார்கள் தலையிலிருந்த வட்டு காணவில்லை பெரிய அளவில் காயமில்லை முகம் அஷ்டகோணலாக இருக்க அவனை போலீஸ் காருக்கு கொண்டு வந்தார்கள் எப்பொழுதுதான் செய்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை அவனது கையில் விலங்கு பூட்டி இருந்தது ஒரு போலீஸ் என்னிடம் கண்களால் பேசினார்...
போ
நான் கண்களில் நன்றி சொல்லி எனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன் துபாயை நோக்கி....

நண்பர்களே... இதை எதற்காக சொன்னேன் என்றால் இவர்கள் நினைத்திருந்தால் என்னையும் அலைக்கழித்து இருக்க முடியும் அங்கு போலீஸ்காரர்கள் நியாயப்படி, தர்மப்படி, சட்டப்படியே நடப்பார்கள் என்பதற்கு எனது கண்முன் நடந்த இந்த சம்பவம் ஒரு சாட்சி

வல்லாஹி ஊவா மாஃபி கலம் கஸாப்
அல்லா மீது ஆணையாக இவன் பொய் சொல்லவில்லை
ஒரு முஸ்லீம் பொய் சொல்லக்கூடாது மாட்டான் என்பது இங்கு ஆணித்தரமாக நம்பப்படுகிறது உண்மையும் அதுவே அதாவது நான் சொல்வது அரபு நாட்டாருக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கிறேன்

அங்கு பேரீட்சம்பழம் மரத்தை சாய்ப்பது மிகப்பெரிய குற்றம் அதுவும் கன்று என்றால் கூடுதல் தண்டணை

காணொளி