தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 13, 2018

இந்தப்படை போதுமா ?


ட்பூக்களே... இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியது வரும். ஆம் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பிள்ளையாரை கட்டிட அளவு உயரத்துக்கு வடிவமைத்து அதை தெருக்களில் கொண்டு சென்று மக்களுக்கு பல இடையூறுகளை கொடுக்கின்றனர். நண்டு முதல் சிண்டுவரை தலையில் ரிப்பன் போன்ற காவி துணிகளை கட்டிக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர் அந்த ஆட்டமும் நாக்கை துறுத்திக் கடித்துக்கொண்டு, இலவு வீட்டில் போடும் குத்தாட்டம் போலவே இருக்கிறது அனைவருமே ஃபுல் போதை இதுவா பக்தி ?

பிள்ளையார் உண்மையிலேயே பவர் ஃபுல்லாக இருந்திருந்தால் ? மக்களிடம் நமது பெயரை உபயோகப்படுத்தி நாக்கைத் துறுத்தி குத்தாட்டம் போடும் இந்த கும்பல்களின் நாக்குகள் துண்டித்து கீழே விழக்கடவது என்று சபித்து இருக்கணும் ஆனால் அப்படி நினைத்தது யாரு ? சாதாரண பொது மக்களின் உள் மனம், ஆழ் மனம் நினைப்பதை உணர்ந்து கில்லர்ஜியாகிய நான் இங்கு பதிந்து வைக்கிறேன் மற்றபடி பதிவுக்கும், எனக்கும் பந்தமில்லை.

சரி ஆட்டம்தான் போடுகின்றீர்கள் இடைக்கிடையே....
இந்தப்படை போதுமா ?
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
என்ற சவால்க்கேள்வி
ஏன் ?
எதற்கு ?
யாரிடம் ?

இதையெல்லாம் காவல்துறையினர் கண்டிக்கவேண்டும் ஆனால் முடியாதே காரணம் ஆளுங்கட்சிக்காரர்களின் ஆட்டங்களை
விழியிருந்தும் காணாது குருடர்களாய்...
செவியிருந்தும் கேளாது செவிடர்களாய்...
வாயிருந்தும் பேசாது ஊமைகளாய்...
இருக்கவேண்டும் என்பது காவல்துறைக்கு எழுதப்படாத சட்டம்.

நட்பூக்களே நிறுத்தவேண்டும் ஆம் நிறுத்தவேண்டும் இந்த விழாக்கள் மட்டுமல்ல ஒரு சில மதவாதிகளின் சுய லாபத்துக்காக சமூகத்தை வேறு நோக்கில் கொண்டு செல்லும் எல்லா மத ஊர்வலங்களும் நிறுத்தவேண்டும்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பள்ளியில் பாடம் நடத்தினால் மட்டும் போதாது, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினால் மட்டும் போதாது, மதம் மறப்போம் மனிதம் காப்போம் என்று கூவினால் மட்டும் போதாது தொடக்கம் எங்கே ? இதன் ஆணிவேர் எங்கிருந்து புறப்படுகிறது ? இதை ஆராய்ந்து அதை புடுங்கி எறியவேண்டும்.

இங்கிருந்துதான் ஆம் நம்மிடமிருந்துதான் தொடங்குகிறது தொடக்கத்தில் நண்டும், சிண்டும் ஆடுகிறது என்று குறிப்பிட்டேனே அங்கு விழவேண்டும் வீழ்ச்சி ஆம் அங்கு விழவேண்டும் அடி. முத்தியவைகளை நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஆகவே நண்டுகளையும், சிண்டுகளையும் நாம் தடுத்திட வேண்டும் அங்கு வைத்து விடலாம் முற்றுப்புள்ளி.

ஆயினும் நண்டுகளையும், சிண்டுகளையும் தட்டிவிட முடியாதே ஏன் தெரியுமா ? நண்டையும், சிண்டையும் ஆடியழைத்து வழி நடத்திச் செல்வதே முத்தியவைகள்தானே காரணம் முத்தியவைகள் டாஸ்மாக்கின் போர் வீரர்கள். ஆகவே இவைகளை நிறுத்த வழி லேது..

அப்படீனாக்கா முடிவு ?
போர்... போர்... இறுதிவரை அக்கப்போர்...

சாம்பசிவம்-
அப்ப, கடைசிவரை எந்திரிக்க முடியாதோ.... ?

Chivas Regal சிவசம்போ-
யாருய்யா... நீ விடிய, விடிய கதை கேட்டு விடிஞ்சப் பிறகு தமன்னாவுக்கு ஸ்ரீராம்ஜி சித்தப்பாவானு கேட்பே போல...

32 கருத்துகள்:

  1. இப்போல்லாம் எல்லாத்துக்குமே சிறுவர், சிறுமிகளைக் கூடக் கூட்டி வந்து போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவது தான் வழக்கமாகி விட்டது! பெற்றோரைத் தான் கண்டிக்கணும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான் இதற்கு பெற்றோரே பொருப்பாளி உடனடி வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. உங்கள் சமூக அக்கறை மிகவும் பாரட்டப் பட வேண்டியது நண்பரே

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி கருத்துகள் என் எழுத்துபோல் இருக்கிறதோ ஆனால் எனக்கு எல்லோரையும் ப்ளீஸ் செய்யத் தெரியவில்லை சிறுசுகளை திருத்த நான் நிறைய எழுதி இருக்கிறேன் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இன்றைய சூழலில் யாரும், யாரையும் திருத்தமுடியாது.

      அவரவர்களால் இயன்றதை சொல்லி வைப்போம் நல்லவைகளை உலகம் ஓர்தினம் உணரும் காலம் நிச்சயம் வரும்.

      நீக்கு
  4. நல்ல பதிவு.
    உணரும் காலம் வரும்.

    பதிலளிநீக்கு
  5. ஊரு கெட்டுப் போனதுக்கு
    மூரு மார்க்கெட்டு அடையாளம்..
    நாடு கெட்டுப் போனதுக்கு
    மெட்ராசு நாகரிகம் அடையாளம்..

    - என்றார் கவியரசர்...

    சென்னையில் இருந்த வடக்கத்திகளின் சீதனமே இந்தப் பிள்ளையார் ஊர்வலம்..

    சென்னையிலிருந்தே இந்த ஊர்வலமும் குத்தாட்டமும் தமிழகம் எங்கும் பரவியது..

    90 களுக்குப் பிறகே இந்த அவலம்...

    எதையாவது தூக்கிக் கொண்டு போகட்டும் என்றில்லாமல் இந்தத் தெருவில் வரக் கூடாது... இப்படி மேளம் அடிக்கக் கூடாது... அப்படி தாளம் போடக் கூடாது என்றெல்லாம் சிலர் வரிந்து கட்டியதும்

    நிலைமை சீர்கேடானது...

    பைத்தியம் பிடித்த குரங்கை
    தேள் கொட்டியது போலாயிற்று...

    பிள்ளையார் பெருமை தெரிந்தவர்கள்
    இந்த ஊர்வலத்தை ஆதரிப்பதில்லை.. உண்மை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      மிக அழகாக விளக்கம் தந்தீர்கள் நிதர்சனமான உண்மை.

      நீக்கு
  6. எப்போதோ எதற்கோ ஆரம்பித்த வழக்கம்... காரணங்களை விட்டு விட்டு காரியங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
  7. அப்படினாக்கா.....அக்கப் போரில்..நண்டு சிண்டுகளை எதிர்த்து எப்போதும் வெற்றி பெற முடியாது நண்பரே..!

    பதிலளிநீக்கு
  8. சொல்லுறதை எல்லாம் சொல்லிப்போட்டு, பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை எனச் சொல்லி எஸ்கேப் ஆக விட்டிஉவோமா?:) நாங்கெல்லாம் எதுக்கு இருக்கிறோம்?:).. நாரதர் கலகத்தை ஆரம்பிக்காமல் விடமாட்டோம்:)..

    ஆரம்பப் பிள்ளையார் வண்டியைக் குறைக்க எக்ஸசைஸ் செய்கிறாரோ ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையார் "என்னை விட்ருங்கடா" என்று கெஞ்சுகிறாரோ...?

      நீக்கு
  9. அப்போ தமனாக்காவுக்கு ஸ்ரீராம்ஜி என்ன முறை?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமனாவுக்கா ? தமனா அக்காவுக்கா ?

      நீக்கு
    2. இதில் என்ன டவுட்? தமனா அக்கா?:) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. தமனா உங்களுக்கு அக்காவா ?
      "ஆச்சர்யந்தேங்"

      நீக்கு
  10. தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. இப்படிக் கண்டதையும் செய்து, கடவுளர் மேல் பழி சுமத்தும் காரணகர்த்தாக்களை அந்தப் பிள்ளையாரே வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. பல மத விழாக்கள் வியாபாரமாகி விட்டன. விநாயகர் சதுர்த்தி, ஹோலி, நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வீடுகளைத் தாண்டி பொது அரங்கங்களுக்குப் போய்விட்டன. வியாபாரிகளின் கல்லா நிரம்புவதற்கான Guarantee உண்டு. உலகத் தொலைக்கட்சிகளில் முதன்முறையாக பல பெரிய திரையில் ஓடத திரைப்படங்கள் காட்டுவார்கள். பட்டிமன்றம், நடிகை பேட்டி, சமையல் குறிப்புகள் எல்லாம் கொசுறு. மதம் ஒரு போதை என்று சொல்லுகிறார்கள். பண்டிகைகளும் (கல்லாக் கட்டும் வியாபரிகளுக்காக கொண்டாடப்படும்) போதை தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகிய கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு