தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 26, 2018

ஆ(ட்)சீர் வாதம் 2


தொடக்கப்பகுதியை படிக்க.... ஆ(ட்)சீர் வாதம்1

விழாவுக்கு வந்தவர்கள் பேச வேண்டுமே காரணம் இனி அடுத்த தேர்தல் வரும்வரை பேசுவதற்கு மேடை கிடைக்க சாத்தியமில்லை மேலும் பேசுவதை நிறுத்திக்கொண்டால் பேசுவது எப்படி ? என்பது மறந்து போகவும் கூடும் பேச்சுத்திணறினால் சில நிருபர்கள் அவசியமற்ற கேள்விகளை தொடுத்து மூஞ்சியில் தூ என்று துப்பும் அளவுக்கு கோபத்தைக் கிளறி விடுபவர்களும் உண்டு சிலர் கடைசி காலம்வரை கல்யாணமே செய்யாமல் வாழும் கண்ணகிகளாககூட இருப்பார்கள் சரி விடயத்துக்கு போவோம். பிறகு விழா மேடைக்கு வருவார்கள் சிலர் மேடைக்கு வராமலேயே பேசுபவர்களும் உண்டு

காரணம் சிலர் நடைவண்டியோடு வருவார்கள் இப்படிப்பட்டவர்கள் பேச மேடைக்கு போகாமலேயே உட்கார்ந்த நிலைப்பாட்டில் வாழ்த்துவது தேவலோக நாயன்மார்களின் வாழ்த்துகளுக்கு இணையானது என்று காமசாஸ்த்திரத்தின் துலாவு12 பாகம் 3 பகுதி 64 லில் சொல்லப்பட்டு இருக்கின்றது இப்படிச்செய்தால் மணமக்கள் தாம்பத்யத்தில் நிலைத்து உழைத்து திளைத்து புத்திர பாக்கியம் செழித்து வளரும் என்பதும் ஐதீக முறைப்படி வழங்கப்பட்டு இருக்கின்றது இதன் காரணமாகவே சிலர் நடைவண்டிப் பயணத்துடன் திருமண விழாவில் பங்கேற்று சிறப்பிக்கின்றார்கள் என்பது தாங்கள் அனைவரும் அறிய வேண்டிய அரிய விடயமாகும்.

அடுத்து பேச ஆரம்பிப்பார்கள் மணமக்களுக்கு வாழ்த்தி இரண்டொரு வார்த்தை பிறகு பேசுவார்கள் பாருங்கள்
//எங்கள் ஆட்சியிலே பொன் விளைந்தது
இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் மண் விழுந்தது//
என்று சொன்னவுடன் திருமணத்துக்கு சில ஆச்சிகளும் வந்திருப்பார்களே அவர்கள் இயல்பாகவே சாஸ்திர நம்பிக்கையில் மூழ்கியவர்கள் அவர்கள் முகம் சுழித்து விடுவார்கள் காரணம் திருமண வீட்டில் வந்து மண் விழுந்தது என்று சொல்லும் வார்த்தை இலவு வீட்டில் சொல்லப்பட வேண்டியதல்லவா ! இருப்பினும் அந்த நொடியே இதற்காகவே வரவழைக்கப்பட்டு திருமண மண்டபத்தின் மொட்டை மாடியில் நேற்றிரவிலிருந்தே டாஸ்மாக்கில் குளித்தவர்கள் கை தட்டுவார்கள் சிலர் விண்ணைத்தொடும் அளவுக்கு வாயிலிருந்து விசில் சப்தத்தை எழுப்புவார்கள்

இப்படி வார்த்தைக்கு வார்த்தை இவர்கள் செய்வார்கள் மன்னிக்கவும் செய்தாக வேண்டும் இவர்களின் ஆட்சியில் மக்கள் கண்ணீர்க் கடலில் தத்தளிக்கின்றார்கள் பெண்கள் மானபங்கப்படுத்தப் படுகின்றார்கள் மக்களின் உயிருக்கு உத்திரவாதமில்லை பேருந்துகளில் பயணிகளை உயிருடன் தீ வைத்துக் கொளுத்துகின்றார்கள் காவல்துறை அவர்களின் கைப்பொம்மையாக உயிருள்ள நடைபிணமாக்கப் பட்டுள்ளார்கள் மதுக்கடைகளை திறந்து வைப்பதால் பெண்கள் தினம் தினம் தாலியறுத்து விதவை ஆகின்றார்கள் பிறகு வெட்கங்கெட்ட ஜென்மங்களே உங்களுக்கு மானமிருந்தால் ? ரோஷமிருந்தால் ? திராணியிருந்தால் ? ஆட்சியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்கத் தயாரா ? என்று சவால் விடுவார்கள் காரணம் இவர்கள் கவரிமான் ஜாதி இப்படி ஏற்கனவே எதிர்க்கட்சி கேட்டதால் ரோசப்பட்டு பலமுறை ராஜினாமா செய்தவர்கள்.

ஏண்டா கல்யாணத்துக்கு வந்தவங்கே பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்திட்டு போகாம எலவு வீட்டுல பேசுறது மாதிரி பேசுறியலே நீங்க வெளங்கவே மாட்டீங்கடா ஒங்களைச் சொல்லி குத்தமில்லை இந்தக் கல்யாணத்துக்கு உறவுக்காரவுங்களை எல்லாம் தள்ளி வச்சுச்சுட்டு ஒங்களை மனையிலே தூக்கி ஒக்காரவச்சு நடத்துறானே பாவிப்பய செண்பகமூர்த்தி அவனைச் சொல்லணும்டா என்று நான் எழுதியதாக என்னை தவறாக நினைத்து விடாதீர்கள் தனது சொந்த பேரனின் திருமணத்துக்கு நடக்க முடியாத தனது கணவரையும் அழைத்து வந்திருந்து மணமக்களுக்கு அட்ஷதை போட்டு ஆசிர்வாதம் செய்ய முடியாமல் வேதனைப்பட்ட ஆச்சி திருமதி. மீனாட்சி நாராயணன் மனதிலிருந்து வேதனையால் எழுந்த வலியின் ஒலியே தவிர எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லைங்கோ...

முற்றும்

37 கருத்துகள்:

  1. நெஜந்தாங்க...

    நமக்கும் இதுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லீங்கோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையை ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  2. ஆசிர்வாதம் செய்ய முடியாமல் தவித்த மீனாட்சி நாராயணன் அவர்களின் புலம்பலை பதிவு செய்து விட்டீர்கள்.
    மேடை கிடைத்து பேச வாய்ப்பு கிடைத்தால் எப்படி பேசுவார்கள் அரசியல் வாதிகள் என்பதையும் சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  3. நான் சென்ற பதிவிலேயே சொன்னது போல நிறைய பேர்கள் உண்மையான திருமனச் சடங்குகளை முன்னதாகவோ, பினதாகவோ நிறைவேற்றிக்கொண்டு, தங்கள் பிழைப்பு நடக்கவேண்டியும் தங்கள் பிரபல்யத்தை நிலைநாட்டிக்கொ(ல்ல)ள்ளவும் இது போல ஏற்பாடுகள் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி அதற்கு இனி சாத்தியங்கள் குறைவு.

      காரணம் நடுத்தர வர்க்கங்களின் திருமணங்கள்கூட சாஸ்த்திரங்கள் நிராகரிக்கப்படுகின்றன...

      நீக்கு
    2. ஒரு வகையில் கில்லர்ஜி நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை, அதனைப் பின்பற்றுபவர்களில் பலர் அறிந்துகொள்ளாமல், எதையும் அவசர அவசரமாக, செய்தோம் என்ற திருப்திக்கு மட்டும் செய்கிறார்கள்.

      எம்.ஜி.ஆர் அவர்களை சில திருமணத்துக்கு அழைத்தபோது, அழைத்தவர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உடையவர்கள் என்பது தெரிந்து, உங்கள் வழக்கப்படி திருமண சம்பிரதாயங்களை முடித்துக்கொள்ளுங்கள், பிறகு நான் வந்து வாழ்த்துகிறேன் என்று சொல்லியதாகப் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. தமிழரின் வருகைக்கு நன்றி இப்பொழுது எல்லோருமே சாஸ்திரங்களை புறக்கணிப்பது அதிகரித்து விட்டது உண்மையே...

      எம்.ஜி.ஆரின் உயர்ந்த எண்ணங்கள் பாராட்டுக்குறியது.

      நீக்கு
  4. அத்தனை கொடுமையும் தீர நல்ல காலம் வரும்...(?)

    பதிலளிநீக்கு
  5. திருமண வீட்டிற்கு அரசியல்வாதிகள், காசு வாங்கிக்கொண்டுதான் வருகிறார்கள். சிலர், தலைவருக்கு, அவர் மனைவிக்கு பட்டு வேஷ்டி புடவை வாங்கிக்கொடுக்கிறார்கள். அதைத் தவிர லட்சங்களில் கட்டணம் கட்டணும். தலைவர், என் திருமணத்தை நடத்தினார், எங்கள் இல்லத் திருமணத்துக்கு வந்திருந்தார் என்று சொல்லி லோக்கலில் கெத்து காண்பிக்கவும், இதைச் சாக்கிட்டு தலைவரின் முகத்தில் பட்டு, எம்.எல்.ஏ போன்ற சீட்டுகள் கிடைக்காதா என்பதற்கும் இப்படிச் செய்கிறார்கள். ஹாஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இதுதான் நிதர்சனமான உண்மை. அழகாக சொன்னீர்கள் தமிழரே

      நீக்கு
    2. திமுக ஆரம்பத்திலிருந்தே இதனைச் செய்துவருகிறது. அதனைப் பார்த்து பாமக, வி.சி போன்றவைகளும் இதனைக் கடைபிடிக்கின்றன. ஒரு நண்பர், அன்புமணி கலந்துகொள்வதற்கு இவ்வளவு பணம், வீட்டிற்கு அன்பளிப்பு என்று வாங்கிக்கொள்கிறார் என்று சொன்னார். அதுல என்ன லாபம் திருமணத்துக்கு அழைக்கறவங்களுக்கு என்று கேட்டதற்கு, லோக்கல் மற்றும் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் மரியாதை கிட்டும் (இது என்னவிதமான மரியாதை, அந்த சிஸ்டம் எப்படி நடக்கிறது என்றெல்லாம் இங்க எழுதமுடியாது), கட்சிப் பிரமுகர்களிடம் பழக்கம் ஏற்படும். ஊர் மற்றும் சுற்றுவட்டார கட்சிக்காரங்களின் மதிப்பு கிட்டும் என்று சொன்னாங்க.

      நீக்கு
    3. இவர்களெல்லாம் வறட்டு கௌரவத்தை ஆராதிக்கும் அற்ப கூட்டத்தினர் நண்பரே...

      இவர்கள் நிச்சயமாக நியாயவான்களாக இருக்கவே முடியாது.

      நீக்கு
  6. சரியாகச் சொன்னீர்கள். எங்கே என்ன பேசவேண்டும் என்பது இப்போதுள்ள மக்களுக்குப் புரியவில்லை. சாதாரணமாக வீட்டில் பேசிக் கொள்வது கூட நல்ல வார்த்தைகளாக இருக்க வேண்டும் என்பார்கள். துர்தேவதைகள் சுற்றிக்கொண்டிருக்கும். அவை நாம் கெட்ட வார்த்தையோ அமங்கலமாகவோ பேசினால் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விடுமாம். ஆகவே பேசக் கூடாது என்பார்கள். ஆனால் யார் கேட்கின்றனர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ
      நீ என்ன நினைக்கின்றாயோ...
      நீ என்ன பேசுகின்றாயோ...
      அப்படியே ஆகின்றாய் என்றும் வேதங்கள் சொல்கின்றன, ஆகவே நல்லதையே பேசுவோம்.

      நீக்கு
    2. கீதாக்கா நான் இதை கன்னாபின்னாவென்று ஆதரிப்பேன். எங்குமே நல்ல வார்த்தைகள்தான் பேச வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லுவேன் வீடு உட்பட. என் மகனுக்கு அடிக்கடிச் சொல்லுவதும்....வாயில் பாசிட்டிவ் வார்த்தைகளே வர வேண்டும் என்று...கெட்ட வார்த்தைகள் தவறிக் கூட வரக்கூடாது என்று...கில்லர்ஜி நீங்கள் சொல்லியிருப்பது போல நம் எண்ணங்களும் உட்பட...

      கீதா

      நீக்கு
  7. இப்படி அரசியல் வாதிகளை அழைத்து திருமணம் செய்வதற்கு சீர்திருத்தக் கல்யாண்ம் என்ற பெயராமே சட்டப்படிசெல்லுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இது செல்லுமா ? என்பது அறியவில்லையே...

      நீக்கு
  8. உண்மையை உரக்க சொன்னீர்.

    பதிலளிநீக்கு
  9. சொல்வதெல்லாம் பலித்துவிட்டால்..என்னாகும் நண்பரே..! அது பலிக்காது என்பதால்தான் எவ்வளவு அக்கப்போர்கள்...!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  10. தங்களது ஆதங்கம் புரிகிறது

    பதிலளிநீக்கு
  11. கழுதைகுட்டிக் கல்யாணம்.. பப்பிக்குட்டிக் கல்யாணம் பற்றியே பேசுறீங்களே.. எப்போதான் கேள் உம்ம் போய் உம் கல்யாணம் பற்றிப் பேசப்போறீங்க ஹா ஹா ஹா படத்துக்குச் சொன்னேன்:))...

    இப்ப்போ சொந்த பந்தத்தை விட, பெரிய கார்களில் வந்து இறங்குவோருக்குத்தான் மரியாதை அதிகம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உண்மைதான் வறட்டுக் கௌரவமே பெரிதாகி விட்டது.

      நீக்கு
  12. இவ்வாறு தகாத வார்த்தைகள் பேசுவதற்கு இவர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள்.
    பாவம் மீனாட்சி பாட்டி. எங்கே போய்விடும் காலம். அது இவர்களுக்குப் பதில் சொல்லட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா இதுதான் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது.

      நீக்கு
  13. சம்பந்தமில்லை என்று சொல்வது தப்பித்துக்கொள்ளும் வழிபோலத் தோன்றுகின்றதே?

    பதிலளிநீக்கு
  14. திராவிடக் கட்சிகள் ஏற்படுத்திய கலாசார சீரழிவுகளில் இதுவும் ஒன்று. இந்த அவல நிலைமை உங்கள் பதிவு மூலம் விவரிக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாச்சார சீரழிவு ஆம் நண்பரே மிகச்சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
  15. துளசிதரன் : நல்லா எழுதியிருக்கீங்க கில்லர்ஜி. அந்த ஆச்சி உங்கள் உறவோ? பாவம்

    கீதா: திருமதி மீனாட்சி நாராயாணன் பாவம். இப்பதிவின் கருத்துக்களைதான் இதைத்தான் நான் வேண்டாத பேச்சு என்று முந்தைய கருத்தில் சொல்லியிருக்கேன்....நல்லா சொல்லிட்டீங்க கில்லர்ஜி.

    அது சரி செல்லங்களை இப்படியானவர்களா வாழ்த்தணும்? பாவம் அதுங்க! அதுங்களாவது நல்லாருக்கட்டும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. பொதுநல விடயத்தை சொன்னதுக்காக ஆச்சியை உறவுக்காரவுங்களாக ஆக்கி விட்டீர்களே...

      நீக்கு