தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வியாழன், ஜனவரி 11, 2018
செவ்வாய், ஜனவரி 09, 2018
அந்தோ பரிதாபம்
இவன் யார் ? ஒருக்கால் மனநோயாளியாக இருந்தால் அதற்காக நாம் இறைவனிடம்
பிரார்த்திப்போம் இல்லையேல் இவனும் இந்தியன்தான் தேசியக்கொடியின் மீது தீ வைக்கும்
அளவுக்கு இவனுக்கு அப்படி என்ன நாட்டின் மீது கோபம் ? இதை சாதாரணமாக நினைத்து தேசத்துரோகி என்று ஒற்றை வரியில்
சொல்லி விட்டு போகமுடியாது அவனது நிலையிலிருந்து யோசிக்க வேண்டும் இவன் யாராலும்
பாதிக்கப்பட்டு இருந்தானா ? பொதுவாக
அரசியல்வாதிகளை, காவல்துறையினரை, பணம் படைத்தவரை சாதாரண மனிதர்கள் தனது புறம்
நியாயம் இருந்தும் எதிர்க்க முடியவில்லை அந்தக் கோபத்தின் விளைவாக கூட இருக்கலாம்
நான் சந்தன கடத்தல் வீரப்பனை தியாகி என்று சொல்ல வரவில்லை அவரும் இந்த இழிநிலைக்கு
போனதற்கு பின்னணி அரசியல்வாதிகளும், காவல்துறையினரும்தானே அதைப்போல இவனும் ஏதோ
காரணங்களால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் இவன் மத்தியில்,
மாநிலத்தில் ஆளும் தலைமைகளின் புகைப்படங்களை இப்படிச் செய்திருந்தால் அது
எதிர்க்கட்சியின் சதி என்று முடித்து (இவனையும்) விடுவோம் இவன் தனது
பிரச்சனையை வெளிப்படுத்த புதுமையாக இப்படி செய்வோம் என்று கருதி இருக்கலாம் காரணம்
இப்பொழுது புரட்சி செய்வதில்கூட புதுமையை கையாலும் உலகமாகி விட்டது அதேநேரம்
தேசியக்கொடி என்பது அனைத்து இந்தியனுக்கும் உயிர் நாடி போன்றது அதை
இப்படிச்செய்பவன் யாராக இருந்தாலும் இந்தியாவுக்குள் வாழத்தகுதி இல்லாதவனே இப்படிப்பட்டவர்களை
தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களை இந்த நாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள்
என்று கருதுகிறோம் சமூகத்தால் பாதிக்கப்பட்டவனும், மற்றொரு பாதிக்கப்பட்டவனும்
சந்திக்கும் பொழுது அவர்களுக்குள் ஒரு தீப்பொறி எழுகின்றது இவர்கள் இவனது
ஜாதியினரைத் தேடி அலையும் பொழுது அது ஒரு குழுவாகி பிறகு அமைப்பாகிறது இதற்கும்
அரசு அங்கீகாரமும் அதற்குறிய அனுமதி எண்களும் கொடுப்பது கொடுமையிலும் கொடுமை ஒரு
அசம்பாவிதம் நடந்து முடிந்து விடுகிறது அதற்கு ஒரு அமைப்பினர் இதற்கு நாங்கள்
பொறுப்பேற்கிறோம் என்று அறிக்கை விடுகின்றார்கள் ஒருக்கால் யாரும் பொறுப்பேற்று
அறிக்கை வரவில்லை என்றால் அரசாங்கமே அறிவிக்கின்றது இதற்கு எந்த தீவிரவாத
அமைப்பும் பொறுப்பேற்க வில்லையென்று இது கேலிக்கூத்தாக இல்லை.
ஒரு கொலை நடந்த பிறகு நான்தான் கொலை செய்தேன்
என்று தனியொரு மனிதன் சொன்னான் என்றால் உடனே அவனை கைது செய்யும் சட்டம் இதை
மட்டும் செய்ய முடியாதா ? இந்த
தீவிரவாத அமைப்புகள் எங்கிருந்து அறிக்கை விடுகின்றார்கள் இவர்களுக்கும்
மின்னஞ்சல், இணையதளம் எல்லாம் இருக்கின்றது என்றும் சொல்கின்றார்கள் என்ன ? இலவோ புரியவில்லை இந்த நாடு குட்டிச்சுவராகிப்
போய்க்கொண்டு இருப்பதற்கு மூலகாரணமே அரசுதான் உதாரணத்துக்கு நாளிதழ்களில் படித்து
இருப்பீர்கள் இருபத்து ஆறு வழக்குகளில் கைதாகி எட்டுமுறை சிறையிலிருந்து தப்பிய
டேஞ்சர் டேவிட்டை காவல்துறையினர் வலை வீசித் தேடுகிறார்கள். நான் தெரியாமல்தான்
கேட்கிறேன் எட்டுமுறை சிறையில் வைக்கும் பொழுது இருக்கட்டும் இரண்டாவது முறை
சிறையில் வைக்கும் பொழுதே அவனது குதிகால் நரம்பை வெட்டி இருந்தால் இவன் இப்படி
ஓடியிருக்க முடியுமா ? இவனுக்கு ‘’டேஞ்சர்’’ என்ற பட்டத்தை மகுடம் சூட்டியது யார் ? அதாவது இரண்டு முறை சிறை சென்று வெளியே வந்தாலே
சிறைத்துறையே இவர்களுக்கு பயப்படுகின்றது என்பதே உண்மை. காவல்துறையினரின் வீரம்
யாரிடம் காட்டப்படுகிறது தெரியுமா ? சாதாரண
நடுத்தவர்க்கம் இருக்கின்றதே அதாவது கௌரவத்துக்கு பயந்து வாழும் மானம் போனால் உயிரையே
துறக்கும் சாமானியர்கள், வங்கியில் விவசாயக்கடன் வாங்கி விட்டு கேட்கும் பொழுது
கட்ட முடியாத மிகச் சாதாரணமானவர்களிடம் மட்டுமே கோடிகள் கடன் வாங்கிய மல்லையாவை
இவர்கள் என்ன செய்தார்கள் ? கோடிகள்
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை என்ன செய்தார்கள் ? முடியாது காரணம் இவர்களுக்கு அரசியல்வாதிகளே முதலாளி.
என்று காவல்துறை மத்திய அரசின் ராணுவத்தின்
தனி பிரிவாக இணைக்கப்பட்டு மாநில அரசு தலையிடாமல் தன்னிச்சையாக செயல் படுகிறதோ
அதுவரை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சாமானியர்களின் நிலை அந்தோ பரிதாபம்.
Chivas Regal சிவசம்போ-
காவல்துறையை
மத்திய அரசு கிட்டே ஒப்படைச்சு தேர்தல் நேரத்தில வீடு புகுந்து அடிச்சு பிஜேபிக்கு
ஓட்டுப் போடச் சொல்லவா ? அப்படினு
நாம கேட்டா... குடிகாரப்பயல்னு சொல்லுவாங்கே...
சாம்பசிவம்-
இல்லைனா...
இராணுவத்தை வச்சு ஓட்டுப் போடச்சொல்ல முடியாதோ...
சிவாதாமஸ்அலி-
நாடு
நாசமாப்போக இவங்களே... ஐடியா கொடுப்பாங்கே போலயே...
சனி, ஜனவரி 06, 2018
உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்
வணக்கம் நட்பூக்களே... நலமா ? நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி
திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு
ஒன்றை எழுதியதோடு இல்லாமல் ஐந்து பதிவர்களுக்கு அழைப்பு விட்டதில் என்னையும்
சேர்த்து கில்லர்ஜி உள்ளதை உள்ளபடி ஜொள்ளும் மாயக்கண்ணாடி என்று ஜொள்ளி
விட்டார்கள். இது உம்மையா ? என்று இன்னும் எனக்கு குசப்பமாகவே
இருக்கிறது. இந்த தொடரின் சாராம்சம் தனது அனுபவங்களை, ஜேம்ஸ் ஊரணியோரம் நின்று
கொண்டு இலவசமாக அறிவுரை வழங்குவோர்களிடம் பெற்ற அறிவுரைகளை பிறருக்கு சொல்லி
விளக்க வேண்டுமாம். மேலும் இந்த நெடுந்தொடரை முதலில் தொடங்கி வைத்த மூலவர்
அமெரிக்கவாசி திரு. மதுரைத்தமிழன் அவர்கள் தொடர் பதிவின் தலைப்பு உங்களிடம் சில
வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள் சரி நான் என்னத்தை எழுதுவது ? எதையாவது எழுதிக் கிழிப்போம்
வேறுவழி.
அனுபவ அறிவு
நம்மிடம் ஒரு பழஞ்சொல் உண்டு வயிற்று வலியும், பல் வலியும் அவனவனுக்கு வந்தால்தான் தெரியும் என்று வடிவேல் சொல்வது போல நமக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்பது போலத்தான். பெண்களின் பிரசவலியை அறிந்திருக்கின்றோம் உணர்ந்திருக்கின்றோமா ? இது இயலுமா ? நிச்சயமாக முடியும் ஒவ்வொரு மனிதனும் அவனது மனைவியின் பிரசவத்தன்று அவர்களுடன் அந்த ஒருநாள் முழுவதும் இருந்து பாருங்கள் தனது தாயின் வேதனை எப்படியானது ? என்பதை உணர்வார்கள் அதன் பிறகு அவனது தாய் மட்டுமல்ல இந்த சமூகத்தில் எந்த தாயும் முதியோர் இல்லத்தில் இருக்க மாட்டார்கள். மேலும் தமிழகமெங்கும் முதியோர் இல்லங்கள் தகர்த்து எறியப்படலாம். இதை உணரவேண்டும் என்பதற்காகத்தான் பிரசவ நேரத்தில் கணவனும் கூடி நிற்கும் சூழலை இறைவன் அமைத்திருந்தானோ ? என்று பலமுறை நான் நினைத்துப் பார்த்ததுண்டு. தாய் நடமாடும் தெய்வம். இவ்வுலகில் நாம் காலில் விழுந்து வணங்குகிறோம் என்றால் அது அவனவனைப் பெற்ற தாயைத் தவிர வேறில்லை. தந்தைகூட இந்த வரிசையில் சேர்க்க இயலாது காரணம் அவன் தவறு செய்யக் கூடியவனே... நானும் ஒரு தந்தையானவனே... இருப்பினும் பொதுநிலைக்கு வரும் பொழுது தந்தையை விட தாய் உயர்வானவள். அதாவது நல்ல இதயம் என்பதில் பெரும்பான்மை தாய்தான் இதில் தந்தையானவன் இரண்டாம் நிலையே.... அப்படிப்பட்ட தாயின் காலில் விழும் கலாச்சாரத்தில் வந்தவர்கள் நாம். ஆனால் பல விளங்காமட்டைகள் நடிகையான ஜெயலலிதா காலில் விழுகின்றீர்களே... வெட்கமாக இல்லை ? நடிகனான ரஜினிகாந்த் காலில் விழுகின்றீர்களே... அடேய் ஐயப்பசாமி ரசிகனே மாலை போட்டு நடிகனை சுற்றி வர்றியடா.... உனக்கு ஐயப்பன் மீது நம்பிக்கை இல்லையாடா ? ஐயய்யே.... இதென்ன பதிவு வேற போக்குல போகுது... ஏஞ்சல் கோபப்படப் போறாங்க ரூட்டை மாத்து.
அனுபவ அறிவு
பொய் சொன்ன வாய்க்கு போண்டா கிடைக்காது என்பார்கள் இது எவ்வளவு உண்மை என்பதை நானும் உணர்ந்தேன் ஏற்கனவே பகிர்ந்த விடயமே 2012-ல் ஜெர்மனியிலிருந்து... ஃப்ரான்ஸுக்கு இரயிலில் பயணிக்கும் பொழுது என்னுடன் பயணித்த இரண்டு ஜெர்மனிய மாணவர்கள் இந்தியாவின் டெல்லி தாஜ்மஹாலைப் பற்றி கேட்க, நான் பந்தா பந்துலு மாதிரி அதுக்கு எதிர்த்தாப்பலதான் எனது வீடு காலையில் எழுந்ததும் அதன் முகத்தில்தான் விழிப்பேன் என்று சொல்லி அவர்களை பிரமிக்க வைத்த என்னை, பிறகு இராமேஸ்வரம் பற்றி கேட்ட பொழுது எனது தேவகோட்டை அருகில்தான் அந்த ஊர் என்று சொல்ல முடியாமல் தவித்த என்னை மேலும் இடிபோல் இறக்கியது அடுத்த கேள்வி உலக அளவில் மொழி ஆராய்ச்சி செய்து வரும் அவர்கள் டெல்லியில் பேசுவது ஹிந்தி இராமேஸ்வரத்தில் பேசுவது எந்த மொழி ? நான் தமிழ் என்று சொன்ன பிறகு கேட்டான் பாருங்க கேள்வி உனக்கு தமிழ் தெரியுமா ? அவ்வ்வ்வ்வ் அதிரா அவர்களுக்கு அதிரடியாக சிரிக்கப்படாது பெரியவுங்க பழமொழி சொன்னால் காரணமில்லாமல் சொல்லி வைக்க மாட்டாங்க... அன்றிலிருந்து விளையாட்டுகூட பொய் சொல்லக்கூடாது என்ற தீர்மானத்தை எடுக்க வைத்தது அந்த இரயில் பயணம். தேவையில்லாமல் தாஜ்மஹால் முன்னாடிதான் என் வீடு என்று சொன்ன பின்னாடி தேவகோட்டைதான் என் வீடு என்றால் நீ முன்னாடி டெல்லி என்று சொன்னாயே... என்றால் என் முகத்தை பின்னாடி கொண்டு வைக்க முடியுமா ? இல்லை கண்ணாடியில்தான் என் முகத்தை முன்னாடி நின்றுதான் பார்க்க முடியுமா ? பின்னாடி நின்று யாராவது கேலி பேசமாட்டார்கள் ? ஐயய்யே.... இதென்ன பதிவு பஞ்சதந்திரம் மாதிரி போகுது... ஸ்ரீராம்ஜி கோபப்படப் போறாங்க ரூட்டை மாத்து.
அனுபவ அறிவு
நம் இனிய இந்தியாவில் டூவீலரில் போகிறோம்
இல்லை பறக்கின்றோம் இதில் சிக்னலில் கார்கள் நிற்கும் பொழுது இடையில் புகுந்து,
வளைந்து, நெளிந்து பறக்கின்றோம் நமக்கு ஒன்றுமில்லை நாம வச்சு இருப்பது பழைய பண்டாரம்தான்
அந்த நேரங்களில் கார்களை உரசி செல்லும் பொழுது கார்களின் உரிமையாளரின் மனநிலை
எப்படி இருக்கும் ? என்பதை
நாம் நினைத்துப் பார்க்க மறுக்கின்றோம் அதிலும் புதிய கார் வைத்து இருப்பவர்களின்
நிலை ? இறங்கி
கேட்கவும் முடியாது சிக்னல் விழுந்து விடும். சரி இது தவறென்று எப்பொழுது
உணர்கின்றான் ? அவனும்
கஷ்டப்பட்டு, கருமாயப்பட்டு குருவி சேர்ப்பதுபோல் பணம் சேர்த்து ஒரு கார் வாங்கி
சாலையில் செல்லும் பொழுது சர்ர்ர்ர்ர்ர்.... புர்ர்ர்ர்ர்ர்னு டூவீலரில் பறப்பாங்களே...
அப்பத்தான் தெரியும் புதுக்காரில் உரசும்போது உரிமையாளனின் மனநிலை. அபுதாபியில் ஆறு
ட்ராக்குகளில் சரியாக ஆறு கார்கள் செல்கின்றன... இதில் நான் ஒருநாளும் குழம்பியதே
இல்லை இந்தியாவில் மூன்று ட்ராக்குகளில் ஏழு கார்கள் செல்கின்றன... இந்தக்குழப்பம்
எனக்கு இன்னும் தீரவில்லை. மேலும் காருக்கு ஹாரன் அடிப்பதை இப்பொழுதுதான்
பழகிக்கொண்டு வருகிறேன். அங்கு நூறு கார்கள் போனால் இரண்டு டூவீலர்கள்
பார்க்கலாம், இந்தியாவில் பத்து கார்களோடு நூறு டூவீலர்கள் செல்கின்றன... திருச்சிக்காரவுகளிடம்
கேட்டால் ? இது
மோதியின் டிஜிடல் இந்தியா அப்படினு சொல்லுவாங்க... ஆனால் அபுதாபிக்காரன் இந்த
வார்த்தையை சொல்லாமல் டிஜிடல் அபுதாபி ஆக்கிட்டான். ஐயய்யே.... இதென்ன பதிவு டெல்லிக்கு
போகுது... அதிரா கோபப்படப் போறாங்க ரூட்டை மாத்து.
இதோ 01.01.2018 அன்று இறைவன் எனக்களித்த பரிசு.
நட்பூக்களே... இதற்கு ஐந்து பதிவர்களை இழுத்து
விட வேண்டுமென்பது மரபு பதிவுலகம் பதிவர்களுக்கு பஞ்சத்தை கொடுத்திருக்கும்
காலகட்டத்தில் பிறருக்கும் வேண்டுமே என்ற உயர்ந்த எண்ணத்தின் காரணமாக நான் மூன்று
முத்துக்களை மட்டும் இங்கு பதிவெழுத அன்புடன் அழைக்கிறேன் - கில்லர்ஜி
இதோ
அந்த முத்துக்கள்.
புதன், ஜனவரி 03, 2018
நாளைய மன்னர்கள்
நட்புகளே... பார்த்தீர்களா ? இளைஞர்களுக்கு ‘’நாளைய மன்னர்கள்’’ என்றொரு பெயரும் உண்டு ஆனால்
இந்த இழி செயலைச் செய்யும் அனைவருமே இளைஞர்களே.. இவர்களை சட்டப்படி தண்டிக்க நமது
சட்டத்தில் இடமுண்டு ஆனால் நாளடைவில் இதற்கு சட்டத்தில் இடமில்லையோ என்று
நினைக்கும் நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் இது பொது மக்களுக்கு
இடையூறு செய்யும் செயல் மட்டுமல்ல ! உணவுக்கு மரியாதை தராமல் அதை பாழாக்கும் செயலும்கூட இதை
நாட்டை ஆளுபவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அவர்கள் இனிவரும்
காலங்களில் இதை தடுக்கும் நோக்கத்தோடு செயல்பட மாட்டார்கள் காரணம் இப்படிப்பட்ட
அறியாமைவாதிகளால்தான் அரசியல்வாதிகளின் வாழ்வாதாரம் உயர்ந்து கொண்டே செல்கிறது
காரணம் இன்று ஆள்பவர்கள்கூட நேற்று இதே பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களே...
மேலும் இவர்களின் வாரிசுகளும் இந்நிலைக்கு வர வரிசையில் நிற்கின்றார்கள் ஆகவே இதை
தடுப்பது அவசியமில்லாத வேலை மேலும் இதை தடுத்தால் பதாகைகளில் நிற்பவர்கள்
ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு குரல் கொடுத்தால் போதும் வாக்குகள் தடம் மாறும் என்பதை
அறிந்த அறிவாளிகள் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கின்றது என்று நாம் யாராவது
எதிர்க்குரல் கொடுக்கப் போவதும் இல்லை கொடுத்தால் ? குரல்வளை நெறிக்கப்படும் என்று அறிந்த அறிவாளிகள் நாம் ஆகவே
வேண்டாமே வெட்டிவேலை என்னவொன்று சாலையில் செல்லும் யாராவது பாவப்பட்டவர்கள்
வழுக்கி விழுந்து கை, கால் முறிந்தால் இருக்கவே இருக்கின்றது அரசு மருத்துவமனை நண்பர் திரு. வலிப்போக்கன் போன்ற நல்லமனம் படைத்த
வழிப்போக்கர்கள் யாராவது தூக்கி கொண்டுபோய் போட்டு விடுவார்கள் பிறகு அவர் எழுந்து
நடப்பது விதியின் வழி.
விஞ்ஞானம் இவ்வளவு தூரம் வளர்ந்து நிற்கின்றது
எப்படி ? சிந்தனையால்தானே... ஆனால் இவர்களில் யாருக்கும்
இது தவறென்ற சிந்தை மட்டும் தோன்றவேயில்லை அதுதான் காலத்தின் கோலம் இதெல்லாம் உலக
அழிவை நோக்கியே செல்கிறது ஏற்கனவே விஞ்ஞானம் அதை குறி வைத்தே செல்கிறது என்பது
வேறு விடயம் நம் முன்னோர்கள் கலிகாலம் என்று சொல்லிச் சென்றார்களே... இதைத்தானோ ? அதேபோல தெய்வத்துக்கு செலுத்தும் காணிக்கைகளின்
செயல் முறைகள் கதி கலங்க வைக்கின்றது ஆம் சமீபத்தில் நாட்டை ஆளும் மந்திரிமார்களின் காணிக்கைகள்
இருக்கும் தெய்வ நம்பிக்கையை மேலும், மேலும் குறைத்து விட்டது என்பது உண்மையே...
யாரை யாரோடு இணை வைப்பது என்ற கோட்பாடே தமிழனுக்கு இல்லாமல் போய் விட்டதே
அதனால்தானே குஷ்புவுக்கு கோயில் கட்டினான், நமீதாவுக்கு கூட நீதிபதி என்ற பதவி
கிடைத்தது முனைவர் (Doctor) பட்டம்
யாருக்கு கொடுப்பது என்ற முறையே இல்லாமல் போய் விட்டது இரண்டு திரைப்படங்களில்
நீதியை நிலை நாட்டுபவனாக நடித்தால் முனைவர் பட்டம் உண்மையில் நடைமுறை வாழ்வில்
செய்து காண்பிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்
போன்றவர்களுக்கு கொடுத்தாலும் அது நியாயம் நல்லவேளை நீதி தேவதையை கண்ணைக்கட்டி
வைத்தார்கள் இல்லையெனில் என்னாகும்.
பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்யும்
கூட்டத்தில் உள்ள அறிவாளிகள் துபாய், அபுதாபியிலும் உண்டு ஆனால் இந்த மாதிரியான
கோமாளிகளுக்கு அங்கு வேலையில்லை சாலை ஓரங்களில் செடிகளுக்கு நீர் பாய்ச்சும்
தண்ணீர்க்குழாய் எதேச்சையாக உடைந்து விட்டது எனறு வைத்துக் கொள்வோம் தண்ணீர்
பெருக்கெடுத்து சாலைக்கு வந்து அதற்கான வழிகளில் ஓடி மறுநிமிடமே ஒளிந்து விடும்
ஆனால் போக்குவரத்து துறை சாலையை அசிங்கப்படுத்திய குற்றத்துக்காக நகரசபை மீது
வழக்கு தொடுத்து அதற்கான அபராதத்தை நீதி மன்றங்களின் வாயிலாக ஒரு வாரகால
அவகாசங்களில் பெற்று விடும் இத்தனைக்கும் மூன்று துறைகளுமே அரசுதான் அதேநேரம்
தனியாரின் கட்டடங்களிலிருந்து தண்ணீர் வெறியேறினால் அவர்களின் நிலை ? இதுதான் அந்நாடு இந்த இடத்தில் நான் ஆழ்ந்து
சிந்திப்பது என்னவென்றால் ? அரேபியர்களைவிட இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அறிவாளிகள்தானே ஆனால் நடைமுறையில்
ஏன் ? இந்த முரண்பாடு.
நம்மூருக்காரன் அங்கு பதாகைகளுக்கு
பாலாபிஷேகம் செய்வானா ? ஆனால் ஆசையிருக்கு முடியாதே... ஒருமுறை அபுதாபியில் எலக்ட்ரா சாலையில்
எல்லோராடோ என்ற திரையரங்கம் உள்ளது
(அருகில்தான் நமது முன்னணி
வலைப்பதிவர் ‘’மனசு’’ திரு. சே.குமார் அவர்கள் தங்கியிருக்கின்றார்
அதனால்தான் அடிக்கடி திரைப்படங்கள் கண்டு விமர்சனம் எழுதுகிறார் அவரின் விரிவான
விமர்சனம் படிப்பதின் மூலம் எமக்கு திரைப்படத்துக்கு செல்லும் செலவு மிச்சமாகியது)
அங்கு சில நேரங்களில் தமிழ்ப்படங்களும் ஓடும்
அங்கு திரையரங்கம் கட்டடங்களில்தான் இருக்கும் நம்மூருபோல ஏக்கர் கணக்கில்
இடமிருக்காது அதே கட்டடத்தின் பி. பிரிவின் முதல் தளத்தில் எனது நண்பரின் நிறுவன அலுவலகம் உள்ளது நானும்
அடிக்கடி அவரை சந்திக்க போவேன் ஒருமுறை எனது சீரூந்தை திரையரங்கத்தின் முகப்பில்
நிறுத்துவதற்கு இடம் கிடைக்க பொதுவாக இந்தப்பகுதியில் நிறுத்துமிடம் கிடைப்பதே
அரிது நிறுத்திவிட்டு இறங்கினேன் பார்த்தால் ஒரே தமிழர்கள் கூட்டம் புதிய தமிழ்த்
திரைப்படம் வெளியீடு இதுவே காரணம் அனைவரது இதயங்களிலும் கசாநாயகனின்
புகைப்படம் பொருந்திய அட்டைகள் தொங்கியது சரியென நான் வழக்கம் போல போகவும் தடுத்து
நிறுத்தியது ஒருகுரல்
கில்லர்ஜி சௌக்கியமா ?
நல்லாயிருக்கேன் நீ
எப்படியிருக்கே ?
என்ன தலைவன் படத்துக்கா ?
எனக்கு எப்படியிருக்கும் ? உடலில் ஓடிக்கொண்டு இருக்கும் ரத்தஓட்டம்
திடீரென தீப்பிடித்து ஓடியது தலைவனா ? பொதுவாக நான் தமிழனையே தலைவன் என்று சொல்ல மாட்டேன் இவன் எந்தக்காட்டான் ?
ஏண்டா நான் தினமும் வந்து
போகுமிடம் இது என்னைப்பார்த்து எனக்கும் தலைவன் என்று சொல்லிட்டியடா...
கேட்டேன் நாலு கேள்வி தன் வாழ்நாளில் மரணகாலம்வரை
அவன் மறக்க மாட்டான் மன்னிக்கவும் அந்த வார்த்தைகளை இங்கு தட்டச்சு செய்ய முடியாது
பிறகு கோபமாக சென்ற நான் மீண்டும் சீருந்தையும், ரசிகர் கூட்டத்தையும் பார்த்தேன்
வேண்டாம் பல தெரிந்த கிறுக்குப்பயல்கள் நிற்கின்றார்கள் ஒருவேளை எனது சீருந்தை
அடையாளம் தெரிந்தவர்கள் நானும் திரைப்படத்துக்கு வந்து இருக்கிறேன் என்று நினைத்து
விட்டால் இதைவிட அவமானம் வேறென்ன இருக்க முடியும் ? சட்டென சீருந்தை எடுத்து கட்டடத்தை விட்டு சுமார் 4580 கஜதூர அளவில் நிறுத்தி
விட்டு மீண்டும் நண்பரைக் காணச் சென்றேன்.
குறிப்பு - நானும் திரைப்படம் பார்த்தவனே..
பார்க்கின்றவனே... பார்ப்பவனே... அது திரைப்படமாக இருக்கும் – கில்லர்ஜி
திங்கள், ஜனவரி 01, 2018
இன்று முதல்
2018
நட்பூக்களுக்கு... கில்லர்ஜியின் இனிய
புத்தாண்டு வாழ்த்துகள்
சமூகத்தில் பெரும்பாலும் நல்ல மனிதர்கள்தான்
கவலைப்படுகிறார்கள் சில நேரங்களில் அவர்கள் புலம்புவதை
கேள்விப்பட்டிருப்பீர்கள்... அதேநேரம் குடிகாரன், திருடன், அயோக்கியத்தனம் செய்யும்
எந்த மனிதனாவது எனக்கு கவலையாக இருக்கிறது எனச் சொல்லி கேட்டிருக்கிறீர்களா... அதற்கு
சாத்தியமே இல்லை ஏன் இந்த முரண்பாடு விதி விளையாடுகிறது என்றும் தெய்வம் நம்மை
சோதிக்கிறது என்றும் நாம் புலம்புகின்றோம் இதற்கு காரணம் நமது மனசாட்சியே சோதனைகள்
வரும்போது கவலைப்பட்டு என்ன ஆகபோகிறது ஆகவே இதுவும் கடந்து போகும் என நினைத்து
அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி கடந்து போக முயற்சிக்க வேண்டும் இந்த தருணத்தில்....
என்ன நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு
என்பதை நினைத்துப்பார்
நான் மதவாதம் பேசவரவில்லை மதவாதியும் இல்லை
நாம் எதையும் கொண்டு வரவில்லை கொண்டு போகவும்
முடியாது இதுதான் உண்மை அதற்காக நாமும் குடிகாரர்களை போல் வாழ்ந்தால் என்ன என்று
நினைத்தால் அது அறியாமை அவர்களுக்கு எதுவுமே இல்லை அதனால்தான் சில நேரங்களில்
தெருக்களில் எதுவுமே இல்லாமல் கிடப்பார்கள் பார்த்திருப்பீர்கள்...
திருடர்களுக்கு அயோக்கியர்களுக்கு வெட்க உணர்வு கிடையாது
மனிதன் தவறு செய்ய வெட்கப்பட்டால் அவன் மாமனிதனாகி
விடுவான்
இப்பொழுதும்
சொல்கிறேன் நான் மதவாதம் பேசவரவில்லை காரணம் மேற்கண்ட
இரு தத்துவங்களும் இரண்டு மதங்களில் சொல்லப்பட்டது
ஆகவே
வாழும் இந்த வாழ்க்கை உயர்ந்ததே என நினைத்துப்பார் வாழ்க்கை இனிக்கும் மனம்
உயர்வுக்கு வழி வகுக்கும் மாறாக என்ன வாழ்க்கை இது எனநினைத்தால் வாழ்க்கை கடைசிவரை
கசக்கும் மனம் தாழ்வுக்கே வழி கொடுக்கும் ஆகவே இன்று வருடப்பிறப்பு முதலாவது
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம்...










