இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
என்னை இவன் போலீஸ்
டெஸ்டுக்கு ரெடியா ? என்ற டெஸ்டுக்கு அனுப்பி வைத்தார்கள் அதற்கு வந்த மாஸ்டர் பாக்கிஸ்தானி அடி வயிறுவரை
தாடி வைத்திருந்த அவனைக் கண்டதுமே எனக்கு அடி வயிற்றைக் கலக்கியது பயமில்லை
இருப்பினும் எனது குடுமி இன்று இவனது கையில்தானே இவன் என்ன நினைக்கின்றானோ ? அதுதானே நடக்கும்.
எல்லோருமே நீதிமான் குன்ஹா போல் இருப்பார்கள்
என்று சொல்ல முடியாதே பெரிய ஸூட்கேஷ் பெரியசாமி போல் இருந்தால் ? இவன் நினைத்தால் அடுத்து எனக்கு போலீஸ் டெஸ்டு இல்லையேல் கிளாஸ் இன்னும்
தொடரும் காரில் மொத்தம் ஐந்து பேர் அன்று டெஸ்டுக்கு வந்தது நான்கு மாணவர்கள்
இரண்டு பாக்கிஸ்தானியர்கள், ஒரு எஜிப்தியன், தேவகோட்டையான் Me முதலில் இரண்டு பாக்கிஸ்தானியரும் முடிந்தது அடுத்து எஜிப்தியன், அந்த மூன்று பேருக்கும்
கொடுத்த வேலைகளை கவனித்தேன் பாக்ஸ் இரண்டு பேருமே சிறிய சிறிய தவறுகள் செய்தார்கள்
என்பதை என்னாலேயே கணிக்க முடிந்தது கடைசியாக நான் வந்ததுமே ஒரு மாதிரியாக
பார்த்தான் எனக்கு புரிந்து விட்டது இவனுக்கு நம்மைப் பிடிக்கவில்லை பந்தமே
இல்லாமல் ரோட்டில் நடந்து போகும் பாக்ஸூகளுக்கே இந்த மீசையைக் கண்டவுடன் இந்தியன்
என்று தெரிந்ததுமே என்னமோ நான் அவன் கொழுந்தியாள் கையை பிடித்து இழுத்ததுபோல்
முறைத்துப் பார்ப்பார்கள். இன்று நமது குடுமி இவனது கையில்...
மனதில் இந்த இடத்தில் தான் ஊர் உலகத்தில்
இருக்கும் தெய்வங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது அவன் என்னிடம் சொல்லும் போதே காடி
நிக்காலோ (வண்டியை எடு) என்று அதிகாரமாக ஏதோ சண்டைக்காரனிடம் சொல்வது போல்சொன்னான்
மற்றவர்களைவிட கூடுதலாக நேரம் கொடுத்தான் அவசியமின்றி நெருக்கடியான இடத்தில் பலமுறை
ரவுண்ட் அடிக்க வைத்தான் இருப்பினும் கவனமாக காரை ஓட்டிக்கொண்டு போனேன் என்னிடம்
தவறு கண்டு முடிக்க முடியாதவன் என்னை தவறு செய்யும் படியான சூழ்நிலைக்கு தள்ளினான்
என்பது புரிந்தது முடிவில் ஒரு ஸிக்னல் வரும்போது போ போ என விரட்டி விட்டு எல்லோ
விழுந்த பிறகு எதுக்காக போனாய் ? என்றான் (எல்லோ நிற்பதுக்குள் ஸிக்னலை கடக்கலாம் என்பது விதிமுறை) அத்துடன் ஸ்கூலுக்கு விடச்சொன்னான் காரை பார்க்கிங்கில்
விட்டதும் நான்கு பேரும் ரிசல்டுக்காக
காத்திருந்தோம் மற்ற மூன்று பேரும் போலீஸ் டெஸ்டுக்கு ரெடி நான் இன்னும் இரண்டு க்ளாஸ்
எடுக்க வேண்டும் அடப்பாவி எனக்கு இருநூறு திர்ஹாம்ஸ் செலவு இழுத்து விடுவதில்
உனக்கு இன்பமா ? ஒரு பாக்ஸ் என்னிடம் சொன்னது மனதுக்கு ஆறுதலாக இருந்தது அவன் உண்மையில்
என்னைத்தான் இப்படிச் செய்திருக்க வேண்டும் நீ நல்லாவே வண்டி ஓட்டினே.... நன்றி
இப்படியும் ஒரு பாக்கிஸ்தானி மீண்டும் பணம் கட்டி இரண்டு க்ளாஸ் முடிந்ததும்
போலீஸ் டெஸ்டுக்கு மறுமாதம் தேதி கொடுத்தார்கள்.
அன்று போலீஸ் டெஸ்டுக்கு ஆறு பேர் போனோம்
காரில் இரண்டு போலீஸ்காரர்களும் நானும் வழக்கம்போல டெஸ்டுக்காக அவர்கள் தேர்வு
செய்து வைத்திருக்கும் ஏரியா நான் ஐந்தாவது நபர் அடி வயிறுவரை தாடி வளர்த்திருந்த
பாக்கிஸ்தானியிடம் படித்த பாடத்தை மனதில் நிறுத்திக்கொண்டு காரை எடுத்தேன் எல்லாம்
முடிந்து ரிசப்ஷனில் ஆறு பேரும் காத்திருந்தோம் இரண்டு இந்தியன், ஒரு எமராத்தி (பெண்) இரண்டு பாக்கிஸ்தானி,
ஒரு பிலிப்பைனி ரிசல்ட்டுக்காக காத்திருந்தோம் பாஸானால் மறுநாள் ஹெட் போலீஸ்
டிபார்ட்மெண்ட் ஆஃபீஸில் போய் லைசென்ஸ் வாங்கி கொள்ளலாம் அந்த தருணங்கள்
இருக்கின்றதே அது ஒரு புதுமையான அனுபவம் ரிசல்ட் வந்தது. Only one person PASS yes me. Thanks to GOD.
அங்கு தோன்றியுள்ள புதிய வியாதியை பார்ப்போமா ?
கார்கள் இன்னும் வரும்...
போராடி வெற்றி... மகிழ்ச்சி ஜி...
பதிலளிநீக்குஆமாம் ஜி வருகைக்கு நன்றி.
நீக்குதிக்கி திணறி ஒரு வழியாய் உரிமம் வாங்கிவிட்டீர்கள் போல.அது சரி நண்பரே அது என்ன எமராத்தி
பதிலளிநீக்குவருக நண்பரே எமராத் நேஷனாலிட்டி.
நீக்குஎமராத்தி - பெண்பால்
நல்ல போராட்டம்! எனினும் இம்முறையானும் பாஸ் ஆனது சந்தோஷம்தான். அந்த தாடிக்காரப் பாக்கிஸ்தானி போல் நிறையப் பெஎர் நம் நாட்டிலும் இருக்காங்க! :(
பதிலளிநீக்குவருக சகோ
நீக்கு//எனினும் இம்முறையானும்//
இதுதானே போலீஸ் டெஸ்டில் முதல்முறை ?
ஆறு நபர்களில் நான் மட்டுமே பாஸ். முதல் டெஸ்டில் பாஸானவர்கள் இங்கு சொற்பம் நபர்களே...
ஓ!! நான் சொன்னது பாகிக்கு அப்புறமா சோதனைக்கு வந்த நபர் கொடுத்த டெஸ்ட் பத்தி. அதுலே பாஸானால் தானே போலீஸ் டெஸ்டே! :))) சரியாச் சொல்லாமல் விட்டிருக்கேன். :))))
நீக்குமீள் வருகைக்கு நன்றி.
நீக்குஆறு பேரில் நீங்கள் மட்டுமே வெற்றி. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் பொறுமைக்கும்கூட.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குநீங்க ரொம்ப தர்மம் செய்வீர்களா ஜி? கூட இருந்தே குழி பறிச்சிருக்காங்க... ஆனாலும் அது உங்களைக் காத்து, லைசென்ஸ் கொடுத்திருக்காங்களே!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி நான் தர்மம் செய்வதில் தயங்கியதில்லை.
நீக்குஅப்பா....
பதிலளிநீக்குஒருவழியா பெருமூச்சு விட்டாச்சு...
தேவகோட்டையா.. கொக்கா!...வேலை
வாங்க ஜி பெருமூச்சுதான் வரும்...
நீக்குகில்லர்ஜி யாஆஆஆஆ பேசுவது அடிக்கடி தெய்வத்தை வேண்டினேன் தாங் கோட் என அவ்வ்வ்வ்வ்வ்வ்:).. கடவுள் இல்லை எனத்தானே உங்கள் கருத்து என நினைச்சிருந்தேன்.. அது தப்போ.. தப்பெனில் என்னை அப்படி நினைப்பதற்கு நீங்க என்ன எழுதியிருப்பீங்கள் முன்பு.. என ஜிந்திக்கிறேன்..
பதிலளிநீக்குகடவுள் இல்லைனு எப்ப சொன்னேன் ? அவரும் இருந்தால் நல்லதுதானே...
நீக்குகில்லர்ஜி.......கமலு???!!!
நீக்குமய்யமா சொல்லுறார் பாருங்க அதிரா!!!
அதிரா இப்ப பாருங்க கில்லர்ஜி மீசைய முறுக்கி பொயிங்குவார்!!! ஹா ஹா ஹா ஹா
கீதா
நான் சொல்ல வேண்டியதை கமல் முந்தி விட்டார் "அம்புட்டுதேன்"
நீக்கு100 வீதம் உண்மை.. ட்றைவிங் ரெஸ்ட் முடிவுக்காக காத்திருப்பதென்பதும் கொடுமையான ஒன்றுதான். ஆனா அங்கு test ல் பார்க்கிங் எதுவும் கேட்க மாட்டினமோ கில்லர்ஜி?
பதிலளிநீக்குஇங்கு
1.பரலல் பார்க்கிங்.. அதாவது ரோட்டோரம் நிற்கும் காரின் பின்னால் கரெக்க்ட்டா.. றிவேர்ஸ் எடுத்து நேரா பார்க் பண்ணோனும்..
2. த்றீ பின் ரேன்... இது நடு ரோட்டில் மூன்று வெட்டுக்களில் ஃபுல்லா காரை திருப்பி.. திரும்பி வரோணும்..
3. ரிவேர்ஸ் த கோனர்... அதாவது மெயின் ரோட்டிலிருந்து குறுக்கு ரோட்டுக்கு ரிவேர்ஸ் மூலம் காரை ஓரமாக பின்னாலே கொண்டு வரோணும்...
இந்த மூன்றும் செய்யும் போது முக்கியமா, சைட் பேமண்ட்டில் ரயர் முட்டிடக்கூடாது...
இந்த மூன்றில் ஒன்றில் பிழை விட்டாலும் அவுட்:)
முதல் தடவை இந்த ரிவேர்ஸ் தெ கோனரில்.. பின்னாலே வந்து பின் ரயரை கொஞ்சம் பேமண்ட்டில் ஏத்திப்போட்டேன்ன்.. உடனேயே எனக்கு என் ரிசல்ட் புரிஞ்சுபோச்ச்:)).. ஃபெயிலாகிட்டேன்ன்..
2ம் தடவை.. அதே ரிவேர்ஸ் இன்போது.. வைரவா வைரவா என நேர்ந்துகொண்டு ரிவேர்ஸ் கியருக்கு மாத்திப்போட்டு பின்னாலே பார்க்கிறேன்ன் ஒரு வைரவர் குறுக்கே ஓடினார்ர்:)).. இங்கு அப்படி கண்படி ஓடாயினம் எல்லோ.. உடனேயே எனக்கு வயிரவரே வந்ததுபோல ஃபீல் ஆச்சூ.. பாஸ் ஆகிட்டேன்ன் ஹா ஹா ஹா:).
ரிவர்ஸ் பார்க்கிங் டெஸ்ட் எல்லாம் ஸ்கூலின் உள்ளேயே நான்காவது நிலையிலேயே முடிந்து விடும்.
நீக்குவைரவர் துணை உங்களுக்கு உண்டு போலயே...
வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பாரலெல் பார்க்கிங்க் ரிவேர்ஸ் பார்க்கிங்க், எல்லாம் ரொம்பவே ஸ்டிரிக்ட் அதுவும் ரோட்டில் ட்ராஃபிக்கில் ஓட்டிவிட்டு வெளியிலேயே ரிவர்ஸ் பாரலெல் எல்லாம் செய்ய வேண்டும்...
நீக்குஅதிரா கண்டிப்பாக வைரவரேதான்!!! அதுவும் பாருங்கோ பின்னாடி ஓடி உங்களுக்கு சிக்னல் கொடுத்திருக்கார்!!!
கீதா
கீதா ரங்கன் - வளாகம் என்பது (டிரைவிங் டெஸ்ட்) பல ஏக்கர் இருக்கும். அதிலேயே எல்லாவிதமான சிக்னல்கள், மலைபோன்ற ஏற்றம், ரவுண்டபவுட் என்று பக்காவாக எல்லாமே இருக்கும். குழப்பும் ரோடுகள், ஒன்வே, டி ஜங்ஷன் என்று இல்லாததே கிடையாது. அங்கேயே ஒரு இடத்தில், ரிவர்ஸ் பார்க்கிங் என்றெல்லாம் செக் பண்ணுவாங்க. எல்லாவற்றிலும் அவங்களுக்குத் திருப்தி இருந்தால்தான் ரோடுக்கு வண்டியை எடுக்கச் சொல்வார்கள் (உண்மையான டிராபிக் இருக்கும் ரோடு).
நீக்குWe (India) are unprofessional in everything. வெளிநாட்டினர் நிச்சயம் ப்ரொஃபெஷனல்ஸ். அங்க பெரும்பாலும் ஆளைப் பொருத்து, காசு என்பதெல்லாம் கிடையவே கிடையாது.
இப்படி டிரைவிங் லைசன்ஸ் எடுக்க ரொம்ப கஷ்டமாக ஆகிவிடுகிறது என்று, சில வருடங்களுக்கு முன்பு, ஆட்டமேடிக் கார் மட்டும் ஓட்டுவதற்கு லைசன்ஸ் என்று எளிமைப்படுத்தினார்கள். அதுல மலைமே ஏறுவது, கியர் மாற்றுவது என்ற கடின டெஸ்டுகள் எல்லாம் எளிமையாக இருக்கும்.
விரிவான விளக்கங்கள் கொடுத்த திரு.நெ.த.அவர்களுக்கு நன்றி.
நீக்குகடைசியில் உரிமம்பெற்றதற்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.
நீக்குஇங்கு காலை முதல் மாலை வரை.. நமக்குப் பிடிச்ச நேரம் புக் பண்ணிப் போகோணும்.. அதனால் ஒரு நாளில் எத்தனை பேர் வருகிறார்கள்.. யார் பாஸ் என எதுவும் தெரிய வராது.
பதிலளிநீக்குஅங்கும் இதே நிலைப்பாடுதான்...
நீக்குபோராடிப் பெறுவதில் இருக்கும் இன்பம் இருக்கிறதோ
பதிலளிநீக்குஅது அலாதிதான்
வாழ்த்துகள் நண்பரே
உண்மைதான் நண்பரே வருகைக்கு நன்றி.
நீக்குஒரு நாவலே எழுதலாம் சார் நீங்க பாராட்டுகள்
பதிலளிநீக்குவருக கவிஞரே பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஅந்த புதிய வியாதி. டெங்குவா? பறவையா?? பன்றியா??? என்னவாக இருக்கும்!!!!!!
பதிலளிநீக்குவருக நண்பரே இது பணவியாதி மூளையால் பிறந்த வியாதி.
நீக்குசின்ஹாவா?! இல்ல குன்ஹாவா?!
பதிலளிநீக்குவெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். எல்லாம் சரி அந்த பாகிஸ்தான் தாடிவாலா சரி இல்லன்னு நினைக்குறேன்.
அடடே குன்ஹாதானோ... இதோ மாற்றுகிறேன் சகோ.
நீக்குபோராடி பெற்ற உரிமம் மகிழ்ச்சி அளித்த தருணம்தான்.
பதிலளிநீக்குபலவித அனுபவ தருணங்களை பகிர்ந்து விட்டீர்கள்.
கடவுளின் துணையும் உடன் இருந்தது நல்ல உள்ளம் படைத்த உங்களுடன்.
தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
நீக்குதுளசி: இத்தனை படிகள்! கடந்துதான் லைசென்ஸா! தலை சுத்துது..
பதிலளிநீக்குகீதா: கில்லர்ஜி பெருமூச்சு உங்களுக்கு வந்துச்சோ இல்லியோ எனக்கு வந்துருச்சு...ஒரு வழியா வாங்கிட்டீங்க....உலகத்துலேயே இந்தியா தான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்வே ஈசி போல?!!!! ஜூஜூபி...!!
அதனால்தான் சல்மான்கான்கள் சல்.. சல்.. என வண்டி ஓட்டமுடியவில்லை.
நீக்குஇந்தியாவில் ஜிலேபி வாங்கி கொடுத்து லைசென்ஸ் வாங்கியவர்களும் உண்டு.
அந்த பாகி ரொம்பவே உங்களை வாட்டியிருக்கார் இல்லையா...
பதிலளிநீக்குகீதா
ஆமா போன ஜென்மத்து பாக்கி கழிந்தது.
நீக்குஎவ்வளவு டெஸ்ட் பெயிலானீர்கள் என்று கண்டுபிடிக்க முடியலையே... நான் நாலாவது டெஸ்டில்தான் பாஸானேன் (ஒரு டெஸ்டில் ஃபெயிலானது அதற்கான மனநிலை, ப்ராக்டீஸ் இல்லாமல் சென்றதுதான் காரணம். மற்றபடி இரண்டு டெஸ்டுகளில் ஃபெயிலானது என் தவறுகளில்தான்)
பதிலளிநீக்குநண்பரே நான் ஒரே டெஸ்டில் போலீஸில் பாஸானேன்.
நீக்குபாக்ஸ் கோபத்தில் இரண்டு கிளாஸ் நீட்டி விட்டது மட்டுமே...
கடந்த பதிவில் படிக்கவும் (தாங்கள் இன்னும் படிக்கவில்லை "உலகம் தோன்றியதிலிருந்து...")
பஹ்ரைனில் டிரைவிங் இன்ஸ்டிடியூட் என்று கிடையாது. இதனையும் டிராபிக் டிபார்ட்மெண்டே ஆர்கனைஸ் செய்யும். நாம ஏதாவது டிரைவரை செலக்ட் செய்தால் போதும். அதனால், குறைந்த பட்ச மணி நேரங்கள் கற்றுக்கொண்ட பிறகு, நாமே டிரைவிங் டெஸ்டுக்கு நாள் கேட்கலாம். அப்புறம் அவங்க கொடுக்கும் நாளின் அங்கு சென்று டெஸ்டில் கலந்துகொள்ளவேண்டும். ஃபெயிலானால், எவ்வளவு மணி நேரம் கூடுதலாக கற்றுக்கொள்ளணும் என்று எழுதித் தந்துடுவாங்க. அப்புறம் நம்ம டிரைவரிடம் (அவர் பஹ்ரைனிதான்) அவ்வளவு மணி நேரம் (அதுவும் ஒரு தடவைக்கு 2 மணி நேரம்தான்) டிரைனிங் முடித்ததும், மீண்டும் டெஸ்ட்டுக்கு நாள் கேட்கணும்.
பதிலளிநீக்குபஹ்ரைனில் விரைவில் அரசாங்கமே தொடங்களாம்.
நீக்குஅங்கு நாள் கொடுப்பது செட்யூல்ட்படியே நமக்கு கிடைக்கும் நண்பரே...
உங்கள் பொறுமைக்கும் சாமர்த்தியத்துக்கும் வாழ்த்துகள் தேவ கோட்டை ஜி.
பதிலளிநீக்குபாக்கி யை நினைத்து வருத்தப் படுவதா ,கோவம் கொள்வதா தெரியவில்லை. என்ன லாபம் கிடைக்கிறது அவர்களுக்கு இன்னோருவரை வருத்துவதில்.
இறைவன் படைப்பு அப்படி. நலமே வாழ்க.
வாங்க அம்மா பாக்ஸ் போல மனிதர்கள் உலகம் முழுவதும் எல்லா மதத்தினரிலும் உண்டுதானே...
நீக்குபோராடி வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி.
நீக்குதளர்வடையாத முயற்சி பலன் தந்தது. லைசென்சும் வெற்றிகரமாக கிடைத்துள்ளது. பலருக்கு இது நல்ல படிப்பினையாகலாம்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்கு