தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 29, 2018

ஆயிரம் அர்த்தங்கள்

வர்களை பார்த்தவுடன், சட்டென சிரிப்பவரா நீங்கள் ? அப்படியென்றால் உங்களுக்கு விரிவான, உயர்வான மனதை இறைவன் கொடுக்கவில்லை என்றே பொருள், மாறாக சிந்தித்து பார்த்தீர்களானால் நல்ல எண்ணமுள்ளவர், நன்றி மறக்காதவர், ஆம் சில விசயங்களை வைத்தே சிலரை கணிக்க முடியும் என்பது உண்மைதான், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் கைபேசியின் ஒலியோசையை வைத்துக்கூட ஒருவரது குணதியசங்களை கணிக்க முடியும், என கசாநாயகி கசாநாயகனிடம், சொல்வார். ஆம் இதுவும் ஓரளவு உண்மையே உணர்வு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவன் கொடுத்துள்ளான், அப்படியிருக்க இவர்களும் மனிதர்கள்தானே இவர்களுக்கும் ஒரு வாழ்க்கை வேண்டுமே...

வியாழன், ஜூலை 26, 2018

இறைவனை பார்த்தது யார் ?


சிவனை யாராவது பார்த்து இருக்கிறார்களா ? அவர் முறுக்கிய மீசையுடன் தமிழ் சினிமா, சீரியல் நாடகங்களில் வருகிறார் சரி. அதேநேரம் வடநாட்டு சினிமா சீரியல் நாடகங்களில் ஏன் மீசையில்லாமல் வருகிறார் ? வடநாட்டு தெய்வங்கள் எல்லா வகையிலும் அப்படியே வேறு படுகிறார்கள் தற்கால சராசரி மனிதர்கள் போலவே தலைமுடியை வெட்டாமல் அப்படியே வருகிறார்கள் சரி ஆனால் முகத்தை மட்டும் மீசையை ஒதுக்கி தாடியை மழித்து விட்டு வருகிறார்களே அப்படியானால் அவர்களுக்கும் ஷேவிங் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறதா ?

திங்கள், ஜூலை 23, 2018

நீ வாழ பிறரைக்கெடு


வணக்கம் நட்பூக்களே... சமீபத்தில் ஐயா திரு. டிராபிக் ராமசாமி அவர்கள் யூட்டியூபில் பேசியதைக் கேட்டேன் அதில் அவர் சொன்னது சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஒருமுறை சென்று இருந்தேன் அங்கு கடமையை செய், பலனை எதிர் பார் என்று ரஜினிகாந்த் எழுதி வைத்து இருக்கின்றார். என்றும் இவரால் எப்படி மக்களுக்கு நன்மையை செய்ய முடியும் ? என்று கேட்டு, அதன் பிறகு அந்த மண்டபத்துக்கு நான் செல்வதில்லை என்றும் சொல்லி இருந்தார்.

வெள்ளி, ஜூலை 20, 2018

தமிழனின் பண்பாடு

நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற முடிவுக்கு வந்தது ஒருக்கால் காணும் வாய்ப்பு கிடைத்தாலும் தவிர்ப்பேன் நான் தவிர்ப்பதால் இவரது புகழ் சரிந்து விடும் என்று மடத்தனமாக நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை நான் சந்திக்க நினைத்து நிகழாமல் போனது மறைந்த அக்னிப்பறவை திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், துக்ளக் ஆசிரியர் திரு. சோ. அவர்கள், அதைப்போல் நான் சந்திக்க நினைக்கும் மனிதர்களில் ஒரு சிலர் உண்டு அவர்களில் முதலாமாவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. சகாயம் அவர்கள், பெங்களூருவில் இருக்கும் விந்தை மனிதர் திரு. சத்ய நாராயணா அவர்கள், (இவர் திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் உடன் பிறந்த சகோதரர் ஆவார்)

புதன், ஜூலை 18, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ ? இதை கண்ட கோடரி வேந்தன்...
செந்து அச்சம் தவிர்த்தல் நலம் வதனம் மகிழ்ச்சி கொள்க.