தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 08, 2015

தேசத்துரோகிகள்.

வருடந்தோரும், பேரூந்துகள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன, போக்குவரத்து துறையும் கணக்கெடுத்து வழக்கமான நஷ்டக்கணக்கில் எழுதிவைத்து விடுகிறார்கள், காவல்துறையினரும் வழக்கம்போல துப்பு துலக்கி கோப்புகளை தூக்கி பரணில் வைத்து விடுகிறார்கள், கடைசியில் பாரம் மக்க(ல்)ள் தலையில்... யாருக்கும் இதனைப்பற்றிய கவலையில்லை, சரி இந்த பேரூந்துகளுக்கு தீ வைப்பதும், தீ வைக்கச் சொல்வதும் யார் ? பாக்கிஸ்தானியர்களோ, அமெரிக்கர்களோ, ஜப்பானியர்களோ, சைனாக்காரர்களோ, அல்ல இந்தியன் Yes, The GREAT இந்தியன், இந்திய வாக்குறிமைபெற்ற, இந்திய Passport பெற்ற, இந்தியனே. இந்தியாவின் எல்லைக்குள் ஊடுருவுகின்றானே... அன்னியன் அவனைக்கூட மன்னித்து விடலாம், ஆனால் இவர்களைப்போன்ற தேசத்துரோகிகளை ஒருபோதும் மன்னிக்ககூடாது. இதில் நமது பணமும் உள்ளது எனஅறியாத அறியாமைகளின் செயல், தூண்டிவிடும் அரசியல்வாதிகளுக்கோ, நஷ்டத்தைபற்றி சிந்தையில்லை ஏனெனில் பின்னால் எடுத்துக்கொ(ல்ல)ள்ளலாம், நடுத்தரமக்களுக்கு குடும்பகௌரவம் பாதிக்கப்படுமே எனவாயைத்திறப்பதில்லை, உணவருந்தும் நேரத்தை தவிற, சரி வேறுயார்தான் இதை சரிசெய்வது ? முடிவு எடுக்க வேண்டியது யார் ? பிறகு விலைவாசிகள் ஏறுகிறது என்றால் எப்படி ? அப்புறம் குத்துதே, கொடையுதே என்றால் எப்படி ? வேலியில போற ஓணானை (அரசியல்வாதிகள்) புடிச்சு ஜீன்ஸுக்குள்ளே விட்டது யாரு ?


CHIVAS REGAL சிவசம்போ-

அப்படீனா, ஜீன்ஸையே பார்க்காம, கோவணத்தோட திரியிறவங்களுக்கும் விலைவாசி ஏறிடுச்சே... ஏன் ?

26 கருத்துகள்:

  1. கொடுமையான சம்பவம்!..
    கண்டும் காணாததைப் போல் இருப்பது மனதை நெருடுகின்றது..

    சில வாரங்களுக்கு முன் - தங்களுக்கு Gmail தகவல் ஒன்று அனுப்பியிருந்தேன்..
    அது மனதில் நிழலாடுகின்றது..

    பதிலளிநீக்கு
  2. வருடம் தோறும் பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப் படுகின்றன.
    போக்குவரத்துத் துறையும் கணக்கெடுத்து வழக்கமான நஷ்டக் கணக்கில் எழுதி வைத்து விடுகிறார்கள்.
    நஷ்டத்தின் பாரம் மக்கள் தலையில்!
    யாருக்கும் இதைப் பற்றி அக்கறை இல்லை! கவலை இல்லை"

    யார் சொன்னது நண்பா!
    கில்லர்ஜி கவலை பட்டதால்தானே இந்த பதிவு
    வலைப் பதிவர்கள் மனதில் கோபம் பற்றி எரிகிறது!

    நல்ல கேள்வி? நச்! பதிவு!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஜி
    உண்மைதான் அவர்கள் சிந்திப்பார்கள் என்றால் நாடும் நாட்டு மக்களும் வளர்ச்சியடைந்திருப்பார்கள். தங்களின் ஆதங்கம் புரிகிறது.த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. என்னையும் மிகவும் வருத்தும் செயல் இது. மக்கள் தானாய்த் திருந்த வேண்டும். நாம் பயணம் செய்யும் அதே பேருந்துதானே? நம்மை எத்தனை முறை ஏற்றிச் சென்றிருக்கிறது? நாளை நாமே கஷ்டப்படுவோமே என்கிற எண்ணங்கள் இருக்காது போலும்.

    பதிலளிநீக்கு
  5. கொடுமையான சம்பவம்தான் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  6. வேதனை தரும் சம்பவங்கள்... தானே உணர்ந்து திருந்த வேண்டும்...

    பதிலளிநீக்கு

  7. அரசு சொத்துக்கள் அனைத்தும் பொதுமக்களாகிய நம்முடையது என்ற எண்ணம் வரும் வரை இதுபோன்ற அராஜகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. எல்லா வகையான தேசத்துரொகிகளை மன்னிக்கவே கூடாது

    பதிலளிநீக்கு
  9. இதுக்கு பெயர்தான் ஜனநாயக நாடு :)

    பதிலளிநீக்கு
  10. மிகச்சரியான தலைப்பு தான் ...

    பதிலளிநீக்கு
  11. தேசத்துரோகிகள்தான், சந்தேகமேயில்லை. எப்போதுதான் இவர்கள் மாறுவார்கள் அல்லது மாற்றப்படுவார்கள்?

    பதிலளிநீக்கு
  12. இது கூட பரவாயில்லை. உள்ளே வந்து வன்முறை செய்த போது பிடிபட்ட தீவிரவாதிக்கு பிரியாணி கொடுத்து விருந்தொம்பல் பாராட்டியதையும் அவனைப் பிடிக்கச் சென்ற நேர்மையான காவல் துறை அதிகாரிகளுக்கு தரமில்லாத உடற்கவசம் கொடுத்தனுப்பியதையும் எங்கே சொல்லி அழ?

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோ,
    நலமா?
    தாய்மண் கசப்பான நிகழ்கள் இவை,
    இவர்கள் முடிந்தால் தன் வீட்டை கொளுத்தட்டும், பாம் வைத்து இடிக்கட்டும்,
    பொது சொத்து என்பது ஏதோ வேற்று கிரகம் என் நினைக்கும் கிராதகம் பிடித்த கூட்டம்,
    அருமை வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. பெயருக்கேற்ற அருமையான பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
  15. கேள்விகள் இங்கே! பதில்கள் எங்கே!

    பதிலளிநீக்கு
  16. எத்தனை கொடுமைகளைத் தான் தாங்குவது மனிதர்கள். நல்ல தலைப்பு !நன்றி வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  17. வேதனை. நேற்று இரவு (8.7.2015) புதுக்கோட்டையில் திரு முத்துநிலவன் ஐயா வீட்டில் அனைவரும் சந்தித்தோம். இன்று காலையில் உங்கள் பதிவு. முன்கூட்டி பணிகளை திட்டமிட்டு செய்யும் உங்களது பாணி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. தலைப்பின் காரண கர்த்தா உள்ளேயே இருக்கும் போது என்ன செய்வது?
    மக்களாகிய நம் சொத்து அது, நாம் அன்றாடம் உபயோகப்படுத்துவது என புரிந்து கொண்டால் நலமே.

    பதிலளிநீக்கு
  19. நியாயமான அறச்சீற்றம்.

    பதிலளிநீக்கு
  20. அம்பை நோவதை விட
    எய்தவனையே தாக்க வேண்டும்
    அது போல
    பேரூந்துகளுக்குத் தீ வைத்தவரை விட - அதற்கு உரிய
    ஏற்பாட்டாளருக்கு முதலில் தீ வைப்போம்!

    பதிலளிநீக்கு
  21. பெரும் தேசத் துரோகிகள்தான்.
    த ம 15

    பதிலளிநீக்கு
  22. இவர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை வழங்கப் படவேண்டும்

    பதிலளிநீக்கு
  23. arabu naatu thantanai muraikalai amulpaduththinaal sariyaaga varumO

    பதிலளிநீக்கு
  24. ஜி! மும்பை குண்டு வெடிப்பை மறக்க முடியுமா? அதில் முன்னிலை நின்று சுட்டவனை நாம் இந்தியர்கள் (மனசு ரொம்ப இளகின மனசுக்காரங்க நாம....மரண தண்டனை மனித நேயத்திற்கு எதிரானதுங்க...பேசப்படாது....யாரையும் புண்படுத்தக் கூடாதுங்க ....பாவம்....சேர்ந்துரும்ல....) ஏசி ரூமில் வைத்து, தினமும் அவனுக்குப் பிடித்த ப்ரியாணி கொடுத்து அதாவது அப்படி அவனை நைச்சியப்படுத்தி உண்மை கண்டுபிடிக்கறாங்களாம்.....பேசப்படாது நீங்க.....அதாவது இங்க பல நூறு உயிர்கள், களங்கமற்ற உயிர்கள்...பிஞ்சுக் குழந்தைகள்....நேர்மைனான காவல்காரனும் செத்தான்....உலகத்துக்கே உண்மை வெட்ட வெளிச்சமா தெரியுது ஆனா நம்ம சட்டம் அவனை நல்லா சோறு போட்டு கவனிச்சாங்க...விஐ பி உபச்சாரம்........இதெல்லாம் சொல்லப்படாது அபச்சாரம்...

    அட போங்க ஜி....சொல்லி எந்தப் பிரயோசனமும் இல்லை...இதுவும் கடந்து போகும் இந்த தத்துவம் நமக்கு மட்டும்னு நினைச்சுருக்கீங்களோ....ஹும் தேசத் துரோகிகளுக்கும் தான்....இந்தியா தத்துவம் நிறைந்த நாடு தெரியாது???!!! அட போங்கப்பா....

    பதிலளிநீக்கு
  25. இதுதான் அண்ணா ஜனநாயக நாடு...
    இதுவும் கடந்து போகும் என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும்தான்...
    நல்ல பகிர்வு அண்ணா...

    பதிலளிநீக்கு