தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 10, 2018

நடந்தது என்ன ?


இறந்து போகும் மனிதர்கள், என்ன ஆவார்கள் ? என ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு விசயங்களை சொல்கிறது, இது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டதா ? இல்லை கற்பனையில் உருவாக்கப்பட்டதா ? என யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை சொல்லவும் முடியாது காரணம் யாருமே அனுபவசாலி இல்லை.

வியாழன், பிப்ரவரி 08, 2018

கோட்டையூரிலிருந்து - 50


கோட்டையூர்
கோட்புலிநாயனார்
கோவில்
கோலாகலமான அலங்காரம் காரணம்
கோடீஸ்வரர்கள் இல்லத்திருமணம்
கோபாலபட்டணம்
கோவிந்தன் ஊடகழி
கோமளம் அம்மாள் புதல்வன்
கோச்சடையானுக்கும்,
கோயமுத்தூர்
கோபால்சாமி ஊடகழி
கோசலை அம்மாள் புதல்வி
கோகிலாவுக்கும் திருமணம்
கோகிலாவுக்கு அவனது தம்பி
கோபிநாத் மட்டுமே...
கோச்சடையானின்
கோடிக்கணக்கான சொத்துகளுக்கும் இனி
கோகிலாவும் வாரிசு
கோவில்பட்டி
கோடாங்கி
கோமுட்டியின் வேதவாக்கே இந்த
கோலாகலமான திருமணம்
கோச்சடையான் வீரனும்கூட
கோல்ஃப் விளையாட்டில்
கோல்ட் மெடல் வாங்கியவன்
கோச்சடையான் நல்ல திறமைசாலி
கோபப்படாமல் பேசி யாரையும் தனது
கோட்டுக்குள் நிறுத்தி விடுவான்
கோலப்பொடியிலிருந்து...
கோலா டீலர்வரை தொடாத பிசினஸே இல்லை
கோட்டூர் முதல்
கோடியக்கரை வரை
கோபால்சாமிக்கு உறவினர்கள் உண்டு வலைப்பதிவர்
கோமதி அரசு குடும்ப நண்பரும்கூட கணவர் அரசு
கோட்-ஸூட் போட்டு மிடுக்காக நின்றிருந்தார்
கோவிந்தனும் சாதாரண ஆளில்லை
கோபாலபுரம்வரை அரசியல் செல்வாக்கு உள்ளவர்
கோடீஸ்வரர்களின் வரவுக்கு பஞ்சமில்லை
கோவில் இருக்கும்
கோப்பெருந்தேவி நகரின் தெருவின்
கோடிவரை உயர்ரக கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
கோலாலம்பூரிலிருந்து
கோச்சடையானின் உயிர்த்தோழன்
கோதைமாறன் தனது மனைவி
கோவழகியுடன் வந்திருந்தான்
கோயில்பிள்ளை in செதுக்கல்கள் தள அதிபர்
கோ அவர்கள் லண்டனிலிருந்து வந்திருந்தார்
கோடீஸ்வரர்களின்
கோட்டையூர் திருமணத்தை வாழ்த்துவோமே...

வலைப்பதிவர் திருமதி. வல்லிசிம்ஹன் அம்மா கேட்டுக் கொண்டதற்காக இப்பதிவு அவர்கள் விரைவில் நலமடைய எமது பிரார்த்தனைகள் - கில்லர்ஜி

காணொளி

செவ்வாய், பிப்ரவரி 06, 2018

பேராசை பெருநஷ்டம்


நான் உலகை அறிந்த சிறிய அகவை முதலே நானொரு பேராசைக்காரன் எனக்கு ஆண் குழந்தைகள் மட்டும் ஐந்து வேண்டுமென பெயர் கூட வைத்து இருந்தேன்.

சனி, பிப்ரவரி 03, 2018

ஏக் ஹஸார், தீன் ஸோ பந்த்ரா (1315)


அபுதாபியில் இருக்கும் பொழுது எனது கைப்பேசிக்கு, தொலைபேசி தலைமை தகவல் தொடர்புத்துறை அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தி வந்தது தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்து கொள்ளவும் என்று போனேன் ஐந்து நிமிடத்தில் பதிவு செய்து கொடுத்து விட்டார்கள், அடுத்த வாரம் எனது கைப்பேசி (Du No: 055) இணைப்பு துண்டிக்கப்பட்டது மீண்டும் போனால் சந்தைக்கடையைப் போல் கூட்டம் இது எனக்கு மட்டுமல்ல எமிரேட்ஸில் இருக்கும் பல்லாயிரம் பேருக்கும் எனத்தெரிந்தது காரணம் கேட்டால் ? இது சர்வரின் தவறு (சரவணபவன் ஹோட்டலில் வேலை பார்க்கும் சர்வர் அல்ல) என்று சொல்லி ஐ.டி.யை பதிவு செய்து செல்லுங்கள் என்றார்கள் சரியென்று இயந்திரத்தில் வரிசைச்சீட்டு எடுத்தால் எனக்கு வந்த இலக்கம் 1448 நிலுவையில் 960 போய்க்கொண்டு இருந்தது இதனிடையில் ஃபாரத்தில் முத்திரை பதிக்க ஒரு வரிசையும் போனது நானும் நின்று கொண்டிருந்தேன் எனக்கு முன் ஒரு பாக்கிஸ்தானி நின்றிருந்தான்ர் யதார்த்தமாக கவனித்திருந்தேன் காரணம் அவனது ஃபுல்தாடி நான் முத்திரையை குத்த அருகில் போகும்போது ஒரு சீட்டு கீழே கிடந்தது எடுத்தேன் எண் 1315 அவன் அலறிக்கொண்டு வந்தான் எனது சீட்டைக் காணோம் என்று நான் இதுவா ? எனக்கேட்க (எண் எனது அழகிய முகத்துக்கு நேராக இருக்கிறது) அவன் சீட்டைப் பார்க்காமல் எத்தனை ? எனக்கேட்டான், நான் எண்ணை சொல்ல, அவன் என்னுடையது இதில்லை என்று போய் விட்டான், எனக்குப் பின்னால் நின்றவர்கள் சிரித்துக்கொண்டே... உனது எண் பெரியது என்றால் நீ வைத்துக்கொள். நான் நினைத்தேன் இந்த எண்ணை நாம் உபயோகப்படுத்திக் கொண்டால் எப்படியும் ஒரு மணிநேரம் மிச்சமாகும் அவனை மீண்டும் பார்த்தேன் தேடிக்கொண்டிருந்தான் எப்படி ? கிடைக்கும் அதுதான் என் கையிலிருக்கின்றதே, எனக்கு பாவமாக இருந்தது எனக்கு மனது உறுத்தினாலும், சரி அவன் இனிபோய் இயந்திரத்தில் சீட்டு எண் எடுத்தாலும் எப்படியும் 1600க்கு மேல்தான் கிடைக்கும் நமது வேலை முடிந்ததும் நமது எண்னை அவனிடம் கொடுத்து எனக்கு அவசர வேலை இருக்கிறது நீ வைத்துக்கொள் என அவனிடம் கொடுத்து விடுவோம் என நினைத்தேன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மின்பலகையில் 1315 வர கௌண்டரில் இருந்த பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சீட்டைக் கொடுத்தேன்.

அவள் ஊதாக்கலரில் ஜீன்ஸ் பேண்ட், லைட் கலரில் டி.சர்ட் போட்டிருந்தாள், ப்ரௌன் கலரின் கழுத்தில் டை மாதிரி கட்டியிருந்தாள், காதில் இரண்டு வளையல்கள் போல தொங்கி கொண்டிருந்தது, கழுத்தில் ஒரு பாசி போட்டிருந்தாள், அவள் கட்டியிருந்த டை மறைத்திருந்ததால் பாசியின் கலரைக் கவனிக்க முடியவில்லை, தலையில் மஞ்சக்கலரில் பிளாஷ்டிக் ரோஜாப்பூ வைத்திருந்தாள், மூன்று ஹேர்பின்கள் குத்தியிருந்தாள், விழிகளின் புருவத்தில்கூட அழகாக மை தீட்டியிருந்தாள், மூக்கின் வடக்கு திசையில் சிறிதாக கருப்பு மச்சம் ஒன்று, உதட்டிலும் சிவப்பு கலரில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள், கையில் ரோலக்ஸ் வாட்ச் கட்டியிருந்தாள், நெகத்தை நீளமாக வளர்த்து வார்ணீஷ் அடித்திருந்தாள், விரலில் வெள்ளியிலான மோதிரத்தில் M என்று கற்கள் பதித்திருந்தது, நேம் பேட்ஜில் பெயர் மைலீன் என்று இருந்தது, காலில் கொலுசோ, செருப்போ, போட்டிருக்கின்றாளா ? என்பதை கவனிக்க முடியவில்லை காரணம் டேபிள் மறைத்திருந்தது எட்டிப்பார்க்கும் உத்தேசமும் இல்லை காரணம் இதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை இரண்டரை மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் காத்திருக்கின்றேனே அதன் வெறுப்பு.

அந்தப் பாக்கிஸ்தானி இந்தக்கூட்டத்தில் எங்கு நின்றானோ.. தெரியவில்லை மின்பலகையில் எண்ணை பார்த்ததும் ஓடி வந்து விட்டான், வந்தவன் பிலிப்பைனிக்கு அருகில் போய் எட்டி, எட்டி சீட்டைப்பார்க்க அவள் கோபமாகி ‘’கோ ட்டூ தட் சைட்’’ என்று சத்தமிட காரணம் பாக்கிஸ்தானியர் மேலிருந்து எப்பொழுதுமே ஒரு விதமான ஊழை நாற்றம் வரும் இது பிலிப்பைனி பெண்களுக்கு பிடிக்காது இவர்களுக்கு கக்குSoap இருப்பது தெரியாதுபோல இவன் சரியாக பேசத்தெரியாததாலோ, என்னவோ, பெரும்பாலும் பாக்கிஸ்தானியர்களுக்கு ஆங்கிலமும் வராது, இப்புறம் வந்து என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் நான் கவனிக்காதது மாதிரி Yes Madam என விபரம் சொல்லிக்கொண்டு இருந்தேன் இடையில் கவனமாக மீசையை முறுக்கிக்கொண்டே இருந்தேன் அவனுக்கு என்மீது சந்தேகம் வந்து விட்டது. எனது ஐ.டி.யை வாங்கி குறித்துக்கொண்டு அடுத்த 48 மணி நேரத்தில் இணைப்பு வந்தாலும் வரலாம் நமது ரமணன் ஐயா போலவே சொன்னாள். அப்பாடா வந்தவேலை முடிந்து விட்டது திரும்பினால் பாக்கிஸ்தானி என்னிடம் ஏதோ கேட்பதற்காக வர, நான் சட்டென மற்றொரு கைப்பேசியை எடுத்து (Etisalat No: 050) வராத அழைப்பில் Sir I applied for a project in America yesterday but the managing director did not approve that project. Shut up bloody nonsense I will kill you… இப்படி சத்தமாக கையை ஆட்டி ங்கொய்யாலே கொன்னேபுடுவேன் என்பது போல் பேசிக்கொண்டே வெளியே வந்து விட்டேன் கொஞ்ச தூரம் பின்னால் வந்தவன் நின்று விட்டான் நான் சீருந்தை முடுக்கி விட்டு எடுக்கும்வரை கைப்பேசி என் காதோடு... அவனை மீண்டும் பார்த்தேன் பாவமாக இருந்தது இவனுக்கு எப்படி ? எனது எண் 1448 டை கொடுக்க முடியும். சந்தேகம் ஊர்ஜிதமாகி சண்டைக்கு வந்து விட்டால் ?

ஆம் அந்த எண் அவனுடையதே அதாவது நான் உன்னுடையதா ? எனக்கேட்டும் அவன்தான் என்னுடையது இல்லை என்று போனான் தவறு என் மீதல்ல.... அதாவது அவன் எத்தனை எனக்கேட்டபோது நான் ஏக் ஹஸார், தீன் ஸோ பந்த்ரா என்றேன் அதற்கு அவன் என்னுடையது தேரா ஸோ, பந்த்ரா என்று சொல்லிவிட்டு உடனே போய் விட்டான் இரண்டுமே ஒன்றுதான் ஆம் அதாவது ஏக் ஹஸார் தீன் ஸோ பந்த்ரா என்றால், ஓராயிரத்து, முன்னூற்றி பதினைந்து, தேரா ஸோ பந்த்ரா என்றால் பதிமூன்று நூறுகளும், பதினைந்தும். உதாரணத்திற்கு இந்தியர்கள் ஏக் ஹஸார், ஆட் ஸோ (ஆயிரத்து, எண்ணூறு) என்று சொல்வோம், பாக்கிஸ்தானியர்கள் ஆயிரத்து எண்ணூறை, அட்டாரா ஸோ என்பார்கள் அதாவது (பதினெட்டு நூறுகள்) ஒவ்வொரு வார்த்தைகளின் ஜாலம் மாறி விடுவதால் சிலருக்கு பலனும் உண்டு அந்த சிலரில் அன்று நான்.

காணொளி

வியாழன், பிப்ரவரி 01, 2018

எழுத்து -100


எழுத்து
எனக்கு
எனது சுவாசம்போல
எப்பொழுதும்
எனது
எண்ணங்களை
எழுதிக்கொண்டே இருக்கணும்
எனது பொழுதுபோக்கு மட்டுமல்ல
எனது கொள்கையும்கூட நாளை
எனது பிறந்தநாள்
என்ன
எழுதலாம்
எதையாவது
எழுதுவோம் மனம்
எதை
எதையோ
எழுதச் சொன்னது
எத்திராஜ் கல்லூரியில்
எழுபத்து ஐந்தில் நடந்த
எழுத்துப் போட்டியில் நான்
எழுதிய
எத்தோப்பிய சாம்ராஜ்யம்
எங்கள் தேவகோட்டைக்கே சொந்தம்
என்ற கவிதையைப்பற்றி
எழுதலாமா இல்லை
எனது ஊரைப்பற்றி
எழுதுவோமா
எப்பவோ
எழுதிட்டோமே
எட்டையபுரத்து கவிஞனைப்பற்றி
எத்தனை தடவைதான்
எழுதுவது
எமது நண்பர்
எமனேஸ்வரம்
எழுத்தாளர்
எமகண்டனைப்பற்றி
எழுதலாமே
என்னத்துக்கு அவரைப்போயி
எவனையாவது திட்டி
எழுதுவோமா
எவனைத் திட்டலாம்
எல்லோரையும் திட்டி
எழுதியாச்சே
எவனும் இல்லையே
எருக்கஞ்செடியைப்பற்றி
எழுதலாமா
எதுவும் தோனலையே
எமனைப்பற்றியும்
எமன்
எருமை மாட்டுல
எதற்கு வருகிறார்
என்பதைப்பற்றி விரிவாக
எழுதுவோமா
எதற்கு அது அபசகுணமாக
எருமை மாட்டைப்பற்றி
எழுதுவோமா
எருமை மாட்டுல
என்ன இருக்கு
எதுவும் இல்லை
என்னைப்பற்றி
எதுவுமே இல்லையே
என்னத்தே கண்ணையாவைப்பற்றி
எழுதலாம்
என்னத்தே
எழுதி
என்னத்தே கிழிச்சு
என்ன இது
என்றைக்குமில்லாமல்
எனக்கா சலிப்பு
எழுத்து மீது
எனக்கே
என்மீது ஆச்சர்யம்
எப்படியோ உறங்கிப் போனேன்
எனது செல்லிலிருந்து
எங்கே
என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னைத் தந்தேனே
எழுந்து பார்த்தால்
எட்டு am மணி
எனது அலுவலக
எண்ணிலிருந்து அழைப்பு சட்டென
எதிர்ப்புறம் பாய்ந்தேன்
எந்த இடம் தெரியுமா
எனது TOILET Sorry inside not allowed

Chivas Regel சிவசம்போ-
எதுவுமே இல்லாமே எதையாவது எழுதி என்னை படின்னா எனக்கு என்ன வேலை இல்லையா ? எட்டு மணியாச்சு கடை திறந்திருப்பான் என்னோட நண்பன் எத்திராஜூ எழும்பூர் எட்டாம் நம்பர் கடையிலே எட்டணாவுக்கு எள்ளு உருண்டை வாங்கிகிட்டு எனக்காக காத்திருப்பான்... கட்டிங்கோட எட்றா வண்டிய..