தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 05, 2015

ஒரு ‘’கொசு’’று...


நடிகர் புரோட்டா சூரி புதிய அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு Last Modified: சனி 29 ஆகஸ்ட் 2015 (16:34 IST)

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் புரோட்டா சூரி. இவர் தனது 38 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார் 1999 ல் திரையுலகில் நுழைந்தவருக்கு 2009 ல் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படமே புரோட்டா சூரியாக ஓர் அடையாளத்தை கொடுத்தது. இதற்கு பிறகு நடித்த படங்கள் இவருக்கு பல வெற்றியை கொடுத்துள்ளது .தற்போது அஜித் படம் உட்பட பலர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி கதநாயகனாகவும்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சூரியின் 38 வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தமிழர்களின் பெருமைகளையும் பாரம்பரியத்தையும் தமது நடிப்பிலும் வசனத்திலும் இயல்பாக வெளிப்படுத்தி வரும் நடிகர் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

(1)                                                                           (2)

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ.வையும் தனது நண்பர்களுடன் நேரில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்தது. மேலும் தனது பிறந்த நாள் அன்று சென்னை விஜயா மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார் .

நடிகர் சூரிக்கு   பல்வேறு  கட்சியிலிருந்து தற்போது  அழைப்பு வந்துள்ளதாக தெரிகிறது .ஆனால் எந்த கட்சியிலும் சேர விருப்பம் இல்லை என்பதால் தனியாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.



* * * * * * * * * * * * * * * * * * * * 

மேற்கண்ட தகவலுக்கும் எனக்கும் பந்தம் இல்லை மேலேயுள்ள புகைப்படத்தில்கூட எனது சித்து வேலையை காண்பிக்கவில்லை ஐயம் உண்டெனில் இணைப்பை சொடுக்கி பார்க்கலாம் நம்ம வாயும் சும்மா இருக்காது லேசா கேட்டு வைப்போம் இது ஒண்ணுக்கு சிறுமையா ? ரெண்டுக்கு பெருமையா ? கீழ்காணும் கருத்துகளுக்கும் நானே பொருப்பு.- கில்லர்ஜி


Chivas Regal சிவசம்போ-
இவரு ஆச்சியைப் புடிச்சா ? வீட்டுக்கு வீடு புரோட்டா இலவசமாமே அப்படியா ?

சிவாதாமஸ்அலி-
இவராவது வந்து தமிழ் நாட்டை தூக்கி நிறுத்தி புரோட்டா விலையைக் குறைத்தால் சரிதான்.

சாம்பசிவம்-
1999ல வந்து 2009ல புரோட்டாப் போடும்பொழுது இவருக்கு பிறந்தநாள் வரலையோ ? இப்ப... மட்டும்... பன்னாடை.... ச்சீ பொன்னாடையா...
எங்கிருந்தோ......... வடிவேலு-
நம்ம கதி தெரிஞ்சும் பயபுள்ளைக்கு புத்தி வரலையே...

43 கருத்துகள்:

  1. வடிவேலுவின் நிலை தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

    அரசியலில் குதித்து இவரும் குட்டையைக் குழப்புவாரா.... பொறுத்திருந்து பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இவங்கே குழப்புவது இருக்கட்டும் நாம் குழம்புவது உறுதி.

      நீக்கு
  2. ஏன்தான் இப்படி நடிகர்கள் பின்னால் அலைகிறார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம அவங்கே பின்னாலே போறோமே அதுதான் காரணம் நண்பரே...

      நீக்கு
  3. வடிவேலுவைப் பார்த்தாவது சூரி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையிலே கொஞ்சம் காசு இருக்கு கைவண்டி இழுத்து சம்பாரித்து இருந்தால் தெரியும்.

      நீக்கு
  4. நண்பரே
    தமிழ் மணம் வாக்குப் பட்டையைக் காணவில்லையே

    பதிலளிநீக்கு
  5. ம்...என்னத்த சொல்ல.யார் யாரை நம்பி இந்த தமிழ்நாடு இருக்குது ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் நண்பரே..

      நீக்கு
  6. மேற்கண்ட தகவலுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை, புகைப்படத்திலும் சித்துவேலை இல்லை என்றதும்தான் தொடர்ந்து படித்தேன். ஏனென்றால் தங்களின் வித்தியாசமான உத்தியைப் பல நிலைகளில் அனுபவத்தவர்கள் அல்லவா நாங்கள்? அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே பொதுவாக நான் பிறருடைய கருத்துகளை வெளியிடுவதில்லை இது எனது மனதை உறுத்தியது ஆகவே வெளியிட்டேன்.

      நீக்கு
  7. தமிழ் நாட்டில் திரை உலகிலிருப்பவர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது அல்ல. இவரும் வரட்டும், கை காசை செலவழித்து பாடம் கற்றுக்கொள்ளட்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே சிலருக்கு பட்டால்தான் தெரியும் தொட்டது நெருப்பென்று...

      நீக்கு
  8. பாருங்கள்..
    ஒரு பதிவை வெளியிடுவதற்கு எப்படியெல்லாம் உறுதிமொழி தர வேண்டியிருக்கின்றது!..

    அது சரி!..

    புரோட்டா இலவசம்..ன்னு கொடுத்துட்டு -
    சால்னாவுக்குக் காசு கேப்பாய்ங்களோ!!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி யாரும் எனது பதிவு என்று நினைத்து விடக்கூடாதே...

      இந்த சால்னா விடயத்துக்கு வருங்கால முதல்வர் மாண்புமிகு. புரோட்டா சூரி அவர்களிடம் கேட்டு சொல்கிறேன் ஜி கொஞ்சம் காத்திருங்கள்.

      நீக்கு
  9. இதுவரைக்கும் நல்லாத்தான போயிட்டு இருந்தது....பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தலையெழுத்துப்படிதானே நடக்கும்.

      நீக்கு
  10. தமிழன் தலையெழுத்து நடிகர்களிடம் தான் போலும்,,,,,, ம்ம்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நடிகர்கள் கட்சியில் இருந்தால் கட்சியின் பலம் கூடுமென்று ஒரு கணிப்பு போலும்

    பதிலளிநீக்கு
  12. ஹா.. ஹா.. அருமை!
    அரசியலில் இதெல்லாம் சஜமய்யா..:)))

    பதிலளிநீக்கு
  13. சூரி பரோட்டா சுருள் பரோட்டாவாகி பெட்டிக்குள் படுக்கப் போவுது பாருங்களேன்.
    எல்லாம் துட்டு படுத்தும் பாடு!
    துட்டு துண்டுக்கு ஆசைப் பட்டு அவுட் ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை நண்பா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் ஆசைதான் நண்பா... 4 பேரு கைதட்டினால் போதுமே...

      நீக்கு
  14. .... இலவச புரோட்டா வுக்கே ஓட்டு போடுவாங்கே.... நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாலுனாவுக்கு கடைக்கு போகனுமோ... நண்பா..

      நீக்கு
  15. சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டில் ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் வடிவேலு ஒரு நல்ல பாடம். அதை மற்றவர்களு ம் புரிந்து கொண்டால் நல்லது.
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று வந்ததெல்லாம் நாற்காலி கனவு கண்டால் என்னதான் செய்வது நண்பரே....

      நீக்கு
  16. ஆசைதான் துன்பத்துக்கு காரணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உணமையே..

      நீக்கு
    2. அன்புள்ள ஜி,

      கள்ளாட்டம் ஆடுறதெல்லாம் பிடிக்காது... மொதல்ல இருந்து எண்ணுங்க...!
      ஒன்னுக்கும் ரெண்டுக்கும் போயிட்டு அலையா அலைய வேண்டியதுதான்...! எங்கே அந்த சூரி கத்திய காணாம்...!

      த.ம.10

      நீக்கு
    3. ஆமாம் ஜி இவங்கே வந்தால் மீண்டும் மீண்டும் எண்ணச் சொல்வாங்களே...

      நீக்கு
  17. அட ,சூரி அவ்வளவு பெரிய அப்பா டக்கரா :)

    பதிலளிநீக்கு
  18. ஹஹஹஹ ஜி! இப்படித்தான் நம்ம அரசியல் கேவலமாகுது பாருங்க...

    வடிவேலுவுக்கு வந்த நிலைமை இவருக்கும் வராமல் இருந்தால் சரி! வரும் பாருங்க...அது சரி ஏன்பா நம்ம அரசியல் வாதிகள் நடிகர்கள் பின்னால் அலையுறாங்க இல்லை நடிகர்கள் அரசியல் வாதியா ஆகுறாங்க....நடிக்கத் தெரியும்னா? ஒன்ணுமே புரியலையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றைக்கு கட்டவுட் கலாச்சாரம் ஒழியுதோ... அன்றுதான் தமிழ்நாடு உருப்படும்

      நீக்கு
  19. இசைக்குழு இல்லாட்டி
    நகைச்சுவை நடிகர் கலகலப்பு இருந்தால் தானே
    அரசியல்வாதி மேடையில் பேச
    கேட்பதற்கு நாலாளுகள் வருவாங்க...

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்
    ஜி
    இரண்டு பேரும் மக்கள் இரசிக்கும் நடிகர்தான் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பதற்கு இவர்கள் ஒரு காரணம்தான்... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு