தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 13, 2015

சோலையாண்டவர்.

 

திரைப்பட நடிகர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக இந்த ஏரியாவுக்கெல்லாம் வந்து படிக்க மாட்டீங்க... எனக்கு நல்லாத் தெரியும், இருந்தாலும் என் மனதில் உள்ளதை கொட்டிவிட (கழட்டிஆசை, இந்த ரசிகர் மன்றம் அப்படின்னு சொல்லிக்கிட்டு எந்த பொழப்பையும் பார்க்காம, உங்களுக்கு, கட்டவுட் வைக்கிறதும், பாலாபிஷேகம் செய்யிறதும், அப்புறம் உங்களிடம் இதையே காரணமாவச்சு உங்களை சீட்டிங் போடுறதும்னு திரியிறவங்களை, நம்பாதீங்க... ஏன்னா உங்களுக்கு மவுஸ் உள்ளவரைதான் இவங்கே இப்படி இருப்பாங்கே அப்புறம் அடுத்த நடிகரை தேடிப் போயிடுவாங்கே...

எனக்கு இதுதான், அம்மா, அப்பா, நிலா, சூரியன், வானம், நிலம், தண்ணீர், நெருப்பு, மரம், மல்லிகைப்பூ, கள்ளிச்செடி, குறிஞ்சிமலர், அரளிவிதை என எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் இந்த மாதிரியான செயல்களில் நான் ஈடுபட்டதில்லை, காரணம் எனது வளர்ப்பு அப்படி. 

உங்க எல்லோருக்கும் தெரியும் ராமராஜன் அப்படின்னு ஒரு கிராமத்து ராஜன் இவரு, திருச்செந்தூரின் கடலோரத்தில் பாராளுமன்ற தொகுதிக்குகூட நின்று ஜெயித்தாரு, எல்லா தாய்மார்களுக்கும், நல்லாத் தெரியும், இவரு பாட்டுப்பாடியே பால் கறக்கிறதுல (பசுமாட்டிடம்) வல்லவரு, நல்லவரும்கூட அவரு மிகபெரிய அளவில் பிரபலமாகி இருந்தவரு, பிரமாண்டமா கல்யாணம் செய்தாரு, பிரமாதமா ரெட்டை பெண் குழந்தைகள் பெற்றாரு, பிரமாண்டமான மானாமதுரை கடனா, கட்டியா, கர்த்தனா, தியேட்டரைக்கூட வாங்கினாரு, இவ்வளவு பிரமாண்டமா வளர்ந்தவரு, இப்ப காணாமல் போயிட்டாரு, அவரு மனைவி நளினமானவரு அவரு மட்டும், பிரமாண்டமாயிட்டாரு, (அவரை விட்டு வந்த நேரமோ, என்னவோ) இப்படிப்பட்டவருக்குத்தான், 

எனது நண்பன் ஒருவன் பெயர் சோலையாண்டவர், ரசிகர் மன்றம் வைத்து எந்தநேரமும் சென்னைக்கு போறதும், வர்றதுமாக இருப்பான், கிராமராஜனையும் சந்திப்பான், தொழிலில் கவனம் கிடையாது, அப்பா வைத்துக் கொடுத்த கடையும் காணாமல் போய் விட்டது, (ரா.ரா.போல) இதனால் சொந்த பந்தங்கள் பெண் கொடுக்க யோசித்து, யோசித்து கடைசிவரை கொடுக்கவில்லை, வேறு வழியில்லாமல் நாடோடிகள் கூட்டத்தில் போய் கல்யாணம் செய்து கொண்டான், (அவளும் பெண்தானே) அங்கும், இங்குமாய் வாழ்ந்து கடைசியில் அவன் மனைவியும் ஒருநாள் காணாமல் போய் விட்டாள், (ரா.ரா.போல) இன்று அவன் மட்டும் தனிமரமாய்.... 

பிறகு ஒருநாள் அவனைப் பார்த்தேன் உதவி கேட்டான், கேட்ட உதவியும் செய்கிறேன் எனச் சொல்லி அதற்கு முன் அவனிடம் ஒரு காலத்தில் நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், என்னைப் புழுவைப்போல பார்த்தான், அதற்குப் பகரமாக அவனை நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலுகேள்வி கேட்டேன், பணம் நாளைக்கு வாங்கிக்கிறேன்னு வீட்டுக்கு போனவன், அரளி விதையை அரைத்து குடிக்கப் போகும்போது.... யாரோ பார்த்து தடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

மறுநாள் நான் போயி ஒன்றும் சொல்லாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன், என்றோ காணாமல் போன அவன் முகவரி இன்று காணப்படுகிறது.

CHIVAS REGAL சிவசம்போ-
இவருட்ட, பசின்னு சொன்னா விருந்தை வச்சுட்டு சோத்துல லத்தை அள்ளி வச்சுருவாரோ.... 

 VIDEO

26 கருத்துகள்:

  1. இப்படியும் சிலபேர்..
    என்னத்தைச் சொல்றது..ஜி!..

    பதிலளிநீக்கு
  2. காலகாலமாய் மனதைப் பாதிக்கும் விஷயம் இது.

    பதிலளிநீக்கு
  3. திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து
    பாழாய் போனவர்கள் நிறைய பேர் உண்டு நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  4. ரசிகர் மன்றம், கட்சித்தலைவர்கள் மோகம் என அழிந்து போகும் பலரைப் பார்க்கும்போதே மனது பதறுகிறது. அவர்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளாத மனிதர்கள்.....

    த.ம. 4

    பதிலளிநீக்கு
  5. ரசிகர்களாக இருப்பது சரி... இப்படியா வெறியர்களாக இருப்பது...?

    பதிலளிநீக்கு
  6. உங்கள் நண்பரைப்போல் எண்ணற்ற தமிழர்கள் திரைப்பட நடிகர்களுக்காக தங்கள் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘என்று தணியும் இந்த நடிகர்கள் மேல் உள்ள மோகம்?’ என பாடத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  7. என்னதான் தவறிழைத்தாலும், நண்பனை விட்டுக்கொடுக்காத மனப்பாங்கு.

    பதிலளிநீக்கு
  8. கண்ணா லட்டு திண்ண ஆசையா?
    நீங்க மட்டும் திண்ணுபுட்டு இப்படி பூந்தியா உதிர்ந்து போய்
    கொடுத்தால் எப்படி?

    நாங்களும் " MOCKS MOLDING STAR "ஆக வேண்டாமா?

    முழு லட்டு திண்ண வேண்டாமா?
    இன்னும் ரெண்டு லட்டு திண்ண வேண்டாமா?

    இப்படி எவ்வளவோ ஆசைகள் எவ்வளவோ பேரின்
    மனதில் ஒளிந்து இருக்கிறது நண்பா?

    த ம 7

    நட்புடன்,
    புதுவை வேலு
    (ஏதேது! பசு மாட்டை வைத்து பால் கறந்தவர் பெயரைச் சொல்லியே
    பதிவாக்கி வாக்குகளை அள்ளிக் கொண்டுபோய் விட்டீர்களே!
    உலக மகா நடிகன் வாழ்க!

    பதிலளிநீக்கு
  9. எதற்குமே நேரமில்லாது போல ஓடினாலும் இந்த பேனர் கட்அவுட் இதற்கெல்லாம் மட்டும் எப்படித்தான் இவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ ?
    சிந்திப்பார்களா ?

    பதிலளிநீக்கு
  10. இவர்களுக்கெல்லாம் மூளை எங்கே இருக்கிறது. இல்லை இல்லையேவா?

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோ,
    அருமையான பதிவு, என்ன சொன்னாலும் இவர்களைத் மாற்ற முடியாது என்ற நினைப்பில் தானே,
    அவர்கள்,,,,,,
    நன்றி,

    பதிலளிநீக்கு
  12. தேவையில்லாமல் நடிகர்களுக்கு காவடித் தூக்கி ஆடினால் இந்த நிலமைதான் ஏற்படும். நல்லவேளை காப்பாற்றிவிட்டார்கள்! உதவி செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் தோழர்
    பதிவினைப் பார்த்தேன்
    இதுவும் ஒரு அடிக்சன் ...
    அவ்வளவே
    தம +

    பதிலளிநீக்கு
  14. ரசிப்பது என்பது வேறு, வெறித்தனம் என்பது வேறு...இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்கள் தான் இந்த கட்டவுட், பாலாபிஷேகம் எல்லாம்...இதுவும் ஒரு வியாதிதான்....எந்தத் துறையில் வெறித்தனமாக இருந்தாலும் அது வியாதிதான்...அட போங்க ஜி நாமளும் என்னவோ எல்லாரும் திருந்தறா மாதிரி பதிவு போடறோம்...(பொழுது போகாம??!!) ஏதாவது மாற்றம் வந்துருக்குதா ஜி? நம்ம எனர்ஜிதான் வீணாகுதோனு தோணுது...சரி

    பதிவு நல்ல பதிவு! அப்படினு இப்ப சொல்ல்லத்தான் முடியும்...வேறு என்ன செய்ய முடியும்...ஜி??!!

    பதிலளிநீக்கு
  15. சின்ன வயது சுருள் முடியை ரசிக்க முடிந்தது ,நீங்கள் சொன்ன ,இன்றைய பிரமாண்டத்தை ரசிக்க முடியலே :)

    பதிலளிநீக்கு
  16. அவங்களையெல்லாம் மாத்த முடியாது ஜி அதற்கு விரயம் செய்யும் பணம் எத்தனை பேர் பசிப்பிணியை தீர்க்கலாம். நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  17. இவ்வாறாகச் சிலர் காலங்காலமாக உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்க்ள். தடுப்பது சிரமமே. முட்டாள்தனமாக சிந்தனையை உருவகப்படுத்தி வீணாகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  18. இப்படி பலர் இருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  19. காலம்காலமாய் மனத்தை பாதிக்கச் செய்தவர்களை.. மன்னிக்கச் சொல்கிறார்களே.. அது சரியா...? நண்பரே...

    பதிலளிநீக்கு
  20. என்ன செய்வது இப்படியும் சிலர் வீட்டை கவனிக்காது....
    16

    பதிலளிநீக்கு
  21. Molding Star- make is modeling Star!! Ha.............Ha.............

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்
    சிலரது வாழ்க்கை இப்படித்தான் ஜி... அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே.

    நல்ல பதிவு .தம் கடமையை மறந்து சில மனிதர்கள் இப்படித்தான் போலும்.! இருப்பினும் நட்பை மதித்து தக்க சமயத்தில் உதவி செய்த தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு