தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 24, 2015

அரக்கோணம், அரைக்கேனம் மரைகானம்


குட்ஈவ்னிங் ஸார், மரைக்கானம்..... வேலையை தூக்கிட்டியலாம் ?
வாய்யா, வண்ணமயில் வாகனா, நீ கொண்டு வந்த ஆள் என்ன ? செஞ்சான் தெரியுமா ? வந்த, அன்னைக்கு ஆபீஸ் பணத்தை பேங்க்ல கரண்ட் அக்கவுண்ட்ல கட்டச் சொன்னதுக்கு E.B லபோய், கரண்ட் பில்லை கட்டிட்டு வந்துட்டான், மறுநாள் ஆண்டுச் சந்தாவை கட்டிட்டு வரச்சொன்னா, ஆண்டாள் மகள் டைப்பிஸ்டு சாந்தாவை கட்டிட்டு வந்து நிக்கிறான், சரி போகட்டும் அவன் வாழ்க்கை பிரட்சினைனு விட்டுட்டேன், போன வாரம் ஆபீஸ் பண்டு பணத்தை கொடுத்துட்டு வரச்சொன்னா, கிளர்க் பாண்டுரங்கன்ட்ட பணத்தை கொடுத்துட்டு வந்து நிக்கிறான், அவனே மலை முழுங்கி மலைச்சாமி அவன் ஆபீஸ் லோனே, இன்னும் முடியலே அவன் கிட்டருந்து நாங்க எப்ப, பணம் வசூல் செய்ய ? நேற்று லட்டர்களை எல்லாம் போஸ்ட் பண்ணிட்டு வரச் சொன்னதுக்கு, எல்லா லட்டர்களையும், ஆபீஸ் போர்ட்ல வால்போஸ்டர் மாதிரி ஒட்டி வச்சுட்டான், சரஸ்வதி தியேட்டரில வேலை பார்த்தவன்னு சொன்னீயே அப்பவே தெரியும், இப்படி செய்வான்னு, காலைலே என்ன செஞ்சான் தெரியுமா ? அவசரத்துக்கு, பணத்தை கொடுத்து, மல்லி பொடி வாங்கி என் மனைவி மல்லிகா கிட்ட கொடுத்துட்டுவான்னு சொன்னதுக்கு, மல்லிகைப்பூ வாங்கி கொடுத்துட்டு வந்துருக்கான் ! மதியம் சாப்பிட வீட்டுக்கு போனா எம்பொண்டாட்டி மல்லிகா, கொள்ளிக் கட்டையை வச்சுக்கிட்டு பத்ரகாளியாட்டம் நிக்கிறா, இந்தக் கேணப்பயலாலே, தெருநாறி மானங்கெட்டதனமா போச்சு, இனிமே இவணுக்கு சிபாரிசு செஞ்சு வராதே, ப்ளீஸ்.
…. ? ? ?

CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
சின்ன கேள்விதானே கேட்டான் ? நமக்கே அடிச்சது, இறங்கிடுச்சே....

Video

28 கருத்துகள்:

 1. ஹாஹா இப்படி வேலை செஞ்சா... :-)

  சரசுவதி தியேட்டரா? நான் அதிகப் படங்கள் பார்த்தது ஒரு சரசுவதி தியேட்டரில் தான் :-)

  பதிலளிநீக்கு
 2. இனிமே இவனுக்கு சிபாரிசு செஞ்சு வராதே ப்ளீஸ்.....ஆமாம் ஆமாம்...

  காணொளியையும் கண்டேன்.....சாக் அடித்து விட்டது....

  தம 1

  பதிலளிநீக்கு
 3. வார்த்தை விளையாட்டை மிகவும் இரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. காணொளி கண்டு அதிர்ந்தேன்
  சர்வ நிச்சயமாய் இது முட்டாள்தனம்தான்

  பதிலளிநீக்கு
 5. பதிவை ரசித்தேன்.

  காணொளி : எரிச்சல் தரும் முட்டாள்தனம்தான்.

  பதிலளிநீக்கு
 6. ஹாஹாஹா:))))) மரக்காணம் அட்ராசிட்டி தாங்க முடியலையே:))

  பதிலளிநீக்கு
 7. உங்களுக்குத்தான் இவரைப் போன்ற ஆட்கள் கிடைக்கின்றார்கள் போலுள்ளது.

  பதிலளிநீக்கு
 8. வார்த்தை விளையாட்டு அருமை நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 9. காணொளி - இன்றும் ஒருமுறை அதிர்ந்தேன்...

  பதிலளிநீக்கு
 10. நீங்களே சொல்லி விட்டீர்களே ,நிச்சயமாய் முட்டாள் (உயிர் ) 'தானம்'தான் :)

  பதிலளிநீக்கு
 11. வார்த்தை விளையாட்டு நல்ல நகைச்சுவையாக இருந்தது. ஆனால் காணொளி கண்டு அதிர்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 12. ஆட்டம் போட்டவன் என்ன ஆனான்!?..

  மற்றபடி - மரக்காணம் இவ்வளவு சூட்டிகையா வேலை செஞ்சிருக்கப்படாது.. விதி யாரை விட்டது!..

  பதிலளிநீக்கு
 13. மரக்காணம் ரொம்ப நல்லாவே தனக்கு குழி பறிச்சுகிட்டாரு.

  காணொளி படு கேவலம்...சே என்ன மனுஷங்க இவங்க...அன்பெ சிவம் சக்தி இதப் பாத்தாருனா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாரு...

  பதிலளிநீக்கு
 14. அடிச்சது இறங்கும் முன் பதிவிட்டதாய் ( காணொளி உட்பட) இருக்குமோ

  பதிலளிநீக்கு
 15. உங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்.

  பதிலளிநீக்கு
 16. அடேங்கப்பா என்னமா பின்னுறீங்கள். wow சிந்தனைச் சிற்பி வாழ்க!

  பதிலளிநீக்கு
 17. சிபாரிசு செய்தவரின் பேரை கெடுத்தவனை.... சும்மா விடலாமா.... புல்லா ஏத்திவிட்டு ரோட்டுல கெடடான்னு விடனும்...

  பதிலளிநீக்கு
 18. வழக்கம் போல் உங்கள் குறும்பு வார்த்தைகள்! சரி ! காணொளி !!!!!?

  பதிலளிநீக்கு
 19. அந்த காணொளி மனதை பதைபதைக்க வைத்தது. மரை கானம் போல் இவரும் ‘மறை’ கழண்டவரோ?

  பதிலளிநீக்கு
 20. சரளமான வார்த்தை ஜாலம்.

  god bless you

  பதிலளிநீக்கு
 21. சரளமா பிச்சு உதறிட்டீங்க! ஹாஹாஹா! சூப்பர்!

  பதிலளிநீக்கு
 22. சரஸ்வதி தியேட்டர் இருந்த இடமே மாறிடுச்சேன்னே....
  எம்புட்டு வேலை பாத்திருக்கான்...
  காணொளி அருமை...

  பதிலளிநீக்கு
 23. நல்ல சிபாரிசு ... தாங்கமுடியல...:-)

  பதிலளிநீக்கு
 24. வணக்கம்
  ஜி
  காணொளியை பார்த்து பயந்து விட்டேன் இறுதியில்.. கருத்தை அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் சகோ,
  நல்ல வேலையாள்,
  கலக்கல் போங்க,
  நன்றி,

  பதிலளிநீக்கு