நட்பூக்களே... தொங்குணான்டி பாளையம்
கோவில் திருவிழாவில் குலசை முத்தாரம்மன் முத்துலட்சுமி குழுவினரின்
வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யதிருந்தார்கள் அவர்கள் வந்த விமானம் டயர் பஞ்சரான
காரணத்தால் தாமதமானதோடு தங்களால் வர இயலாது என்பதை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்க, வேறு
வழியின்றி அவசரத்துக்கு உள்ளூர் வில்லுப் பாட்டுக்காரன் விடியாமூஞ்சி விருமாண்டியை
அழைத்து வந்து பாடச் சொன்னார்கள் அது மாலையானாலே மலையேறி விடும் இதோ அது பாடிய
வில்லுங்கப்பாட்டு... அவசரம் என்பதால் அவரது குழுவினர்
கிடைக்காத காரணத்தால் பின்னணி நாமும் சேர்ந்தே பாடுவோம்.
தன்னன்னே தன்னன்னே
தானான்னே
தானான்னே தன்னே தன்னான்னே
தன்னன்னே தன்னன்னே தானான்னே
தானான்னே தன்னே தன்னான்னே
ஊதா நிறத்தில் ஒரு
உருண்டை பாட்டில்
அது உகாண்டா மேட் உட்கா
மச்சி....
ஊதா நிறத்தில் ஒரு உருண்டை பாட்டில்
அது உகாண்டா மேட் உட்கா மச்சி....
.
கழனித்தண்ணி போல கருத்த
பாட்டில்
அது கல்லூர் மேட் கள்ளு கண்ணா...
கழனித்தண்ணி போல கருத்த பாட்டில்
அது கல்லூர் மேட் கள்ளு கண்ணா...
பீடா நிறத்தில் ஒரு
பீங்கான் பாட்டில்
அது பினாங்கு மேட்
பீர்தான் புள்ளே...
பீடா நிறத்தில் ஒரு பீங்கான் பாட்டில்
அது பினாங்கு மேட் பீர்தான் புள்ளே...
சக்கரை நிறத்தில் ஒரு
சப்பட்டை பாட்டில்
அது சருகனி மேட் சரக்கு
மச்சான்....
சக்கரை நிறத்தில் ஒரு சப்பட்டை பாட்டில்
அது சருகனி மேட் சரக்கு மச்சான்....
ரம்பா போலவே ஒரு ரவுண்டு
பாட்டில்
அது ரங்கூன் மேட் ரம்மு
மாமு...
ரம்பா போலவே ஒரு ரவுண்டு பாட்டில்
அது ரங்கூன் மேட் ரம்மு மாமு...
சாணி நிறத்தில் ஒரு
சதுரப்பாட்டில்
அது சாத்தூர் மேட்
சாராயந்தான்...
சாணி நிறத்தில் ஒரு சதுரப்பாட்டில்
அது சாத்தூர் மேட் சாராயந்தான்...
வெள்ளை நிறத்தில் ஒரு
வினிக்கர் பாட்டில்
அது வியட்நாம் மேட்
விஸ்கி கண்ணா...
வெள்ளை நிறத்தில் ஒரு வினிக்கர் பாட்டில்
அது வியட்நாம் மேட் விஸ்கி கண்ணா...
பல்பு போல ஒரு பச்சை
பாட்டில்
அது பரமக்குடி மேட்
பட்டைதான்யா...
பல்பு போல ஒரு பச்சை பாட்டில்
அது பரமக்குடி மேட் பட்டைதான்யா...
ஒட்டடைக்கம்பு போல் ஒரு
பாட்டில்
அது ஒமான் மேட் ஒயின்
மாப்பு...
ஒட்டடைக்கம்பு போல் ஒரு பாட்டில்
அது ஒமான் மேட் ஒயின் மாப்பு...
பித்தளை போல ஜொலிக்கும்
பாட்டில்
அது பிரிட்டன் மேட்
பிராந்தி மாப்ளே...
பித்தளை போல ஜொலிக்கும் பாட்டில்
அது பிரிட்டன் மேட் பிராந்தி மாப்ளே...
தேங்கா நிறத்தில் ஒரு
தேன் பாட்டில்
அது தேவகோட்டை மேட்
தேவாமிர்தம்
தேங்கா நிறத்தில் ஒரு தேன் பாட்டில்
அது தேவகோட்டை மேட் தேவாமிர்தம்
தன்னன்னே தன்னன்னே
தானான்னே
தானான்னே தன்னே தன்னான்னே
தன்னன்னே தன்னன்னே தானான்னே
தானான்னே தன்னே தன்னான்னே
Chivas Regal சிவசம்போ-
அட... மச்சான் நல்லாத்தான் பாடுறாரு...
அடேங்கப்பா...
பதிலளிநீக்குஇத்தனை ஐயிட்டங்களா!?...
சங்கி:-
ம்..கடசீயில நம்மளையும் மலையேற வச்சிட்டாரே!...
மங்கி:-
கடசீயில தான மலையேற வச்சார்.. அந்தமட்டுக்கும் ஜந்தோசமப்பா!...
வாங்க ஜி கடைசியில் என்றால் தேவாமிர்தம்தானே....? அது தவறில்லையே...
நீக்குசூப்பர்
பதிலளிநீக்குதிரு. சரவணன் துரைச்சாமி அவர்களின் முதல் வருகைக்கு பூங்கொத்து.
நீக்குசிறிய கருத்தாக இருந்தாலும் கருத்து போடும் முதல் ஆள் நான் தான் என்று நினைத்தேன்.
நீக்குஅதனால் என்ன... அடுத்த பதிவு 20.10.2018 அதிகாலை 12:00 க்கு வந்தால் முதல் கருத்துரை இடலாமே...
நீக்குஇவ்வளவுதானா? இல்லை இன்னும் இருக்கா ஐட்டங்கள்?!!!
பதிலளிநீக்குஸ்ரீராம்ஜி இந்தக் கேள்வியை நீங்கள் குடிகார மட்டையைப் பார்த்து கேட்கணும்...
நீக்குநல்லாத்தான் மலையேறும் சாமியை பாடச் சொன்னீங்க
பதிலளிநீக்குவாங்க சகோ நானா சொன்னேன் தொங்குணான்டி பாளையத்து ஊர்க்காரவுங்கதான்... சொன்னாங்க...
நீக்குதூள்... (!)
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குபோதுமா?!
பதிலளிநீக்குஇந்தக்கேள்வி யாருக்கு ?
நீக்குநவராத்திரி சிறப்பா? :)))))
பதிலளிநீக்குஇப்படியும் சொல்லலாமோ... ஹி.. ஹி..
நீக்குகையில் ஒரு வில்லுப்பாட்டு தொழிலாக பாராட்டுகள்
பதிலளிநீக்குவாங்க ஐயா பாராட்டியமைக்கு நன்றி.
நீக்குஎத்தனை விதமான பாட்டில்கள் தன்னானே தன்னானே
பதிலளிநீக்குஎத்தனை விதமான சரக்கு தன்னானே தன்னானே
வில்லிப்பாட்டு வில்லங்கப் பாட்டு தன்னானே தன்னானே
நண்பரின் வருகைக்கு நன்றி
நீக்குதேவகோட்டை தேவாமிர்தம் ஒரு பாட்டில் பார்சல்....
பதிலளிநீக்குஇதோ வருகிறது நண்பரே...
நீக்குபாட்டு நல்லா தான் வந்து இருக்கிறது .
பதிலளிநீக்குஅது எல்லாம் சரி நண்பரே.
பாட்டு என்ன ராகம் என்று சொல்லவே இல்லையே
வருக நண்பரே இதை தோகுடி ராகம் என்று சொல்வார்கள்
நீக்குமிகவும் நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி
நீக்குபோதை தரும் பாட்டு
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி.
நீக்குஅட்டகாசம்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி
நீக்குநீங்களுமா இந்தத் தலைப்பில்? அட ஆண்டவா....
பதிலளிநீக்குவருக தமிழரே நான் எழுதக்கூடாதா ?
நீக்குஇவை எல்லாம் ஒருத்தருக்கேவா? தாங்குமா?
பதிலளிநீக்குஇந்தக்கேள்வி என்னிடம் கேட்கலையே...
நீக்குஹா ஹா ஹா சமீபத்திலதான் ஒருநாள் திடீரென நினைச்சென் கில்லர்ஜி இப்போ உகண்டவை:) மறந்திட்டார் கேட்கோணும் என:).. ஞாபகமாச் சொல்லிட்டீங்களே:).
பதிலளிநீக்குவாங்கோ உகாண்டாவை மறக்க முடியுமா ?
நீக்குஇந்த பாட்டிலை எங்கயோ..பார்த்த மாதிரி தெரிகிறது... அது எங்கேன்னுதான் நினைவுக்கு வர மாட்டுகிறது...நண்பரே......
பதிலளிநீக்குஇதை நீங்கள் பார்த்து இருக்கமாட்டீர்கள் நண்பரே...
நீக்கு