தலைவர் இன்றைய அறிக்கையில்
விட்ட தகவல் பிரச்சினையாகி விட்டதா ?
ஆமா,
கொன்றே செய் அதே நன்றே செய் என்று சொல்லி விட்டார்.
*------------------------------ 01
தலைவர் கூடவே எல்லா
இடத்துக்கும் போறாங்களே புதுசா ஒரு பெண் அவங்க யாரு ?
தலைவருக்கு
அரசியல் வாரிசு இல்லாததால இனிமே இவங்கதான் அடுத்த தலைவியாம்.
*------------------------------ 02
தலைவர் திருவள்ளுவர் பிரியரா
இருக்கலாம் அதுக்காக இதெல்லாம் ரொம்ப ஓவருனு... சொல்லிட்டுப் போறாரே... செக்ரட்டரி
ஏன் ?
அரசு
கோப்புகளில் எழுத்தாணியாலதான் கையெழுத்து இடுவேன்னு கையெழுத்துப் போட்டே
கிழிச்சுட்டாராம்.
*------------------------------ 03
தலைவர் நான் ஆட்சிக்கு
வந்தால் பிச்சைக்காரர்களை ஒழிப்பேன்னு சொல்றாரே... எப்படி ?
எல்லோரையும்
கூண்டோட ஏற்றி பாக்கிஸ்தான் பார்டரில் கொண்டுபோய் விட்ருவாராம்.
*------------------------------ 04
தலைவர் கோஷம் போட்ட
தொண்டர்கள் எல்லோரையும் திட்டினாரே ஏன் ?
அவங்க
எல்லோருமே தலைவர் வால்க ! அப்படினு கத்தினாங்களாம்.
*------------------------------ 05
தலைவர் திடீர்னு... எதுக்கு ? காக்காவை
எல்லாம் பிடிப்பதற்கு குறவர்களின் உதவி தேவைனு அறிக்கை விடுகிறார் ?
நேற்று
அவரு கட்சிக்கொடி ஏற்றும் பொழுது அவரு வாயில காக்கா கக்கா போயிடுச்சாம் அதனாலதான்
இந்த அவரசகால உதவி.
*------------------------------ 06
தலைவர் எதுக்கு ? எப்பொழுதுமே
தனியாக இருக்கும் பொழுது தலையிலேயே அடிச்சுக்கிறாரு... ?
அப்பத்தான்
அவருக்கு அக்கப்போரான சிந்தனைகளை ஒழிந்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் வருமாம்.
*------------------------------ 07
தலைவர் ஸ்விட்சர்லாந்து போய்
பேங்க் அக்கவுண்ட் தொடங்க முடியாமல் திரும்பி வந்துட்டாரா ?
ஆமா
கையெழுத்து போட தெரியாமல் ஃபாமில் கைநாட்டு வச்சுருக்கார் திருப்பி
அனுப்பிட்டாங்க...
*------------------------------ 08
தலைவர் எதுக்கு ? இப்பவும்
கட்சியின் முதல் போஸ்டரை அவரே ஒட்டி துவங்கி வைக்கிறாரு ?
அவரு
எப்பவுமே பழசை மறக்க கூடாது, கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கனும்’’னு
சொல்லுறவராச்சே....
*------------------------------ 09
தலைவர் உகாண்டா நாட்டுக்கு
புறப்பட்டவர் விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்துட்டாரே... ஏன் ?
சன்னலோர
ஷீட்டுல யாரு ? உட்காருறதுனு... தலைவரோட முதல் தாரத்துக்கும்,
ரெண்டாம் தாரத்துக்கும் குடுமிபிடி சண்டை வந்துருச்சாம்.
*------------------------------ 10