மனித
வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக
கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது
எல்லோருடைய வாழ்விலும் உண்டு. தனது வாழ்க்கைக்குகூட பிரயோசனம் இல்லாதவன் என்று
முத்திரை குத்தப்பட்டவன் மற்றவருடைய உயர்வுக்கு காரணமாக இருப்பான் இதில் பலரும்
அனுபவப்பட்டு இருக்கலாம். எனது அபுதாபி வாழ்விலும் பலரும் வந்து இருக்கின்றார்கள்.
சாதாரண சம்பளத்தில் இருந்த என்னை உயர் வழிக்கு கொண்டு வந்த பெருமை அபுதாபியில்
இருக்கும் நான் வேலை செய்த அலுவலகத்தில் இருந்தவர் ஒரு அரபி
.
இவர்
எனது நேரடி மேலாளர் அல்ல வாழ்க்கை நல்ல முறையில் போய்க்கொண்டு இருக்கும் நிலையில்
எனது பிரிவுக்கு புதிதாக ஒருவர் மேலாளராக வந்தார் இவருக்கும், எனக்கும் எந்த
பிரச்சனையும் இல்லை சுமூகமான உறவில் வேலை போய்க்கொண்டு இருந்தது அதே நேரம்
இவருக்கும், எனக்கு உதவிய மேலாளருக்கும் நீ பெரியவனா ? நான் பெரியவனா ? என்ற ஈகோ பிரச்சனை
பனிப்போர் இருவருமே எமராத்தினர்.
ஒருமுறை
எனக்கு உதவிய மேலாளர் என்னை அரசு கோடவுணுக்கு ஒரு வேலையாக போகச்சொன்னார்
எப்பொழுதுமே நான் போவதே வழக்கம் காரணம் அங்கு இருக்கும் சோமாளி
நாட்டுக்காரர்களுக்கு என்னை பல வருடங்களாக தெரியும் என்பது எனது மேலாளருக்கும் தெரியும்
அவர் என்னை போகச்சொல்ல நான் தயங்கி கொண்டே எனது மேலாளரிடம் சொல்லி விட்டு
வருகிறேன் என்றேன் அவர் அதெல்லாம் சொல்ல வேண்டாம் முதலில் போ ! என்றார்
நானும் அவருக்கு தெரியாமல் வேறொரு மின்தூக்கி வழியாக இரண்டாவது தளத்துக்கு போய்
அவரிடம் விபரம் சொல்லவும் அவருடைய பிரிவு வேலைக்கு நீ போகவேண்டிய அவசியம் இல்லை நீ
வெளியே போனால் கோப்புகள் யாராவது எடுத்துக்கொண்டு போனால் யார் பொருப்பு ? நீ போகவே கூடாது என்றார் இது
அவர் பொருப்பாக பேசவில்லை அவரை இவருக்குப் பிடிக்காது காரணம் இதுதான் இதேநேரம்
வேறொரு பெண் மேலாளர் சொல்லி இருந்தால் ? வாயெல்லாம்
பல்லாக உடன் போயிட்டு வா என்பார் என்பது எனக்குத் தெரியும் இப்பொழுது என்ன செய்வது ? மீண்டும் இவரிடம் போய்ச்சொன்னால்
நீ இன்னும் போகவில்லையா ? அவரது மூன்றாவது தளத்தில் எனது
கையைப் பிடித்தவர் மின்தூக்கி வழியாக இறங்கி உனது சீருந்து எங்கே ? கதவைத் திறந்தவுடன் நான்
ஓட்டுனர் இருக்கையில் அமரவும் ‘’எடு வண்டியை’’ சீருந்தைக்
கிளப்பிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வர இவர் முகப்பில் வந்து நின்று கையை
இடுப்பில் குத்திக்கொண்டு நிற்கிறார் நான் மறையும் வரை என்னசெய்வது ? எனது சொந்த கைப்பேசி எனது
மேஜையில் கிடக்கின்றது அலுவலகம் எனக்கு கொடுத்திருக்கும் வாக்கிடாக்கி அலுவலக
கட்டடத்தை விட்டு இருபது மீட்டர் விலகவும் இணைப்பும் விலகி கொள்ளும் போனேன் போனேன்
சீருந்தை விரட்டிக் கொண்டு போனேன்.
அங்கு
போய் அங்கிருந்த தொலைபேசியிலிருந்து மற்றொரு பாலஸ்தீனியப் பெண்ணுக்கு அழைத்து
கேட்டேன் உன்மீது மேலாளர் கோபமாக இருக்கிறார் நீ சீக்கிரம் வா ! என்றாள்
வேலையை முடித்துவிட்டு வேலை சொன்ன மேலாளருக்கு அழைத்து செய்து விபரம் சொல்லி
விட்டு உடன் திரும்பினேன் சீருந்தை அலுவலகத்தில் நுழைத்து நிறுத்திய பிறகு நேராக
எனது மேலாளரிடம் போய் நடந்த விபரத்தைச் சொன்னேன் அவர் கேட்ட கேள்வி உனக்கு நான்
மேலாளரா ? அவர் மேலாளரா ? நான் என்ன செய்வது ? அவர் என்னை சீருந்தில்
கொண்டு வந்து விட்டு போகச்சொல்லி வெளியில் வந்து நிற்கிறார் எனக்கு ஏன் செல்பேசி
செய்யவில்லை ? நான் உடன் வந்து உன்னை
தடுத்திருப்பேன் எனது செல்பேசி என்னிடம் இல்லை வாக்கிடாக்கியும் வெளியில் வேலை
செய்யாது ம்ம் போ இதுதான் கடைசி வார்த்தை அன்று எனக்கு பிடித்த கிரகம் எனது
வாழ்க்கையை இவ்வளவு தூரத்துக்கு நஷ்டத்தை உண்டு பண்ணும் என்று நினைக்கவில்லை ஆம்
அத்துடன் எனது பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள் நற்சான்றிதழ்கள் நிறுத்தப்பட்டது
வேலைகள் கூடிக்கொண்டே போனது எனக்குப்பிறகு வேலைக்கு வந்தவன்கூட சம்பளத்தில் என்னை
முந்தி விட்டது மட்டுமல்ல இருமடங்கை தாண்டியும் போனது தாங்கள் நினைக்கலாம் அது
இறைவன் அவனுக்கு எழுதிய விதி என்று மனம் வெம்பி துடித்தேன் என்ன செய்ய முடியும் ? காரணம் கேட்டால்
நீ படிக்காதவன் என்றார்.
என்னால்
இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக்கு மனவியாதியே வந்து விடும் போல இருந்தது போதும்
ரத்து செய்து கொண்டு போய் விடுவோம் என பலமுறை நினைத்ததுண்டு வந்தால் எனது
செல்வங்களுக்கு மீண்டுமொரு அம்மா வரும் நிலைப்பாடு தமிழ்நாடே இப்படி இருக்கும்
பொழுது எனது குடும்பம் மட்டும் விதிவிலக்கா ? அந்தநிலை மாறும்வரை பொறுமை காப்போம் அந்தப் பொறுமையின் தூரம்
என்னை இந்நிலைவரை இழுத்து விட்டது இதன் காரணமாகத்தான் எனது குழந்தைகளை
நல்லமுறையில் படிக்க வைத்தேன் நான் படிக்காதவன் ஆயினும் வேலையில் அனுபவசாலி
இவர்களின் அறிவுக்கூர்மை பற்றி நான் நன்கு அறிந்தவன் ஆம் செத்தவன் வங்கி
கணக்குக்கு ஓய்வூதியம் அனுப்பி விட்டு உயிருடன் இருப்பவனை அலைய விடுவார்கள்
இவர்களின் திறமை எனக்குத் தெரியும். பின்நாளில் எனக்கு வாழ்வு கொடுத்தவரும்,
வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டவரும் வேலையை ராஜினாமா செய்து விட்டு போய் விட்டார்கள்
வேறு இடத்தில் வேலைக்கு முயற்சி செய்யலாமே என்று நினைப்பீர்கள் முயற்சிக்கத்தான்
செய்தேன் அதற்கு படித்த சான்றிதழ்கள் வேண்டுமென்ற கட்டாய நிலை வந்து விட்டது அதற்கு
நான் எங்கு போவேன்.
நண்பர்களே
இழந்த நிலையிலிருந்து நான் விசா ரத்து செய்து வரும் வரையிலான எனது இழப்புத் தொகையை
மட்டும் இந்திய ரூபாயாக சொல்கிறேன் சுமார் பதினைந்து லட்ச ரூபாய்க்கும் மேல் இது
குறைவான எனது கணக்கே காரணம் எனது சர்வீஸ் பணத்தை மிகச்சரியாக எனக்கு கணக்கு போடத்
தெரியவில்லை இந்த வரிகளை எழுதும் பொழுது சத்தியமாக சொல்கிறேன் எனது உடல்
சிலிர்த்து விட்டது நான் எப்பேர்ப்பட்ட தாங்கும் சக்தி உள்ளவன் என்பது இறைவனுக்கே
தெரியும் இதை நினைத்தாலே இன்றும்கூட எனது உடம்பு படபடத்து விடும் எனது இரவு நேர
தூக்கங்கள் கலைந்து போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனது குழந்தைகள்
இந்தப்பதிவை படிக்காமல் இருந்தால் நான் சந்தோஷப்படுவேன் காரணம் அப்பா இவ்வளவு
பணத்தை இழந்து இருக்கின்றார் என்று தெரிந்தால் அவர்களுக்கும் கவலைதானே இனி
கவலையால் பலனுண்டோ ? இருப்பினும் என் மனசாட்சி
அடிக்கடி என்னிடம் கேட்கும் உனது தகுதிக்கு இது கூடுதல்தானே ? நான் ஆம் என்று
சொல்லிக் கொள்வேன்.
இந்தப் பணத்தில்
இன்னொரு கணக்கும் போடலாம் ஆம் இந்தப்பணம் எனக்கு பதிமூன்று வருடங்களாக சிறிது
சிறிதாக கிடைக்க வேண்டியது அந்தந்த காலகட்டத்தில் கிடைத்திருந்து அந்தப்பணத்தில்
நான் இடமோ வீடோ வாங்கிப் போட்டிருந்தால் அதன் இன்றைய விலை ?
நட்பூக்களே இதுவும்
விதிதானா ?
Chivas Regal சிவசம்போ-
ஒடம்பு முழுக்க சாராயத்தை ஊத்திக்கிட்டு
பொரட்டாக்கடை வாசல்ல பொறண்டாலும் ஒட்டுற மண்ணுதான்
ஒட்டும்.
பலர் வாழ்க்கையில் மனிதர்கள் இப்படித்தான் சடுகுடு விளையாடுகின்றார்கள்.
பதிலளிநீக்குவருக தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஎன்ன செய்வது ஜி!...
பதிலளிநீக்குஎன் நண்பர் ஒருவருக்கும் இவ்வாறு நேர்ந்தது...
இந்தக் காட்டான்களிடம் மாட்டிக் கொண்டு வாய்ப்புகளை இழந்தவர் ஏராளமானோர்..
பொண்டாட்டிக்கும் புருசனுக்கும் தகராறு...
இவள் போய் புருசனுடைய டிரைவரின் விசாவை ரத்து செய்து எட்டு மணி நேரத்துக்குள் நாட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டாள்...
புருசனை பழி வாங்குகிறாளாம்...
இந்த டிரைவரின் சம்பளம் இவன் வேறு சிலரிடம் கொடுத்து வைத்திருந்த பொருள்கள் அறையிலிருந்த சாமான்கள் எல்லாம் அரோகரா...
தங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் பாவம் அவனும் மனிதன் தானே...
இது நடந்தது 95/96 ல்....
இப்போது மட்டும் என்ன வாழுதாம்!?..
இருபது ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கீழ் வேலை பார்த்தவன் இப்போது எனக்கு மேல் நிலையில்...
அவன் போட்டுக் கொடுக்கிறான்...
அதைக் கேட்டுக் கொண்டு முட்டாள்கள் ஆடுகிறார்கள்...
விளைவு - என் தரப்பு கேட்கப்படாமலே
எனக்கு பிரச்னைகள்...
ம்... அதையெல்லாம் பேசி முடியாது!..
எனக்கு கீழ் வேலை பார்த்தவன், என்னுடன் வேலை பார்த்தவன் எனக்கு மேல் நிலையில் சம்பவங்களுக்கு இங்கும் உதாரணங்கள் உண்டு துரை ஸார்.
நீக்குஅன்பின் ஜி
நீக்குஎல்லா இடங்களிலும் இப்படி பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
சராசரி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களைவிட வீட்டில் ஓட்டுனராக வேலை செய்பவர்களின் நிலைப்பாடு மிகவும் வேதனையானதே..
அவர்களுக்கு உறங்கும் நேரத்தில்கூட வேலை கொடுப்பார்கள், விடுமுறையும் கிடையாது.
நான் பஹ்ரைனில் (ஏர்போர்ட்டில்), வீட்டு வேலை செய்யும் பெண்ணை அனுப்பும்போது இருவரும் வருத்தமாக (வேலை செய்பவர் கண்ணீர் விடுவார், இவங்களும் சோகமாக) இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். பொதுவா பஹ்ரைனிக்கள், ஃபிலிப்பினோ அல்லது ஸ்ரீலங்கன் உதவியாளர்கள் (பெண்கள்) வைத்துக்கொள்வார்கள். அவங்க வேலை வீட்டில் உள்ள எல்லா வேலையையும் செய்யணும், பசங்களைப் பார்த்துக்கொள்வது, உணவு சமைப்பது போன்று பல வேலைகள். அங்கும் நிறைய தவறுகளும் கொடுமைப்படுத்துதலும் உண்டு.
நீக்குஹவுஸ்மேட் வேலை செய்யும் பெண்களுக்கு அந்த வீட்டின் சிறுவர் முதல், கிழடுகள்வரை பல தொந்தரவுகள் கொடுக்கும். வீட்டில் சொன்னால் சர்வ சாதாரணமாக அனுசரித்துப்போ என்பார்கள்.
நீக்குநல்ல குடும்பத்து பெண்கள் வெளியில் சொல்ல முடியாமல் ரணவேதனை அனுபவிப்பது ஊரில் யாருக்கு தெரிகிறது ?
உங்கள் இழப்பு படிக்க கஷ்டமாக இருக்கிறது. ஆம், அப்போதைய நிலையில் இது பெரிய அளவு பணம்தான்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி மொத்தக்கணக்கில் பார்த்தால் இது இன்று மிகப்பெரிய அளவில் உக்ஷ்ள பணம்தான்.
நீக்குஇக்கட்டான சூழ்நிலைதான். மனக் குமுறலை எங்காவது சொல்வதுதான் சரி.சற்று நிம்மதி கிடைக்கும். இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. அதனால் யாரும் தவறாக நினைக்க வாய்ப்பில்லை.
பதிலளிநீக்குவருக நண்பரே ஆம் ஆறுதலுக்கான தேடல்தான் வேறில்லை.
நீக்குதங்களின் இழப்பு பேரிழப்பு நண்பரே
பதிலளிநீக்குஇதுதான் வாழ்க்கை
ஆமாம் நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குபடிக்க படிக்க வேதனையாக இருந்தது அண்ணா .நம்மை போன்றவர்களின் வாழ்வில் விதி நல்ல ஸ்கோர் செய்கிறது .எதிரணியில் இருக்கும் நாம் தான் டக் அவுட் ஆகி கொண்டு இருக்கிறோம் .
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீக்குஉங்களின் செல்லங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்... அவர்களுக்கு ஒரு பாடம்...
பதிலளிநீக்குவாங்க ஜி உங்களது நோக்கமும் புரிகிறது நன்றி.
நீக்குகில்லர்ஜி... இரண்டு மேனேஜர்கள் (ஆபீஸ்ல ஒருத்தர்தான் ரிபோர்டுங் மேனேஜர்னாலும்) அமைந்தால் அது துரதிருஷ்டம்தான். அதனால் எத்தனையோ வித்த்தில் பாதிப்புகள் ஏற்படும். இது எல்லா தேசத்துக்கும் பொருந்தும் என்றாலும் அங்கே நாம் தோழிலாளர்கள். ஒரு ஆபீஸில் மேனேஜராக இருந்தாலும் இந்தச் சிக்கல்களிலிருந்து தப்ப முடியாது.
பதிலளிநீக்குஎனக்கும், என் மேனேஜர் சொல்வதைக் கேட்பதா, ஓனர், எம்.டி இஷ்டப்படி சகய்வதா இல்லை அவருடைய மூத்த பையன் ஆசைப்படி செய்வதா என்ற சிக்கல் பலமுறை வந்திருக்கிறது.
வருக தமிழரே எனது அலுவலகத்தில் பொது மேலாளர் தவிர ஐந்து பிரிவுகளில் தனி மேலாளர்கள் இருந்தனர்.
நீக்குஎல்லோரையும் சமாளிப்பது கடினமான செயல்தான்.
இன்னொன்று கில்லர்ஜி... ஜால்ரா போடாமல் நேர்மையா துணிவா முடிவுகளை எடுக்கும்போதோ, எம்டியே கேட்டாலும் இது முடியும், இது சாத்தியமல்ல, இது தவறு செய்யமாட்டேன் என்று சொல்லியதாலும் எனக்கும் பல இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இருந்தாலும் என் மனது நான் எப்போதும் முடிந்தவரை தவறு செய்யவில்லை, தவறாக வழிநடத்தவில்லை என்ற திருப்தியைக் கொண்டிருக்கும். பணத்தில் என்ன இருக்கிறது?
பதிலளிநீக்குஆம் எனக்கு வேலையில் மட்டுமல்ல பொது வாழ்விலும், ஒரு தந்தையாகவும்கூட எனது கடமையில் நியாயமாக நடந்து இருக்கிறேன் என்பது எனது மனசாட்சி அறிந்த உண்மை.
நீக்குஅதே நேரம் எம்.ஏ. படித்த நண்பர் என்னைவிட குறைவான சம்பளம் பெறுபவர்களையும் கண்டு இருக்கிறேன்.
அவர்களைக் காணும் பொழுது...
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"
என்ற பாடல் கண்டிப்பாக நினைவு வரும்...
இது தான் சிறந்த மனம்...
நீக்குபாடல் முழுவதும் உள்ள வரிகள், என்னையும் மாற்ற வைத்தன...
ஆம் முழு பாடலும் சிறந்த வரிகளே மீள் வருகைக்கு நன்றி ஜி.
நீக்குஎல்லாம் நேரம்தான் தங்களின் ஆதங்கம் புரிகிறது
பதிலளிநீக்குவருக கவிஞரே வருகைக்கு நன்றி.
நீக்குபல இடர்களை தாண்டி மன உறுதியுடன் வேலையில் தொடர்ந்து குழந்தைகளை உறவுகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்த வேண்டும் உங்களை.
வெளிநாட்டு வேலை, வெளி நாட்டு பணம் என்று எளிதாக சிலர் சொல்கிறார்கள் அதில் தான் எத்தனை இடர்பாடுகள்.
வருக சகோ உண்மைதான் அரபு வாழ்க்கை கிடக்கட்டும் அது முடிந்த கதை.
நீக்குஆனால் பிறருக்காக, எனது கடந்த காலத்தின் தியாகத்துக்கு மரியாதை கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. அவைகள் கொச்சை படுத்தப்பட்டு உதாசீனப்படுத்தும்போது மனம்படும் வேதனைகள் எனக்கு மட்டுமே தெரியும்.
காலத்தை கடந்து வந்த பிறகே எனக்கு எல்லாமே தெளிவாகிறது.
தங்களது வருகைக்கு நன்றி
கில்லர்ஜி.... தியாகம் என்பதெல்லாம் நமக்கு மட்டுமே தெரியக்கூடியது. பிறருக்கு அங்கு வேலை செய்பவர்கள் தினமும் பெட்ரோலை கிணறுகளிலிருந்து இறைத்துக்கொண்டும், சாலையோரங்களில் தங்கத்தை வெட்டிக்கொண்டும் இருப்பதாகவே படும். நாம்தாம் தேவையில்லாத செலவுகளை நமக்குச் செய்துகொள்ளாமல் கூடியவரை சிக்கனமாய் இருந்துகொண்டு, அதேசமயம் வீட்டார் செலவு செய்வதை அனுமதித்துக்கொண்டும் இருப்போம்...
நீக்குநிதர்சனமான உண்மையை அழகாக சொன்னீர்கள் நண்பரே...
நீக்குபாலைவன நாட்டை விட்டு வெகு தூரம் போய் விட்டாலும், மறுபடியும் தமிழ்நாட்டில் இரண்டறக் கலந்து விட்டாலும் இங்கே வலிகளுடன் வாழ்ந்த நினைவுகள் என்றுமே அழியாமல் நினைவில் நின்று கொண்டு தானிருக்கும். இன்னும் வலிகளுடனும் அவமானங்களுடனும் ஓய்வெடுக்கும் வயதிலும் இங்கே நிறைய பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உங்களால் ஒரேயடியாக நம் ஊருக்குத் திரும்பிச் சென்று விட முடிந்தது. அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக்கொள்ளுங்கள்!! வலிகளைப்புறந்தள்ள முயற்சி செய்யுங்கள்!
பதிலளிநீக்குவருக சகோ உண்மை நீண்டகாலம் அரபு நாட்டில் வாழ்ந்தவர்கள் நிரந்தரமாக இந்தியாவில் வாழ்வதற்கு முடிவு செய்வதில் பலவிதமான பிரச்சனைகள் உள்ளது.
நீக்குஎல்லாமே கடந்து போகும்ண்ணே
பதிலளிநீக்குவருக சகோ மிக்க நன்றி.
நீக்குஅயல் நாட்டில் பணிபுரியும் சமயத்தில் நம்மவர்கள் பெற்றது சிறிது கற்றது ஏராளம். பெற்ற வலிகள் குறித்த தங்கள் பதிவு இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் செய்தி அல்லது அறிவுறுத்தல் என்ன? ஒரு சிறு பதிவு எழுதுங்கள் ஐயா..
பதிலளிநீக்குவருக நண்பரே எனது அனுபவங்கள் அனைத்துமே பிறருக்கு பாடமாகவும், செய்தியாகவுமே சொல்லி வருகிறேன். இன்னும் தொடர்ந்து சொல்வேன்.
நீக்குஅனுபவப்பதிவு, படிக்கும்போது மனம் துடிக்கிறது, உங்கள் வேதனையும் புரிகிறது.. “சில நேரங்களில் சில மனிதர்கள்”.. எங்கும் இப்படி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குஅனைத்துக்கும் முடிவாக சிறீ சிவசம்போ அங்கிள் சொன்னதுதான், நமக்கு என்ன அளந்திருக்கோ அதுதான் நமக்குச் சேரும்.. இதில் வருந்தி என்ன ஆகப் போகிறது.
இருப்பினும், மனம் சோராமல் தொடர்ந்து வேலை செய்தமையாலதானே உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை இறைவன் அமைத்துக் கொடுத்துள்ளார்.. அதை நினைத்து மகிழ்ச்சியடையோணும்.. துன்பம் வருவது, பின்னால் மகிழ்வைத் தருவதற்காகவோ?:)..
வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி. உங்கள் அங்கிள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
நீக்குஉழைப்பு பேரிழப்பாகி விட்டதே. வருத்தம் தர வைத்த பதிவு சகோ :(
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குநமக்கு என்ன தேவையோ, என்ன கிடைக்கணும்னு இருக்கோ அதுக்கு மேல் ஒரு அரை சதவீதம் கூடக் குறைச்சும் கிடைக்காது. அதிகமாயும் கிடைக்காது! இது என்னோட அனுபவம். நீங்க ஒரு விதத்தில் பணத்தை இழந்தால் நானும் இன்னொரு விதத்தில் பணத்தை இழந்திருக்கேன். கணக்குப் போட்டால் தலை சுத்தும். ஆகவே மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குவருக சகோ உண்மையான வார்த்தை அழகாக சொன்னீர்கள் நன்றி.
நீக்கு